Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது – மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா

Posted on October 9, 2017 by admin

Image result for muslim praying sitting in chair

நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது – மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா

[ நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.-    தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு ]

மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு வெளியீடு:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

முஹியுஸ் ஸுன்னா ஹஜ்ரத் மௌலானா முஹம்மது ஷஃபீக்கான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்
ஸ்தாபகர்,   மழாஹிருல் உலூம் அரபிக்கல்லூரி,   சேலம்.
&
ஹஜ்ரத் மௌலானா அல்லாமா அப்துர்ரஹ்மான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்.

     நாற்காலியில்அமர்ந்து தொழுவது கீழ் வரும் காரணங்களினால் தடுக்கப்பட்டுள்ளது     

1, குர்ஆனுக்கு மாற்றமானது.

2, ஹதீஸுக்கு மாற்றமானது.

3, உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.

4, தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது
.
5, யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.

6, 25 வருடங்களுக்கு பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

    ஆதாரங்கள்   :      

        ஆதாரம் 1       

தொழுகையின் நோக்கமே அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.

திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் கொண்டோராக இருப்பர்.(அல்முஃமினூன்1,2.)

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன.

இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும்.(ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு)உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

     ஆதாரம் 2       

முஸ்லிம்களே! ஐந்து நேரத்தொழுகைகளையும் (குறிப்பாக)நடுத்தொழுகைகளையும் பேணித் தொழுது வாருங்கள் மேலும் அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள் (அல்பகரா238)

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (ம ஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين என்பதின் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

     ஆதாரம் 3       

ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது.(முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜித்தின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகை களை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)

     ஆதாரம் 4       

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையனையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸஙீர் லில் பைஹகீ 118/1,ஹுல்யதுல் அவ்லியாவதபகாதுல்அஸ்ஃபியா92/7)

     ஆதாரம் 5       

ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்க சென்றோம் அவர் தலையனை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள் உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள் இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவை காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாக குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.

அன்று முதல் இன்று வரை உலமாக்கள் நாற்காலிகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்காலியில் அமர்ந்து தொழுவது ஏதேனும் ஒரு வகையில் ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக அதைப் பற்றி கூறியிருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எங்கும் உலமாக்கள் குறிப்பிடாமல் இருப்பது, நாற்காலியில் அமர்ந்து தொழுவது   தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம், பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகிய வற்றிர்கு மாற்றமாக உள்ளது என்ற கருத்து தெளிவாகிறது.

இம்தாதுல் முஃப்தியீனில் எழுதப்பட்டுள்ளதாவது:

இது போன்ற விஷயங்களில் நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவபூர்னமான விஷயமாகும்.

(இம்தாதுல் முஃப்தியீன், கேள்வி எண்-879)

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பதற்கான ஃபத்வாக்கள் :

நாற்காலியில் கால்களை தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுணிவதும் கூடாது.ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும்.

(ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393)

ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும்.

அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்ப தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

     தாருல் உலூம் தேவ்பந்தினுடைய முஃப்திகளின் தீர்ப்பு     

ஒருவர் தொழுகையில் நிற்க முடியாது ஆனால் பூமியில் அமர்ந்து ஸஜ்தா செய்து தொழுக முடியுமென்றால் அவர் பூமியில் ஸஜ்தா செய்வது அவசியமாகும்.

பூமியில் ஸஜ்தா செய்யாமல் நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து வெறும் சைகை மூலம் ஸஜ்தா செய்வது கூடாது.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது. ஏனெனில் முடியாத நிலையில்…

1, பூமியில் அமர்ந்து தொழுவது சுன்னத்தான வழிமுறை ஆகும். இவ்வாறே ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் செய்து வந்துள்ளார்கள்.   ஏறத்தாழ கி.பி.1990-க்கு முன்பு வரை நாற்காலியின் மீது அமர்ந்து தொழகும் முறை காணப்படவில்லை.

2, நாற்காலிகளை தேவையின்றி பயன் படுத்துவதால் ஸஃப்ஃபுகளில் இடையூறு ஏற்படுகிறது.   ஆனால் ஹதீஸ்களில் தொழுகையின் ஸஃப்ஃபுகளில் சேர்ந்து நிற்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

3, தகுந்த தேவையின்றி நாற்காலிகளை பள்ளியில் கொண்டு வருவதால் மாற்றார் களின் வழிப்பாட்டு தலங்களுக்கு ஒப்பாகிறது.

தீனுடைய காரியத்தில் அன்னியர்களுடன் நாம் ஒபாகுவதை தடுக்கப் பட்டுள்ளது.

4, தொழுகை என்பது பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகும். இந்நிலை நாற்காலியில் அமர்ந்து தொழும்போது தான் பூரணமாக வெளிப்படாது.

5, ஒரு தொழுகையாளி பூமியை நெருங்கி தன் நெற்றியை வைப்பது தொழுகையில் வேண்டப்படுகிறது. நாற்காலியில் அவை நிறைவேறுவதில்லை.

      தமிழ் நாடு உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு      

ஸஃபர்20 ஹிஜ்ரி 1432, ஜனவரி மாதம் 20/2011 அன்று மதுரையில் கூடிய தமிழ் நாடு ஜமாஅத் துல் உலமா சபையில் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு:
நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

தங்கடம் உள்ளவர்கள் தரையில் தான் உட்கார்ந்து தான் தொழுக வேண்டும்.

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ், ஃபத்வாக்களின் மூலம் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பது தெளிவாகிவிட்டது.

ஒரு முஃமின் எப்பொழுது உட்கார்ந்து தொழுவது கூடும்?

நின்று தொழுவதை விடுவதற்கான காரணம் இருவகைப்படும்.

1, ஹகீகி: அறவே நின்று தொழ முடியாதவர்.

2, ஹிக்மி: அறவே நிற்க முடியாது என்பதல்ல மாறாக அவரால் நிற்க முடியும் ஆனால் நின்றால் கீழே விழுந்தது விடுவார் அல்லது மார்க்கம் எதை தங்கடம் என கூறியுள்ளதோ அந்த அளவிற்கு பலகீனம் ஏற்படுவது.

உதாரணமாக: அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர் நின்று தொழுதால் நோய் அதிகமாகும் (அ) கடுமையான வலி ஏற்படும் (அ) நோய் குணமாக தாமதமாகும்.என கூறியிருந்தால்-அவர் அமர்ந்து தொழுவது கூடும்.

ஆனால் சகித்துக் கொள்ளும் படி வலி இருந்தால் கூடாது.

நோயாளி தொழுகும் முறை.

1, அத்தஹிய்யாதில் அமரும் நிலை தான் சிறந்து.

சம்மணம் போட்டு அமர்வதும், இரண்டு கால்களையும் வெளியே விட்டு பித்தட்டில் அமருவதும் மற்றும் குத்த வைத்து அமருவதும் கூடும்.

2, உட்கார்ந்து தொழும் போது பார்வை மடியில் இருக்க வேண்டும்.
கையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

ருகூசெய்யும்போது கையை முட்டுக்காலில் வைக்க வேண்டும்.

நெற்றியை முட்டுக்கால்களுக்கு சமமாக வைக்க வேண்டும்.

பித்தட்டை உயர்த்தக் கூடாது.

மேலும் ஸஜ்தா செய்ய வேண்டும் ஸஜ்தா செய்ய சக்தி இல்லை எனில் ருகூவைவிட ஸஜ்தா வில் தலையை அதிகமாக சாய்க்க வேண்டும்.
ஸஜ்தா செய்யும் போது கையை பூமியின் மீது வைக்க வேண்டும்.
சைகை செய்து தொழுபவரை பின் பற்றி தொழுவது கூடாது.

3, தொழுகையின் மற்ற செயல்களான கிராஅத் ஓதுவது, தஸ்பீஹ் ஹாத் ஓதுவது, நடுநிலையாக   மன ஓர்மையோடு தொழுவது இவையனைத்தும் உடல் ஆரோக்கியம் உள்ளவர் நிறைவேற்றுவது போன்று நிறைவேற்ற வேண்டும்.

        மஸ்அலாக்கள்       

1, யாராவது தரையில் அமர்ந்து எழுந்து நிற்பதற்கு சக்தி இல்லை எனில் அவர் கட்டிலில் அமர்ந்து கால்களை மடக்கி தொழவேண்டும்.

2, ஃபஜ்ருடைய சுன்னத் அதிமுக்கியமானதாக இருப்பதால் நிற்க சக்தி உள்ளவர்கள் அதை நின்று தான் தொழுக வேண்டும்.
மற்ற சுன்னத்களை உட்கார்ந்து தொழலாம்.

3, முதல் ரக அத்தை நின்று தொழுதவர் 2வதுரக அத்திற்கு எழ முடியாமல் ஆகிவிட்டால் தரையில் அமர்ந்து தொழுவது கூடும்.

4, ஒருவர் தலையால் சைகை செய்து தொழ முடியாத நிலைக்கு ஆகிவிட்டால் தொழுகை மன்னிக்கப்படும்.

தொகுப்பு:

மௌலானா முஃப்தி அபுல் கலாம் காஸிமி மழாஹிரி.சேலம்.
பொதுச்செயலாளர்-மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு
தொலைபேசி 9443391412

வெளியீடு:
மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb