அல்லாஹ்வின் கருத்தியல்-அல்குர்ஆன்!
சான்று அல்குர்ஆன்!
முஹிப்புல் இஸ்லாம்
அல்குர்ஆனின் அபூர்வ எளிமை முஸ்லிம் அல்லாத சிந்தனையாளர்களை வெகுவாய் ஈர்த்து வருகிறது. அவ்வாறு ஈர்க்கப்பட்டோர் விரைந்து வந்து இஸ்லாத்தைத் தழுவிக் கொள்கிறார்கள். ஆனால் பிரிவுகளில் சிக்கியுள்ள பெரும்பான்மை பெயர்தாங்கி முஸ்லிம்கள் அல்குர்ஆனை விட்டு விலகி நிற்கின்றனர். அத்தகையோரையும் மானுடம் முழுமையையும் அல்குர்ஆனோடு ஐக்கியப் படுத்தும் அயராத முயற்சியில்….
எளிமைப் பற்றிய வினவலுக்குத் தெளிவுபடுத்தலாகவும், அல்குர்ஆன் விரிவுரைகள் ஒரு திறனாய்விற்கு (அல்லாஹ்வின் கருத்தியல்-அல்குர்ஆன்! அபூர்வ எளிமைக்கோர் அரிய சான்று-அல்குர்ஆன்!)
ஒரு முன்னோட்டமாய் அமைந்து மக்கள் சமுதாயம் பயன்பெற அல்லாஹ்வின் நல்லருளையும், அல்லாஹ்வின் பொருத்தத்தையும் பெரிதும் விழையும் முஹிப்புல் இஸ்லாம்.
அல்குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் அல்லாஹ்வின் நல்லுரை!
எதிர்ப்போரையும் வியக்க வைக்கும் அல்லாஹ்வின் கருத்தியல் அல்குர்ஆன்! ஏற்காதோரையும் ஈர்க்கும் அல்லாஹ்வின் கருத்தியல் அல்குர்ஆன் . அல்லாஹ்வின் கருத்தியல் அல்குர்ஆனில் இருப்பது அறிந்து அல்லது அறியாமல் அல்லாஹ்வின் கருத்தியல் அல்குர்ஆனை சிந்தனையாளர்கள் பிரதிபலிக்கின்றனர். தெரிந்தே சிலர், அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனிலிருந்து பெற்ற கருத்தை மறைத்து விடுகின்றனர். சுட்டிக் காட்டினால் வேறு வழியின்றி ஒத்துக் கொள்வர்.
விலகி நிற்பது வேதனையே!
ஏற்றுக் கொண்டோர் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனிலிருந்து சில காலம் விரண்டோடிச் சென்றனர். வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் இன்று அந்த நிலை மாறி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். பாமரரால் புரிய முடியாது என்று தமிழக மவ்லவிகள் போட்ட முட்டுக்கட்டையை வல்ல அல்லாஹ் வின் நல்லருளால் சாதாரண சாமான்யர்களே தகர்த்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். அந்நஜாத் மற்றும் நம் சகோதர இதழ்களில் இடம் பெறும் மவ்லவி அல்லாதோரின் ஆக்கங்கள் இதற்கு போதிய சான்றுகளாகும். என்றாலும் அறிவு, சிந்தனை, ஆய்வு உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் பெரும்பாலோர் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனிலிருந்து விலகி நிற்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஐக்கியமாகாதது ஏன்?
முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனுடன் ஐக்கிய மாகி விடவேண்டும். அதிலிருந்து பிரியக் கூடாது(3:103). அப்போது தான் முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒன்றுபட முடியும். மனித சமுதாயத்தையும் ஒன்றிணைக்க முடியும். முஸ்லிம்கள் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனிலிருந்து விலகி நிற்பது எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தும்?
இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனோடு ஐக்கிய மாகாததால் வேற்றுமை உணர்வும், விரோத குரோத மனப்பான்மையும் மேலோங்கிவிட, முஸ்லிம்கள் நிரந்தர பிரிவிலும் பிளவிலும் சிக்கி, சிதறி சின்னாபின்னமாகி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 1000 வருடங்களாய் முஸ்லிம்களை அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனோடு ஐக்கியப்படுத்த யாரும் எவ்வித முறையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை, ஒன்றுபடுத்த முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. பிரிவுகளில் சிக்குண்டுள்ள முஸ்லிம்களை மேலும் மேலும் பிளவில் சிக்க வைக்கும் அணி மனப்பான்மையையும், குழு மனப்பான்மையையும் அல்குர்ஆனின் பெயரால் கொழுக்கச் செய்கிறார்கள் என்றால், அல்குர்ஆனுக்கு இழைக்கப்படும் கொடுமை இதைவிட வேறெதுவும் இருக்க முடியுமா?
அணி மனப்பான்மையும், குழு மனப்பான்மையும்!
ஒரே சமுதாயமாய் மற்றவர்களுக்கு ஒற்றுமையின் உதாரணமாய்த் திகழவேண்டிய முஸ்லிம்கள், அணி மனப்பான்மையிலும், குழு மனப்பான்மையிலும் நிரந்தரமாய் சிக்கியுள்ளனர் என்பதைக் காட்டிலும் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதே பொருத்தமானது. பிரிவுக்கு உரமிடும் குழு, அணி மனப்பான்மை, ஒற்றுமை என்று உரத்து ஒலிக்கப்படுகிறது. தாங்கள் சார்ந்திருக்கும் அணி அல்லது குழுக்கள் நேர் வழியில் நிலைத்திருப்பதாகவும், ஒன்றுபட்டிருப்பதாகவும் உறுதியாக நம்பப்படுகிறது.
மாற்று அணி அல்லது குழுக்களில் இருப்போர் வழி கேட்டை வரிந்து கொண்டோர் என்றும், வேற்றுமைவாதிகள் என்றும் தூற்றப்படுகின்றனர். ஒரு குழு தங்களோடு முரண்படும் அல்லது தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு அணியைத் தாக்குவதும், மோதுவதும் சர்வ சாதாரண அன்றாட நடை முறையாகிவிட்டது. யாருடன் மாறுபடுகிறார்களோ அவர்களையும், அவர்கள் சார்ந்த குழுவின ர்களையும் வழிகேடர்கள் என்றும், காஃபிர்கள் என்றும் கொஞ்சமும் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் முத்திரை குத்திவிடுகிறார்கள்.
எந்தக் குழு, மற்றொரு அணியோடு வேறுபடுகிறதோ அந்த அணியினர் குழுவினர் என்று அனைத்து அணியினரும், குழுவினரும், கடந்த 1000 ஆண்டுகளாய், வேறு எதைச் சரியாகச் செய்யாவிட்டாலும், முஸ்லிம்கள் இதை மட்டும் செவ்வனே செய்து வருகிறார்கள்.
வழிகேடு, நேர்வழியாகுமா?
வழிகேட்டை நேர்வழியாகவும், பிரிவினை வாதங்களை ஒற்றுமைக்கு விளக்கங்களாக்கி, தாங்களே புண்ணியம் தேடிக் கொண்டோர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர் அந்தந்தக் குழுக்களையும், அணிகளையும் சார்ந்தோர்.
(தம்) செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான். (அல்கஹ்பு: 18:103,104 மே.பா: 18:105,106)
முஸ்லிம்களில் எந்தக் குழுவில் இருந்தாலும் சரி, எந்த அணி சார்ந்தவராயினும் சரி. எந்த முஸ்லிமாக இருந்தாலும் சரி, நேர்வழியை வழிகேடாக வழிகேட்டை நேர்வழியாக காட்ட முற்படுவோர் யாராக இருப்பினும் இதுவே இறை எச்சரிக்கை! இதெல்லாம் எம்மாத்திரம்?
விபரீதத்திற்கே விபரீதமல்லவா?
நேர்வழி வழிகேடாகவும் வழிகேடு நேர்வழி யாகவும், பிரிவினை வாதங்கள் ஒற்றுமையாகவும், உண்மை ஒற்றுமை பிரிவினைக் கூறுகள் என்பதற்கு அல்குர்ஆனே சான்றாக்கப்படுவது விபரீதமல்லவா? விபரீதத்திற்கே விபரீதமல்லவா?
அல்குர்ஆன்மீது வலிந்து திணிக்கப்படும் வலிந்துரைகளும், புனைந்துரைகளும் முற்றாக அகற்றப்படாதவரை அல்லாஹ்வின் வாக்குக ளோடு கலப்படமாகியிருக்கும் மனித அபிப்ராயங்களைப் பிரித்தறிவது கல்லில் நார் உரிப்பது போன்றதாகும். இந்த கல்லில் நார் உரிக்கும் கடினப் பணியைத் தனதாக்கிக் கொண்டு அந்நஜாத் எண்ணற்ற இடர்கட்கிடையே, இறையருளால் தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
தெளிவாக புரிய முடியும்!
அன்பிற்குரிய முஸ்லிம் பொதுமக்களே! அதுவரை மவ்லவிகளின் விளக்கங்களைக் கேட்டறியாத முஸ்லிம்கள் அல்லாதவர் பலரிடம் அல்குர்ஆன் மொழியாக்கங்களைப் படிக்கக் கொடுத்தோம். அல்ஹம்துலில்லாஹ்! பரம்பரை முஸ்லிம்களைக் காட்டிலும், அவர்கள் அல்குர்ஆனை மிகச் சரியாக தெளிவாகப் புரிகிறார்கள். அது மட்டுமின்றி, இன்ன இறை வாக்குகள் இன்ன அத்தியாயங்களில் இடம் பெற்றுள்ளன என்று முஸ்லிம்களுக்கு எடுத்துக் காட்டும் அளவு சில முஸ்லிம் அல்லாதோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகையோரைப் பார்த்து, பரம்பரை முஸ்லிம்கள் என்று பெருமைபட்டுக் கொள்வோர் வெட்கித் தலை குனிய வேண்டும்.
நம்மிடம் வரும் சகோதரர்களுடன் ஒரு மாற்று மத அன்பரும் ஒரு நாள் வந்தார். இஸ்லாம் பற்றிய பல்வேறு ஐயங்களை எழுப் பினார். அனைத்துக்கும் நாமே சுய விளக்கம் கொடுப்பதைத் தவிர்த்து இறைவாக்குகளை விடையாக்கினோம், தம் ஐயங்களுக்குத் தெளிவான, சுருக்கமான விளக்கங்கள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியைப் பலவாராய் வெளியிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அந்தச் சகோதரருடன் வந்த பரம்பரை முஸ்லிம் சகோதரர்கள் வியந்தனர். தனி மனிதனுக்கு மனிதர்களுக்கு எந்தக் காலங்களில் எது தேவைப்பட்டாலும், அவையனைத்தின் தெளிவாக்கமாய்த் திகழ்ந்து வருவது அல்லாஹ் அரு ளிய அற்புதம்தான் அல்குர்ஆன்! அல்குர்ஆனே! என்பதை அனுபவப்பூர்வமாய் உணர்ந்தனர்.
அந்த மாற்று மத சகோதரர் தாம் கேட்டறிந்த இறைவாக்குகளை அத்தியாய, இறைவாக்கு எண்களுடன் பதிவு செய்து கொண்டார். தாம் நெருங்கிப் பழகும் பாகிஸ்தான் சகோதரர்களிடமும், ஸ. மலையாள சகோதரர்களிடம் அந்த இறைவாக்கு, அத்தியாய எண்களைக் கொடுத்து, அவற்றின் பொருள் என்ன? என்று கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்து, உடன் பதில் அளிக்க முடியாத அவர்கள், சற்று அவகாசமெடுத்து பதில் அளித்துள்ளனர். அப்போது தான் அல்குர்ஆனில் இப்படிப் பட்ட இறைவாக்குகள் இடம் பெற்றுள்ளதை அந்த பரம்பரை பாக்கிஸ்தானி, மலையாள முஸ்லிம்களும் அறிந்ததாய் ஒப்புக் கொண்டார்களாம். அல்ஹம்துலில்லாஹ்.
மொழிகள் மாறினும் அல்குர்ஆன் அர்த்தம் மாறாமல் இருப்பது அறிந்து அந்த மாற்று மத சகோதரர் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டார்.
ஈடு இணையற்ற அற்புதம்! இதுதான் அல்குர்ஆனின் தனித்துவம்! இது தான் அல்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிந்தனைக்குரிய அற்புதம். அற்புதங்களுக்கெல்லாம் பேரற்புதம்! இவ்வற்புதத்திற்கிணையான அற்புதத்தை இவ்வுலகு இதுவரை கண்டது மில்லை. இனி காணவும் முடியாது. பிறவி முஸ்லிம்கள் உணர முடியாததை அல்குர்ஆனைக் கண்ணுரும் பிறர் எப்படி உணர்கின்றனர்?
அன்பிற்குரிய பரம்பரைப் பெயர் தாங்கி முஸ்லிம்களே! சிந்தித்துப் பாருங்கள். அந்த அன் பர் மீண்டும், மீண்டும் நம்மையணுகி தன் ஐயங் களை அடுக்கிக் கொண்டேயிருந்தார். அவரை அழைத்து வந்தோர் சலிப்படைந்தனர். நாம் சளைக்கவில்லை. அவர் ஐயங்களுக்கு அவருக்குத் திருப்தி மேற்படுமளவு, அல்குர்ஆன் பகர்ந்த தெளிவான விடைகளை முன் வைத்தோம். பல்லாயிரக்கணக்கான நூல்கள் பயின்றாலும், பெற முடியாத நுணுக்கங்களையும், நுட்பங்களையும் அறியத்தரும் அல்குர்ஆன் ஓர் இணையற்ற இறையற்புதமே! இதை மாற்றார்கள் எளிதில் உணர்கின்றார்கள். இதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய நாம் இன்னும் பரம்பரை பெயர் தாங்கி முஸ்லிம்கள் என்று மீண்டும் மீண்டும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.ஆம்! இன்னும் தயங்கிக் கொண்டிருக் கிறோம். அல்குர்ஆனை ஏறெடுத்துப் பார்க்கஸ
அல்குர்ஆன் தமிழாக்கங்கள்!
அல்குர்ஆனுக்கு 1949லிருந்து இன்று வரை 17 தமிழாக்கங்கள் வெளிவந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ். மற்ற மார்க்க நூல்களும் ஏராளம் வந்த வண்ணம் இருக்கின்றன. என்றாலும் 20ம் நூற்றாண்டு துவக்கம் வரை அல்குர்ஆன் தமிழாக்கம் இல்லை. இன்று அல்லாஹ்வின் நல்லருளால் நம்மிடையே 17 மொழியாக்கங்கள்ஸ வலம் வந்து கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்! இதற்குப் பின்னரும் அல் குர்ஆன் அர்த்தம் அறிந்து கொள்வதில் இன்றளவும் தமிழ் முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்றால்ஸ நெஞ்சு பொறுக்குதில்லையே!
புரிதாத புதிர்!
அன்பிற்குரியவர்களே! இப்போதே காலம் மிகவும் கடந்து விட்டது. உங்களிடம் முன்னரே தமிழாக்கம் இருந்தால் மிகவும் நல்லது. இல்லையயனில், உடன் உங்களுக்குப் பிடித்தமான மொழியாக்கம் ஒன்றை உடனடியாக வாங்கி, அல்குர்ஆனில் அல்லாஹ் அருளியுள்ள வாழ்க்கை நெறியைப் பொருள் உணர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். கல்வி கற்பது முஸ்லிமான ஆண்கள், பெண் கள் மீது கட்டாயக் கடமையாகும்.
அல்குர்ஆனை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ளல் :
பொருளுடன் அல்குர்ஆன் கற்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. இதை யாரும் எடுத்துக் காட்டி உணர வேண்டிய நிலையில் எந்த முஸ்லிமும் இல்லை; என்றாலும், தமிழ் முஸ்லிம்கள் இதை சரியாக உணராமல் இருப்பதன் மர்மம் புரியாத புதிரே!
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வாழ்ந்த நம் மூதாதைய முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டவில்லை. நமக்கு அதை வல்ல அல்லாஹ் தன் அளவற்ற அருளால் வழங்கியுள்ளான். நாம் இன்னும் மெத்தனமாய் இல்லாமல், அல்குர்ஆனை அர்த்தம் அறிந்து கற்றுக் கொள்ள சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள் செய்வானாக அல்குர்ஆன் குறித்து எழுப்பப்படும் ஐயங்கள், ஆட்சேபங்கள் எதுவானாலும் உடன் எங்களுக்கு அறியத் தாருங்கள். இன்ஷா அல்லாஹ் அவற்றிற்குரிய தெளிவாக்கங்களை அந்நஜாத்தில் இடம் பெறச் செய்கிறோம்.
முஸ்லிம்களின் தனியுடமையல்ல அல்குர்ஆன்!
முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர், அல்-குர்ஆன் முஸ்லிம்களின் தனியுடமை என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதனால் முஸ்லிம் அல்லாதோரும் அல்குர்ஆன், முஸ்லிம்களின் தனியுடமை என்றே திடமாக நம்புகின்றனர். மற்ற இந்திய தேச வேதங்கள் போல், அல்-குர்ஆன் முஸ்லிம்கள் வேதம்(!) என்றும், மற்ற வேதங்களின் புதிர்களை விடுவிக்க புரோகித பண்டிதர்களின் வியாக்கியானங்கள் எப்படி அவசியமோ அதுபோல் அல்குர்ஆனுக்கும் வேத விற்பன்னர்களின் விளக்கங்கள் இன்றியமையாதது! என்றும், சாதாரண சாமான்யர்களின் அறிவிற்கெட் டாததே வேதங்கள்! என்ற இந்திய தேசத்தவர் நம்பிக்கையை முஸ்லிம்கள் நெறிநூலாகிய அல்-குர்ஆன்மீது அப்படியே பிரயோகித்து வருகி ன்றனர். இதனால் மாற்றார்களைப் போல் அல்-குர்ஆனிலிருந்து முஸ்லிம்கள் விலகி நிற்கின்ற னர். அதனால் முஸ்லிம்களும் அல்குர்ஆனை மவ்லவிகளின் பிரத்யேக உடமையாக்கி விட்டனர். ஆம்! இந்திய கலாச்சாரத்துடன் முஸ்லிம்களும் இரண்டரக் கலந்து விட்டனர்.
நூல்களுக்கெல்லாம் அன்னை!
இன்று முஸ்லிம்கள் வேறு! அல்குர்ஆன் வேறு! என்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகி விட்டது. அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர் ஆனில், இறையருளிய வாழ்க்கை நெறியைப் பிரிதிபலிப்பவர்களாய் இன்றைய முஸ்லிம்கள் இல்லை. பின்பற்ற முடியாத மனித கற்பனைகளின் கலப்படங்கள் இந்திய தேச வேதங்கள். ஆனால் நெறிநூல்களுக்கெல்லாம் தலையாய நெறிநூலாகிய நூல்களின் அன்னை என்று அதை அருளிய அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட அல்குர்ஆன் நிலையும் அதுதானா? அல்குர்ஆனை இந்த அவல நிலைக்கு ஆளாக்கியவர்கள் முஸ்லிம்களே! இந்த அவலத்தை நீக்குவதும் முஸ்லிம்களின் நீங்கா கடமையாகும்.
மானுடம் பின்பற்றத்தக்க அல்லாஹ்வின் நிறைவுக் கருத்தியல்:
அருளப்பட்டதிலிருந்து இன்றளவும் ஏன்? இறுதி நாள்வரை மனிதர்கள் அனைவரும் பின்பற்றத் தக்க ஒரே நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வு எப்படி இருந்தது? என்று வினவியவருக்கு அல்குர்ஆனாகவே இருந் தது என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மறு மொழி பகர்ந்தார்கள். மற்ற மதங்கள் போல் இஸ்லாம் ஒரு மதம் என்றும், முஸ்லிம் களை மதவாதிகள் என்றும் மாற்றார்கள் தூஒப்பது போல் அல்லாஹ் அருளிய வாழ்வி யல் அறநூல்-அல்குர்ஆனையும் துவேஇக் கண் கொண்டு பார்க்கின்றனர். அல்லாஹ் அருளிய இஸ்லாமிய வாழ்க்கை நெறி மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவானது. அதை தாங்கி வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவானவர்கள். இஸ்லா மிய வாழ்க்கை நெறியை, கொள்கையாலும், வாக்காலும், வாழ்வாலும் நிலைநாட்டிய மாண்பாளர்.
அதனால்தான், அந்த வல்ல அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனித சமுதாயத்திற்கு முன் மாதிரியாக ஆக்கியுள்ளான். (33:21)
அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், செயல் வடிவமானார்கள். மற்ற நெறிநூல்கள் மனிதக் கலப்பட வேதங்களாகி எழுத்திலும், பேச்சி லும் முழக்கத்திற்குரியவைகளாய் மக்களை மதிமயக்கும். சிந்திக்க வைக்கும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனின் செயலாக்கமாய் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திகழ்கின் றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை மட்டு மின்றி, அவர்கள் நடைமுறையும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனிற் குத் தெளிவான விளக்கங்களாய் அமைந்து, அனைத்து மக்களையும் அதிசயத்தில் ஆழ்த்தி வருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் இறையருளியதைப் பின்பற்றி வாழ்ந்ததோடு நின்றுவிடவில்லை. (7:3, 3:31) அப்படி இறையருளிய தைப் பின்பற்றிய ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை இறையருளாய் உருவாக்கிக் காட்டினார்கள். (21:92, 23:52)
அல்குர்ஆனின் அபூர்வ எளிமை!
சாதாரண சாமான்யர்கள், படிப்பறிவில்லா பாமரர்கள் என்று பண்டிதர்களால் பழிக்கப் பட்டவர்களும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனை எளிதாய் உணர்ந்தார்கள். அப்படியே தங்கள் வாழ்வில் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனைப் பிரதிபலித்தார்கள்.
எனவே (நபியே!) நாம் இந்த அறநூலை உம்முடைய மொழியில் (இறக்கியருளி) எளி தாக்கி இருப்பது.
இறையுணர்வு(தக்வா) உள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும், மேலும் பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும். (மர்யம்: 19:97)
நபியே! இவர்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக, இந்த அறநூலை நாம் உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம். (அத்துகான் : 44:58)
இந்த தெளிவான அறநூலின் மீது சத்தியமாக, நாம் இதனை அரபி மொழியில் உள்ள அல்குர் ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனை எளி தாய்ப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. (அஸ்சுக் ருஃப் 43:1-3)
மயக்கு மொழிகளின் மர்மங்கள்!
அறநூல்கள் என்றால் புரியாத மொழியில் எப்பவும் புரியாத புதிராய் இருக்க வேண்டும். மயக்கு மொழிகளின் மர்மங்களாய் இருத்தல் வேண்டும். மர்மங்கள் பிரமாண்டமாய்க் காட்டப்பட வேண்டும். மர்மங்கள் முடிச்சவிழ்க்கும் மந்திரவாதிகளாய் பண்டித புரோகிதர்கள் இருக்க வேண்டும். பண்டித புரோகிதர்களின் வலிந்துரை, புனைந்துரைகள், கற்பனைக் கட்டுக் கதைகள் மக்களை நிரந்தரமாய் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும். அறநூல்களைப் பண்டித புரோகிதர்கள் மட்டுமே விளங்கி, அதை மக்களுக்கு விளக்க முடியும் என்ற நிலை நீடிக்க வேண்டும். இவை போன்று இன்னும் அறநூல்களுடன் பொருந்தி வராதவைகள் அனைத்தையும் பொருத்திக் காட்டி, அறநூல் களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட வேண்டும். இவை போன்ற கோணல்களால், மனிதர்கள் கண்ட அறநூல்கள் இனி எப்போதும் நிமிர முடியாமல் கூனிக் குறுகிவிட்டன.
மனிதர்கள் கண்டவை அறநூல்கள் அல்ல. மனித அபிப்பிராயங்களின் கற்பனைக் கலவை கள். அசல் அறநூல்களோடு மனித கருத்துக்களின் கலப்படங்கள். அசல் அறநூல்களின் சிதைவு. சத்தியத்தை அசத்தியமாய்க் காட்டும் அசாத்திய கைவரிசை. முரண்பாடுகளின் மொத்த உளரல். சாமான்யருக்குப் புரியாத கடின சொற்கள்; கடின நடையின் உறுத்தல், சிந்திக்க விடாமல் தடுக்கும் உலக மகா குழப்பங்கள். இவற்றை வெளிக் காட்டி வேதங்களை அவமானப்படுத்தப்படா மல் பாது காக்க போலி பக்தியால் பாமரர்களை விட்டில் களாக்குதல். வேதங்களை எளிதாக்கி, பாமரரையும் புரிய வைத்து விட்டால் அந்தக் கணமே, வேதநூல்களின் மதிப்பு அதல பாதா ளத்தில்! மனிதர்கள் கண்ட வேதங்கள் புரிய முடியா குழப்பங்களின் மொத்த உரு. மிகச் சில விஇயங்கள் புரியும்படி இருப்பதால் அவைகள் அறநூல்களாகி விடாது.
சாதனை படைத்து வரும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆன்:
சாதாரண சாமான்யர்களைச் சென்றடைய விடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் களைத் தகர்த்தெறிவதே அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனின் மாறாத அடிப்படையாகும்.
மேற்கண்ட அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆன் வாக்குகள் இதை மெய்ப்பிக்கின்றன.
அசாதாரண தன்மைகளால் மக்களை மருட்டுவது அறநூலல்ல. படித்தவர் புரிவது பெரிய விஇயமல்ல. படிக்காத பாமரர்க்கும் வாசித்துக் காட்டினால் எளிதாய் புரிய வேண் டும். இதை அல்லாஹ் அருளிய வாழ்வியல் அற நூல்-அல்குர்ஆன் நடைமுறையில் சாத்திய மாக்கிக் காட்டி சாதனை படைத்துள்ளது. 14 நூற்றாண்டுகளாய் இந்த சாதனை தொடர்ந்து வருகிறது இறையருளால். இன்ஷா அல்லாஹ் இனியும் இந்த சாதனை தொடர்ந்து கொண்டி ருக்கும் யுக முடிவு நாள் வரை.
சிந்திக்க வேண்டாமா?
மனித பலம், பலவீனங்களை மனிதனைக் காட்டிலும் நன்குணர்ந்த அனைத்தின் படைப்பாளனாகிய ஏக வல்ல அல்லாஹ் அறநூல்களை அருளியுள்ளான் ஏன்?
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி (அறிவுரை) பெறும் பொருட்டே இந்த அல்குர்ஆனை நிச்ச யமாக நாம் மிக்க எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே (இதனைக் கொண்டு அறிவுரை) நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா? (அல்கமர் : 54:17:22,32,40)
எளிமையாக இருந்தால்தான் அல்குர்ஆனை பாடமாக்கிக் கொள்ளவும். படிப்பினை யாக்கிக் கொள்ளவும் முடியும். எல்லாவற்றுக் கும் மேலாய் பின்பற்றவும் முடியும். மற்றவர் களுக்கு எடுத்துக் காட்டி சிந்திக்க வைக்க முடி யும். ஏற்றோர்க்கு மட்டுமின்றி, எவர்க்கு எப் பிரச்சினை ஏற்படினும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல்-அல்குர்ஆனைத் தீர்வாக்கிக் காட்ட முடியும்.
அறநூல்களை வேதங்களாக்கி மனிதர்கள் கொடுத்துள்ள மாயத் தோற்றங்களைத் தவிடு பொடியாக்கும் அல்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டிருந்தாலும், அகில மக்கள் அனைவ ருக்கும் பொதுவானது. எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாட்டவர்க்கும், எல்லா மொழி பேசு வோர்க்கும் உரித்தானது. அல்குர்ஆன் முஸ்லிம் களுக்குரிய தனிச் சொத்தல்ல. அதிர்ச்சியாக யிருப்பினும் முஸ்லிம்கள் தங்கள் மனங்களில் இதை ஆழப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்குர்ஆன் அருளப்பட்ட அன்றிலிருந்து இறுதி நாள் வரை வரும் இறுதி மனிதனுக்கும் அல்குர்ஆனே நெறிநூல். அல்லாஹ்வின் அருளுரை! அருளுரை என்பதற்கு இந்திய தேசத்தவர் கொண்டுள்ள, கொடுத்துள்ள பொருள் அல்குர் ஆனுக்குப் பொருந்தாது என்றாலும், அறநூல் களைக் கொச்சைப்படுத்தும் தவறுகளை நிவர்த் திக்கும் அல்லாஹ்வின் கருத்தியல் அல்குர்ஆன்! வாய்மொழி அல்லது மனிதக் கரங்களால் உருப்பெற்ற வேதங்கள் குறிப்பிட்ட மொழி, இனம், நாடு என்ற குறுகிய வட்டத்துக்குள் சுழன்று வருகின்றன. அல்லாஹ்வின் கருத்திய லாகிய அல்குர்ஆன், இதைத் தகர்த்தெரிந்து மானுடம் முழுமைக்கும் அல்குர்ஆன் அல்லாஹ் வின் கருத்தியல் என்று பல்வேறு கோணங்களில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
அல்குர்ஆன் அகிலத்தார் அனைவர்க்கும் அல்லா ஹ்வின் நல்லுரை:
இந்த அல்குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும். (யூசுஃப் : 12:104)
இது (அல்குர்ஆன்) உலகமக்கள் அனைவருக் கும் நல்லுரையாகும். (ஸாத்: 38:87)
இதுவோ(அல்குர்ஆன்) அனைத்துலக மக்களுக் கும் உரிய ஒரு அறிவுரையாகும்.(அத்தக்வீர்: 81:27)
இது(அல்குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் ஓர்) நல்லுரையாகும். (38:49)
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் பிரத்யேக மாய் அல்குர்ஆனை அருளவில்லை. மனித சமுதா யம் முழுமைக்கும் அல்லாஹ்வின் நல்லுரையாக, அறிவுரையாக அல்குர்ஆனை அருளியுள்ளான். இதை மேற்கண்ட இறைவாக்குகள் படித்தவுடன் பளிச்சென்று எளிதாய் நமக்கு உணர்த்துகின்றன.
கண்மூடித்தனத்திலிருந்து மீட்சி பெறல்:
ஏன் இந்த அல்லாஹ்வின் நல்லுரை, அறி வுரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டது?
முன்சென்ற அத்தூதர்களுக்குத் தெளிவான சான்றுகள், மற்றும் நெறிநூல்களை வழங்கி, அவர்களை அனுப்பி வைத்திருந்தோம்.
மேலும், இப்பொழுது இந்நல்லுரையை உம் மீது நாம் இறக்கியருளியிருக்கின்றோம். எதற் காகவெனில், மக்களுக்கு இறக்கி வைக்கப் பட்ட அறிவுரையை நீர் அவர்களுக்கு எடுத்து ரைக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் அவர்களும் (சுயமாக) சிந்தித்துணர (சீர்திருந்த) வேண்டும் என்பதற்காகவும். (அந்நஹல்:16:44)
காலங்காலமாய் வித, விதமான கண்மூடித் தனங்களில் சிக்கித் தவிக்கும் மனித சமுதாயம் மீட்சி பெற வல்ல அல்லாஹ், அருளியுள்ள அறிவுரையைச் சிந்தித்து, வாழ்வை சீராக்கிக் கொள்ள வேண்டும். இதை “”மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட அறிவுரையை சிந்தித்துணர வேண்டும்ஸ” என்ற சொற்றொடர், மனித சமு தாயம் முழுமைக்கும் பொதுமைப் படுத்துகிறது. கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் முஸ்லிம்களே! அல்லாஹ்வின் கருத்தியல் அல்குர் ஆனுக்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு கண்மூடித்தனமாய் இருப்பது கடுங்கண்டனத் திற்குரியதல்லவா? மனித சமுதாயத்தைச் சிந்திக்க வைக்க வேண்டியவர்கள் கண்மூடித் தனத்தில் மூழ்கிக் கிடந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே!
உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கி யருளப்பட்ட இந்நெறிநூல் உண்மையானது தான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியா மல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்கள் தாம் நல்லுரைகளை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின் றனர். (அர்ரஃத் :13:19)
அல்லாஹ்வின் அருளுரை உண்மையானது. இந்நெறிநூலில் அருளப்பட்டவைகளும் உண்மை. இதைச் சிந்தித்து உணர்ந்தோர் கண் மூடித் தனத்திலிருந்து விடுபட்டோர்; மற்றவர் கருத்துக் குருடர்கள்; அல்லாஹ்வின் அருளுரை அல்குர்ஆனை ஏறெடுத்துப் பாராமல், என்ன கற்றிருந்தாலும் அதற்காக அவர்களை மக்கள் மதிக்கலாம். ஆயினும் அல்குர்ஆனை ஏறெடுத் துப் பாராமல், என்ன கற்றிருந்தாலும், அல்லாஹ் வின் பார்வையில் இவர்கள் அற்பமானவர்களே! கண்ணிருந்தும் குருடர்களே!
இறையருளியது மட்டுமே நேர்வழி!
அல்குர்ஆன் உண்மை என்று உறுதிப்படுத் திய அல்லாஹ், அந்த அல்குர்ஆனில் அல்லாஹ் அருளியது மட்டுமே நேர்வழி! இறையருளிய நேர்வழியை ஏற்றோர் ஏற்றம் பெறுவர்! இல் லையயனில் வழிகேடுகளால் வீழ்ச்சியடைவர்!
(நபியே!) நீர் பிரகடனப்படுத்தி விடுவீராக, மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்க ளுக்கு சத்திய நெறிநூல் வந்து விட்டது. ஆகவே யாரேனும் நேர்வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும்.
யாரேனும் வழிகெட்டுப் போனால் அவனு டைய வழிகேடு அவனுக்கே; அவனுக்கே தீங்கினை அளிக்கும்! மேலும், உங்களின் எந்த விஇயத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன்! (யூனூஸ்: 10:108)
மக்களே! என்றழைத்து மனித சமுதாயம் முழு மைக்கும் அல்குர்ஆனைப் பொதுமைப் படுத்து வது நம் சிந்தனைக்குரியது. மனித சமுதாயம் முழுமையும் நேர்வழி பெற வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது அல்குர் ஆனின் தனிச் சிறப்பாகும்.
குறுகிய வட்டத்துக்குள் சுழல்வது நெறிநூலல்ல; குறிப்பிட்ட வர்க்கம், இனம், மொழி.. என்ற குறுகிய வட்டத்தை உடைத்தெறிவது அல்லாஹ்வின் கருத்தியல் அல்குர்ஆனின் தனித்துவம்.
சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் அல்லாஹ்வின் கருத்தியல்!
ரமழான் மாதத்தின் சிறப்பிற்குக் காரணம் அல்குர்ஆன் அம்மாதத்தில் அருளப்பட்டது.
ரமழான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையாக) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளி வான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத் தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதுமான அல்குர்ஆன் இறக்குயருளப்பட்டது. (அல்பகறா: 2:185)
இவ்விறைவாக்கில் மனிதர்களுக்கு என்ற சொல் அல்குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக் கும் என்பதை உணர்த்தி நிற்கிறது.
மனிதர்களுக்கும், மனித சமுதாயத்திற்கும் எல்லா காலங்களுக்கும் தேவையான தெளி வான விளக்கங்கள் அனைத்தையும் தன்ன கத்தே உள்ளடக்கிய உயர்நெறிநூல்!
இது மக்களுக்குரிய தெளிவான விளக்க மாகும். இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும் அறிவுரையுமாகும். (ஆல இம்ரான்: 3:138)
அல்குர்ஆன் அனைத்திற்கும் விளக்கமாய்த் திகழ்கிறது. ஏற்றிருப்போர் அல்குர்ஆனை விடுத்து மற்றவற்றில் விளக்கம் தேடுகின்றனர். இன்றளவும் முஸ்லிம்கள் தங்களுக்குத் தேவை யான விளக்கங்களை அல்லாஹ்வின் கருத்திய லில் தேடும் முயற்சியை மேற்கொள்ள வில்லை. இனியாவது, அந்த முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும்.
விளக்கமாக மட்டுமின்றி அல்குர்ஆன் தெளி வான விளக்கம்! விளக்கம் பெற விழைவோரை தெளிவடைய செய்யும் விளக்கங்கள், அல்குர் ஆனில் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதை நாமும் முறையாக உணர்ந்து, மனித சமுதாயத் திற்கும் உணர்த்துவோம். அல்குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக்குரிய பொதுவான அல்லாஹ்வின் அருளுரை என்று பொதுமைப் படுத்துவோம்! வாருங்கள்! என்னரும் முஸ்லிம் பொது மக்களே! தயக்கமும் வேண்டாம்! தாமதமும் வேண்டாம்! முயற்சிப்போம். அல்லாஹ் அருள் செய்வானாக.
அல்லாஹ்வால் மனித சமுதாயம் முழுமைக்கும் அருளப்பட்ட அல்லாஹ்வின் கருத்தியலில் மனிதர்கள் அனைவர்க்கும் ஓர் அறிவுரை! மனித மனமாச்சாரியங்களை அகற்றும் நிவாரணி.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாய் வந்திருக்கிறது.
இது (மனித) இதயங்களில் உள்ள நோய்க ளைக் குணப்படுத்தக் கூடியதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக் கூடியதாகவும் ஓர் (இறை) அருட் கொடையாகவும் திகழ்கின்றது.(யூனூஸ்:10:57)
அல்குர்ஆன் ஏற்றுக் கொண்டோருக்கு ஓர் வாழ்க்கை வழிகாட்டி! ஓர் இறை அருட்கொடை! மனிதர்கள்மீது அல்லாஹ் பொழிந்துள்ள அளப்பற்ற அருளை எண்ணி, எண்ணி யார்தான் வியக்காமல் இருக்க முடியும்?
ஆனால், உண்மை நிலையாதெனில், இது (அல்குர்ஆன்) உலகமக்கள் அனைவருக்கும் ஒரு ஒரு நல்லுரையாகவே இருக்கிறது. (அல்கலம்: 68:52)
(மனித சமுதாயமே!) உங்களுக்கு(த் தேவை யான) நல்லுபதேசங்கள் (அனைத்தும்) உள்ள அற நூலையே நிச்சயமாக நாம் உங்களுக்கு அருளி இருக்கிறோம். (இதை, இப்போதாவது) நீங்கள் (சிந்தித்து) அறிந்து கொள்ள வேண்டாமா? (அல் அன்பியா : 21:10)
அன்பிற்குரியவர்களே! வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், இந்த ஆய்வில் 15 இறைவாக்கு களை மேற்கோளாக்கியுள்ளோம். அவ்விறை வாக்குகளை, எவருடைய இடைக் குறுக்கீடு மின்றி நீங்களே வாசித்து, ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். அல்குர்ஆனின் அபூர்வ எளிமை உங் களை அதிசயத்தில் ஆழ்த்தும். எவ்வித சிரமு மின்றி, எளிதாக அந்த இறைவாக்குகளைப் புரிய முடியும்.
அல்குர்ஆனைப் புரிவது கடினம் என்ற மவ்லவிகள் சுலோகம் எத்தனை அபத்தமானது? அல்குர் ஆன் மொழியாக்கங்களைப் படிக்கும்போது இதை நாம் சுயமே உணர முடிகிறது. இன்று நம் குழந்தைகள் ஆங்கில மெட்ரிகுலே இனில் படிக்கிறார்கள். வேற்று மொழியில் உள்ள அறிவியல் கருத்துக்களையும், பல்வேறு புரியாத விஇயங்களையும் தமிழ் அல்லது ஆங்கிலமாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். எத்தனை சிரமம் இருப்பினும், குழந்தைகளுக்கு புரிய வைத்து, பல்வேறு வகையிலும் அதற்காக சிரத்தையயடுத்து, தேர்வை வெல்லச் செய்கிறோம்.
இம்மை வெற்றிக்காக…
இம்மை, மறுமை, இருமையிலும் வெற்றி வாகை சூட அல்லாஹ் அருளிய அருள் மொழி களை ஏறேடுத்துப் பார்க்க இன்னும் ஏன் இந்தத் தயக்கம்? பாமரர்க்குப் புரியாது என்ற மவ்லவி கள் பம்மாத்து வேலைகள் இனியும் பலனளிக் காது. தயக்கமும் வேண்டாம் தாதமமும் வேண் டாம். இன்ஷா அல்லாஹ், சோம்பல்படா மல் உங்களிடம் உள்ள அல்குர்ஆன் மொழி யாக்கங்களைப் பார்வையிடத் துவங்குங்கள். நேரம் சற்று ஒதுக்குவது மிகவும் நல்லது. நேரம் ஒதுக்க முடியாதவர்கள் கிடைக்கும் நேரங்க ளில் முடிந்த அளவு அல்குர்ஆன் மொழிபெயர் ப்பைப் படித்து வாருங்கள். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் வியத்தகு முன்னேற்றத்தை சுயமே காண்பீர்கள். நேரம் ஒதுக்க முடியாமல் திணறுவோரும் பின், தானாகவே நேரம் ஒதுக்குவீர்கள்.
நாம் ஐயம் தீர கற்றவைகளை மற்றவர்களுக்கும், மாற்றார்களுக்கும் எடுத்துக் காட்டி, அல் குர்ஆன் மனித சமுதாயத்திற்குப் பொது வானது என்பதை நிலைநாட்டுவோம். அதன் நேரிய வாழ்க்கை வழிகாட்டுதலை நம்முடைய வாழ்வில் பிரதிபலித்து, நாமும் அல்-குர்ஆனோடு ஐக்கியமாகி, மனித சமுதாயம் முழுமையும் அல்குர்ஆனோடு ஐக்கியமாகும் உயர் இலட்சியத்திற்காக அயராது உழைப் போம். அல்லாஹ் வெற்றியருள்வான்.
ஆமீன். வஸ்ஸலாம்.
”யா அல்லாஹ்! நீ மனித சமுதாயத்திற்கு அருளிய இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆனைக் கற்றுணர்ந்து, இறையுணர்வுடையோராகவும், மனித சமுதாயம் முழுமைக்கும் இந்த இறுதி இறைநெறி நூலைப் பொதுமைப்படுத்தும் நல்லடியார்களாய் எங்களை ஏற்றருள்வாயாக. அதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இறையுணர்வு மிக்க முஸ்லிம்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.