பதப்படுத்தப்படாத மம்மியும், பாதிப்படையாத ஷஹீதுகளும்
ரஹ்மத் ராஜகுமாரன்
பண்டை எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறு உலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைப்படுவதாகவும் இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது எனப்பட்டதால் மம்மி தொழில் நுட்பம் எகிப்தில் வளர ஆரம்பித்தது.
சடலத்தில் இருந்து நுரையீரல், கல்லீரல் .குடல் மற்றும் மூளை ஆகியவற்றை நீக்கி விடுவார்கள். மூக்கு வழியாக சிறிய குழலை மண்டை வரை செலுத்தி மூளையை உறிஞ்சி எடுத்து விடுவார்கள்.
இவ்வாறு அழுகும் இவ்வுறுப்புகள் வெளியே எடுப்பதால் மொத்த உடலும் அழுகாமல் பாதுகாக்கப்படுகிறது.
பின் உடலுக்குள்ளும் வெளியேயும் நேட்ரான் (Natron) என்னும் வேதியல் பொருளால் தடவப்பட்டு ஒரு அலங்காரமான பேழையில் சடலம் பாதுகாக்கப்படுகிறது.
அட, சொல்ல மறந்து விட்டேனே, உடலிலிருந்து இதயம் மட்டும் வெளியே எடுப்பதில்லை .காரணம் அதுதான் அம்மனிதன் மனம் ,சிந்தனை, ஞாபகம், காதல், இயக்கம் போன்றவை இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். இதெல்லாம் மூளையின் செயல் என்று அவர்களுக்கு தெரிந்திக்கவில்லை.
கி.மு 1224 முஹர்ரம் பிறை 10 ல்
ஃபிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸ் பற்றி பைபிள்,
”தண்ணீர்கள் திரும்பி வந்து, இரதங்களையும், குதிரைக்காரர்களையும், அவர்கள் பிறகாலே சமுத்திரத்துக்குள் பிரவேசித் திருந்த பார்வோனின் இராணுவம் அனைத்தையும் மூடிப் போட்டது. அவர்களில் ஒருவனாவது மீதியான தில்லை (மோஸே 2 , ஆகமம் 14 : 28)
ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படுவதாக திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதங்களிலும் சொல்லப்படவில்லை என்பதுதான் வேத ஆய்வாளர்களின் வியப்பான கூற்று.
கி.பி 1886 ஜூன்1 எகிப்தில் “பாபுல் முல்க் என்ற பள்ளத்தாக்கில் “லவட் ” என்பவரால் மம்மி ஒன்றை கண்டெடுக்கப்பட்டது .மாஸ்பிரோ என்பவரால் அந்தச் சடலத்தைச் சுற்றி மூடப்பட்டிருந்த துணியைப் பிரித்துப் பார்த்த போது அதன் ஒரு பகுதியில் அழியாத மையினால் சித்திர லிபியில் ஃ பிர்அவ்ன் என்று எழுதப்பட்டிருந்தது. (ஆதாரம் : எஸ்.யு அப்துல் ஹை எழுதிய “வழிகாட்டும் வான்மறை)
மிக முக்கிய மம்மிகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் உள்ளுறுப்புகள் போல் ஃபிர்அவ்னின் உடலிலிருந்து எந்த உள்ளுறுப்புகளும் எடுக்கப்படவில்லை இந்த மம்மி மம்மியாக பக்குவப்படுத்தப்படவில்லை என்பதுதான் விஞ்ஞானத்திற்கு இன்னும் பிடிபடாத ஆச்சர்யம்.
”உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாவதற்காக உன்னுடைய தேகத்தை அழியாமல் நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம். எனினும் நிச்சயமாக மனிதர்களில் அநேகர் நம்முடைய இத்தகைய சான்றுகளைப் பற்றிப் பாராமுகமாக இருக்கின்றனர்” (திருக்குர்ஆன் 10 : 92 )
ஃபிர்அவன் உடல் ஒரு வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கண்டெடுக்கப்பட்டால் உடலை பாதுகாக்கும் மிகக் குறைந்த வெப்ப நிலையை உருவாக்கும் விஞ்ஞான யுக்தி இல்லாத காலம். எனவேதான் விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் வெளிப்படுத்தி உள்ளான்.
இதே மாதிரி விஞ்ஞானம் வளர வளர வேறு என்னென்ன இறை அத்தாட்சிகள் வெளிபட இருக்கிறதோ? அல்லாஹ்வே அறிவான்.
ஹிஜ்ரி 1350 துல் ஹஜ் மாதம் 1932 ஏப்ரல் மாதம் ஈராக் நகரில் நபித்தோழர்களான ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித உடல்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.
காரணம் மண்ணறையில் தஜ்லா நதி வெள்ளம் உட்புகுவதாக முதலாம் பைசல் மன்னர் கனவிலும் தலைமை முஃப்தீ கனவிலும் நபித்தோழர்கள் சொன்னதாக இருவரும் கூற 1400 வருடத்திற்கு முந்தைய கபர்களை தோண்டிய பொழுது அவ்வுடல்கள் சற்று முன் அடக்கப்பட்டதாக இருந்தது அவ்விருவரையும் பாக்தாத்தி லிருந்து 40 மைல் தொலைவில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு பக்கத்தில் மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது. (இந்த நிகழ்ச்சியை 5 லட்சம் பேர் பார்த்தாக மஆரிஃப் மாத இதழ் ஜன 79
ஆஜம்கட் உ. பி.)
இப்போது யூதர்களின் கைக்கூலியாக சில நவீனத்துவக் கொள்கைக்காரர்களால் நபித் தோழர்களான ஸஹாபிகளின் கபறுகளை தரைமட்டமாக்க துணிந்தனர் .
அப்படி நபித்தோழர்களின் மண்ணறை உடைத்தபோது, அந்த கபுறுகளில் துயில் கொண்டிருப்பதை காணமுடிந்தது.
1) sahabi e Rasool a.s – Hajr bin Adi (R.a) grave and body distry by Yazzdi Fores
(ஹஜ்ரத் ஹஜ்ர் பின் அதீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
2) Hazarat Zubair bin Qais (RA) சுபைர் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இவ்விருவர்களின் மக்ஃபூ ராவை உடைத்து அவர்களின் உடலை சேதப்படுத்தியதை மேற்கண்ட வலைதளத்தில் பார்க்கவும்.
இது பற்றி குர்ஆனில் அல்லாஹ்,
”அல்லாஹ்வின் பாதையில் போரி்ட்டு கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். அவர்தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள் .அன்றி அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்.” (திருக்குர்ஆன் 3:169, 170)
நபித் தோழர்கள் மட்டுமல்ல மிகச் சாதாரணமாக வாழ்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களின் உடலை மண் தின்னாமல் பாதுகாக்கிறான் என்பதற்கு சாட்சியாக
வங்கதேசத்தில் ரங்க்பூர் மாவட்டம் கஷ்மார்கா என்ற கிராமத்தைச் சேர்ந்த பாட்டி ஆயிஷா காத்தூன் 1997 ஆம் ஆண்டில் 106 வயதில் இறந்தார் 6 வருடம் கழித்து தன் 3 மகன்களின் கனவில் தனித்தனியாக தோன்றி, ”ஆற்றில் வெள்ளம் வரும் போது நான் இருக்கும் இடத்தில் தண்ணீர் புகுந்து ஓடுகிறது எனவே என்னை இடம் மாற்று” என்று சொல்ல, மகன்கள் தத்தம் கனவில் தாயார் சொல்ல, ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் தாயார் அவர்களின் புனித உடலை மேட்டுப்பாஙகான இடத்தில் மாற்றியமைக்கப்பட்டது. (ஆதாரம் : தினமலர் 4.9. 2003)
”(வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவானா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன” (திருக்குர்ஆன் 6 : 122 )
– ரஹ்மத் ராஜகுமாரன்
source: https://www.facebook.com/rahmath.rajakumaran.9/posts/194538745238726