மனிதர்களால் குறையும் பூமி!
“அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது.” (திருக்குர்ஆன் 50:4)
“அல்லாஹ் உங்களை பூமியிலிருந்தே வளர்த்து பெரிதாக்கினான்.” (திருக்குர்ஆன் 71:17)
உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொள்ளப்பட்டிருக்கிரத். அதில் மிகப்பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.
பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாளுமதற்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை. பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக,மரங்களாக மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.
இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருளுமே தங்களின் எடையை பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.
எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியை படைத்த போது இருந்த அதே எடை தான் இருக்கும்.
மனிதன் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளருகிறான் என்ற அறிவியல் உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.
இதே தத்துவத்தை மற்றொரு கோணத்திலும் திருக்குர் ஆன் பின் வரும் வசனத்திலும் கூறுகிறது.
அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளை விளக்கியுள்ளோம். (திருக்குர்ஆன் 6:98)
இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் திருக்குர் ஆன் பயன் படுத்தியிருக்கின்ற “ஒப்படைக்கப்படும் இடம்” என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையை சொல்கிறது.
மனிதன் இந்த உலகில் சின்னஞ்சிறிய அளவில் பிறப்பெடுக்கின்றான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறந்த போது இருந்த இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மன்னில்லிருந்த சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.
மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள். பருப்புகள் இன்ன பிற சத்துக்களை பெற்று தன்னை பெரித்தக்கி கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.
50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து 50 கிலோ எடை குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த ஐம்பது கிலோ எடையை பெறுகிறானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.
மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாக சாப்பிடுவதில்லை மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி “ஒப்படைக்கப்படுகின்ற இடம்” என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தியிருக்கின்றான்.
– கூத்தாநல்லூர் ஜின்னா