Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்லாஹ் நம் பக்கம் இருக்கும்போது நாம் ஏன் மற்றவருக்கு பயப்பட வேண்டும்!.

Posted on July 11, 2017 by admin

அல்லாஹ்   நம் பக்கம் இருக்கும்போது நாம் ஏன் மற்றவருக்கு பயப்பட வேண்டும்!.

If Allah is with us who can be against us!

சர்வாதிகாரம் இஸ்லாத்தில் கிடையாது. நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசினை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது ராணுவ ஆட்சியை ஆதரிக்கவில்லை. அதுபோல் இஸ்லாத்தில் யாரையும் கட்டாயப் படுத்தி இணைக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் அது அனுமதிக்கவுமில்லை

“(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.” (2:256)

யாரும் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் அவர்கள் சுய சிந்தனையோடு அவர்கள் விரும்பியே இஸ்லாத்திற்குள் இணைவதனை இஸ்லாம் விரும்புவதுடன் அதுதான் இஸ்லாமிய சட்டமாக உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருக்கும் நிலையில் ஒரு முஸ்லீம் இராணுவ பலத்தைக் கொண்டு சர்வாதிகாரியாக இருந்து தனது ஆட்சியை திணிக்க உரிமை கிடையாது..

முஹம்மது நபிக்குப் பிறகு இஸ்லாத்தில் வந்த நான்கு கலிபாக்களும் மக்களால்,சஹாபாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்கள் பரவலான ஆதரவும் மற்றும் மரியாதையும் பெற்று ஆட்சி செய்து மகிழ்ந்தனர். ஹஸ்ரத் அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு  ஹஸ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஹஸ்ரத் உதுமான் ரளியல்லாஹுஅன்ஹு மற்றும் ஹஸ்ரத் அலீ   ரளியல்லாஹு அன்ஹு சமூகத்தின் நம்பகமான பெரியவர்கள் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்படும் போது ஹஸ்ரத் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு  திறந்த பொது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கலிப் அமீர் முவையா சரியாக வழிநடத்திய ஆட்சியாளர். அமீர் முவையா தனது மகனை தன்னிச்சையாக ஆட்சி செய்ய நியமனம் செய்தார். அமீர் முவையாவின் மகனார் முறையற்ற வழியில் ஆட்சியை கைப்பற்றி தவறான இராணுவ ஆட்சி செய்ததால் அதனை எதிர்த்துப் போராடிய நபியின் சொந்த பேரன் ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மற்றவர்கள் வேண்டுதலுக்கு இணங்க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உண்டானது.

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். (அல்குர்ஆன் 42:38)

குரானும் நபிவழியும்தான் முஸ்லிம்களுக்கு வழிகாட்டி. அதன்படி வாழ்பவனே முஸ்லிம். எதேச்சையான அதிகாரத்திற்கும், ராணுவ முறையில் ஆட்சியை கைப்பற்றுவதும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாததினால் இஸ்லாமிய கிராமங்களில் கூட தொன்றுதொட்டு மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒருவர்தான் வழி நடத்தப் பட அனுமதிக்கப்படுகின்றார். அது ‘முத்தவல்லி’யாகவோ அல்லது நாட்டாண்மை பஞ்சாயத்தாக மற்றும் நிர்வாகத்தினராக இருந்தாலும் இதுதான் இஸ்லாம் காட்டிய வழி. இந்த நிலை இருக்கும்போது எந்த ஒரு நாட்டையும் ராணுவ முறையில் ஆட்சியைக் கைப்பட்ற இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தவறான முறையில் ஆட்சிக்கு வருவதனை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது .

பல இஸ்லாமிய நாடுகளில் ராணுவ ஆட்சி நடைப் பெருவதனைப் நாம் பார்க்கின்றோம். ஏன் சில முஸ்லீம்கள் மக்களாட்சி பற்றி ஆர்வமாக இல்லை? மக்கள் விருப்பப்படியா பல இஸ்லாமிய நாடுகளில் ராணுவ ஆட்சி நடைப்பெருகின்றது? அதிகாரத்தை மக்கள் இருந்து எடுக்கப்பட்டது யாருடைய “ஆலோசனை”?

இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் உரிமைகள் மற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் முறைதான் மகிழ்ச்சியடைய வைக்கும் .இது அனைவருக்கும் பொருந்தும்.

சர்வாதிகாரர்களின் ஆட்சி கேவலமான முறையில் வீழ்த்தப் படுவதனை உலகம் கண்டுதான் வருகின்றது, இவர்கள் முறையற்ற முறையில் ஆட்சிக்கு வந்தாலும் தவறான முறையில் ஆட்சி செய்தாலும் மக்களிடமும் இறைவனிடமும் பதில் சொல்லியாக வேண்டும், அதற்கு துணைபோபவர்களும் விடுபடமாட்டார்கள். முசோலினி, ஹிட்லர் போன்றவர்களும் கடைசியில் தோல்வியைத்தான் தழுவினார்கள்,உலகத்தில் இப்பொழுதும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் அதே நிலை தொடர்கின்றது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன். வேண்டாம் தவறான பாதை. வாழுங்கள் வாழவிடுங்கள். சர்வாதிகாரம் இஸ்லாத்தில் கிடையாது. ராணுவ ஆட்சியையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. ஆனால் அதற்கு யார் தகுதியானவர் என்பது பற்றி மக்களுக்கு சிந்தனை இருந்தாலும் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பதில் நாட்டம் வருவதில்லை. தற்காலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் பலர் சுயநலப் போக்கினை தன கையில் எடுத்துக் கொள்வதால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு ஆர்வமில்லை, ஆனால் தலை இல்லாத உடம்பில்லை, வழி நடத்துவதற்கு ஒரு தலைமை அவசியம் தேவைப்படுகின்றது. தலைமை ஏற்று வழி நடத்துபவர் ஒருவர் இல்லையென்றால் குழப்பமே வந்து சேரும் . உங்களில் இருவர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை உங்களுக்கு தலைமையாகிக் கொள்ள வேண்டும்.

மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்” (புகாரி, முஸ்லிம்)

தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை ‘வேண்டாம்.’ என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.

தலைமைப் பொறுப்பிலிருந்து செயல்படுவதற்கு சிறந்த வழிகாட்டி திருக்குர்ஆன்,  அடுத்து நபிமொழிகள் இறுதியாக இவைகளில் காணப்படாதவற்றில் சந்தேகம் வருமானால் மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து அறிவுப் பூர்வமாக முடிவுக்கு வர வேண்டும்.

தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும், சிந்தனைத் திறன் மிக்கவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், செயல்பாட்டுத் திறமை மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
“மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது நபி மொழி.

“மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (5:8)

சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.

“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)

தேர்ந்தெடுத்த பின் நற்காரியங்களை நிறைவேற்றுவதில் நாம் அவருக்கு துணை நின்று உற்சாகம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்     அவர்கள் கூறினார்கள்.

“உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்.”

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள், “நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர மக்களின் பொறுப்பாளர்ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்/ தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்/ தன் பொறுப்புகளுக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்/ தன் கணவனின் வீட்டாருக்கும்/ அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள. அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புபக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (நூல்: புகாரீ – ஹதீஸ் எண் : 713

‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு   மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

நான் சுவனத்தை விரும்பியோ நரகத்திற்கு பயந்தோ இறைவனை நேசிக்கவில்லை அவன் என்னை இந்த உலகத்தில் குறை இல்லாமல் படைத்தானே அதற்காகவே அவனை நேசித்து அவனைத் தொழுகின்றேன். அவனுக்குத் தெரியும் என்னை எங்கே கொண்டு சேர்ப்பதென்று. பின் நான் ஏன் பயப்படவேண்டும்.

source: http://mazaallah.typepad.com/blog/page/6/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

58 − = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb