தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை
அப்துர் ரஹ்மான்
”தேடுதல் இல்லையென்றால் தெளிவு இல்லை
தெளிவு இல்லையென்றால் (ஈருலக)வாழ்வில் வெற்றி இல்லை”
சிந்தனை மட்டுமே ஒரு மனிதனை அனைத்து விஷயங்களிலும் தெளிவுபடுத்தி அவனை நேரான பாதைக்கு இட்டுச்செல்லும் ஆதலால்தான் அல்லாஹுவும் தன் திருமறையில் ”மனிதர்களே சிந்தியுங்கள்” என்று பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹுவின் வேதத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் போதனைகளையும் தன் கையில் வைத்திருக்கும் இந்த இஸ்லாமிய சமூகம், உலகை ஆல வேண்டிய இந்த சமூகம், மனிதர்களுக்கு ஒலுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இந்த சமூகம், அநீதிக்கு எதிராக போராட வேண்டிய இந்த சமூகம், மக்களை ஒரு இறைவனின் பக்கம் அழைக்க வேண்டிய இந்த சமூகம், உலகில் இறையாட்சியை நிழைநாட்ட வேண்டிய இந்த சமூகம், இந்த திருமறையை பொருலுனர்ந்து சிந்திக்கத்தவறியதன் விளைவு…..,
இந்த உலகில் திவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும், தாகூத்திய சக்திகளுக்கு அடிமையாகவும், மேலும் தாகூத்திய சக்திகளுக்கு கீழ்படிவதை நியாயப்படுத்திக்கொண்டு ஒரு அடிமைகளை போல தன் வாழ்வில் தேவைப்படும் சுய தேவைகளுக்கு கூட ஒரு தாகூத்திய சக்திகளிடத்தில் கையேந்தி எதிர்பார்த்து நிர்க்கும் அவலநிலையை பார்க்கிறோம்.
சிந்தியுங்கள் சகோதரர்களே! அல்லாஹ் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மொழியிலும் மக்களுக்கு நன்மை தீமையை பிறித்தரிவிக்க தம் தூதர்மூலமாக வேதத்தை அனுப்பினான். ஆனால் ஒவ்வொரு தூதரையும் கொண்ட அந்த சமூகம் அந்த வேதத்தில் தன் கைவரிசையை காட்டி தன் மனோஇச்சைபடி அவற்றை மாற்றி தனக்கு பிடித்ததை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவையை ஒதுக்கி அல்லாஹுவின் கோபத்துக்குள்ளானது. ஆதலால் அல்லாஹ் அந்த சமூகத்தை அழித்து வேரொரு சமூகத்தை கொண்டுவந்தான்.
சிந்தியுங்கள் சகோதரர்களே! இன்று நம் நிலை எவ்வாறு உள்ளது அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்ற கீழ்கண்ட வசனத்துக்கு தகுந்தவாறு உள்ளதா….?
மூஃமீன்களே நீங்கள் தினுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் தவிர சைதானுடைய அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள்” (அல்குரான் 2:208).
அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் கூறுகின்றான் இந்த உலகில் இஸ்லாம் அல்லாத மனித மூலையினாலும் மனோஇச்சையினாலும் உருவான அனைத்து கொள்கைகளும் ஷைத்தானின் அடிச்சுவடுகளே என்றும் அதில் எள்ளளவும் எள்ளின் முனையலவும் முனையின் மூக்களவும் கலந்து இருக்க கூடாதென்று. ஆனால் இந்த உலகில் அல்லாஹுவின் வாக்கை மேலோங்க செய்யவேண்டிய இந்த இஸ்லாமிய சமுகம் பலஷைத்தானிய கொள்கைகளை சரி என்று பின்பற்றிகொண்டு அல்லது நிர்பந்தம் என்று அவர்களுக்கு அவர்களே சமாதானம் செய்துகொண்டு மக்கள்மத்தியில் பரப்பி வருகிறர்கள் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.
இதற்கு முன் வாழ்ந்த சமூகம் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிக்காமல் மனோஇச்சையை இறைவனாக ஏற்றுகொண்டதால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை அழித்து இந்த உலகில் தன் கட்டளைகளை நிறைவேற்ற வேறொரு சமுதாயத்தை கொண்டுவந்தான் அதை தன் திருமறையிலும் சொல்லிகாட்டுகிறான்.
ஆனால் நம் உயிரினும் மேலான உத்தம நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கேட்ட துவாவினால் அன்னாரின் உம்மத்தான நம்மை இந்த இஸ்லாமிய சமுகத்தை அல்லாஹ் இந்த உலகில் அழிக்கமாட்டான் மாறாக அவனுடைய சட்டங்களை இந்த உலகில் நிலைநாட்ட அவன் நாடியவரை தேர்வுசெய்வான் அதன்மூலம் அவன் அவனுடைய சட்டங்களை இந்த உலகில் நிலைநாட்டுவான். அப்படி அவன் தேர்வு செய்யகூடிய அந்த கூட்டத்தாரில் நம்மையும் ஒருவராக ஆக்குவானாக ஆமீன்.
இன்ஷா அல்லாஹ் நம்மனதில் தேற்றத்தை ஏற்படுத்துவோம் சிந்திப்போம் தெளிவுபெறுவோம் ஈருலகிலும் வெற்றி நிச்சயம் அல்லாஹ் நம்மனதை இஸ்லாத்துக்காக விரிவுபடுத்துவானாக.