அதிசய பானம்: தாய்ப்பால்
ஹாருன் யஹ்யா
“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்.
அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்.
இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன.
ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக¢ என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (குர்ஆன் 31:14)
அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஈடு இணையற்ற தாய்பாலானது குழந்தைகளுக்கு அவசியமான சக்தியை பூர்தி செய்யக்கூயதாகவும் குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது.
தாய் பாலில் காணப்படும் சத்துகள் சரியான அளவில் காணப்படுவதால் குழந்தையின் வளர்ச்சியடையாத உடலுக்கு ஏற்றதாக காணப்படுகிறது. அதேநேரம் தாய்பாலில் சத்துகள் நிறைந்து காணப்படுவதால் அவை மூளை செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தி நரம்பு தொகுதியையும் வளர்ச்சியடைய செய்கிறது.
ஒரு மனிதனால் தற்கால தொழிநுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளால் இந்த அதிசய உணவை ஈடுசெய்ய முடியவில்லை.
தாய்பாலால் குழந்தை பெற்று கொள்ளும் நன்மைகளின் பட்டியல் அன்றாடம் நீண்டு கொண்டே போகிறது. தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சமிபாடு மற்றும் சுவாச தொகுதிகளில் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதற்கு காரணம் தாய்பாலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் தொற்று நோய்களுக்கு எதிராக நேரடியான பாதுகாப்பை வழங்குகிறது.
தாய்பாலிலுள்ள மற்ற நோய் எதிர்ப்பு காரணிகள் கேடு விளைவிக்க கூடிய பக்டீரியா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பு அமைப்பதுடன் நல்ல பக்டீரியாக்களான நோமல் புளோரா அனுமதிப்பதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் தாய் பாலில் காணப்படும் சில காரணிகள் தொற்று நோய் எதிராக நோய எதிர்ப்பு காரணியாக தயார்படுத்துவதுடன் அதை முறையாக தொழிற்பட உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 2
தாய் பால் விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை மிக இலகுவாக சமிபாடடையகூடிய உணவாக காணப்படுகிறது. அவை சத்து நிறைந்து காணப்படுது மட்டுமல்ல அவை குழந்தையின் மிக மென்மையான சமிபாட்டு தொகுதியில் இலகுவாக சமிபாடு அடைகிறது. குழந்தைகள் சமிபாட்டிற்காக குறைந்தளவு சக்தியே செலவிடுவதால் அந்த சக்தியை கொண்டு உடலின் மற்ற செயல்களுக்கும் மற்ற பாகங்கள் வளர்ச்சியடையவும் பாவிக்கப்படுகிறது.
குறைமாத குழந்தைகளை ஈன்ற தாய்மார்களின் பாலானது குழந்தையின் தேவைகளை ஈடுசெய்யும் முகமாக கொழுப்பு – புரதம் – சோடியம் – குளோரைட் மற்றும் இரும்பு சத்துகளை அதிகளவாக கொண்டு காணப்படும். உண்மையில் தாய்பால் ஊட்டப்பட்ட குறைமாத குழந்தையின் கண் வளர்ச்சியானது சிறப்பாக இருப்பதோடு அவைகள் சிறந்த சிந்தனை ஆற்றில் சிறப்பாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மேலும் பல ஆற்றல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு தாய்பால் அத்தியவசியமானதாக இருப்பதற்கு காரணம் அதில் ஒமேகா-3 ஒயில் அல்பா லினோலிக் அசிட்கள் இருப்பதாலேயாகும். அவை மனித மூளை மற்றும் கண்விழித்திரைக்கு தேவையான பொருளாக இருப்பதோடு புதிதாக பிறந்த குழந்தையின் பார்வையில் அவை மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒமேகா-3 கருவுற்ற காலகட்டத்திலும் குழந்தையின் ஆரம்ப காலகட்டங்களிலும் மூளையும் நரம்பும் சாதாரணமாக வளர தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஒமேகா-3 இயற்கையாகவும் சிறந்த சேமிப்பு கிடங்காகவும் தாய்பால் இருப்பதால் அதை மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.3
மேலும் பிரிஸ்டல் பல்கலைகழ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தாய்பாலின் நீண்ட கால நன்மையின் காரணமாக அவை இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துவதுடன் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை குறைக்கிறது. ஆய்வு குழுவின் அறிக்கை தாய்பாலின் பாதுகாக்கும் தன்மை அது கொண்டுள்ள சத்திலிருந்து வருவதாக கூறுகிறது. தாய் பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவது குறைவு என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. தாய் பாலில்லோன்ங் செயின் பொலிஅன்செடுரேடட்பெட்டி அசிட்கள் காணப்படுவதால்-இவை நரம்புகள் இறுக்கமடையாமல் காப்பாற்றுகிறது- அதை போன்று தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சோடியத்தை குறைவாக பெற்றுகொள்வதால் -இவை இரத்தம் அழுத்தம் ஏற்பட காரணமாக குறைக்கப்படுகிறது. அதன் காரணமாக அவை நிறை அதிகரிக்கப்பதால் தாய்வால் இதயத்திற்கு பயனளிக்கிறது.
4மருத்துவர் லிசா மார்டின் தலைமையின் கீழ் அமேரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தை மருத்துவமனையின் மருத்துவர் குழு மேற்கொண்ட ஆய்வில் தாய் பாலில் அடிபொனக்டின் என்று அறியப்பட்ட புரத ஹோமோன்கள் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 5 அடிபொனக்டின் அளவு இரத்தத்தில் அதிகமாக காணப்பட்டால் இதயத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறைகிறது.. உடல் பருமனானவர்களிலும் மாரடைப்பு ஆபத்துள்ளவர்களிடமும் அடிபொனக்டினின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் பருனாக குழந்தைகளில் ஹோமோன் குறைவதற்கும் தொடர்பு இருப்தாக நிரூபிக்கப்ட்டுள்ளன. மேலும் அவர்களின் ஆய்வின் போது தாய்பாலில் காணப்படும் லெப்டின் என்ற மற்றொரு ஹோமோனுக்கும பெட் மெடபோலிசம் தொடபர்பு இருப்பது தெரியவந்துள்ளது.. உடலில் கொழுப்பு இருப்பதை தெரிவிக்கும் சாதணமாக லெப்டின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மார்nனின் கூறுவதாவது தாய்பாலின் மூலம் பெறப்பட்ட இத்தகைய ஹோமோன்கள் அளவுக்கு அதிமாக பருமனாவது -இரண்டாம் நிலை சக்கரை வியாதி- இன்சுலினை எதிர்பது போன்ற நோய்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. 6
‘பசுமையான உணவை’ பற்றிய உண்மைகள்
தாய்பாலின் நன்மைகள் இத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. குழந்தையின் ஆரோக்கியத்தில் அதன் பங்கானது அந்த குழந்தை கடக்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப அதக் உணவு முறைகள் மாற்றமடைவதுடன் அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஏற்ப பாலின் உள்ளடக்கமும் மாற்றமடைகிறது. எல்லா நேரத்திலும் தகுந்த வெப்பநிலையில் தயாராக காணப்படும் தாய்பாலானது மூளை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது கொண்டுள்ள சீனி மற்றும் கொழுப்புமாகும். மேலும் கல்சியம் போன்றவைகள் குழந்தையின் எழும்பு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.
இதை பால் என்று அழைக்கப்பட்ட போதிலும் இந்த அதிசயமான பானத்தின் பெரும்பகுதி தண்ணீராகும். இது முக்கிய பண்பாக காணப்படுகிறது ஏனெனில் உணவை தவிர்நது குழந்தைகளுக்கு தண்ணீர் என்ற வகையில் திரவம் தேவைப்படுகிறது. தாய்பாலை தவிர்ந்து வேறு எந்த உணவிலோ அல்லது தண்ணீரிலோ முழு சத்துகளையும் காணமுடியாது. இருப்பினும் தாய்பாலில் -90 வீதம் தண்ணீர் காணப்பட்டபோதிலும் அது குழந்தையின் தண்ணீர் தேவையை சுகாதார முறையில் பூர்த்தி செய்கிறது.
தாய்பாலும் அறிவும்
மற்ற குழந்தைகளை விட தாய் பாலுட்டப்பட்ட குழந்தைகளுக்கு வளர்ச்சி அதிகமாக இருப்பதை விஞ்ஞான ஆய்வுகள் காட்டுகின்றன. தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுயும் பால்மா ஊட்டப்பட்ட குழந்தைகளையும் ஆய்வுக்கு உட்படுத்திய கெண்டகி பல்கலைகழகத்தை சேர்ந்த ஜேம்ஸ் அன்டர்சன் என்பவர் மற்ற குழந்தைகளை விட தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளின் அறிவு திறன் 5 புள்ளிகள் அதிகமாக இருப்பதை நிரூபித்தார். 6 மாதம் வரை தாய்பாலுட்டப்பட்ட குழந்தையின் அறிவு மேன்படுத்தப்பட்டிருப்பதாகவும் 8 வாரங்களுக்கு குறைவாக பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித அறிவில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது இந்த ஆய்வின் முடிவாக இருக்கிறது. 7
தாய்பால் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறதா?
பல ஆய்வுகள் நடத்தப்பட்டு பல கட்டுரைகள் வெளியடப்பட்டவைகள் அனைத்தும் தாய்பாலானது குழந்தைகளை புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடியதாக இருப்பதை நிரூபித்துள்ளன. இந்த செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. சோதனை கூடங்களில் உருவாக்கப்பட்ட கட்டி செல்களை தாய்பாலில் காணப்படும் புரதங்கள் மற்ற ஆரோக்கியமான செல்களைவிட்டு விட்டு அழிப்பதை விஞ்ஞானிகள் பெரும் சக்தி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். சுவீடனிலுள்ள லுன்ட் பல்கலைகழத்தின் தொற்றுநோய் சம்பந்மான பேராசிரியர் கதரீனா சவன்போ என்பவின் தலைமையின் கீழுள்ள ஆராய்ச்சி குழு தாய்பாலிலுள்ள அதிசமான இரகசியங்களை கண்டுபிடித்தது.8. இந்த லுன்ட் பல்கலைகழகத்தின் குழு தாய்பாலானது பலவகையான புற்று நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதை அதிசயமான கண்டுபிடிப்பு என கூறுகிறது.
முதலில் ஆராய்சியாளர்கள் புதிதாக பிறந்த குழந்தையிலிருந்து எடுத்த குடல் முகாஸ் செல்களை தாய்பாலோடு சேர்த்து பரிசோதித்தனர். நிமோனியா என்ற னுமகோகஸ் பக்டீரியாவினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை தாய்பாலானது மிக சிறந்த முறையில் தடுத்து நிறுத்தியதை கண்டறிந்தார்கள். மேலும் தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளை விட குறைந்தளவு கேட்டல் சம்பந்தமான குறைபாடுகளும் சுவாச தோற்று நோய்களும் ஏற்படுகிறது.
பல ஆய்வுகளுக்கு பிறகு தாய்பாலானது குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்படவதை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளை விட புட்டிப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தில் புற்று நோய் வருவது 9 வீதம் அதிக வாய்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பெறுபேறுகள் மற்ற புற்றுநோய் வகைகளுக்கும் பொருந்தும். தூய்பாலானது புற்றுநோய் செல்களை சரியாக இணங்கண்டு அவற்றை அழிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாய்பாலில் அதிகமாக காணப்படும் அல்பாலக் (அல்பாலக்டல்புமின்) என்ற பொருள் புற்றுநோய் செல்களை இணங்கண்டு அவற்றை அழிக்கிறது. பாலில் காணப்டும் சுகர் லக்டோஸ் உருவாக்க பயன்படும் புரதத்தாலேயே அல்பா-லக் உருவாக்கப்படுகிறது.
இந்த இணையற்ற அருள் அல்லாஹ்வின் பரிசாகும்
இந்த தாய்பாலின் இன்னொரு அற்புதம் அது இரண்டு ஆண்டுகள் ஊட்டப்டுவதாகும்10 இந்த முக்கியமான தகவல் விஞ்ஞானத்தால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த உண்மையை குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னே கூறிவிட்டது.
‘தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்’ (குர்ஆன் 2:233)
அதை போன்று தாயானவள் பாலை உற்பத்தி செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை. ஆதரவற்ற குழந்தைக்கு தேவையான சத்துகளை பட்டியலிடுவதுமில்லை. அது தேவைகளை நன்கு அறிந்து எல்லாவற்றுக்கும் அருள் செலுத்துகின்ற ஆற்றல்மிக்க அல்லாஹ் தான் தாயின் உடலில் குழந்தைக்கு தேவையான பாலை உருவாக்குகிறான்.
ஆக்கம்: – ஹாருன் யஹ்யா
1- “High-Risk Newborn—The Benefits of Mother’s Own Milk,” University of Utah Health Sciences Center, www.uuhsc.utah.edu/healthinfo/pediatric/Hrnewborn/bhrnb.htm.
2- Ibid.
3- C. Billeaud, et al., European Journal of Clinical Nutrition, 1997, vol. 51, 520-526.
4- “Breast milk ‘does cut heart risk’,” 1 March 2004, http://news.bbc.co.uk/2/hi/health/3523143.stm.
5- “Breast milk helps reduce obesity,” 2 May 2004, http://news.bbc.co.uk/2/hi/health/3673149.stm.
6- Ibid.
7- Tim Whitmire, “IQ Gain from Breastfeeding,” http://abcnews.go.com/sections/living/DailyNews/breastfeeding990923.html.
8- “Breakthrough in Cancer Research,” www.mediconvalley.com/news/Article.asp?NewsID=635.
9- Peter Radetsky, “Human Breast Milk Kills Cancer Cells,” Discover 20, No. 06, June 1999.
10- Rex D. Russell, “Design in Infant Nutrition,” www.icr.org/pubs/imp/imp-259.htm.