ஒழுக்கம் அவசியமா?
[ இளைஞர்கள் வீடுகள், பாடசாலைகள், டியூட்டரிகள், வேலைபார்க்கும்; இடங்கள் போன்ற இடங்களில் தன்னோடு இருப்பவர்களோடு நன்றாகப்பேசிப் பழகிக்கொண்டிருப்பார்கள், நல்லமுறையில் நட்பு வைத்துக்கொள்வார்கள்; ஆனால், தன்னுடைய தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பன் இவர்களால் தனக்கு ஏதாவது ஒரு விடயத்தில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் தன்னுடைய தாய், தந்தை என்றோ, தன்னுடன் பிறந்தவன் என்றோ, நண்பன் என்றோ பார்க்காமல் கொஞ்சங்கூட பொறுமை இல்லாமல் அவர்களது வாயால் மொழிகின்ற வார்த்தைகள்; கேவலங்கெட்ட வார்த்தைகளாகப் பேசி இதுபோன்ற கலையிலும்; இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
அதுபோன்று இளைஞர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் அல்லாஹ்வைப்பற்றி, அவனது மறுமைநாள் பற்றிப் பேசுவதென்றால் அது குறைவாகத்தான் இருக்கும் ஆனால், ஏதாவது ஒரு நடிகனைப் பற்றியும் அவனுடைய படம் வெளியாகும் நாள் எப்போது என்றும், எப்போது அந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்றும், ஒருவன் ‘நான் நேற்று ஒரு படம் பார்த்தேன் அந்தப் படத்திலே நடித்த நடிகை அழகாக இருந்தாள்’ என்றும் ஆரம்பித்து ஆபாசமாக வர்ணித்துக்கூறுவான், பின்னர் தரங்கெட்ட கலநதுரையாடல் தொடரும்,
மற்றுமொருவன் ‘டியூட்டரியிலே எங்களுடைய ஆசிரியை என்னை திட்டிவிட்டார் அவளுக்கு தொலைபேசியிலே நானும் திட்டவேண்டும்’ என்று கூற எல்லோருமாக சேர்ந்து அந்த ஆசிரியைக்கு ஊயடட எடுத்து சொல்வதற்கு நாவுகூசக்கூடிய கெட்டபேச்சுக்களைப் பேசக்கூடியவர்கள் இதுபோன்ற எத்தனையோ வீண்வார்த்தைகளை சர்வசாதாரணமாகப் பேசுவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
கல்வியைக் கற்றுத்தருபவர்களைப் பற்றியும், அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு உயர்வாகக் கூறியிருக்கின்றார்கள். ஆனால், இதுபோன்ற கலையிலும், இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.]
ஒழுக்கம் அவசியமா?
உண்ணுவதற்கும், உடுப்பதற்கும், உறங்குவதற்கும், உழைப்பதற்கும் உரிமை உண்டாக்கி, உலகில் உள்ள உயிரினங்களுக்கெல்லாம் உயிர் ஊதிய உரிமையாளன் உயர்ந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இயற்கை மார்க்கமான இனிய இஸ்லாத்தை இம்மையில் இன்றுவரைக்கும் இயங்கவைத்த இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்ளூ ‘யார் அல்லாஹ்வையும் மறுமையையும் உண்மையாக நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். இல்லையாயின் மௌனமாக இருக்கட்டும்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: இப்னு மாஜா 3971)
இஸ்லாம் என்று சொன்னால் அல்லாஹ்வுக்கு அடிபணிதல் என்று பொருள்படும். அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கமே அவனுடைய திருக்குர்ஆனை விளங்கி, அவனுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி தங்களது வாழ்க்கையை நேரான வழியில் வாழ்ந்து சுவனத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே தவிர, மனிதர்கள் அவர்கள் நினைத்தது போன்று தங்களுடைய நேரத்தையும், காலத்தையும் பயன்படுத்தி வாழ்க்கையை வாழமுடியாது.
தம் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு, சகோதர, சகோதரிகளுடன், உறவினர்களுடன்;, அண்டைவீட்டார்களுடன்;, நண்பர்களுடன் இன்னும் இது போன்றவர்களுடன் எவ்வாறு நடக்க வேண்டும், வியாபாரத்;தை நேரான முறையில் செய்ய வேண்டும், எந்த அநீதி தரக்கூடிய விடயத்திலும் துணைபோகாமல் இருக்கவேண்டும் போன்ற இன்னும் பல விடயத்தை அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் நமக்குக் கூறுகின்றதை தங்களது வாழ்க்கையில் எடுத்து நடந்து அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழவேண்டும் அதற்காகவே தான் அல்லாஹ் மனிதர்களைப் படைத்திருக்கின்றான்.
அதிலே ஒன்றுதான்; மனிதன் தம் இளமைப் பருவத்தை எவ்வாறு கழிக்கவேண்டும் என்று அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தந்திருக்கின்றது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வீண்விளையாட்டுக்களிலும், வீண்பேச்சுக்களிலும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பான வகையிலும் செயல்பட்டு தங்களுடைய இளமைப்பருவ வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருப்பது நாங்கள் அனைவரும் அறிந்த உண்மை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘யார் அல்லாஹ்வையும் மறுமையையும் உண்மையாக நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். இல்லை என்றால் மௌனமாக இருக்கட்டும்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: இப்னு மாஜா 3971))
இளைஞர்கள் வீடுகள், பாடசாலைகள், டியூட்டரிகள், வேலைபார்க்கும்; இடங்கள் போன்ற இடங்களில் தன்னோடு இருப்பவர்களோடு நன்றாகப்பேசிப் பழகிக்கொண்டிருப்பார்கள், நல்லமுறையில் நட்பு வைத்துக்கொள்வார்கள்;. ஆனால், தன்னுடைய தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பன் இவர்களால் தனக்கு ஏதாவது ஒரு விடயத்தில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் தன்னுடைய தாய், தந்தை என்றோ, தன்னுடன் பிறந்தவன் என்றோ, நண்பன் என்றோ பார்க்காமல் கொஞ்சங்கூட பொறுமை இல்லாமல் அவர்களது வாயால் மொழிகின்ற வார்த்தைகள்; கேவலங்கெட்ட வார்த்தைகளாகப் பேசி இதுபோன்ற கலையிலும்; இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
அதுபோன்று இளைஞர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் அல்லாஹ்வைப்பற்றி, அவனது மறுமைநாள் பற்றிப் பேசுவதென்றால் அது குறைவாகத்தான் இருக்கும் ஆனால், ஏதாவது ஒரு நடிகனைப் பற்றியும் அவனுடைய படம் வெளியாகும் நாள் எப்போது என்றும், எப்போது அந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்றும், ஒருவன் ‘நான் நேற்று ஒரு படம் பார்த்தேன் அந்தப் படத்திலே நடித்த நடிகை அழகாக இருந்தாள்’ என்றும் ஆரம்பித்து ஆபாசமாக வர்ணித்துக்கூறுவான், பின்னர் தரங்கெட்ட கலநதுரையாடல் தொடரும்,
மற்றுமொருவன் ‘டியூட்டரியிலே எங்களுடைய ஆசிரியை என்னை திட்டிவிட்டார் அவளுக்கு தொலைபேசியிலே நானும் திட்டவேண்டும்’ என்று கூற எல்லோருமாக சேர்ந்து அந்த ஆசிரியைக்கு ஊயடட எடுத்து சொல்வதற்கு நாவுகூசக்கூடிய கெட்டபேச்சுக்களைப் பேசக்கூடியவர்கள் இதுபோன்ற எத்தனையோ வீண்வார்த்தைகளை சர்வசாதாரணமாகப் பேசுவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
கல்வியைக் கற்றுத்தருபவர்களைப் பற்றியும், அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு உயர்வாகக் கூறியிருக்கின்றார்கள். ஆனால், இதுபோன்ற கலையிலும், இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
”யார் தனது நாவையும், மர்மஸ்தானத்தையும் பாதுகாப்பதாக உறுதி மொழி கூறுகின்றாரோ அவருக்குச் சுவனத்தைக் கொண்டு நான் உறுதி மொழி கூறுகின்றேன்” என்ற கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலாக ஸஹ்ல் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’ (ஆதாரம்: புகாரி 11ஃ264, 265)
பாடசாலைகளில் மாணவர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படுவது ஒரு சாதாரண விடயமாகும், அவ்வாறான விடயத்தில்கூட மாணவ, மாணவிகள் தங்களுடைய நாவுகளால் தன்னுடன் கல்வி கற்கின்றவர்களுக்கு மிகப்பிரமாண்டமான கெட்டவார்த்தைகளைப் பேசுகிறார்கள், அதிலும் சிலர் அவர்களுக்குள் பேசிக்கொள்வதும் கெட்டவார்த்தைகளால்தான் தன்னுடைய நண்பனை அழைப்பதென்றால்கூட இளைஞர்களின் பேச்சு நடத்தைகள் இருக்கின்றன. இன்னும் இது போன்று பல தகவல்களைக் குறிப்பிடலாம். இப்படியான கலையிலும்; இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
‘குறை கூறிப்புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்’ (அல்குர்ஆன் -அல்ஹுமஸா 104:01) இளைஞர்களிடத்தில் சர்வசாதாரணமாக காணக்கூடியவற்றில் இன்னொன்றுதான் பொறாமை, பொய், புறம்பேசுதல், இந்த விடயத்தில் கூட மிகவும் அதிகமான இளைஞர்கள் உயர்வடைந்திருக்கின்றார்கள். தன் பெற்றோர்கள், ஆசிரியர்கள்;, நண்பர்கள், நண்பிகள் போன்றவர்களிடத்தில் நல்ல பெயர் பெறுவதற்காக பொய்களைப் பேசுகின்றார்கள். வீதீயில் கூடிக்கொண்டிருக்குமிடத்தில் யாராவது இயலாத, ஊனமான மனிதர்கள் மற்றும் பெண்கள் சென்றால் அவர்களை கிண்டல் செய்து அதிலே சந்தோசமடைவார்கள். இவ்வாறான கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
அபூ மூஸா அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே முஸ்லிம்களிடத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என வினவ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘எவரது நாவையும் கரத்தையும் விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றனரோ அவரே சிறந்த முஸ்லிம்’. எனப்பதிலளித்தார்கள். (புகாரி-முஸ்லிம்)
ஒரு முறை இளம்வயதில், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாதையோரத்தால் சென்றுகொண்டிருக்கும் போது அந்தப் பாதையிலே இரண்டுபேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் அதிலே ஒருவர் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோழர், அந்தத் தோழர் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டதும் தமக்கு உதவுமாறு கேட்டதற்கிணங்க நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது தோழரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக மற்றவருக்கு தனது கரத்தால் ஓங்கிக்குத்துகிறார்கள் அதே இடத்தில் அந்த மனிதன் மரணித்துவிடுகின்றான். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் ஒரு தூதருமாவார், அவர் இவ்வாறான ஒரு விடயத்தை செய்துவிட்டு வெறுமனே இருக்கவில்லை அல்லாஹ்வின் நரகநெருப்பைப் பயந்து தன் இறைவனான அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ் அவருடைய பாவத்தை மன்னித்தான்.
இந்தச் சம்பவம் முழு இளைஞர் சமுதாயத்திற்கும்; ஒரு படிப்பினையான வரலாறு. மேலே கூறிய சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்டுவதன் நோக்கம் எங்களுடைய வாலிப வயதிலே சண்டை, கொலை, திருட்டு போன்ற எத்தனையோ தவறுகளை அறிந்தும் அறியாமலும் செய்துகொண்டிருக்கிறோம்.
எந்த ஊரை எடுத்தாலும் அந்த ஊரில் இளைஞர்கள் பல பிரிவுகளாக பிரிந்துகொண்டு ஒவ்வொரு பிரிவிற்கும் கொஞ்ச ஆட்களை வைத்துக் கொண்டு வீண்சண்டைகளுக்கும், வீண்தர்க்கங்களுக்கும் செல்கின்றார்கள். ஆனால் எப்போதாவது செய்த பாவத்தை நினைத்து இரவில் அல்லாஹ்விடத்தில் வணங்கி மனமிறங்கி பாவமன்னிப்புக் கேட்கிறார்களா? இல்லை, ஒரு சிலரைத் தவிர. திரும்பவும் அந்தத் தவறுகளை செய்கிறார்கள், இவ்வாறு நபி மூஸா (அலை) அவர்கள் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்புக் கேட்டுவிட்டு அந்தப் பாவத்தை திரும்பவும் செய்யவில்லை. ஆனால் இவர்கள்; தங்களது ஒரு காதால் கேட்டு மறுகாதல் விட்டுவிட்டு தங்களுடைய பாவத்தை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தக்கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
இன்னுமொரு முறை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய இளம்வயதில் மேலே கூறிய கொலைச் சம்பவத்தால் தன்னுடைய ஊரைவிட்டு இன்னுமொரு ஊருக்குச் செல்லும் வழியில் வரிசையாக நின்றுகொண்டு ஆண்கள் ஒவ்வொருத்தராக கிணற்றில் தண்ணீர் எடுத்துச் செல்கின்றார்கள், அதேவேளை ஓரமாக ஒரு மரநிழலின் கீழ் இரண்டு பெண்மனிகள் தண்ணீர் எடுப்பதற்காக தங்களுடைய பாத்திரங்களை வைத்துக்கொண்டு நின்றார்கள், அதனை அவதானித்த நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தப் பெண்களிடத்தில் சென்று அவர்களின் பாத்திரத்தை வாங்கிச்சென்று ஆண்கள் வரிசையாக நிற்கும் வரிசையில் அங்கே நின்றவர்களை ஒதுக்கிவிட்டு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டுத்துச் சென்றார்கள்.
அந்த இடத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அந்தப் பெண்களை கவரவேண்டும், அவர்களிடத்தில் தன்னுடைய பலத்தைக் காட்டவேண்டும் என்ற எந்த கெட்ட நோக்கத்திற்காகவும் அந்த வேலையை செய்துகொடுக்கவில்லை. அந்தப் பெண்கள் தன் தந்தையிடத்தில் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி, பின்னர் அவர்களில் ஒருவரை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தப் பெண்களின் தந்தையிடத்தில் மஹருக்காக 8 வருடகாலம் வேலை செய்து திருமணம் முடித்தார்கள்.
நப மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றில் இந்தச் சம்பவமும் ஒன்று, இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டுவதன் நோக்கம், இப்படியான சம்பவத்தையெல்லாம் தெரிந்துங்கூட நம்முடைய இளைஞர்கள் ஒரு பெண்ணை கவருவதற்காகவேண்டி அவர்களுக்கு முன்னால் அசிங்கமாக நடந்துகொள்வதும் ‘கலஸ்’ என்ற பெயரில் அசிங்கப்படுத்துவதும் இப்படியான இன்னும் பல வேலைகளை செய்ய அந்தப் பெண்கள் இவனுடைய பைத்தியகார வேலையைப் பார்த்து சற்று சிரிப்பார்கள் இதனை ‘நான் அந்தப் பெண்களைக் கவர்ந்துவிட்டேன்’ என்று நினைத்து சந்தோசப்படுவார்கள். இவ்வாறான மோட்டுத்தனமான கலைகளிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
இஸ்லாம் மார்க்கம் எந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்தாலும் அது நீதியாகத்தான் இருக்கும். அதேபோன்றுதான் மனிதர்களின் ஆடை விடயத்திலும் ஒரு வரையறையை வைத்திருக்கின்றது. ஆனால், இளைஞர்கள் அந்நியமதத்தவனைப் போன்று ஆடைகளை கரண்டைக்காலுக்குக் கீழும், தன் உடலுடன் ஒட்டிய அந்நிய மதக்கலாச்சார ஆடைகளைப்போன்று அணிந்து கொள்கின்றார்கள், இன்றைய நவீன காலத்திலே உள்ள ஆடைகள் மிக ஒழுக்கம் கெட்டமுறையில் பல வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சில இளைஞர்கள் பள்ளிக்குச் செல்லும்போது கரண்டைக்காலுக்கு மேலே ஆடை அணிந்து செல்வார்கள், ஆனால் பாடசாலைகள், டியூட்டரிகள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அவர்களுடைய மனமாறி ஒரு தற்பெறுமை வந்திவிடுவதுபோன்று கரண்டைக்குக் கீழே அணிய ஆரம்பிக்கின்றார்கள்
கரண்டைக்காலுக்கு மேலே அணிந்து டியூட்டரிக்குச் சென்றால் நண்பர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு கரண்டைக்குக் கீழே ஆடை அணிந்து செல்கின்றவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களுடைய செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், தன்னை மற்றவர் இழிவாகக் கருதக் கூடாது என்பதற்காகவும், தன்னுடையவர்களைக் கவரவேண்டும் என்பதற்காகவும் அந்நிய மதக்கலாச்சாரகர்கள் அணிவதுபோன்று அணிந்துகொள்கின்றார்கள். இப்படியான கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
‘மனிதர்களில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.’ (அல்குர்ஆன் -லுக்மான்: 06)
‘விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகளை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…’ என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி 5590)
இளைஞர்கள் சீர்கெட்டுப்போவதில் இதுவும் ஒரு முக்கிய காரணியாக அமைகின்றது. என்னவென்றால் இப்பொழுது நம் நாட்டில் இயங்கிவரும் தொலைக்காட்சி நிறுவனங்களால் பாட்டு, நடனம், போன்றவைகளை வைத்து இளையகானம், சக்தி சூப்பர்ஸ்டார், சிரச சூப்பர்ஸ்டார், இசைஇளவரசர்கள் போன்ற நிகழ்ச்சிகளை செய்துவருகின்றார்கள், இப்படியான நிகழ்ச்சிகளில் நமது முஸ்லிம் இளைஞர்களும் பங்கேற்று தாளங்கள் போட்டு பாட்டுப்படித்து, நடனமாடி இஸ்லாம் மார்க்கத்தின் மரியாதையை போக்கக்கூடிய கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
இளைஞர்களிடத்தில் இருக்கக்கூடிய பண்புகளில் அடுத்தது விபச்சாரம், மது, சூது, புகைத்தல் போன்ற செயல்கள். இப்பொழுது 10 வயது சிறுவன்கூட பலருக்கு முன்னால் சிகரட் பிடிக்கின்றான். இளைஞர்கள் பெருநாள் போன்ற தினங்களிலே பணத்தை சேகரித்து தாய், தந்தைக்குத் தெரியாமல் பார்கள், க்லப்கள் (டீயசளஇ ஊடரடிள) போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு விபச்சாரம், மது, சூது போன்ற செயல்களைச் செய்கின்றார்கள். ஆனால், இதைவிடவும் சர்வசாதாரனமானது நண்பர்கள் சேர்ந்துகொண்டு கையடக்கத் தொலைபேசிகளில் இன்டர்நெட் மூலமாக தங்களது கண்களால் விபச்சாரம் செய்கின்றார்கள், தங்களுடையவர்களுடன் பேசி வாய்களாலும், காதுகளாலும் விபச்சாரம் செய்கின்றார்கள். அதுபோன்று போட்டி என்ற பெயரால் அணிகளைச் சேர்த்து போட்டி நடாத்தி அதிலே சூதாட்டம் செய்கின்றார்கள். இவ்வாறான கலைகளிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.
மேலே, எப்படியானவற்றிலெல்லாம் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்றவற்றில் இளைஞர்கள் இன்றைய கலைஞர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம், ஆனால், இனி இளைஞர்கள் எந்தவிடயத்தில் கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
‘நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றிபெற்றோர்.’ (அல்குர்ஆன் – ஆலுஇம்ரான் 3:104)
‘அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?’ (ஃபுஸ்ஸிலத் 41:33)
‘என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி: 3461)
ஒரு மனிதன் உண்மையிலேயே அல்லாஹ்வுக்கு அடிபணிந்த ஒரு முஸ்லிமாகவிருந்தால் மேலே உள்ள அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் எதைச் சொல்லியிருக்கின்றதோ அதனடிப்படையில் தனது வாழ்க்கையில் எடுத்து நடப்பான்.
அல்லாஹ்வுடைய குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளையும் மௌலவிமார்கள், உலமாக்கள், அறிஞர்கள் மட்டும்தான் கற்கவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறல்ல முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் இஸ்லாம் மார்க்கத்தைக் கற்பது கடமை, கற்பது மட்டுமல்லாமல் பிறருக்கு சத்தியத்தை எடுத்துச்சொல்லி அசத்தியத்தை தடுத்து இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்கக்கூடிய கலையையும் கற்கவேண்டும்.
எனவே திருக்குர்ஆனை மனனம் செய்து, மார்க்கக் கலையை ஆய்வு செய்த மௌலவியாகவோ, உலமாவாகவோ, அறிஞராகவோ வந்துதான் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யவேண்டும், இல்லாவிட்டால் பிரச்சாரம் செய்யமுடியாது என்ற எண்ணப்பாட்டை தூக்கி எறிந்துவிட்டு, இளமைப்பருவம் என்பது மிக முக்கியமான பருவம். இந்தப்பருவத்தை வீணாக்கிவிடாமல் அல்லாஹ்வின் பாதையில் வாழ்ந்து இஸ்லாம் மார்க்கக் கலையைக் கற்ற ஒரு கலைஞனாக நாம் அனைவரும் வாழ்ந்து மரணிப்பதற்கு அகில உலகத்திற்கும் இரட்சகனான அல்லாஹ் நம்மனைவருக்கும் உதவிபுரிவானாக!
– அஹமட் யஹ்யா