தாம்பரத்தில் நடந்தது என்ன? எப்படி தீர்வு காண்பது?
தாம்பரத்தில் நடந்தது என்ன?
Tmmk Tambaram
தாம்பரம் ஜும்மா பள்ளியில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை நிர்வாகமே இல்லை. தடியெடுத்தவன் தண்டக்காரன் என்ற நிலை இருந்தது. இந்தப்பள்ளி வஃப்போர்டு நிர்வாகத்தில் உள்ளது.
மமக மாநில அமைப்பு செயலாளரும் தாம்பரத்தில் சமூக சேவையில் முஸ்லிம்களை தலைநிமிரச்செய்தவருமான சகோதரர் யாக்கூப் அவர்கள் தலையிட்டு அன்றைய அமைச்சர் திரு. சின்னையா மூலம் முயன்று முறைகேடான தேர்தலை நிறுத்தி தாம்பரம் முஸ்லிம்கள் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க்க வைத்து மர்ஹும் அலாவுதீன் ஹாஜியார் தலைமையில் சிறந்த நிர்வாகம் அமைய பாடுபட்டார்.
தமுமுக காரர்கள் நிர்வாகத்தில் புதிதாக யாரும் சேர்க்கப்படவில்லை பொதுவான நேர்மையானவர்களை நிர்வாகத்தில் கொண்டுவர பாடுபட்டார். பள்ளியின் தலைவர் மெளத்தாகிவிட்டதால் தற்போது துணைத்தலைவராக இருந்த நாகூர்கனி தலைவராக உள்ளார்.
புதிய நிர்வாகத்தினர் பள்ளியை சிறப்பாக சீரமைத்து புதுப்பொலிவுடன் செப்பனிட்டனர். அடுத்து மதரசா மற்றும் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியில் செவ்வனே இயங்கி வருகின்றனர்.
பள்ளி இமாமின் சில செயல்களால் நிர்வாகம் அவரை பணியிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே பணி நீக்கம் செய்ய முனைந்தது ஆனால் அவர் கேட்டுக்கொண்டதால் சில மாதங்கள் அனுமதித்தனர். தற்போது நோன்பு முடிந்த நிலையில் அவரை அழைத்து தெரிவித்து அவருக்கு பத்துமாதங்கள் சம்பளமும் சேர்த்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் இமாம் இன்று பள்ளியில் ஜும்மாவிற்கு பிறகு திடீர் அனுதாபம் தேட முனைந்து சிலரை தூண்டிவிட்டு பிரச்சினை செய்ததால் ஏற்பட்ட சர்ச்சையினால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதில் Sdpi யாசரை காதர் தள்ளிவிட்டதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. பின் யாசரின் வீட்டிற்கே யாக்கூப் மற்றும் தமுமுக நிர்வாகிகள் சென்று சமாதானம் செய்துவிட்டு மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
அதன் பிறகும் வழக்கம் போல் Sdpi கட்சியினர் வெளியிலிருந்து ஆட்களை இறக்கி அக்பர் வழிகாட்டுதலில் காதரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு தமுமுக நிர்வாகிகள் யாரும் இல்லை. காதர் தாக்கப்பட்ட பின்னரே அக்பரை சிலர் தாக்கியுள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு மூலகாரணம் Inl கோனிகா பஷீர் கட்சியில் இருக்கூம் சமோசா ஷேக் தான் . Inl கட்சியினருடன் Sdpi யும் சேர்ந்து கொண்டு தமுமுக வளர்ச்சியை தடுக்கவும் யாக்கூபை கைது செய்யவும் ஏவல்துறையின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றனர்.
SDPI கட்சி தலைமையக அறிவிப்பு
தாம்பரத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் யாசர் தாக்கப்பட்டது குறித்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாக கேட்டு வருகிறார்கள். வலை தளங்களில் விமர்சனங்களும், விவாதங்களும் பரவி வருவதால் இந்த விளக்கமும், வேண்டுகோளும்.
தாம்பரம் பெரிய பள்ளிவாசலில் இன்று (07.07.2017) ஜும்மா தொழுகைக்கு பின் பள்ளிவாசலின் இமாம் எழுந்து தான் இன்றோடு இந்த பள்ளி இமாம் பொறுப்பில் இருந்து விலகிவிடுவதாகவும், அதற்கு இவைதான் காரணம் என்றும் சில காரணங்களை கூற துவங்கியுள்ளார். உடனே சிலர் அவரை தாக்க முற்பட்டுள்ளனர்.
ஜும்மா முடிந்தவுடன் இது சலசலப்பையும், பிரச்சினையயும் உருவாக்கியுள்ளது. தொழ வந்திருந்த சகோதரர் யாசர் கூட்டத்துடன் நின்றுள்ளார்.
பள்ளிவாசலில் நிர்வாக பிரச்சினை பல மாதங்களாக உள்ளது. மாவட்ட பொதுச் செயலாளர் யாசரோ அல்லது கட்சியின் இதர நிர்வாகிகளோ இதுவரை எந்த பிரச்சினையிலும் பங்கேற்றதில்லை. பள்ளிவாசலின் நிர்வாகிகளாக தமுமுக.வின் மநில நிர்வாகிகளின் குடும்பத்தினர் உள்ளனர்.
பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது எந்த விவாதங்களிலும் பங்கேற்காத – இந்த பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத சகோதரர் யாசர் தாக்கப்பட்டுள்ளார். த.மு.மு.க – ம.ம.க.வின் அறியப்பட்ட நிர்வாகிகளே தாக்கியுள்ளனர். பிறகு பள்ளியில் இருந்து அவர் வெளியே வந்தபின் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.
இதன் பின் இதர மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றதோடு காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் சகோ யாசர்.
நீண்ட நாட்களாக இந்த பள்ளி வாசலில் நடைபெறும் நிர்வாக பிரச்சினையில் நாம் தலையிட வேண்டாம் என நகர SDPI கட்சி ஏற்கனவே முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின் தாக்கப்பட்ட யாசருக்கு ஆதரவாக பேசிய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகளான அக்பர் அலி, ஜுனைத் ஆகியோர் கடுமையாக வெட்டுப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். அதே போன்று ம.ம.க.வின் நகர இளைஞரணி நிர்வாகி காதர் தன்னை தேசிய லீக் கட்சியினர் தாக்கியதாக மருத்துவமனையில் சேர்ந்ததோடு தேசிய லீக் கட்சியினர் தாக்கியதாக புகாரும் கொடுத்துள்ளார்.
SDPI கட்சியின் எந்த நிர்வாகிகளும் இன்று பள்ளிவாசலில் நடந்த பிரச்சினையில் தலையிடவில்லை.
SDPI கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் கட்சி பணி சார்ந்த உள்நோக்கத்துடனேயே தாக்கப்பட்டுள்ளார்.
SDPI கட்சியின் தலைமை எந்த எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது எனவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறித்தியுள்ளது.
தொடர்ந்து தாம்பரத்தில் இது போன்ற தாக்குதல்களும், மோதல்களும் தொடர்வது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
SDPI கட்சியின் ஆதரவாளர்களுக்கும் – தொண்டர்களுக்கும் நாம் கேட்டுக் கொள்வது.
முகநூல்களில் இது பற்றிய விமர்சனங்களையும், கண்டங்களையும் தொடர வேண்டாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளே இதில் போதுமானது.
நாம் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டிய காலத்தின் தேவையும் – அவசியமும் நம் முன் நிற்கிறது. நம் இலக்குகளும், குறிக்கோளும் மாறிவிட வேண்டாம். என தலைமையின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
எப்படி தீர்வு காண்பது…?
காயம் பட்டிருப்பது நம் உடம்பின் ஒரு பகுதியே. அதை சீர்திருத்த முயல்வதை விட்டுவிட்டு கேலியாகவோ, கேளிக்கையாகவோ கருதுவது மிகப்பெரும் முட்டாள்தனம். ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்கிற நேரம் இதுவல்ல.
சீர்திருத்தம் எல்லா இடங்களிலும் எப்போதும் தேவைபட்டுக் கொண்டே இருப்பதையே இத்தகைய சம்பவங்கள் நிரூபிக்கிறது.
மார்க்க அறியாமையும் எதிர்கருத்தை அணுகும் பக்குவமின்மையும் சமூகத்தின் எல்லா தரப்பினரிடமும் பரவிக்கிடக்கிற மிகக் கொடிய நோயாக மாறிவருகிறது.
இந்த நோய்க்கு உடனடி மருத்துவமும் நிவாரணமும் கண்டாக வேண்டும்.
உலகளாவிய முஸ்லிம் சமூகம் இன்னமும் கற்றுக்கொள்ளாத மிக முக்கியமான ஒரு பாடம் அல்லது பண்பு உண்டென்றால் அது “மாற்றுக்கருத்து கொண்டிருக்கிற தன் முஸ்லிம் சகோதரனை அணுகும் விதம் சார்ந்த பண்பே ஆகும்.
இன்றைய காலத்திற்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படக் கூடியதும் உலகளாவிய மனித சமூகத்திடம் கூட இல்லாததாகவும் இந்தப் பண்பு திகழ்கிறது.
இறைவனின் நேரடியான வழிகாட்டியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கிடைத்து வந்த வஹீ என்னும் இறைத்தொடர்பும் அன்று வாழ்ந்த சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியான, அனைவரும் ஏற்கத்தக்க, நிரந்தரத் தீர்வை தந்தது. அதன் பயனாக உலக அழிவுநாள் வரைக்கும் வழிகாட்டும் முன்னுதாரணச் சமூகமாக அந்த முதல் சமூகம் மாறியது.
ஆனால் அந்த வழிகாட்டுதல் கிடைக்கப் பெறாத அடுத்தகட்ட சமூகத்தில் சில முரண்பாடுகளும் புரிதல் குறைபாடும் நிச்சயம் தொடரவே செய்யும் என்பதை ஏராளமான விதங்களில் கண்டும் கேட்டும் வருகிறோம்.
இதுவே வெளிப்படையான உண்மையும் கூட.
ஆனாலும் “நான் புரிந்து கொண்டதையே நீயும் புரிந்தாகவேண்டும் , மாற்றுச் சிந்தனையே வரக்கூடாது” என்கிற ரீதியிலான கருத்து மோதல்களும் அதை ஒட்டிய சமூகப் பிளவுகளும் முஸ்லிம்களிடம் பெருகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
(நிராகரிப்பையோ, இணைவைப்பையோ தயவு செய்து இங்கு கொண்டு வர வேண்டாம்)
கொள்கையளவில் ஒரேமாதிரியான கருத்தியல் கொண்டவர்களிடம் கூட முரண்பாடுகளும் புரிதல் குறைபாடும் ஏற்படவே செய்கிறது. அதை எப்படி அணுகுவது…?
எப்படி தீர்வு காண்பது…?
இருதரப்பும் தங்கள் புரிதலை நியாயப்படுத்தி கருத்துக்களை, ஆதாரங்களை முன்வைக்கும் போது எதை ஏற்பது, எதை நிராகரிப்பது…?
எவ்வளவு காலங்களுக்கு இதற்காக சண்டையிட்டுக் கொண்டு, பிரிந்து கிடப்பது..?
மாறாக அதன் முடிவை அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டிவிட்டு ஏனைய உடன்பாடுகள் இருக்கிற கருத்துப் பகிர்வுகளோடு எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் இணைந்து பணியாற்றுவதற்கும் என்ன தடை இருக்கிறது…….??
இன்றைய முன்னணி அமைப்புகளின் நிர்வாகிகள், முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்கள், சிந்தனையாளர்கள், மார்க்க அறிஞர்கள் ஏண் இப்படி சிந்திக்க முயற்சிக்கக் கூடாது…?
“போலி ஒற்றுமை” எனும் வார்த்தையை தூக்கிக் கொண்டு யாரும் தயவுசெய்து வந்துவிடாதீர்கள். காதுகள் மட்டுமல்ல உணர்வுகளும் சேர்ந்து வலிக்கிறது.
உள்ளுக்குள் ஏற்படும் பதற்றமான சூழல்களில் குறைந்தபட்சம் இறைவனிடம் துஆ செய்யலாமே. சீர்திருத்தும் பெருந்தன்மை இல்லாமல் போனாலும் வசைபாடும் சிறுமைத்தனத்தையாவது சமூகத்தின் உறுப்பினர்கள் தவிர்க்கலாமே!
உள்ளங்களின் அரசன் அனைவருக்கும் தெளிவைத் தருவானாக. அல்லாஹ் போதுமானவன்.
வேதனையுடன்
மௌலவி. ஹிதாயத்துல்லாஹ். நூரி.
உண்மையை அல்லாஹ்வே நன்கறிவான்.