ஒரு பெண் கருத்தரித்திருப்பதற்குரிய அத்தாட்சியை வித்தியாசமாக தெரிவிக்கும் அல்குர்ஆன்!
ரஹ்மத் ராஜகுமாரன்
பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?
திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்ப்பது ஒரு குழந்தையைத் தான் .பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எந்த மாதிரியான அறிகுறிகள் அந்த நேரத்தில் தோன்றும்?
ஆணினின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது.
கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகு கருவானது கருப்பப்பை நோக்கி நகர்கிறது.
கருவானது கருப்பைக்குள் பதியாமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்நிமையிலேயே சில ரசாயன மாற்றங்கள் உண்டாக்குகிறது.
இவை கரு முட்டையைப் பதியம் செய்வதற்கும் கருப் பையைத் தயார் படுத்தும் சில அறிகுறிகள் ஆகும்.
கருத்தரித்தல் ஒரு வாரம் அல்லது அதற்குப் பின்புதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.
இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும் அவற்றில் சில
1) மாதவிலக்கு தள்ளி போகுதல்
2) குமட்டல்
3) இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
4) புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.
5) வாசனையைக் கண்டால் நெடி உண்டாகுதல் .அதிலும் சமையல் தாழிப்பின் நெடில் வாந்தி வருவதாக எத்தனிக்கும்
.
6) மார்பகம் பெரிதாவது அதைத் தொட்டால் வலி ஏற்படும் .மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் சிவப்பாக இருந்தாலும் கருப்பாக மாறும் .
7) மலச்சிக்கல் இருப்பது போன்றே உணர்வு.
8) புளி, ஐஸ் .மாங்காய், அடுப்புச் சாம்பல் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை
….குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இதை அறிகுறிகள் இருந்தால் அவள் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு பெண் கருத்தரித்திருப்பதற்குரிய அத்தாட்சியை வித்தியாசமாக தெரிவிக்கும் அல்குர்ஆன்!
ஒரு பெண் கரு தரித்திருப்பதற்குரிய அத்தாட்சியை மேற்கண்ட எந்த வழிமுறையையும் சொல்லாமல் இறைவன் குர்ஆனில் வித்தியாசமாக வேறொன்றை தெரிவிக்கிறான்.
“அவர் (ஜகரிய்யா) தன் இறைவனைத் தாழ்த்த குரலில் அழைத்து,
“என் இறைவனே … நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன .என் தலையும் நரைத்து விட்டது .என் இறைவனே …(இதுவரையில்) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை.
நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளனைப் பற்றிப் பயப்படுகிறேன் என்னுடைய மனைவியோ மலடாகி விட்டாள் ஆகவே உன் புறத்திலிருந்து எனக்கு பாதுகாவனை (ஒரு பிள்ளையை வழங்குவாயாக)”
அதற்கு இறைவன் “ஜகரிய்யாவே…. நிச்சயமாக நாம் ‘யஹ்யா” என்ற பெயர் கொண்ட ஒரு மகனைத் தருவதாக உங்களுக்கு நற்செய்தி கூறுகிறோம்…
அதற்கவர் “என் இறைவனே .. எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும் ? என்னுடைய மனைவியோ மலடி, நானோ முதுமையின் கடைசி பாகத்தை அடைந்து விட்டேன்” என்று கூறினார்.
அதற்கவன் (நான் கூறிய) அவ்வாறே நடைபெறும் .அவ்வாறு செய்வது எனக்கு மிக்க எளிதானதே இதற்கு முன்னர் நீங்கள் ஒன்றுமில்லாமலிருந்த சமயத்தில் நானே உங்களைப் படைத்தேன் என்று உங்களது இறைவனே கூறுகிறான்” என்றும் கூறினான்.
அதற்கவர் “என் இறைவனே (இதற்கு) எனக்கேர் அத்தாட்சி அளி” என்று கேட்டார் (அதற்கு இறைவன்) “உங்களுக்கு (நான் அளிக்கும் ) அத்தாட்சியாவது நீங்கள் (சுகவாசியாக இருந்து கொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்” என்று கூறினான்,
பின்னர் அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டு தன் மக்கள் முன் வந்தார். (எனினும் அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது) ஆகவே காலையிலும் மாலையிலும் இறைவனைப் புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று தன் கையால் அவர்களுக்கு சைகையாக காண்பித்தார்.
மனைவி கர்ப்பம் தரித்திருக்கும் போது கணவரால் 3 தினங்கள் வாய் பேச முடியாமல் போகும் என்பதற்குரிய விளக்கம் விஞ்ஞானத்தின் பக்கம் இருப்பதாக தெரியவில்லை.
மெஞ்ஞானத்தில் மெய்யான காரணங்கள் ஏதேனும் இருந்தால், நீங்கள் சொல்லுங்களேன்.
– ரஹ்மத் ராஜகுமாரன் .