Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட!

Posted on August 14, 2017 by admin

தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட!

      ஃ பாத்திமா மைந்தன்      

தொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருத்துவமாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்குத் தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது.

இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகிவிட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம்.

நமது உடல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.  தூங்கும்போது மட்டுமே முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்பது, உட்காருவது, படுப்பது என்ற நிலையில் வாழ்க்கையை நகர்த்தினால் உடல்நலம் கெடும். உடல் எடை கூடும். பல்வேறு நோய் கள் தங்கும் கூடாரமாக நமது உடல் மாறி விடும்.

எனவே நாம் அனைவரும் ஏதேனும் உடற் பயிற்சியோ, தேவையான நடைபயிற்சியோ கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற உடல் உழைப்புகளால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து உடைபட்டு சக்தியாகவும், வெப்பமாகவும் வெளி யேறுகின்றது. இதன் காரணமாக உடலில் இருந்து அதிக கலோரிகள் செலவிடப்பட்டு உடல் பருமன் ஆகாமல் தடுக்கப்படுகிறது. கொழுப்பும் குறைகிறது.

சூரிய உதயத்திற்கு முன்பு நிறைவேற்றப்படும் தொழுகை சுபுஹு-ஃபஜ்ர் தொழுகையாகும். அந்தத் தொழுகையை நிறைவேற்றுவதில் நடை பயிற்சியும், உடற்பயிற்சியும் இடம் பெறுவதால் உடல் நலம் பெறுகிறது. தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு நடந்தே செல்வது அதிக நன்மை பயக்கும்.

மதீனாவில் உள்ள மஸ்திதுன் நபவீ பள்ளிவாசலுக்கு அருகே சில இடங்கள் காலியாக இருந்தன. மிகத் தொலைவில் குடியிருந்த பனூ சலிமா குலத்தார் அந்த பள்ளிவாசலுக்கு அருகே குடியேறத் திட்டமிட்டனர். இதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ சலிமா குடும்பத்தாரே! உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

மக்களில் கூலி அதிகம் பெறுபவர், தொழுகைக்காக வெகு தூரம் (நடந்து) வருபவர்தான் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற்று :

எல்லாவித வேலைகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்கு நிறைய ஆக்சிஜன் அவசியம். மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. உடம்பின் எடையில் மூளை ஐம்பதில் ஒரு பங்கு அதாவது 2 சதவீதம் தான். இருந்தபோதிலும் உடல் பயன்படுத்தும் மொத்த ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது. ஆக்சிஜன் கொஞ்ச நேரம் இல்லாவிட்டாலும் கூட மூளையின் செல்கள் பழுதடைந்து விடும் அல்லது இறந்து விடும்.

உயிர் வாழும் பொருட்கள் அனைத்தும் காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்கின்றன. நமது உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் எல்லாவற்றுக்குமே ஆக்சிஜனே ஜீவாதாரம். அதிகாலை சூரிய உதயத்திற்கு 40 நிமிடத்திற்கு முன்புதான் மூளையின் செயலாற்றும் திறன், மிக அதிகபட்ச அளவான 70 சதவீதம் வரை வெளிப்படுகிறது என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் வெளிப்பாடு. அந்த நேரத்தில்தான் முஸ்லிம்களின் அதிகாலைத் தொழுகை தொடங்குகிறது. இதில் பங்கேற் பதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

பார்வை, கண்களால் நிகழ்வது, கண் என்பது ஒரு கேமரா போலத்தான். அதற்குள் ஒரு லென்ஸ் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் கார்னியா வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. இது குறைந்த வெளிச்சத்தில் பெரிதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும். நமது முன்னோர்கள் அதி காலையில் எழுந்து நடைபயிற்சியோடு அன்றாட வேலைகளைத் தொடங்கி விடுவதால் உடல் நலத்தோடு நீண்ட நாள் வாழ்ந்தனர். அந்தக் காலத்தில் கண்ணாடி போடும் மனிதர்களைக் காண்பது அரிதாக இருக்கும்.

அதிகாலைத் தொழுகையில் பங்கேற்கச் செல்லும் போது சுத்தமான காற்றை நமது நுரையீரல் அதிகபட்ச மாக சுவாசிக்கிறது. அதிகாலை நேரத்தில் பள்ளிவாசலில் வைகறையின் அழகிய சூழல் மனதிற்கு அமைதியை அளிக்கிறது. இத்தகைய காரணங்களால் அதிகாலைத் தொழுகை, கண்களுக்கு மட்டுமல்ல, உடலுக்கும், உள் ளத்திற்கும் நன்மை பயக்கிறது.

அதிகாலைத் தொழுகை (சுபுஹு) தவிர பகல் நேரத் தொழுகை (லுஹர்), மாலை நேரத் தொழுகை (அஸர்), அந்தி நேரத் தொழுகை (மஃக்ரிப்), முன்னிரவுத் தொழுகை (இஷா) ஆகிய தொழுகைகளும் மிதமான உடற்பயிற்சி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

தொழுகையில் நிமிர்ந்து நிற்பது, குனிவது, நெற்றியைத் தரையில் வைத்து வழிபடும் நிலை என பல நிலைகள் உள்ளன. தொழுகையில் இரு கைகளையும், புஜம் வரை உயர்த்திப் பின்னர் இரு முழங்கால் மீது வைத்து, குனிந்து நிற்கும் நிலை ருகூ எனப்படும். தொழுகையில் நெற்றி தரையில் படும்படி செய்யப்படும் சிர வணக்கம் சஜ்தா எனப்படும்; தொழுகை இருப்பில் ஓதப்படும் ஒரு வகைப் பிரார்த்தனை அத்தஹியாத்.

இரு கைகளையும் நான்கு முறை புஜம் வரை உயர்த்தி, நின்று குனிந்து, நிமிர்ந்து தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகள் தொழுகையில் இடம் பெறுகின்றன. இதனால் தொழுகை அனைவருக்கும் ஏற்ற உடற்பயிற்சி யாகும். தொழுகை இதயத்திற்கு இதமளிக்கிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது.

source: http://www.annajaath.com/2017/07/29/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb