Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்…

Posted on September 22, 2017 by admin

Image may contain: 2 people, people smiling, people standing and text

இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்..

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில், அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல் ஒரு பெரிய மூட்டையை தோளில் தூக்கி சுமந்தபடி, அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார்.
.
இவர்கள் இருவரைத் தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்ல.

காரணம், ஊரடங்கு உத்தரவு!
.
கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன.

போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது.

வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால்,  விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள் .

காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இது! 

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து கலவரம் வெடித்தது.

இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள்.

உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு!
.
சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத் தள்ள உத்தரவு!

ஆனாலும் அந்த கணவனும் மனைவியும் அந்த ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
.
தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்: .“எங்கே போகிறீர்கள்?”

அந்தப் பெண் பதில் சொன்னார்: “ஜவகர் நகருக்கு..?”

“ஜவகர் நகருக்கா? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது?”

“இல்லை ..இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம். ஒரு முக்கியமான வேலையாக ஜவகர் நகருக்கு போகிறோம்.”

“முக்கியமான வேலையா? இந்த நெருக்கடியான நேரத்திலா ? அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி, இந்த நேரத்தில் அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அது இருக்கட்டும்… இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?”

அந்த கணவன் சொன்னார்: “தெரியும்… பல கிலோ மீட்டர்கள் போக வேண்டும்..”

“பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை. எப்படி நடந்து போவீர்கள் அவ்வளவு தூரம்? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு…!”

“போய் விடுவோம்..” –கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள்.
.
இவர்கள் பிடிவாதத்தை கண்டு கோபம் கொண்டார் அந்த போலீஸ்காரர்: “ சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால் கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு… தெரியுமா?”

“தெரியும்.”

“அது மட்டும் அல்ல… இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால் உங்கள் கதையையே முடித்து விடுவார்கள்”

அந்தப் பெண் உறுதியாக சொன்னார் : “அதுவும் தெரியும், ஆனாலும் நாங்கள் போய் விடுவோம். போய்த்தான் ஆக வேண்டும். மிக மிக முக்கியமான வேலை.”
.
அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார். கணவனும் மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மனைவியை பின் தொடர்ந்தார்.
.
இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது. மீண்டும் மீண்டும் எச்சரித்தது.
.
அதையும் மீறி அந்த கணவனும் மனைவியும் வெறிச்சோடிய அந்த சாலைகளில்….

பகல் முழுவதும் நடந்தார்கள்; பல கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்கள். ஒரு வழியாக ஜவஹர் நகரை அடைந்தார்கள்.
.
எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன.

இந்த தம்பதிகள் தேடி வந்தது பண்டிட்ஜி வீடு. அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது.

தெருவை நெருங்கினார்கள் .
.
அதற்கு முன் ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது:

“நில்லுங்கள்”

திரும்பிப் பார்த்தார்கள்.

காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது .

“உங்களை கைது செய்யப் போகிறோம்.”

“எதற்காக?”

“உங்கள் தோளில் இருக்கும் பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள்? அதை கீழே இறக்குங்கள்.”
.
இறக்கினார்கள்.

போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள்! திகைத்துப் போனார்கள்!!

“எல்லாமே உணவுப் பொருட்கள் .. யாருக்கு இதை கொண்டு போகிறீர்கள்..?”

அந்தப் பெண் சொன்னார் : “இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட் வீட்டுக்கு! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலே சொல்லி விடுகிறேன்.”
.
நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

அதிகாலையிலேயே ஒரு போன் வந்தது ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப் பெண்ணுக்கு!

பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி. இருவரும் நெருங்கிய தோழிகள். ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள்.

அது சரி… போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார்?
.
இதோ, அந்த பரிதாப கதை : “ஹலோ ..இங்கே ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது. கடைகள் அடைக்கப்பட்டு பலநாட்களாகி விட்டன. வெளியில் செல்ல முடியவில்லை. வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை.. பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி வேறு வேலை செய்யவில்லை. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது.

நான்கு நாட்களாக நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும் போல தெரிகிறது. நாளை நாங்கள் உயிரோடு இருப்பது கூட சந்தேகமாக…”
.
பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொலை தொடர்பு இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம்.
.
இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும், அவரது கணவரும் தவித்தார்கள்; துடித்தார்கள் . “நான்கு நாட்களாக பட்டினியா? எப்படி பண்டிட்டின் குடும்பத்துக்கு உதவுவது?”
.
ஒரு நொடி கூட யோசித்து நேரத்தை கடத்தாமல , உடனே ஜவகர் நகருக்கு புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும்.

வீட்டில் இருந்த கோதுமை, அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள் எல்லாவற்றையும் பெரிய மூட்டையாக கட்டி தன் கணவரின் தலையில் வைத்தார் அந்தப் பெண். பஸ், ஆட்டோ எதுவும் இல்லாததால், பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து….
.
“இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்” இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாக சொல்லி முடித்தார் அந்தப் பெண்.

கலங்கி விட்டார் அந்த காவல்துறை அதிகாரி : “ ஒரு நட்புக்காக உயிரை பணயம் வைத்து பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள். அதுவும் இந்த மூட்டையை சுமந்து கொண்டு! பாராட்டுகிறேன் அம்மா … சரி …உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது?”

“அடுத்த தெருவில்தான் .. !”

“வாருங்கள், நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்…”
.
காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டு கதவை தட்டினார்.

கதவு மெல்ல திறந்தது ; உள்ளே இருந்து வந்த பண்டிட்டும், அவரது மனைவியும், இந்த தம்பதிகளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில் “அட கடவுளே… இது என்ன? எப்படி இவ்வளவு தூரம் வந்தீர்கள்? முதலில் உள்ளே வாருங்கள்.”
.
தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்; கண்ணீர் வடித்தார்கள்.

வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களை துடைத்துக் கொண்டார்: “சரியம்மா.. முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள். நான் வருகிறேன்.”

“நன்றி சார்..”

“பை தி பை .. நான் உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா மேடம் ..?”
.
அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : “சுபைதா பேகம்..”
.
ஆம்.. இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்..

பசியால் துடித்துக் கொண்டிருந்த பண்டிட் என்ற ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு,

பல கிலோமீட்டர் தூரம் நடந்து கடந்து,

தேடிச் சென்று உணவு கொடுத்தது சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் குடும்பம்தான்!

[ காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இது ! (2016 ஜூன்)]
.
இது கதையல்ல.. “இந்தியா டுடே”யில் வந்த செய்தி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 25 = 29

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb