Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மண் செய்யும் மாயம்

Posted on September 8, 2017 by admin

Related image

மண் செய்யும் மாயம்
.
        ரஹ்மத் ராஜகுமாரன்.      

கி.மு 1500 ல் எழுதப்பட்ட சமஸ்கிருத ஸ்லோகம் இப்படிச் செல்கிறது “கைப்பிடியளவு உள்ள இந்த மண்ணில்தான் நம் உயிர் வாழ்க்கை அடங்கி இருக்கிறது. இந்த மண் நம்முடைய உணவை, எரிபொருளை நம்முடைய வீட்டை பாதுகாக்கும். நம்மைச் சூழ்ந்து நின்று நம்முடைய வாழ்வாதாரத்திற்கு வகை செய்யும். இதை பராமரிக்காமல், உதாசீனப்படுத்தினால் மண் அழியுதோ இல்லையோ மனித குலம் அழிந்துவிடும்.
.
மண்ணுக்கு உயிர் இருக்கிறதா? ஆம் இருக்கிறது. உயிர் இருந்ததால்தானே இறந்தும் போகிறது!

அப்புறமா உயிர்பிக்கப்படுகிறதா? உயிர் பிக்கப்படுகிறது விஞ்ஞானிகள் மட்டும்சொல்லவில்லை, குர்ஆனே சொல்கிறது.

“அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்கின்றான். இவ்வாறே மரணித்த பின்னர் மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 30 : 19)

நம் மூதாதையர்கள் இந்த மண்ணில் தான் மறைந்து போய் இருக்கிறார்கள் .இந்த மண்ணில்தான் இரும்பு போன்ற கனிமப் பொருட்களும் மறைந்து இருக்கிறது .மனிதனுக்கு பயன்படும் இந்த மண்ணில் புதைந்த இரும்பில் கூட மனிதம் மறைந்திருக்கிறதா…. என்றால் இரும்பில் கூட மனிதம் மறைந்து இருக்கிறது என்கிறது குர்ஆன்.

“(நபியே ) நீங்கள் கூறுங்கள் : நீங்கள் (உக்கி, மக்கி மண்ணாவது என்ன ?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகி விடுங்கள் அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் பொருளாகவாகிலும் ஆகிவிடுங்கள். (அல்குர்ஆன் 17 : 50, 51)

இப்போது சொல்லுங்கள் கல்லும், மண்ணும் மற்ற பொருட்களிலும் மனிதம் மறைந்திருக்கிறதா? இதனால் இறைவன்,

“(மரணித்தவர்களை மூடிக் கொண்டிருக்கும் ) பூமி பிளந்து அவர்கள் வேகமாக வெளியே வரும் நாளையும் அவர்களை ஒன்று சேர்ப்பதையும் நமக்கு மிக்க எளிதானதே” (அல்குர்ஆன் 50: 44)

கல், இரும்பு மற்ற எல்லா பொருட்களிலும் மனிதம் மறைந்திருக்கிறது. இது நம் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் பனீ இஸ்ரவேயரில் ஒருவனுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

இதனால்தான் சாமிரீ என்பவன் தான் செய்த தங்க கன்று சிலைக்கு உயிர் கொடுக்க யாரும் பார்க்காததை அவன் பார்த்தான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் காலடி மண்ணை எடுத்து சிலைக்குள் வைத்தான். அதற்கு உயிர் வந்தது. சப்தமும் இருந்தது.” (அல்குர்ஆன் 20 : 96 )

சாமிரீ தங்கத்தில் கன்று செய்து மண்ணைக் கொண்டு உயிர்ப்பித்தான் என்றால் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்   அவர்கள்,

“உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் (வெளவால்) செய்து அதில் நான் ஊதுவேன் . அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது பறக்கும் பறவையாகிவிடும். (அல்குர்ஆன் 3 : 49)

ஆக மண்ணில் உயிர் இருக்கிறது. ஒத்துக் கொள்கிறீர்களா?

மண் திடப்பொருள்தானே இதில் சந்தேகம் இல்லையே? ஆனால் தண்ணீர் மாதிரி திரவப் பொருளாகவும் மாறும்.

“நீங்கள் நோயாளிகளாக இருந்தோ அல்லது பயணத்தில் இருந்தோ அல்லது எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தோ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தோ தண்ணீரை நீங்கள் பெறவில்லை எனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள் ) அதாவது சுத்தமான மண்ணைக் கொண்டு உங்கள் முகங்களையும். கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 5 : 06 )

மண் ஓர் ஆயுதமாகவும் இருக்கிறது.

எதிரிகளின் கண்களை கட்டிக் கொள்ளும் ஒரு திரையாகவும் இருக்கிறது .

“(நபியே எதிரிகளின் மீது) நீங்கள் மண்ணை எறிந்த போது அதனை நீங்கள் எறியவில்லை. அல்லாஹ்தான் அதனை எறிந்தான். (அல்குர்ஆன் 8 : 16)

மண் குளியல் பற்றி மருத்துவம் நிறைய பேசுகிறது . உடல் வலிகளைப் போக்குகிறது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது சதை இறுக்கத்தை போக்கிறது .இதனால் மனம் சஞ்லப்படுவதில் இருந்தும் காக்கிறது.

அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மனைவி ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்தின் காரணமாக மதியம் மனைவியுடன் ஓய்வு எடுக்காமல் பள்ளி வாசலில் போய் படுத்தார்கள்.

படுக்கும் போது அலீ ரளியல்லாஹு அன்ஹுஅவர்களின் மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த மண்ணை அவர்களின் உடம்பிலிருந்து துடைத்துக் கொண்டே. “அபுத்துராப்” (மண்ணின் தந்தையே) எழுங்கள், அபுத்துராப் எழுங்கள்” என்று இரண்டு முறை கூறினார்கள். (முஸ்லீம் 4784)

ஒரு முறை யுத்த களத்தில் நபித் தோழர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மதீனா வந்தபோது, மதீனாவின் ஒரு ஓடையில் உள்ள மண்ணை எடுத்து மருந்தாக பயன்படுத்தச் சொன்னார்கள்.

மண்ணின் மூலச்சத்தை சிலிக்கான் என்கிறது விஞ்ஞானம் சிலிக்கானிலிருந்த மின்னணு சில்கள் உலகிலேயே அதிகமாக அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் தயாரிக்கப்படுகிறது இதனை “உலகின் சிலிக்கான் பள்ளத்தாக்கு” என்கிறார்கள்.

இங்குதான் ஆப்பிள் – இன்டெல் – கூகுள்- யாகூ – பேஸ் புக் – ஐ.பி.எம் போன்றவற்றின் தலையகம் உள்ளது.

அன்றாட நவீன வாழ்வில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், டெலி கம்யூனிகேஷன் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட உயர் தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது யுக்திகளை கண்டுபிடித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த யுக்திகளால் யாருமே கேட்க மாட்டார்கள் பார்க்க மாட்டார்கள் என்ற நினைப்பில் விட்ட ஜொள்ளுகள், உலகில் கோடிக்கணக்கானோர்கள் கேட்க பார்க்க செய்துவிடுகிறது இந்த மண்ணின் மூலம் சத்தான சிலிக்கான்!

 

இத்தனை மாண்புற்ற மண்ணிலிருந்து,

“(உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவப்படுத்தி மலக்குகளை நோக்கி “ஆதமுக்கு சிரம் பணியுங்கள் எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைதி தவிர மற்ற மலக்குகள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். இப்லீஸ் யை நோக்கி “நீ சிரம் பணியாதிருக்க உன்னை தடை செய்தது எது?” நீ என்னை நெருப்பில் படைத்தாய் அவரை களிமண்ணில் படைத்திருக்கிறாய். ( களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது) ” என்று கூறினான்.  (அல்குர்ஆன்  7 : 11 , 12)

இத்தனை விபரங்கள் தெரியாத முட்டாள் இப்லீஸ்!

-ரஹ்மத் ராஜகுமாரன்.

source:  https://www.facebook.com/photo.php?fbid=1943469959245683&set=pcb.1943470059245673&type=3&theater

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb