பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (2)
Chapter 04
ஷைத்தானின் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள்:
சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Tactics) என்றால் என்ன?
ஒரு மனிதனது மூளை எவ்வாறு சிந்திக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்; எவற்றின் மீது நாட்டம் கொள்ள வேண்டும்; எவற்றை வெறுக்க வேண்டும்… என்பன போன்றவற்றை அந்தந்த மனிதன் தான் அவனது சிந்தனைக்கேற்பத் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தீர்மாணங்களுக்கான பின்விளைவையும் அவனே தான் அனுபவிக்க வேண்டும். இது தான் மனித வாழ்வின் அடிப்படை நியதி. இவ்வாறு தான் மனிதர்களை அல்லாஹ் இயல்பில் படைத்திருக்கிறான்.
ஆனால், இந்த இயல்புக்கு மாற்றமாக மனிதர்களைச் சிந்திக்கவும், தீர்மாணிக்கவும் தூண்டுவது தான் ஷைத்தானின் அடிப்படை இலக்கு. அதாவது, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் எடுக்கும் முடிவுகளை அவன் சுயமாக சிந்தித்துத் தீர்மாணிக்கக் கூடாது. மாறாக இப்லீஸின் பரிவாரத்தைச் சேர்ந்த சில மனிதர்களோ, அல்லது ஜின்களோ தான் அவனது விருப்பு வெறுப்புக்களை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தீர்மாணிக்க வேண்டும். ஆனால், அந்தத் தீர்மாணங்களால் ஏற்படும் தீய பின்விளைவுகளை மட்டும் அந்த மனிதன் தான் அனுபவிக்க வேண்டும். இது தான் இப்லீஸின் திட்டம்.
இந்தத் திட்டத்தைக் கச்சிதமாக நிறைவேற்றும் விதமாக இப்லீஸ் பல உத்திகளைக் கையாளுகிறான். அதாவது, ஒவ்வொரு மனிதனது மூளையும் சுயமாக சிந்திக்காமல், தான் எதிர்பார்க்கும் விதத்தில் தான் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்லீஸ், தனது பரிவாரங்கள் மூலம் திட்டமிட்டு உலகில் கையாண்டு கொண்டிருக்கும் உத்திகள் தாம் இவை.
இவ்வாறான உத்திகளைத் தான் இங்கு நாம் சுருக்கமாக “சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள்” என்று அழைக்கிறோம்.
உலக மட்டத்தில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகளைப் பற்றி இனி நோக்க இருக்கிறோம். இதில் மூதல் 7 வகை பற்றியும் ஒரு சிறு அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டு, 8 வது வகை பற்றி மட்டும் சற்று விரிவாக நோக்கவிருக்கிறோம்.
1 வது உத்தி – நவீன கல்வித் திட்டம்:
எதுவெல்லாம் உண்மை / சத்தியம் சார்ந்ததாக இருக்கிறதோ, அவ்வாறான எதுவும் உண்மையில்லை என்பது போலவும், எதுவெல்லாம் அசத்தியம் / வழிகேடு / பொய் / பித்தலாட்டம் சார்ந்ததாக இருக்கிறதோ, அவை தான் உண்மையில் விஞ்ஞானம், சமூகவியல், சரித்திரம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளை உள்ளடக்கிய அறிவு என்பது போலவும் தோற்றமளிக்கும் விதமாகவே இன்றைய நவீன கல்வித் திட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த நவீன கல்வித் திட்டத்தின் குறிக்கோள் ஒன்றேயொன்று மட்டும் தான்:
பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை எந்தவொரு மனிதனும் உண்மையான அறிவைக் கற்றறிந்து விடக் கூடாது என்பது மட்டுமே.
2 வது உத்தி – விளம்பரம் / பரப்புரைகள் / எதிர்காலம் பற்றிய முன் அறிமுகம்:
செய்தி, விளம்பரம், அறிவுசார் நிகழ்ச்சிகள், நாளைய உலகின் இன்றைய நோக்கு என்பன போன்ற பெயர்களில் இன்றைய ஊடகங்கள் பரப்பி வரும் தகவல்கள் அனைத்தும் மனித கண், மற்றும் காது மூலமாகத் தொடர்ச்சியாக அவனது உள்மனதைக் குறி வைத்து நடத்தப்படும் உளவியல் தாக்குதல் தவிர வேறில்லை.
ஓரிரு தாக்குதல்கள் என்றால், உள்ளம் அதை இலகுவாக எதிர்கொண்டு சமாளித்து விடும். ஆனால், இன்று இந்தத் தாக்குதல் தொலைக்காட்சி, இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் போன்ற பல சாதனங்கள் மூலம், பல கோணங்களிலும் இருந்தும் இடைவிடாத தொடர்த் தாக்குதல்களாக நடாத்தப் படுகின்றன.
இவ்வாறான தொடர் தாக்குதலைச் சமாளிக்கும் சக்தி மனித உள்ளத்துக்குக் கிடையாது. இதன் விளைவாக நாளடைவில் மனித உள்ளம் இந்தத் தாக்குதல்களால் வீழ்ந்து விடும். வீழ்ந்த பின் அந்த உள்ளங்களைச் சிறைப் பிடித்து, ஷைத்தானின் கூண்டுக்குள் காலத்துக்கும் அடிமைகளாக அடைத்து விடுவது தான் இந்த உத்தியின் மூலம் ஷைத்தானியர்கள் அடைய முயற்சிக்கும் இலட்சியம்.
3 வது உத்தி – விளையாட்டு / அரசியல் சார்ந்த சர்வதேச மட்ட ஏற்பாடுகள்:
மேற்குறிப்பிடப்பட்ட அதே அடிப்படையில் தான் இந்த உத்தியும் கையாளப் படுகிறது. அதாவது, கண் மற்றும் காது மூலம் மனிதரது உள்மனதைக் குறி வைத்து நடத்தப்படும் இன்னொரு விதமான உளவியல் தாக்குதல் தான் இதுவும். வித்தியாசம் என்னவென்றால், மேற்குறிப்பிடப்பட்ட திட்டம், “தகவல்களை நாம் உங்களுக்குத் தருகிறோம்” என்ற தொணிப்பொருளில் அமைந்திருக்கும். ஆனால், இந்தத் திட்டம் “பொழுது போக்கு” என்ற போர்வையில் வடிவமைக்கப் பட்டிருக்கும். சர்வதேச உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றை இந்த உத்திக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இந்த வகையான உளவியல் தாக்குதலுக்குப் பலியாகாதோரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கையில் கிரிக்கெட் மட்டையைச் சுமந்து கொண்டு, அனுதினமும் ஏதோ ஒரு நாட்டின் விளையாட்டு அணியை ஆகர்ஷித்துக் கனவு கண்டு கொண்டு தன்னையும், தன் குடும்பத்தையும் மறந்து சுற்றிக் கொண்டிருக்கும் எத்தனையோ பைத்தியங்களை எம்மைச் சுற்றிப் பார்த்தாலே இது தெளிவாகப் புலப்படும். இவர்களைப் பொருத்த வரை யார் எக்கேடு கெட்டாலும் இவர்களுக்குக் கவலையில்லை. உரிய நேரத்தில் உரிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியைப் கண்டு களிக்கக் கிடைத்தால் அவர்களுக்குப் போதும். இவர்களது உள்ளம் ஒரு சிறைக்குள் அடைபட்டிருப்பதை அறியாதவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். இந்தச் சிறையிலிருந்து இவர்களை வெளியில் எடுக்க அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது.
4 வது உத்தி – இமைத்தல் பொறிமுறை:
சராசரி மனிதனது கண்கள் ஒரு நிமிடத்திற்குக் குறைந்தது 10 தடவைகள் இமைக்கும். இதற்கான அவசியம், கண்கள் எப்பொழுதும் ஈரலிப்பாகவே இருக்க வேண்டும் என்பது தான். போதிய ஈரலிப்பு இல்லாத கண்களால் இரண்டு விளைவுகள் ஏற்படும்.
முதலாவது விளைவு: விழிகளின் ஆரோக்கியம் கெடுவதன் மூலம் பார்வைத் திறனில் கோளாறுகள் தோன்றும். உதாரணமாக அண்மையிலிருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் போகும் பக்கப் பார்வை நோய் இதன் மூலம் தோன்றும்.
இரண்டாவது விளைவு: மூளையின் செயல் திறன், குறிப்பாக சிந்தனையின் வீரியம் குன்றி விடும். உதாரணத்துக்கு ஒரு புத்தகத்தை நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது விழிகளின் இமைக்கும் வேகம் நிமிடத்துக்கு 4 தடவைகள் அளவுக்குக் குறைந்து விடும். இதன் விளைவாக விழிகள் சீக்கிரமே ஈரம் வற்றிப் போய் விடும். வற்றிய ஈரத்தைத் திரும்பப் பெறும் வரை இமைகளைத் தொடர்ச்சியாகக் கொஞ்ச நேரம் மூடி வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, அதற்குண்டான ஏற்பாடுகளை மூளை செய்யும். இதனால் தான், தொடர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது கொட்டாவியும், தூக்கமும் வரும். இதன் பிறகு எவ்வளவு தான் அந்தப் புத்தகத்தை வாசித்தாலும், அது உள்ளத்தில் பதியப் போவதுமில்லை; அதிலிருக்கும் சரி, பிழைகளைப் பகுப்பாய்வு செய்யும் அளவுக்கு மூளை வீரியத்தோடு சிந்திக்கப் போவதுமில்லை. கொஞ்ச நேரம் தூங்கி எழும்பினால் மட்டுமே மூளையின் பூரண திறன் மறுபடி திரும்பும்.
இதே நேரம், தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக தொலைக்காட்சி, அல்லது கணனித் திரையில் இதே போல் விழிகள் லயித்துப் போயிருந்தால், தூக்கம் வராது. அதற்குப் பதிலாக மூளையின் பகுப்பாய்வு செய்யும் பகுதி மட்டும் தூங்கி விடும்; தகவல்களை சேமிக்கும் நினைவாற்றல் பகுதி மட்டும் வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படும்.
இந்த சந்தர்ப்பத்தில் என்னவெல்லாம் அந்தத் தொலைக்காட்சித் திரையில் காண்பிக்கப் படுகிறதோ, அவை அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்படாமல், மூளையின் நினைவாற்றல் பகுதியில் பதிவு செய்யப்படும்.
சரி, பிழை எதுவென்று தீர்மானிக்க வேண்டிய மூளையின் பகுப்பாய்வுப் பகுதி தூங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற இந்த நேரத்தில் எதுவெல்லாம் ஞாபகத்தில் பதியப்படுகின்றனவோ, அதையெல்லாம் நாளடைவில் ஆழ்மனது உண்மையென்று நம்பத் தொடங்கி விடும்.
இந்த அடிப்படையில் தான் இன்று கோடிக்கணக்கான சிறுவர்களும், வளர்ந்தவர்களும் கூட தொலைக்காட்சி, கணனித் திரை, செல்ஃபோன் திரை போன்றவற்றின் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
5 வது உத்தி – உணவு, தண்ணீர், சுவாசக்காற்று, மற்றும் மருந்து மாத்திரைகள்:
கடையில் வாங்கும் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தொடக்கம், குழாய் மூலம் வீடு வந்து சேரும் தண்ணீர் வரை அனைத்திலும் இன்று திட்டமிட்டுக் கலக்கப் பட்டிருக்கும் பல்வேறு இரசாயணப் பதார்த்தங்களுக்கென்று சில உள்நோக்கங்கள் இருக்கின்றன. இவ்வாறான இரசாயணப் பதார்த்தங்களில் ஒரு பாதி எமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதை நோக்காகக் கொண்டிருக்கிறது. மறு பாதி உள்ளத்தின் சிந்தனைத் திறனை மட்டுப் படுத்தும் நோக்கில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு பொதி செய்யப்பட்டுக் கடைகளில் விற்கப்படும் தீண்பண்டங்களில் சுவையூட்டியாக சேர்க்கப்பட்டிருக்கும் “அஜினமோட்டோ” (Monosodium glutamate), மற்றும் குடி நீரை சுத்தப்படுத்துவதற்காக என்று சொல்லி, அரசாங்கமே அதில் கலக்கும் “ஃபுளோரைட்” போன்ற இரசாயணச் சேர்வைகள் புத்திக் கூர்மையை மழுங்கடிப்பதையே பிரதான குறியாகக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு மந்த புத்தி ஏற்படுவது மட்டுமல்லாமல், அனேகனானோர் இன்று ரோஷம் கெட்டவர்களாக இருப்பதற்கும் இந்தப் பதார்த்தங்கள் காரணம் என்பது நடுநிலையான பல ஆய்வுகளில் இன்று கண்டறியப்பட்டிருக்கிறது.
6 வது உத்தி – நுண்ணியந்திரங்கள் (Nanobots):
நவீன இலெக்ட்ரோனிக் தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணியந்திரங்கள் மூலம் மனித மூளையின் சிந்தனையை, ஷைத்தானியர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாரிய செயல்திட்டம் தான் இது.
இந்தத் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. இன்னும் பத்து வருடங்களுக்குள் இந்தச் செயல்திட்டம் பூர்த்தியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு ஷைத்தானியர்களில் ஒரு கூட்டம் இன்று மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தச் செயல்திட்டத்துக்குத் தலைமை தாங்குவது வேறு யாருமல்ல; கூகுல் (Google) நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகியாக இருந்து, தற்போது அதே Google நிறுவனத்தின் பங்காளர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய “ரே கர்ட்ஸ்வெயில்” (Ray Kurzweil) என்பவர் தான்.
7 வது உத்தி – இரகசிய இராணுவ பரிசோதனைகள் (குணாதிசய வடிவமைப்பு):
இது இன்னொரு வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு முறை. இன்றைய தலைமுறையோடு ஒப்பிடும் போது, இது கொஞ்சம் பழைய முறை என்று கூட சொல்லலாம்; தற்போது இந்த வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்தி வழக்கொழிந்து கொண்டு வருகிறது. இதை விட இன்னும் முன்னேற்றமடைந்த உத்திகள் மூலம் இது பிரதியீடு செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் நாசி ஜேர்மனியும், அதன் பிறகு 1950 அளவில் அமெரிக்கா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தத் துறையில் பல்வேறு ஆய்வுகள், மற்றும் பரிசோதனைகளில் ஈடுபட்டன.
பரிசோதனைகளுக்காகப் போர்க்கைதிகளையும், மற்றும் தம் இராணுவத்தில் கடமையாற்றும் அநாதை சிப்பாய்களையும் இவர்கள் பலவந்தமாக உட்படுத்தினர். இதன் மூலம், சுய சிந்தனை, சுய விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட இயந்திர சிப்பாய்களை உருவாக்குவதே இவர்களது நோக்கமாக இருந்தது.
இந்த அடிப்படையில் தொடர்ச்சியாகப் பல இரகசிய செயல்திட்டங்கள் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. (CIA) மூலம் முன்னெடுக்கப்பட்டன. அவற்றுள் ஒருசிலவற்றைத் தொட்டுக் காட்டுகிறேன்:
Project Bluebird:
இந்தச் செயல்திட்டம் 1950 இல் ஆரம்பிக்கப்பட்டது.
Project MK Ultra:
இந்தச் செயல்திட்டம் 1953 இல் ஆரம்பிக்கப் பட்டது.
Project Monarch:
இது Project MK Ultra வின் ஓர் உட்பிரிவாக வடிவமைக்கப்பட்டது.
இவ்வாறான செயல்திட்டங்கள் “குணாதிசய வடிவமைப்புச் செயல்திட்டங்கள்” (Behavior Modification Programs) என்று அழைக்கப் பட்டன.
இச்செயல்திட்டங்கள் மூலம் சிப்பாய்களது குணாதிசயங்கள், ஒருசில உயர்மட்ட நிர்வாகிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டன. Top Secret எனும் அளவுக்குப் பரம இரகசியமாகவே இவ்வாறான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், இந்த இரகசியங்கள் பற்றிய பல மறுக்க முடியாத ஆதாரங்கள் பிற்காலத்தில் வெளியுலகுக்குக்க் கசியத் தொடங்கி விட்டன.
இவ்வாறு குணாதிசய வடிவமைப்புச் செயல்திட்டங்களுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் “உறங்கும் கொலையாளிகள்” (Sleeper Assassins) என்றும், Manchurian Candidates என்றும் அழைக்கப்பட்டார்கள். இந்த வகையான குணாதிசய வடிவமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதைப் பற்றிய சிறு விளக்கத்தைப் பார்க்கலாம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் கைதிகளும், சிப்பாய்களும் இரகசிய இராணுவ முகாம்களுக்குக் கொண்டுவரப் படுவார்கள். அங்கு முதல் கட்டமாக இவர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். தான் யார் என்பதை அவர்கள் மறந்து போகும் அளவுக்கு சித்திரவதைகள் உக்கிர நிலையை அடையும். தான் யார் என்பதை மறக்கும் இந்த அநாதரவான கட்டத்தை ஒரு மனிதன் அடையும் போது, அவனது ஆளுமை (Personality) இரண்டாகப் பிளக்கும்.
இந்த நிலையில் அவனது சுய மனோபாவம் / ஆளுமை / பாத்திரம் என்பது மயக்க நிலையை அடைந்து விடும். சுய ஆளுமை மயக்க நிலையை அடைந்ததும், அந்த இடத்தை நிரப்பும் நோக்கில் அவனது ஆழ்மனதில் இன்னொரு புது ஆளுமை / புதுப் பாத்திரம் உருவாகும். இப்படியொரு புதுப் பாத்திரம் தனக்குள் உருவானதை அந்த சிப்பாய் உணர்ந்திருக்கவே மாட்டான். மேலும் இந்தப் புதிய பாத்திரத்தின் மனோபாவம் எந்த அனுபவ அறிவும் இல்லாத ஒரு குழந்தையின் மனதைப் போன்று தான் இருக்கும்.
இவ்வாறு சித்திரவதை மூலம் உருவாக்கப்படும் புதிய பாத்திரத்தை “அறிதுயில்” (Hypnotism) நிலை மூலம் இவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் பயிற்றுவிப்பார்கள். புதிய பாத்திரத்தின் குணாதிசயங்களை அணு அணுவாக வடிவமைப்பார்கள். வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின், அந்தப் பாத்திரத்தைத் தேவைப்படும் சமயத்தில் விழிக்க வைப்பதற்காகவென்று ஒரு சங்கேத வார்த்தையையும் (Password) சேர்த்து அவனது ஆழ்மனதில் பதிய வைத்து விடுவார்கள்.
அதன் பிறகு புதுப் பாத்திரத்தை உறங்க வைத்து விடுவார்கள். புதிய பாத்திரம் உறங்கிய அடுத்த கணம் மீண்டும் அவனது பழைய சுய பாத்திரம் விழித்துக் கொள்ளும். ஆனால், தனக்குள் இன்னொரு பாத்திரம் உறங்கிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவே தெரியாது.
என்ன நடந்ததென்று எந்த விவரமும் அறிவிக்கப்படாமல், அந்த சிப்பாய் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டு, அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப் பட்டவனாக மீண்டும் சமுதாயத்தில் ஒருவனாக வாழ அனுமதிக்கப்படுவான்.
விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் அந்தச் சிப்பாய் / போர்க் கைதி மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சியோடு மீண்டு விடுவான். தனக்கு நேர்ந்த பரிசோதனை பற்றி எதுவுமே அறியாதவனாக அவன் வாழ்ந்து கொண்டிருப்பான்.
காலப்போக்கில் அவனை வைத்து அரசியல் கொலைகள் செய்வது போன்ற ஏதேனும் ஒரு சட்டவிரோதமான காரியத்தைச் சாதிக்க வேண்டிய சமயம் வரும் போது நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ அவன் தொடர்பு கொள்ளப்படுவான். தொடர்பின் போது ஏற்கணவே அவனது ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சங்கேத வார்த்தை அவன் காதுகளுக்குக் கேட்கும் விதமாக சொல்லப் படும்.
சங்கேத வார்த்தை அவன் காதுகள் வழியாக மூளையை அடைந்த மறு கணமே அவனது இயல்பான ஆளுமை / பாத்திரம் உறங்கி விடும்; வடிவமைக்கப்பட்ட புதுப் பாத்திரம் விழித்துக் கொள்ளும். அதன் பிறகு அவனுக்குரிய கொலை செய்யும் பணி ஒப்படைக்கப்படும். கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அணுவும் பிசகாமல் ஓர் இயந்திரத்தைப் போல் அவன் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடிப்பான்.
காரியத்தை முடித்த பின் மீண்டும் அவனது இயல்பான பழைய ஆளுமைக்கு அவனை மாற்றி, மீண்டும் அவனை சமூகத்தில் கலந்து வாழ விட்டு விடுவார்கள்.
இதில் பரிதாபம் என்னவென்றால், தான் செய்த கொலைகள் பற்றிய எந்த அறிவும் இல்லாத ஓர் அப்பாவியாகவே அவன் சமூகத்தில் வலம் வந்து கொண்டிருப்பான்.
காலப்போக்கில் தடயங்களை வைத்து சட்டம் அவனைக் கைது செய்தாலும், அவன் செய்த கொலைகள் பற்றியோ, அவனைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் பற்றியோ எந்த வாக்கு மூலமும் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அவன் குற்றம் சுமத்தப்பட்டு சிறை செல்வான்.
இந்த அடிப்படையில் இவர்கள் பலரையும் வடிவமைத்து சமுதாயத்தில் உலவ விட்டது நாளடைவில் பிரச்சினையைத் தோற்றுவிக்கத் தொடங்கியது. இவ்வாறானவர்களைக் கைது செய்து விசாரிக்கும் போதெல்லாம், இவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை சட்டம் கண்டு கொள்ளத் தொடங்கியது. இந்தப் புது விசித்திர நோயின் பின்னணி என்னவென்பது பற்றிப் பலரும் ஆய்வு செய்யத் தொடங்கி விட்டார்கள்.
நிலைமை இவ்வாறு தொடர்ந்தால், தமது இரகசியத் திட்டங்களெல்லாம் அம்பலமாகி விடும் என்று அஞ்சிய இந்த இரகசிய ஆட்சிக் கும்பல், உடனே ஒரு புதுத் திட்டம் தீட்டியது.
இரண்டு ஆளுமைகளை ஒருவர் தனக்குள் ஒருங்கே கொண்டிருந்தால், அதை “Split Personality Disorder” என்றும், இரண்டுக்கு மேற்பட்ட ஆளுமைகளை ஒருவர் தனக்குள் கொண்டிருந்தால், அதை “Multiple Personality Disorder” என்றும் புது மன நோய்களாக இவர்களே பெயர் சூட்டி, அவற்றை மருத்துவ உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
அத்தோடு மட்டும் இவர்கள் நின்று விடவில்லை; செயற்கையாக இவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மனநோய்களை இயற்கையான மனித நோய்கள் என்று உலகமே அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல பரப்புரைகளையும் (Propaganda) தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மீடியாக்கள் மூலம் உலக அரங்கில் பரப்பினார்கள்.
இதன் விளைவாக மருத்துவ அகராதியில் இந்த நோய்களும் உள்ளடக்கப் பட்டன. இவை இயற்கையான மனநோய்கள் என்ற அடிப்படையில் இவற்றுக்கு உலக அங்கீகாரமும் கிடைத்தது. உதாரணத்துக்கு Multiple Personality Disorder எனும் நோயைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ஹாலிவூட் மூலம் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கடந்த காலங்களில் வெளியிடப் பட்டதையும், அவ்வாறான ஆங்கிலத் திரைப்படங்களைக் காப்பியடித்துத் தமிழில் கூட “அந்நியன்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானதையும் கூட குறிப்பிடலாம்.
தமது வண்டவாளங்களை மறைப்பதற்காக, இல்லாத ஒரு புது நோயையே மருத்துவ அகராதியில் நுழைத்து, அதையொரு பிரசித்தி பெற்ற கலாச்சாரமாகவும் மாற்றியவர்கள் தாம் இந்த ஷைத்தானியர்கள். உலக அரங்கில் இவர்களுக்கு இருக்கும் ஆதிக்கம் எத்தகையது என்பதை ஊகித்துக் கொள்வதற்கு இந்த ஓர் உதாரணமே சிந்திப்போருக்குப் போதுமானதாக இருக்குமென்று கருதுகிறேன்.
Chapter 05
8 வது உத்தி – சக்தி அலைகள்:
நவீன இயற்பியல் விஞ்ஞானத்தின் (Modern Physics) மூன்றாம் தலைமுறையைத் தாண்டிய ஒரு காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முதலாம் தலைமுறை:
நியுட்டன் சார்ந்த இயற்பியல் (Newtonian Physics).
இரண்டாம் தலைமுறை:
ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் (Einsteinian Physics).
மூன்றாம் தலைமுறை:
சக்திச்சொட்டுப் பொறியியல் (Quantum Mechanics).
இதில் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகள் இரண்டுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டு கோட்பாடுகளும் முழுக்க முழுக்க நாத்திக வாதம், மற்றும் சடத்துவவாத்தை அடிபடையாகக் கொண்ட கோட்பாடுகள்; கடவுளை மறுக்கக் கூடிய கோட்பாடுகள்.
இந்தக் கோட்பாடுகளின் பார்வையில் இந்தப் பிரபஞ்சம் (Universe) என்பது 4 அம்சங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது:
1. உயிரற்ற சடப்பொருட்கள்
2. உருவமற்ற சக்தி (உதாரணம்: ஒளி, மின்காந்தப் புலன், ஈர்ப்பு விசை)
3. எதுவுமே அற்ற சூன்யமாக இருக்கும் வெற்றிடம்
4. காலம் (நேரம்)
அதாவது, இவர்கள் பார்வையில் இந்த நான்கு அம்சங்களினதும் கூட்டுச் சேர்க்கை தான் இந்தப் பிரபஞ்சம் என்பது. இவற்றைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே இல்லை. மேலும், இவர்கள் பார்வையில் காலம் / நேரம் என்பது இந்த முப்பரிமான உலகின் இன்னொரு (நான்காவது) பரிமாணம் என்றே நோக்கப் படுகிறது.
இதை எளிய வடிவத்தில் கூறுவதென்றால், உயிரற்ற இந்தப் பேரண்டம் என்பது, உருவமற்ற சக்தியின் கட்டுப்பாட்டில் காலம் என்னும் ஒரு தண்டவாளத்தினூடே பயணித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் சக்திகள், ஆதி முதல் இன்று வரை ஒரே அடிப்படையில் மாறாமலிருக்கின்றன. அதாவது, ஈர்ப்பு விசை என்பது என்றென்றும் ஒரே மாதிரி தான் ஈர்த்துக் கொண்டே இருக்கும். ஒளி என்பது என்றென்றும் மாறாத ஒரே வேகத்தில் தான் பயணித்துக் கொண்டேயிருக்கும். அது அது அதன் பாட்டில் மாறாமல் அப்படியே இருந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்திற்கு நிர்வாகி (கடவுள்) என்று சொல்லக் கூடிய யாரும் இல்லை.
சடப்பொருளாக இன்று இருக்கக் கூடியவையெல்லாம், ஆதி அணுக்கள் வெவ்வேறு ஒழுங்கில் தற்செயலாக இணைந்ததன் விளைவாக உருவான மூலகங்களின் இரசாயணச் சேர்மானங்கள் மூலம் காலப்போக்கில் அதுவாகவே உருவானவை.
இந்தக் கோட்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் போது என்ன தெரிகிறது?
இந்தக் கோட்பாடு, உயிரினங்களின் கூர்ப்புக் கொள்கையை ஒத்ததாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது ஆதியில் அணுக்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. அதன் பிறகு ஈர்ப்பு விசை, மற்றும் பல்வேறு காலக்ஸிகளின் (Galaxies) தோற்றங்களில் வெளிப்பட்ட சக்திகள் போன்றவற்றின் காரணமாக இந்த அணுக்கள் ஒன்றன் பால் ஒன்று எந்த ஒழுங்கும் இல்லாமல் தானாக ஈர்க்கப்பட்டு இணைந்தன. இதன் விளைவாக, வெவ்வேறு மூலகங்கள் தற்செயலாக உருவாகின. இந்த மூலகங்களே இந்தப் பிரபஞ்சத்தில் இன்றிருக்கும் அனைத்து சடப்பொருட்களதும் அடிப்படை அலகுகளாகும்.
இதே அடிப்படையில் தான் உயிர்கள் கூட உருவானதென்று ”டார்வின்” போன்றோர் முன்வைத்த கூர்ப்புக் கொள்கையும் கூறுகிறது. அதாவது, ஆதியில் சிதறிக்கிடந்த அணுக்கள் எழுந்தமானமாகப் பிணைக்கப்பட்டுப் பல்வேறு மூலகங்கள் உருவாயின. இவ்வாறு உருவான பல்வேறு இரசாயண மூலகங்கள் ஆங்காங்கே திரண்டு, ஈற்றில் “மூலப் பதார்த்தக் கஞ்சி” (Primordial Soup) எனும் பதார்த்தம் தன்னால் உருவானது.
காலப்போக்கில் இந்த மூலப்பதார்த்தக் கஞ்சினுள் இருந்த வெவ்வேறு மூலகங்கள் தற்செயலாக மோதிக் கொண்டதாலும், ஒட்டிக் கொண்டதாலும், உயிர் எனும் இன்னொரு புது சக்தி, இந்த இரசாயணத் தாக்கத்தின் பக்க விளைவாக உருவானது. இதுவே உலகில் தோன்றிய முதலாவது உயிரிணமான நுண்ணங்கிகள் ஆகும். காலம் செல்லச் செல்ல இதே பொறிமுறை மீண்டும் மீண்டும் நடந்ததன் மூலம், நுண்ணங்கிகளையும் விட விருத்தியான பல கல உயிரினங்கள், தாவரங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக விருத்தியடைந்து இன்றிருக்கும் மனிதன் வரை அது கூர்ப்படைந்தது.
இந்தக் கூர்ப்புக் கோட்பாட்டையும், நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளையும் உண்ணிப்பாக அவதானித்தால் ஒரு விசயம் புலப்படும். படைத்தவன் ஒருவன் இருப்பதையும், இந்தப் பிரபஞ்சத்தில் அவனுக்கு இருக்கும் பங்களிப்புகளையும் இந்தக் கொள்கைகள் பரிபூரணமாக மறுப்பதைப் பார்க்கலாம்.
அதிலும் குறிப்பாக ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளில் இன்னொன்றையும் அவதானிக்கலாம். ஒளி என்பது என்றென்றும் ஒரே வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சக்தி. நொடிக்கு ஏறத்தாழ 300,000 கிலோமீட்டர் என்னும் அதே வேகத்தில் தான் ஒளி என்றும் பயணித்துக் கொண்டிருக்கும். மேலும் இப்பேரண்டத்தில் அதியுச்ச வேகத்தில் பயணிக்கக் கூட்டியது ஒளி மட்டுமே. ஒளியின் இந்த வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணிக்கக் கூடிய எந்தவொரு சக்தியும் இப்பேரண்டத்தில் இல்லை.
ஐன்ஸ்டைனின் இந்தக் கோட்பாட்டை இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் இந்தக் கோட்பாடு சூசகமாக என்ன சொல்கிறதென்பது விளங்கும்.
ஐம்புலன்கள் மற்றும் தொழினுட்பக் கருவிகள் மூலம் தான் இந்த மொத்தப் பேரண்டத்தையும் விஞ்ஞானம் கண்டறிந்து வகுத்துக் கூறியுள்ளது. இதிலும் குறிப்பாகப் பார்வையோடு சம்பந்தப்பட்ட தொழினுட்பம் தான் பேரண்டத்தின் பெரும் பகுதியை ஆய்வு செய்கின்றன. பார்வைப் புலன் சார்ந்த தொழினுட்பம் மொத்தமும் தங்கியிருப்பது ஒளி எனப்படும் சக்தியில் தான்.
அதாவது இந்தத் தொழினுட்பங்களது ஆற்றலின் எல்லை என்பது, ஒளியின் உச்ச வேகத்தின் அளவு தான். ஒளியின் வேகத்தைத் தாண்டிய எந்த ஒன்றையும் ஒளியால் துரத்திப் பிடிக்க முடியாது. ஒளியால் துரத்திப் பிடிக்க முடியாத எந்த ஒன்றையும் பார்வை சார்ந்த மனித தொழினுட்பங்களாலும் கண்டறிய முடியாது. இது தான் இந்த விஞ்ஞானம் பற்றிய உண்மை. இது தான் மனித விஞ்ஞானத்தின் எல்லை.
இவ்வாறான கருவிகளால் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது; ஏனெனில் அவன் ஒளியின் வேகம், கற்பனை அனைத்தையும் தாண்டிய ஒரு சாம்ராஜ்ஜியத்தில் வீற்றிருக்கிறான். அதே போல் அவனது சக்தி மிக்க படைப்புக்களான வானவர்கள், ஜின்கள் போன்ற படைப்புக்களையும் நம் கருவிகளால் கண்டறிய முடியாது. அவர்களும் ஒளியின் வேகத்தை மிஞ்சிய பரிமாணங்களில் சஞ்சரிக்கக் கூடியவர்கள்.
ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் பிரகாரம், ”ஒளியின் வேகத்தை மிஞ்சிய எந்த ஒன்றும் இல்லை” என்பதன் உள் அர்த்தம் என்ன தெரியுமா? நம் கண்களாலோ, கருவிகளாலோ பார்க்க முடியாத எதுவும் உலகில் இல்லை என்பது தான் இதன் அர்த்தம். ஆழமாக யோசித்தால் இந்த அர்த்தம் புலப்படும்.
அதாவது இவர்களது கூற்றை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், அல்லாஹ்வை நம் கருவிகளால் பார்க்க முடியவில்லை; எனவே அல்லாஹ் என்று ஒருவன் இல்லை. வானவர்களை நம் கருவிகளால் பார்க்க முடியவில்லை; எனவே வானவர்கள் என்ற ஓர் இனமும் இல்லை. இது தான் இந்த விஞ்ஞானக் கோட்பாட்டின் உண்மையான அர்த்தம்.
அதே போல் இவர்களது கோட்பாட்டின் படி, நேரம் என்பது நமது முப்பரிமான உலகின் மூன்று பரிமானங்களைப் (x,y,z) போல், நான்காவது ஒரு பரிமானம் மட்டுமே. அதாவது நேரம் என்பது நீளத்தை அளப்பதற்கு நாம் உபயோகிக்கும் ரூலர் அளவுகோல் போல, நிமிடங்கள், செக்கன்கள் என்று அலகு குறிப்பிடப்பட்ட ஒரு நீண்ட அளவுகோல் மட்டுமே. இந்த அளவுகோல் மீது தான் இந்தப் பிரபஞ்சம் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் போல நேர்கோட்டில் பயனித்துக் கொண்டிருக்கிறது.
நேரத்தின் வேகமும், ஒளியின் வேகமும் சமன். ஒளியின் வேகத்தை ஒத்த வேகத்தில் நாம் பயணித்தால், நம்மால் நேரத்தினூடே பயணிக்கலாம். நமது கடந்த காலத்துக்கு மீண்டும் நாம் திரும்பிச் செல்லலாம். இந்தக் கருத்தையும் சொன்னது ஐன்ஸ்டைன் தான். இதை இன்றைய விஞ்ஞானம், “நேரப் பிரயாணம்” (Time Travel) என்று கூறுகிறது.
ஐன்ஸ்டைனின் இந்தக் கோட்பாடும் அல்லாஹ்வின் அதிகாரங்களை நேரடியாக மறுக்கக் கூடிய ஒரு கோட்பாடு தான். காலத்தினூடாகப் பயணிக்கவோ, அல்லது காலத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொன்றிலும் அணுவளவேனும் மாற்றங்களை ஏற்படுத்தவோ எந்தவொரு மனிதனுக்கும் எள்ளளவும் அதிகாரம் இல்லை. என்ன தான் தலையைக் குத்தி ஆய்வு செய்தாலும், கியாம நாள் வரை காலத்தின் வரையரைகளைத் தாண்டிச் செல்ல எந்த மனிதனாலும் முடியாது என்பது தான் மார்க்கத்தின் திட்டவட்டமான நிலைபாடு. இதை இன்னும் கொஞ்சம் விபரமாக சற்று நேரத்தில் நோக்கவிருக்கிறோம்.
ஆக மொத்தத்தில் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகள் அனைத்தும் இறைமறுப்பைப் போதிப்பதாகவே அமைந்திருப்பது தெளிவாகப் புரிகிறது. மேலும், விஞ்ஞானம் என்ற பெயரில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை கற்பிக்கப்படும் இந்தக் கோட்பாடுகள் மொத்தமும் பொய்யையும், பித்தலாட்டத்தையும் கொண்டு மனித சமூகத்தைப் நெறி தவறிய கல்வியின் பால் இட்டுச் செல்வதற்காகவே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
நெறி தவறிய கல்வியின் முடிவு எப்பொழுதும் வழிகேடாகத் தான் இருக்கும்.
விஞ்ஞான உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இவ்வாறான பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் சவாலாக அமையும் விதமாக 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் விஞ்ஞான உலகில் ஒரு புதிய புரட்சி வெடித்தது. அது தான் “சக்திச் சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) எனும் புரட்சிகரமான விஞ்ஞானக் கோட்பாடு.
சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் தோற்றத்திற்குப் பிரதான காரணமாக அமைந்தது, அன்று ஒருசில விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒளியின் இரட்டை நிலைப்பாடு எனும், ஒளி பற்றிய ஒரு விசித்திரமான உண்மை தான்.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை ஒளி (வெளிச்சம்) என்பது ஒரு சக்தி என்று தான் விஞ்ஞானிகளால் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. ஏனெனில் ஒளியின் தன்மைகள் அனைத்தும் சக்தி அலைகள் போன்ற அலை வடிவத்திலேயே கண்டறியப்பட்டிருந்தன. சடப்பொருளுக்குரிய எந்தத் தன்மையும் ஒளிக்கு இருந்ததாக யாருமே அதுவரை அவதானித்திருக்கவில்லை. எனவே ஒளி என்பது ஒரு சக்தி மட்டுமே என்ற அடிப்படையிலேயே நோக்கப்பட்டது.
பிறகு ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட சில பரிசோதனைகளின் போது ஒளியைப் பற்றிய ஒருசில திடுக்கிடும் பேருண்மைகள் கண்டறியப்பட்டன. அனேகமான சந்தர்ப்பங்களில் சக்தி அலைகளாகத் தோற்றமளிக்கும் ஒளிக் கதிர்கள் சில சந்தர்ப்பங்களில் சடப்பொருளைப் போலவும் தோற்றமளிப்பது சில பரிசோதனைகளின் விளைவாகத் தெரிய வந்தது. அன்றிருந்த பல விஞ்ஞானிகளையும் இது குழப்பத்தில் ஆழ்த்தத் தொடங்கி விட்டது.
இதன் விளைவாக, ஒளி என்பது சக்தியா? அல்லது சடப்பொருளா? என்ற ஒரு புதிய கேள்வி விஞ்ஞான உலகைக் குடைந்தெடுக்க ஆரம்பித்து விட்டது. இதற்கு விடை காணும் நோக்கத்தோடு பலரும் பல்வேறு ஆய்வுகளில் இறங்கத் தொடங்கினர்.
இதே காலப்பகுதியில் வேறோர் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு இயற்பியலாளரான Max Planck என்பவர், எதிர்பாராத விதமாக ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். 1900 இல் இதை ஒரு கொள்கையாக அவர் வெளியிட்டார். சக்தி என்பது தொடர் அலைகளாக இருப்பதில்லை; மாறாக “குவாண்ட்டம்” என்றழைக்கப்படும் சக்திச் சொட்டுக்களாகத் தான் அவை இருக்கின்றன.” என்பது தான் அவரது கோட்பாடு. இந்தக் கோட்பாடு தான் “சக்திச்சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) எனும் புரட்சிகரமான புது விஞ்ஞானத்தின் அத்திவாரமாக அமைந்தது.
Max Planck முன்வைத்த இந்தக் கருத்தை அப்படியே கவ்விக் கொண்ட ஐன்ஸ்டைன், அதை ஒளிக்கதிர்களுக்குப் பொருத்தி, ஒளியின் சக்திச் சொட்டுக்களை “ஃபோட்டோன்” (Photon) என்று பெயரிட்டு, Max Planck இன் அதே கோட்பாட்டை வேறு சில மேலதிக கோட்பாடுகளோடு கலந்து, 5 வருடங்களின் பின் தனது பெயரில் மீண்டும் வெளியிட்டார்.
அதாவது Max Planck இன் சக்திச்சொட்டுக் கோட்பாட்டோடு, ஏற்கனவே James Maxwell, Henri Poincarளூ, Olinto De Pretto போன்ற விஞ்ஞானிகளது ஆய்வுக் கோப்புகளிலிருந்து தான் திருடி வைத்திருந்த E=mc2 போன்ற சமன்பாடுகளையும் ஒருங்கிணைத்து, மொத்தத்தையும் ஓர் ஆய்வுத் தொகுப்பாக வடிவமைத்து, “விஷேட சார்பியல் கோட்பாடு” (Special Theory of Relativity) என்ற பெயரில் ஐன்ஸ்டைன், தனது சொந்த ஆய்வை வெளியிடுவது போல் வெளியிட்டார்.
இவ்வாறு ஐன்ஸ்டைன் வெளியிட்ட விசேட சார்பியல் கோட்பாடு வெகு சீக்கிரத்திலேயே உலகப் பிரசித்தி பெற ஆரம்பித்து விட்டது. ஏனெனில், பிரபஞ்சத்தின் பல அம்சங்களை ஒரே ஆய்வுக்குள் உள்ளடக்கியது போல் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு தோற்றமளித்தது.
மேலும், இவ்வளவு ஆழமானதொரு ஆய்வை எந்தவொரு சாதாரன மனிதனாலும் தனியாக சிந்திப்பதென்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்த சக அறிஞர்கள், ஐன்ஸ்டைன் ஒரு விஷேட பிறவியென்று நினைக்கத் தொடங்கி விட்டனர்.
இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொண்ட ஷைத்தானிய இலுமினாட்டிகள், ஊடகங்கள் மூலம் ஐன்ஸ்டைனை ஒரு ஜீனியஸ் ஆகவும், விஞ்ஞான உலகின் சரித்திர நாயகனாகவும் உருவகப் படுத்தி, ஜனரஞ்சகப் படுத்தி விட்டனர்; உலகின் கவனத்தை ஐன்ஸ்டைன் பக்கம் திருப்ப ஆரம்பித்தனர். கற்றறிந்தோர் அனைவருக்கும் கண்கண்ட கடவுள் போல் ஐன்ஸ்டைன் வலம் வரத் தொடங்கினார்.
ஆனால், உண்மை இதுவல்ல. ஐன்ஸ்டைன் என்பவர் தனிச்சிறப்பு மிக்க ஒரு விஞ்ஞானி கிடையாது; எல்லா விஞ்ஞானிகளையும் போன்ற ஒரு சாதாரண விஞ்ஞானி தான். மேலும், சக விஞ்ஞானிகளது ஆய்வுகளைத் திருடித் தனது பெயரில் வெளியிட்ட ஓர் அயோக்கியன் தான் ஐன்ஸ்டைன். இந்த உண்மைகள் உலக அரங்கில் வெளிவராமலிக்கும் வண்ணம் ஷைத்தானியர்கள் வரலாற்றைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தனர். இந்த நாடகத்துக்கான தேவை என்னவென்பதைப் பிறகு பார்க்கலாம்.
ஷைத்தானியர்களது பித்தலாட்டம் மிக்க விளம்பரங்களின் விளைவாக மொத்த உலகமும் ஐன்ஸ்டைனின் அருமை பெருமைகளை சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழித்தது. அதே போல், ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டில் இருந்த சில பெரும் தவறுகளையும் கூட உலகம் உற்று நோக்கத் தவறி விட்டது. “ஐன்ஸ்டைன் எது சொன்னாலும், அது சரியாகத் தான் இருக்கும்” என்ற ஒரு மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்ட கண்மூடித்தனமான ஒரு கலாச்சாரம் பல்கலைக் கழகங்களில் உருவாக்கப்பட்டது. ஆதாரமே இல்லாமல் ஐன்ஸ்டைன் ஒரு கொள்கையை முன்வைத்தாலும், அதை அடுத்த கணமே சிரமேற்கொண்டு பின்பற்றும் ஒரு சமூகம் விஞ்ஞான உலகில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.
இந்தக் காலப்பகுதியில் தான், மறுபடியும் சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தோடு ஜேர்மன் நாட்டு இயற்பியலாளர் Werner Heisenberg மற்றும் டென்மார்க் நாட்டு இயற்பியலாளர் Niels Bohr ஆகியோர் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளுக்கு எதிராகக் களமிறங்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, அறிவியல் உலகில் ஒரு பணிப்போர் ஆரம்பித்தது. நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளுக்கும், குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கும் இடையில் ஆரம்பித்த அறிவியல் போர் தான் இது.
Chapter 06
“சக்திச்சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) அறிமுகம்:
இதுவரை நுண்ணிய அணுக்களின் மட்டத்திலிருந்து அண்டசராரசத்தின் விசாலம் வரை அனைத்தையுமே திட்டவட்டமான அளவீடுகள் மூலம் அளந்தும், கணித்தும், அவற்றையொட்டியே கோட்பாடுகளையும், சமன்பாடுகளையும் வடிவமைத்துப் பழகிப் போன விஞ்ஞானிகளது உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட புரட்சிகரமான ஒரு புது விஞ்ஞானமாகவே சக்திச்சொட்டுப் பொறியியல் பரிணமித்தது.
சாதாரண மனிதர்கள் ஒருபுறமிருக்க, ஆணானப்பட்ட பெரும்பெரும் விஞ்ஞானிகளே குழப்பத்தின் உச்ச நிலையில் திகைத்துப் போய்த் தலையைச் சொறிந்தது குவாண்ட்டம் கோட்பாடுகளைச் சந்தித்த போது தான். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம், நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் இயங்கவில்லை; மாறாக, நமது யதார்த்தத்துக்கே ஒத்துவராத விசித்திரமானதோர் அமைப்பிலேயே இந்தப் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது தான் குவாண்ட்டம் கோட்பாட்டின் மையக்கருத்து.
அதுவரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த விஞ்ஞானத்தின் பல அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட உடைத்து நொறுக்கும் விதமாகவே குவாண்ட்டம் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதனாலேயே ஆரம்ப காலங்களில் பிரபலமான பல விஞ்ஞானிகளது எதிர்ப்புகளுக்கும் குவாண்ட்டம் கோட்பாடுகள் ஆளாகின. ஆனாலும், அந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி, குவாண்ட்டம் கோட்பாடுகள் தான் உண்மையான விஞ்ஞானத்தின் தூய வடிவம் என்பது பிற்காலத்தில் பலநூறு பரிசோதனைகள் மூலம் மறுக்க முடியாதவாறு நிரூபிக்கப் பட்டது.
நாம் வாழும் இன்றைய உலகின் அதிநவீன தொழிநுட்பங்கள் அனைத்தும் மனிதனால் சாத்தியப் பட்டிருப்பதே குவாண்ட்டம் பொறியியல் மூலம் தான். அதிநவீன இலெக்ட்ரோனிக் கருவிகள், அதிவேக கம்பியூட்டர்கள், நமது கைகளில் இன்று தவழ்ந்து கொண்டிருக்கும் அதிநவீன ரக கைபேசிகள் போன்ற அனைத்திலும் இருக்கும் ப்ரொசசர்கள் (Processors / Micro processors) அனைத்தும் இன்று வடிவமைக்கப் பட்டிருப்பதும், இயங்கிக் கொண்டிருப்பதும் குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கு அமையத் தான்.
“சக்திச்சொட்டுக் கோட்பாடு” (Quantum Theory) என்றால் என்ன?
எந்தவொரு பொருளையோ, சக்தியையோ சிறு சிறு பங்குகளாகப் பிரித்துக் கொண்டே போனால், இறுதியில் அணுக்கள் என்ற கட்டத்தை அடைவோம். அணுவையும் பங்குகளாக வகுத்துக் கொண்டே போனால், இறுதியில் அதற்கு மேலும் பிரிக்க முடியாத நுண்ணிய சக்தித் துகள்களே இருக்கும். இவை சக்திச் சொட்டுக்கள் “குவாண்ட்டா” என்றழைக்கப்படும். ஒரு குவாண்ட்டம் என்பது சக்தியின் ஒரு சொட்டு என்று கணிக்கப் படும். உதாரணத்துக்கு “ஃபோட்டோன்” (Photon) என்றழைக்கப்படும் ஒளியின் சொட்டுக்களைக் குறிப்பிடலாம். ஒரு போட்டோன் என்பது ஒரு சொட்டு ஒளி என்று அர்த்தம். இவ்வாறான சக்திச் சொட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் விளைவு தான், சக்திச்சொட்டுப் பொறியியல் எனும் புரட்சிகரமான விஞ்ஞானம்.
குவாண்ட்டம் கோட்பாடு பற்றிய சிறு விளக்கம்:
அணு என்பது இலக்ட்ரோன், ப்ரோட்டோன் போன்ற பல துகள்களின் (Particles) தொகுப்பால் ஆன கட்டமைப்பு என்பது ஏற்கனவே அறிந்த விடயம்.
இவ்வாறு அணுக்களின் உள்ளே இருக்கும் துகள்கள் எதுவும் சடப்பொருள் கிடையாது. அவை அனைத்தும் சடப்பொருளைப் போல் தோற்றமளிக்கக் கூடிய சக்திச் சொட்டுக்கள் மட்டுமே. இந்தச் சக்திச் சொட்டுக்கள் எதுவும் வெறுமனே அசையாமல் சடப்பொருளாக இருப்பதில்லை. ஒவ்வொரு சக்திச்சொட்டும் அதிர்ந்து கொண்டு (Vibration) தான் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான சக்திச்சொட்டுக்கும் என்று தனித்துவமான ஓர் அதிர்வு எண்ணிக்கை (frequency) இருக்கும். இந்த அதிர்வெண்களைப் பொருத்து ஒவ்வொரு சக்திச் சொட்டும் நடத்தையில் வேறுபடும். இந்த வேறுபட்ட நடத்தைகளுக்கு அமையவே பல்வேறுபட்ட அணுக்கள் / மூலகங்கள் / பதார்த்தங்கள் என அவை உருவத்திலும், நடத்தையிலும் வித்தியாசப்பட்டுக் காணப்படும்.
இதை எளிய வடிவில் கூறுவதென்றால், இந்தப் பிரபஞ்சம், இதிலிருக்கும் வஸ்துக்கள், ஜீவராசிகள் அனைத்துமே, மனித புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி, பல்வேறுபட்ட அதிர்வெண்களில் தொடர்ச்சியாக அதிர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஓர் எதிரொளி மட்டுமே. ஒரேயொரு கணம் இந்தச் சக்தியின் அதிர்வு நின்று விட்டால், அடுத்த கணமே இந்த மொத்தப் பிரபஞ்சமும் மாயமாக மறைந்து விடும். அணுக்கள் தொடக்கம், அண்டசராசரத்தின் பிரும்மாண்டமான உடுத்தொகுதிகள் வரை அனைத்தும் தொடர்ச்சியாக அதிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிர்வு (Vibration) என்ற ஒன்று இல்லையென்றால், இந்த உலகமே இல்லை.
ஆவர்த்தண அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் பல்வேறு பட்ட அணுக்கள், மூலகங்கள் என்று எதுவும் உலகில் நிலையான கட்டமைப்புக்களாக இல்லை. ஓர் அணுவின் உள்ளே இருக்கும் சக்திச் சொட்டுக்களின் அதிர்வெண்கள் கொஞ்சம் மாறினால் கூட, அடுத்த கணம் அந்த அணுவே வேறோர் அணுவாக மாறி விடும்.
இந்த அடிப்படையில் ஓர் இடத்தில் இருக்கும் அதே அணு அதே நேரத்தில் இன்னோர் இடத்திலும் இருக்கலாம். ஓரிடத்தில் இருக்கும் ஒரு துகள், ஒரே கணத்தில் மாயமாக மறைந்து போய், வேறு பல இடங்களில் ஏக காலத்தில் பல பிரதிகளாகக் கூட முளைக்கலாம். இடம், பொருள் என்பதெல்லாம் சக்திச் சொட்டுக்கள் அதிரும் வேகத்தின் பிரதிபலிப்புக்கள் மட்டுமே.
இன்னொரு விதத்தில் இதை எளிமையாகக் கூறுவதென்றால், சடப்பொருள் என்று எதுவுமே உலகில் கிடையாது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே அறிவுக்குப் புலப்படாத ஒரு சக்தியின் வெளிப்பாடு மட்டுமே. கண்ணால் காண்பது, கையால் தொட்டு உணர்வது அனைத்தும் ஒரு மாயை மட்டுமே. ஓர் இடத்தில் இருக்கும் ஒரு பொருள் எந்த நிமிடம் வேண்டுமானாலும் அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து போகலாம். ஏனெனில், அங்கு எந்தப் பொருளும் இல்லையென்பது தான் யதார்த்தம். ஏதோவொரு சக்தி மட்டுமே இவற்றுக்கேல்லாம் தோற்றம் கொடுத்து, அனைத்தையும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. அந்த சக்தியின் நிர்வாகம் ஒரு கணம் இல்லாமல் போனால், அதே கணம் இந்த மொத்தப் பிரபஞ்சமும் இல்லாமல் போய் விடும். எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் நிச்சயம் இல்லை. எந்தக் கணமும் எது வேணுமானாலும் நடக்கலாம். எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை.
பிரபஞ்சத்தின் இந்த நிச்சயமற்ற தன்மையை உணர்ந்து, பகிரங்கமாக அதை ஒரு கொள்கையாகப் பிரகடணப் படுத்தியது குவாண்ட்டம் கோட்பாடு தான். இந்த நிச்சயமற்ற தன்மையைக் கூறிய ஒரே காரணத்துக்காக ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகள் குவாண்ட்டம் கோட்பாட்டைக் கடுமையாக எள்ளி நகையாடத் தொடங்கினர். குவாண்ட்டம் கோட்பாடு என்பதே ஒரு “நிச்சயமற்ற கோட்பாடு” தான் என்று நையாண்டியாகப் பேசத் தொடங்கினர். அவர்களது நோக்கம், இந்த “நிச்சயமின்மை” எனும் கோட்பாட்டை, குவாண்ட்டம் கொள்கையின் ஓர் அறிவீனமாகச் சித்தரித்துக் காட்டி, அதன் மூலம் குவாண்ட்டம் கோட்பாட்டைப் பொய்ப்பிக்க வேண்டும் என்பதாகத் தான் இருந்தது.
ஆனால், குவாண்ட்டம் கோட்பாடு முன்வைத்த “நிச்சயமின்மைக் கோட்பாடு” தான் சரியான விஞ்ஞானம் என்பதும், ஐன்ஸ்டைன் போன்றவர்கள் முன்வைத்த “நிச்சயமாக இது இப்படித் தான் நடக்கும்” என்ற தொனியிலான கொள்கைகள் அனைத்துமே பிழையான விஞ்ஞானம் என்பதுவும் பல பரிசோதனைகள் மூலம் பிறகு நிரூபிக்கப்பட்டது.
இதே போல் ஒளியின் வேகம் கூட நிச்சயமாக ஒரே வேகம் தான் என்றும், ஒளியை மிஞ்சிய வேகத்தில் நிச்சயமாக எதுவும் இல்லை என்றும் ஐன்ஸ்டைன் முன்வைத்த கோட்பாடுகள் கூட தவறானவை என்பதும் பிற்காலத்தில் பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டன. உதாரணத்துக்கு 2011ம் ஆண்டு ஜெனீவா “ஹாட்ரோன் கொலைடர்” (Hadron Collider) இல் நடாத்தப்பட்ட CERN பரிசோதனையில் “நியூட்ரினோஸ்” (Neutrinos) என்றழைக்கப்படும் அடிப்படைத் துகளானது, ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தது நிரூபிக்கப் பட்டது. இந்தப் பரிசோதனையின் பெறுபேறுகளின் முதலாவது அறிக்கையில் இது துல்லியமாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
ஆனால், ஷைத்தானியர்கள் உடனே அவர்களுக்கே உரிய தில்லுமுல்லுகளைப் பன்னி, அந்த அறிக்கையை மழுப்பி, இருட்டடிப்பு செய்து, திருத்திய பதிப்பு என்று இரண்டாம் அறிக்கையைத் தான் வெளியிட்டனர். அதில் இந்த உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் பிழையென்பதை இப்போதைக்கு உலகம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்தப் பித்தலாட்டம் அரங்கேற்றப் பட்டது.
குவாண்ட்டம் கோட்பாடுகளின் சாராம்சத்தின் அடிப்படையிலும், நிரூபிக்கப்பட்ட பின் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பல பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும் இந்தப் பிரபஞ்சம் பற்றிய உண்மையான இயற்பியல் விஞ்ஞானம் இது தான்:
இந்தப் பிரபஞ்சம் என்பது முழுக்க முழுக்க சக்தியால் தான் உருவாக்கப் பட்டிருக்கின்றது; சடப்பொருள் என்பது வெறும் மாயை மட்டுமே. நமக்குள்ளேயும், நமக்கு வெளியேயும், நம்மைச் சுற்றியும் இருப்பது சக்தி மட்டும் தான்.
இதில், ஒளியின் வேகத்தை விடக் குறைந்த வேகம் கொண்ட சக்திகள் தாம் அணுக்களாகவும், இரசாயண மூலக்கூறுகளாகவும், சடப்பொருட்களாகவும் நம் கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரிகின்றன.
ஒளியின் வேகத்துக்கு நெருக்கமான வேகம் கொண்ட சக்திகள் தாம், கதிர்வீச்சுக்களாகவும், சக்தி அலைகளாகவும் நம்மால் உணரப்படுகின்றன. ஒளிக்கதிர்கள் / மின்காந்த அலைகள் போன்றவற்றை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஒளியின் வேகத்தைத் தாண்டிய சக்திகள் எதுவும் நம் கண்களுக்கோ, கருவிகளுக்கோ புலப்படுவதில்லை. ஏனெனில் அவற்றை எட்டிப் பிடித்து உற்று நோக்கும் அளவுக்கு நம் கருவிகளுக்கு சக்தி போதவில்லை. இவை சக்தியின் அதியுயர் வடிவங்கள். இந்த வகையைச் சார்ந்த சக்திகளின் ஆற்றல்கள் அபாரமானவை.
இந்த வகையான அமானுஷ்ய சக்திகளைத் தான் காலத்துக்குக் காலம் பலரும் வெவ்வேறு பெயர்களில் அழைத்தார்கள். “இருண்ட பொருள்” (Dark Matter) / “இருண்ட சக்தி” (Dark Energy) / “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves) / “ஈத்தர்” (Aether) போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சக்திகளெல்லாம் இந்த வகையைச் சார்ந்தவை தாம்.
மேலும், குவாண்ட்டம் கோட்பாட்டின் பிரகாரம், நேரம் (காலம்) என்பது ஐன்ஸ்டைன் குறிப்பிடுவது போல் வெறுமனே ஒரு ரூலர் அளவுகோல் போன்ற ஒரு பரிமானம் அல்ல. நேரம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் பரிமாணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் அம்சம். அதாவது நேரம் என்பது இந்தப் பிரபஞ்சத்தை நிர்வகிக்கக் கூடிய ஒரு விதி. அதைப் புரிந்துகொள்ளவோ, கண்டுபிடித்து அளக்கவோ, அதில் மாற்றம் செய்யவோ யாராலும் முடியாது.
மேலும், குவாண்ட்டம் கொள்கையின் பிரகாரம், எந்தவொரு பொருளையும் அளந்து, திட்டவட்டமான தீர்மானமான கணிப்புகளைச் சொல்ல முடியாது. ஏனெனில், குவாண்ட்டம் கொள்கையின் பார்வையில் அளக்கும் வரை அந்தப் பொருள் அங்கு இருக்கவில்லை என்பது தான் உண்மை. அளக்கும் அந்தக் கணத்தில் தான் அந்தப் பொருளை ஏதோ ஒரு சக்தி அங்கு முளைக்கச் செய்கிறது. அளந்த பிறகும் அது அதே அளவில் தான் இருக்கும் என்றும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு துணிக்கையும் ஏதோ ஒரு சக்தியிடம் அனுமதி கேட்டு, அனுமதி கிடைத்த பிறகே அந்த நிலையை அடைகின்றன.
இந்தக் கோட்பாடு கூட நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த கோட்பாடுகளுக்கு நேர் முரணான கோட்பாடு தான். உதாரணத்துக்கு நியூட்டனின் விதிப் பிரகாரம், மேலே ஒரு பந்தை எறிந்தால், மிக நிச்சயமாக அந்தப் பந்து கீழே தான் விழும். வேறெங்கும் போகாது. இதே அடிப்படையில் தான் ஐன்ஸ்டைன் சார்ந்த கோட்பாடுகளும் நிச்சயமான விதிகளாக இயற்றப் பட்டிருக்கின்றன.
இந்த உதாரணத்தை வைத்து நோக்கும் போது குவாண்ட்டம் கோட்பாடு பிழை என்பது போல தான் தோன்றும். ஏனெனில் இதுவரை உலகில் மேலே எறிந்த எந்தப் பந்தும் கீழே விழாமல் போனதில்லை. இது ஒரு நிச்சயமான விதி போல இருப்பதால், நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் போன்றவர்கள் சொல்வது தான் சரி என்பது போலவும், குவாண்ட்டம் கோட்பாடு வெறும் பித்தலாட்டம் போலவும் தோன்றும்.
ஆனால், இதற்கு குவாண்ட்டம் கோட்பாடு சொல்லும் பதில் என்னவென்றால், மேலே எறியும் பந்து கீழே விழலாம்; விழாமலும் போகலாம்; மாயமாக மறைந்தும் போகலாம். ஆனால், எறியும் ஒவ்வொரு தடவையும் பந்து கீழே தான் விழுகிறது. காரணம், எறியும் ஒவ்வொரு தடவையும், அது கீழே தான் விழ வேண்டும் என்று பந்துக்குக் கட்டளை பிறப்பிக்கப் படுகிறது. அதனால் தான் அந்தப் பந்து கீழே விழுகிறது.
கட்டளை பிறக்காதிருந்தால், பந்து கீழே விழுந்திருக்காது. நிச்சயமாக பந்து கீழே விழுந்து தான் ஆக வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. விழுவதற்கான சாத்தியக் கூறுகள் விழாமல் போவதை விட அதிகம் இருப்பதால் தான் பந்து இதுவரை விழுந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தில் விதிகள் என்று எதுவுமில்லை; சாத்தியக்கூறுகள் மட்டுமே இருக்கின்றன. இந்த சாத்தியக் கூறுகளை குவாண்ட்டம் கோட்பாடு “சாத்தியக்கூற்று அலைகள்” (Probability Wave) என்று கூறுகிறது. இந்த சாத்தியக்கூறுகளை கணித்துச் சொல்ல மட்டும் தான் நம்மால் முடிகிறது. சாத்தியக்கூற்றுக் கணிப்பீட்டின் அடிப்படையில் தான் மனிதர்களது விஞ்ஞானம் எனும் வண்டியே ஓடிக் கொண்டிருக்கிறது.
“சாத்தியக்கூற்று அலைகள்” எனும் இந்தக் கோட்பாடு, பிரசித்தி பெற்ற “இரட்டைப் பிளவுப் பரிசோதனை” (Double Slit Experiment) மூலம் ஆய்வுகூடத்தில் மறுக்க முடியாத விதத்தில் நிரூபிக்கப் பட்டது. இந்தப் பரிசோதனையில் விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை என்னவென்றால், அவர்கள் கண்களால் பார்க்கும் போது இலத்திரன் துகள்கள் சடப்பொருள் போலவும், பார்க்காத போது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி போலவும் நடந்து கொள்கின்றன என்பது தான். இந்தப் பரிசோதனையின் முடிவுகளை வைத்துத் தான் குவாண்ட்டம் பொறிமுறையின் “நிச்சயமின்மை” கோட்பாடு மறுக்க முடியாதவாறு நிரூபிக்கப் பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு தடவையும், இந்த சாத்தியக்கூற்றுக் கணிப்பீடுகள் துல்லியமாகப் பலித்துக் கொண்டிருக்கின்றன என்பது தான். யதார்த்தத்தில் சாத்தியக் கூறுகள் என்றால், சில தடவை பலிக்க வேண்டும்; சில தடவை பலிக்காமல் போக வேண்டும். இது தானே இயற்கையின் நியதி? ஆனால், இந்த நியதிக்கு மாற்றமாக ஒவ்வொரு தடவையும் இந்தச் சாத்தியக்கூற்றுக் கணிப்பீடுகள் தவறாமல் பலித்துக் கொண்டே இருக்கின்றன. “இது எப்படி சாத்தியம்?” என்ற கேள்வி இங்கு எழும்பும். இந்தக் கேள்விக்கு குவாண்ட்டம் கோட்பாடு சொல்லும் பதில் இது தான்:
அது ஏன் அவ்வாறு துல்லியமாகப் பலிக்கின்றது என்பது தான் யாருக்குமே புரியாத புதிராக இருக்கிறது. கணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்தக் கணிப்பீடு தவறாமல் பலிக்க வேண்டும் என்று அவற்றுக்குக் கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் கணிப்புகள் பலிக்கின்றன. இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், இப்பேரண்டத்தில் நாம் அறிந்து கொண்டதை விட, அறிவுக்கு எட்டாத விசயங்கள் தான் அதிகம் இருக்கின்றன. அவற்றை அறிய எவ்வளவு முயற்சித்தாலும், நாம் தோற்றுத் தான் போவோம். அதனால் அது ஏன் என்ற கேள்வியை ஒரு பக்கம் வைத்து விட்டுப் பேசாமல், இதனால் நமக்குக் கிடைக்கக் கூடிய பயனை மட்டும் அடைவதில் நம் கவனத்தைச் செலுத்துவது தான் புத்திசாலித் தனம்.
இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் விதமாக குவாண்ட்டம் கோட்பாடு “வாயை மூடிக்கொண்டு கணிக்கும் வேலையை மட்டும் பார்” (Shut up and calculate) என்ற ஒரு புது நிலைபாட்டை முன்வைத்தது.
உண்மையில் இன்று நமது அன்றாட வாழ்வில் பாவனையில் இருக்கும் நவீன இலெக்ட்ரோனிக் உபகரணங்கள், கம்பியூட்டர் போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகள் அனைத்தும் குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கு அமையவே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன என்பதுவும், இவை அனைத்தும் “சாத்தியக்கூற்றுக் கணிப்பீட்டின்” அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் தான் நம்மில் பலர் அறியாத உண்மை.
இன்றைய உலகின் நவீன அணு சக்தித் தொழினுட்பம் கூட குவாண்ட்டம் கோட்பாட்டின் “சாத்தியக்கூற்றுக் கணிப்பீட்டின்” அடிப்படையில் தான் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால், இந்த நவீன கண்டுபிடிப்புகளின் உண்மையான சொந்தக்காரனான குவாண்ட்டம் கோட்பாட்டுக்குக் கிடைக்க வேண்டிய புகழ் அனைத்தும், ஐன்ஸ்டைன் போன்ற திருட்டு விஞ்ஞானிகளுக்குப் போய் சேர்ந்திருப்பது தான்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ அழுத்தவும்