பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (4)
Chapter 10
இதுவரை, இஸ்லாத்தின் பார்வையில் சரியான ஞானம் என்று சரிகாணப்படத் தகுந்த ஒருசில விஞ்ஞானக் கோட்பாடுகளை நாம் பார்த்தோம். இவ்வாறான ஞானத்தின் முழுமை பெற்ற வடிவத்தை ஆதியில் அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனம் கூறுகிறது:
“அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!” என்று கேட்டான்.” – (2:31)
ஆதி மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த இந்த உண்மையான ஞானம் காலப்போக்கில் இப்லீஸ் மூலம் களங்கப்படுத்தப்பட்டது. உண்மையான ஞானத்ஹ்டோடு இப்லீஸ், பித்தலாட்டங்களின் அடிப்படையிலான தனது சொந்த சரக்கையும் கலப்படம் செய்து, அதையே மறைவான ஞானம் என்ற போர்வையில் தனது பரிவாரங்கள் வாயிலாக மனித இனத்துக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்பதை, வரலாறு நெடுகிலும் முளைத்த பல வழிகெட்ட சித்தாந்தங்களையும் உற்று நோக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நெறி தவறிய ஞானத்தையே தூய சத்தியம் என்று நம்பி, இப்லீஸைப் பின்பற்றுவோர் பிற்காலத்தில் இந்த மறைவான ஞானங்களின் அடிப்படையில் பல வழிகெட்ட சித்தாந்தங்களை உருவாக்கிக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், அவற்றைப் பரப்பும் நோக்கில் பல இரகசிய இயக்கங்களையும் தோற்றுவித்திருக்கிறார்கள் என்பது உலக வரலாறுகளைப் படிக்கும் போது புரிகிறது.
இதன் விளைவாக “மறைவான ஞானங்களின் அடிப்படையில் பல படித்தரங்கள் மூலம் மனிதன் இறைவனின் ஸ்தானத்தை அடையலாம்” என்ற கருப்பொருளில் பல வழிகெட்ட கொள்கைகள் இறைவேதங்களுக்குள்ளும் ஊடுறுவின. இன்றிருக்கும் வழிகேடுகள் அனைத்துக்கும் மூல வேர் இது தான்.
இதை இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதமாக ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்:
உதாரணத்துக்கு இந்தப் பிரபஞ்சம் உருவாக்கப்பட்ட பெருவெடிப்பு நிகழ்வை இந்த இரண்டு வகையான ஞானங்களின் அடிப்படையிலும் விளங்கும் போது வழிகேடு எவ்வாறு உருவானதென்பது புரியும்:
உண்மையான ஞானத்தின் அடிப்படையில் இந்தப் பிரபஞ்சம் என்பது, “குன்” எனும் அல்லாஹ்வின் ஒரு வார்த்தை மூலம் வெளிப்பட்ட தூய சக்தியிலிருந்து முளைத்து, விரிவடைந்திருக்கும் வடிவங்கள் மட்டுமே. இது அல்லாஹ்விடமிருந்து நேரடியாக வெளிப்பட்ட சக்தி என்பதால், தூய வடிவில் ஆங்காங்கே பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் இவ்வாறான சக்திச் சொட்டுக்களில் சிலவேளை அல்லாஹ்வுக்கு நெருக்கமான சாயல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது யதார்த்தத்தை மீறிய அளவுக்கு இவ்வாறான சக்திகள் அபாரமானவையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அவ்வாறான சாயல் ஏதும் இருந்தால், அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, இந்த சக்தி தான் அல்லாஹ் என்று ஒருபோதும் அர்த்தம் கொண்டு விடக் கூடாது, அவ்வாறு அர்த்தம் கொண்டால், அது வழிகேடுகளுக்கே வழிவகுக்கும். அல்லாஹ்விடமிருந்து இந்த சக்தி வெளிப்பட்டதால் தான் இவ்வாறான சக்திகளில் அபார ஆற்றல்கள் இருக்கலாமே தவிர, இது அவன் என்பதால் அல்ல.
இந்த மொத்தப் பிரபஞ்சமும் அல்லாஹ்விடமிருந்து வெளிப்பட்ட சத்தம் எனும் சக்தியின் ஒரு துளி மட்டுமே. அல்லாஹ்வின் ஆற்றலோடும், மகத்துவத்தோடும் ஒப்பிடும் போது, இந்த மொத்த சக்தியும், வாயிலிருந்து உமிழும் ஒரு துளி எச்சிலை விடவும் அற்பமானது. அல்லாஹ் எனும் அந்தப் பரம்பொருளோடு ஒப்பிடுகையில் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வெறும் தூசு மட்டுமே. இந்தத் தூசை வைத்து, இதைப் படைத்த அவனை அளக்கவோ, அடையவோ முடியாது. இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதன் சரியான அனுகுமுறை இந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
அதாவது, எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்தத்த அளவில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை மீறிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதும் தவறு; அதே போல், உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், குறைத்து மதிப்பிடுவதும் தவறு. இது தான் சரியான புரிதல்.
இனி, பிரபஞ்சம் பற்றிய இதே விடயத்தை ஷைத்தானிய கலப்படத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வழிகெட்ட மறைவான ஞானம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்ப்போம். ஷைத்தானிய ஞானத்தின் அடிப்படையில் முளைத்த சித்தாந்தத்தின் மையக்கருத்து இது தான்:
இறைவனிடமிருந்து வெளிப்பட்ட சக்தியின் மூலம் தான் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் அபாரமான இந்த சக்தியானது கண்ணுக்குத் தெரியாத மறைவான ஒரு வடிவத்தில் எம்மைச் சுற்றி எங்கும் வியாபித்திருக்கிறது.
இந்த சக்தி அபாரமானது; அற்புதமானது; பல அதிசயங்களை நிகழ்த்த வல்லது. ஏனெனில், இறைவனிடமிருந்து நேரடியாக வெளிப்பட்ட சக்தி இது. இந்த “மறைவான சக்தி” இறைவனிடமிருந்து வெளிப்பட்டதால், இதில் இறைத்தன்மை நிறைந்திருக்கிறது. உண்மையில் இந்த சக்தியென்பது இறைவனின் ஒரு பகுதி. இறைவன் எனும் பரம்பொருள் உருவாக்கப் பட்டிருப்பதே இந்த வகையான சக்தியால் தான்.
ஆதலால், இந்தத் தூய சக்தியை யாரால் தீண்டவோ, அடையவோ முடிகிறதோ, அதன் மூலம் அவரால் இறைவனையே அடைய முடியும். அதற்கென்று ஒரு தனியான வழிமுறை இருக்கிறது.
இந்த மறைவான சக்தியானது, சத்தம் எனும் அதிர்வு அலைகளின் அடிப்படையிலான சக்தி. இந்த சக்திக்கென்று ஒரு குறிப்பிட்ட, தனித்துவமான அதிர்வெண் (frequency) இருக்கிறது. அந்த அதிர்வெண்ணுக்குப் பொருந்தக் கூடிய அதிர்வு வீதத்தில் நமது வாயிலிருந்து கூட சில வகையான சத்தங்களை வெளிப்படுத்தலாம். உதாரணத்துக்கு, தியான நிலையில் அமர்ந்து கொண்டு, “ஓம்..!” எனும் மந்திரத்தை அடித்தொண்டையிலிருந்து தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அதிலிருந்து வெளிப்படும் சத்தத்தைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான மந்திர உச்சாடனங்கள் மூலம் நமது வாயிலிருந்து வெளிப்படும் சத்தம், பிரபஞ்சத்தின் மறைவான சக்தியின் அதிர்வெண்களோடு சரியாகப் பொருந்திப் போகத் தொடங்கும் போது நாமும், இறைவனின் மறைவான சக்தியும் இரண்டறக் கலந்து விடுகிறோம். இதன் ஊடாக நாமும் படிப்படியாக இறைவனின் ஸ்தானத்தை அடைந்து விடுகிறோம்.
இது தான் ஷைத்தான் மூலம் உருவாக்கப் பட்டிருக்கும் வழிகெட்ட மறைவான ஞானத்தின் கருப்பொருள். உண்மையான ஞானத்தில் ஷைத்தான் எப்படியெல்லாம் பித்தலாட்டங்களைக் கலந்திருக்கிறான் என்பதை இந்த ஒரு சிறிய உதாரணத்தின் மூலமே நாம் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
பொய்யையும், பித்தலாட்டங்களையும் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் இவ்வாறான ஷைத்தானிய மறைஞானங்களை உண்மையென்று நம்பி, இவற்றின் மூலம் வழிகெட்ட மனித சமூகங்கள் இந்த உலக வரலாற்றில் ஏராளம் ஏராளம்.
பலதெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இன்றிருக்கும் அத்தனை மதங்களும் இந்த ஷைத்தானிய சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் நிறுவப் பட்டிருக்கின்றன. அத்தோடு இந்த வழிகேடு நின்றுவிடவில்லை; நபி (ஸல்) அவர்களது காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இஸ்லாத்தினுள்ளும் இதே ஷைத்தானிய சித்தாந்தம் “ஸூஃபி” கொள்கை என்ற பெயரில் நுழைந்தது.
“ஸூஃபி” கொள்கையின் அடித்தளத்தை அலசி ஆய்வு செய்யும் யாராக இருந்தாலும், அதன் அடித்தளத்தில் ஒளிந்திருக்கும் இதே ஷைத்தானிய சித்தாந்தத்தைத் தெளிவாக இனம்காணலாம்.
பலதெய்வக் கோட்பாட்டையுடைய பல மதங்களைச் சேர்ந்த சாமியார்களும், துறவிகளும் தவம் / தியானம் செய்வதன் மூலமும், மந்திர உச்சாடனங்களைத் தொடர்ச்சியாக உச்சரிப்பதன் மூலமும், துறவரத்தின் மூலமும் எப்படியெல்லாம் இறைவனின் ஸ்தானத்தை அடைவதற்கு முயற்சிக்கிறார்களோ, அதே அடிப்படையில் தான் “ஸூஃபி” சன்னியாசிகள் (நமது பாஷையில் “தர்வீஷ்” / “Bபாவா” / “ஸாஹிபு”) கூட பல்வேறு பட்ட தியானங்கள் மூலமும், போதைப் பொருள் பாவனைகள் மூலமும், மந்திரங்களைப் போல் சில உச்சாடனங்களைத் தொடர்ச்சியாக உச்சரித்துக் கொண்டிருப்பதன் மூலமும் “ஃபனா” எனும் சூன்ய நிலையை அடைய முயற்சிப்பதைப் பார்க்கலாம். “ஸூஃபி”களது பார்வையில் “ஃபனா” எனும் இந்த சூன்ய நிலை தான், இறைவனோடு மனிதன் இரண்டறக் கலந்து, இறைவனாகவே மாறும் நிலை.
ஷைத்தான் மூலம் இந்த மார்க்கத்தினுள் நுழைந்த இவ்வாறான முஸீபத்துக்கள் பற்றியெல்லாம், அவ்லியாக்களின் கிருபையை நாடி அன்றாடம் கபுறுகளைத் தரிசிக்கும் கீழ்மட்ட “ஸூஃபி”களான சாதாரண தர்கா வழிபாடு செய்யும் அனேகமான பொதுமக்களுக்குத் தெரியாது.
இஸ்லாமிய மார்க்கத்தில் தாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இவர்கள் இருப்பதோ ஷைத்தானிய மதத்தில் தான் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாது. இந்த உண்மையை உணர்த்தும் விதமாக யாராவது ஏகத்துவவாதிகள் இவர்களுக்கு உபதேசம் செய்தாலும், அவற்றையும் இவர்கள் நம்புவது கிடையாது. காரணம், இவர்களது ஷெய்கு மார்கள் மீது இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவ்வளவு வலுவானது; அசைக்க முடியாது.
உயிரைக் கூட பணயம் வைக்கும் அளவுக்கு இவர்களது ஷெய்கு மார்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன? அல்லாஹ்வின் அனுமதியோடும், அவ்லியாக்களின் சக்தியோடும் இவர்களது ஷெய்கு மார்கள் அவ்வப்போது நிகழ்த்திக் காட்டும் சில அற்புதங்களை வைத்துத் தான் இவர்கள் இந்த ஷெய்கு நாயகங்களை இறைத்தன்மை கொண்டவர்களென்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஷெய்கு நாயகங்கள் செய்து காட்டும் அற்புதங்களில் அனேகமானவை போலி அற்புதங்களாக இருந்தாலும், ஒருசில அற்புதங்கள் உண்மையானவை; மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. இவ்வாறான ஒருசில அற்புதங்களே இந்த ஷைத்தானிய சித்தாந்தங்களை அழியாமல் காப்பாற்றி, இந்த உம்மத்துக்கு மத்தியில் இன்றுவரை நிலைபெறச் செய்திருக்கின்றன. இவ்வாறான அமானுஷ்யமான அற்புதங்களுக்குப் பின்னாலும் ஒளிந்திருப்பது ஒரு சிறிய இரகசியம் தான். அதையும் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விடலாம்.
உண்மையில் இவர்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல் இவர்களது ஷெய்கு நாயகங்கள் செய்து காட்டும் அற்புதங்கள் எதுவும் அல்லாஹ்வின் அனுமதியோடு அவ்லியாக்கள் வாயிலாக செய்து காட்டப்படும் உண்மையான அற்புதங்கள் அல்ல. மாறாக, இவர்கள் சிரமேற்கொண்டு மதிக்கும் ஒவ்வொரு ஷெய்கு நாயகத்துக்கும், இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த சில ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையில் இரகசியத் தொடர்புகள் இருக்கின்றன.
இந்த ஷெய்கு மார் நிகழ்த்தும் அற்புதங்களைச் செய்வது, இவர்களோடு கூடவே இருக்கும் இந்த ஷைத்தானிய ஜின்கள் தாம். உண்மையில், இந்த ஷெய்கு மார்களுக்கும் ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையில் இருக்கும் இந்தத் தொடர்பு கூட ஒரு வகையான ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பினருக்கும் தனித்தனி இலாபம் இருக்கிறது.
ஒருபுறம் இவ்வாறான அற்புதங்களை நிகழ்த்துவதன் மூலம், இவற்றை நம்பி ஏமாறும் பல லட்சக் கணக்கான முஸ்லிம்களைக் குறுகிய காலத்துக்குள் இணைவைப்பாளர்களாகவும், இறைமறுப்பாளர்களாகவும் ஆக்கி, நரகில் தள்ளும் இப்லீஸின் திட்டம் இலகுவாக நிறைவேறுகிறது. ஷைத்தானிய ஜின்களுக்கு இதில் கிடைக்கும் லாபம் இது தான்.
இன்னொரு புறம், ஜின்களின் உதவியோடு இவ்வாறான அற்புதங்களை நிகழ்த்துவதன் மூலம் குறிப்பிட்ட ஷெய்கு நாயகங்கள் மறுமை வாழ்வை முற்றாக இழந்தாலும், இம்மை வாழ்வில் சொர்க்கலோகத்தைப் போன்ற பல சுகபோகங்கள் அவர்களுக்கு இலகுவாகக் கிடைக்கின்றன. காணிக்கைகளாகப் பணம் வந்து காலடியில் கொட்டும்; கடவுளின் ஸ்தானத்தில் வைத்து மக்கள் இவர்களைப் போற்றிப் புகழ்வார்கள்; இவர்கள் ஆசைப்படுவதையெல்லாம் அவர்களே கொண்டு வந்து காலடியில் கொட்டுவார்கள்; திரைமறைவில் விதவிதமான பெண்களோடும், சிறுவர்களோடும் சுகபோகம் அனுபவிக்கும் வாய்ப்புக்களுக்கும் குறைவிருக்காது… இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இவை தாம் இதில் ஷெய்கு மாருக்குக் கிடைக்கும் லாபம்.
இந்த இரகசியங்கள் எதுவுமே அறியாத இவர்களது பக்தர்கள் தான் பாவம். அல்லாஹ் தான் இவர்களது கண்களைத் திறக்க வேண்டும்.
போதும்; இனி மீண்டும் விஞ்ஞானத்துக்கு வருவோம்:
ஏற்கனவே நாம் பார்த்த குவாண்ட்டம் கோட்பாடுகளில் அடிப்படையில் கூட, இந்தப் பிரபஞ்சத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஒளியின் வேகத்தைத் தாண்டிய, பார்வைப் புலனுக்கு எட்டாத சக்திகள் தாம். கண்ணுக்குத் தெரியாத இந்த அபார சக்திகளைப் பற்றி விஞ்ஞானிகள் கூட இன்னும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை. அவர்களுக்கு மத்தியிலேயே இதுகுறித்து இதுவரை கருத்து வேறுபாடுகள் நிலவிக் கொண்டு தான் இருக்கின்றன.
ஒரு சாரார் இந்த வகையான சக்தியை “இருண்ட பொருள்” (Dark Matter) என்று கூறிக்கொண்டிருக்கும் போது இன்னொரு சாரார் இதை “இருண்ட சக்தி” (Dark Energy) என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாதப்படி, இந்த இருண்ட சக்தியின் ஆதிக்கத்தால் தான் இந்தப் பிரபஞ்சமே விரிந்து கொண்டிருக்கிறது.
இந்த இருசாராரின் வாதங்களில் எது சரி, எது பிழையென்பது ஒருபுறமிருக்க, மொத்தத்தில் இரு சாராரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விடயம் தான், மொத்தப் பேரண்டத்தில் 94 சதவீதத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது இந்த இருண்ட சக்திகளே என்ற உண்மை. மிச்சமிருக்கும் 6 சதவீதத்தில் தான் நமது கண்ணுக்குத் தெரியும் மொத்தப் பிரபஞ்சமுமே இருக்கிறது.
பார்வைக்கோ, கருவிகளுக்கோ புலப்படாத இந்த இருண்ட சக்திகளைக் காலத்துக்குக் காலம் வரலாற்றில் ஒவ்வொரு சாராரும் பல்வேறு பெயர்களில் அழைத்திருக்கிறார்கள் என்பதை அவதானிக்க முடிகிறது. உதாரணத்துக்கு “நான்காவது பரிமானம்”, “ஆவி உலகம்”, “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves), “ஈத்தர்” (Aether) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இதில் ஸ்கேலார் அலைகள், மற்றும் ஈத்தர் பற்றி அடுத்த எபிசோடில் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
Chapter 11
சில அண்மைக்கால ஆய்வுகளின் பிரகாரம், “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves) எனும் வகையைச் சார்ந்த சக்தி அலைகள், ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜெனீவா “ஹாட்ரோன் கொலைடர்” (Hadron Collider) இல், 2011 இல் நடத்தப்பட்ட CERN பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட “நியூட்ரினோஸ்” (Neutrinos) எனும் அடிப்படைத் துகள் போன்ற சக்திச்சொட்டுக்கள் கூட ஸ்கேலார் அலைகளின் வகையராவைச் சார்ந்தவை தாம் என்பதே இன்றைய ஒருசில விஞ்ஞானிகளது அனுமானம். இதற்கான காரணமாக ஒருசில நியாயங்களும் முன்வைக்கப் படுகின்றன:
உதாரணத்துக்கு, நியூட்ரினோஸ் எனப்படும் துகள்கள் ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகத்தில் பயணிக்க வல்லவையோ, அதே போல் ஸ்கேலார் அலைகளும் ஒளியின் வேகத்தையும் மிஞ்சிய வேகத்தில் பயணிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவை (Superluminal).
மேலும், எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், அவை அத்தனையையும் இலகுவாக ஊடறுத்துக் கொண்டு பயணிக்கும் ஆற்றல் நியூட்ரினோஸ் எனப்படும் துகள்களுக்கு எப்படி இருக்கின்றதோ, அதே போல் ஸ்கேலார் அலைகளுக்கும் இதே ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தப் பூமியின் ஒரு பக்கத்தால் உள் நுழைந்து, மறு பக்கத்தால், எந்த விதமான சக்தி இழப்பும் இல்லாமல், அதே வீரியத்தோடு அனாயாசமாக வெளியேறும் அளவுக்கு ஸ்கேலார் அலைகளது சக்தி அபாரமானது.
ஸ்கேலார் அலைகள், மின்காந்த அலைகளின் வகையறாவைச் சேர்ந்த அலைகள் அல்ல; மாறாக எந்த நிலையிலும் சக்தியிழப்பை எதிர்கொள்ளாத “pure zero point energy” எனும் வகையைச் சார்ந்த சக்தியாலானவை.
சாதாரண கண்களுக்கோ, அல்லது சாதாரண தொழினுட்பக் கருவிகளுக்கோ இந்த அலைகள் புலப்படாவிட்டாலும், இவ்வாறான சக்தி அலைகள் தாம் இந்தப் பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன என்ற உண்மை மட்டும் சில பரிசோதனைகள் மூலம் இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்கேலார் அலைகளுக்கு இருக்கும் ஆற்றல்களுள் ஒன்று தான், நமது முப்பரிமான உலகைத் தாண்டிய, மறைவான நான்காவது பரிமானங்களினூடாகவும் இவை பயனிக்கக் கூடியவை என்பது.
அதாவது, ஜின்களின் மறைவான பரிமாண உலகிலிருந்து, மனிதர்களது பரிமாண உலகிற்கும், மனித பரிமாண உலகிலிருந்து ஜின்களின் பரிமாண உலகிற்கும் இடையில் மாறி மாறிப் பயணிக்கும் ஆற்றல் இவ்வாறான சக்தி அலைகளுக்கு உண்டு.
இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு இன்னும் கொஞ்சம் விளக்கமாக நமது மொழி நடையில் பார்க்கலாம்:
மனிதர்களாகிய நாம் வாழும் உலகமானது, நீளம், அகலம், உயரம் எனும் மூன்று பரிமாணங்களுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பிரபஞ்சம் என்பது, இந்த மூன்று பரிமாணங்களோடு மட்டுப் படுத்தப் பட்டதல்ல. இந்த மூன்று பரிமாணங்களையும் தாண்டி, நான்காம், ஐந்தாம் பரிமாணங்கள் என்று இன்னும் பல பரிமாணங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கின்றன.
ஆனால், மனிதர்களாகிய நமது புலன்களுக்கோ, அறிவுக்கோ முப்பரிமானங்களைத் தாண்டிய ஏனைய எந்தப் பரிமாணங்களும் எட்டுவதில்லை. இவ்வாறான பரிமாணங்களைத் தான் நமது பாஷையில் மறைவான உலகம் என்று நாம் அழைக்கிறோம்.
மனிதர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கென்று அல்லாஹ் இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று பரிமாணங்களை மட்டுமே ஒதுக்கியிருக்கிறான். இந்த எல்லைக்குள் மட்டுமே நம்மால் முழுச் சுதந்திரத்தோடு தொழிற்பட முடியும். இதே போல், நான்காம், ஐந்தாம் பரிமாணங்கள் போன்ற இன்னும் சில பரிமாணங்களை ஜின்களுக்கென்றும், வானவருக்கென்றும் அல்லாஹ் ஒதுக்கியிருக்கிறான். அவற்றில் தான் அவர்கள் சுதந்திரமாக தொழிற்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு தான் அல்லாஹ் ஒரே உலகத்துக்குள், பல உலகங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
ஜின்கள், மற்றும் வானவர்கள் சஞ்சரிக்கும் பரிமாணங்களினது அதிர்வெண் (frequency) வீதங்களானது, நமது மனித பரிமாணங்களது அதிர்வெண்களை விட அதிகமானவை; ஒளியின் வேகத்தையும் விட அதிவேகம் கொண்டவை.
இதனால் தான், ஒளியின் வேகத்தை விடக் குறைவான ஆற்றல் உடைய நமது கண்களால், ஒளியின் வேகத்தையும் தாண்டிய ஜின்களது உலகைப் பார்க்க முடியாமல் இருக்கிறது. அதே நேரம், வானவர்கள், ஜின்கள் ஆகிய அவர்களது வேகத்தையும் விட நமது பரிமாணத்தின் வேகமும், ஆற்றல்களும் குறைவானவை என்பதால், நமது உலகத்தை அவர்களால் இலகுவாகப் பார்க்க முடிகிறது.
இந்த உண்மையை உறுதிப்படுத்தும் விதமாகவே பின்வரும் குர்ஆன் வசனம் ஆதாரமாக அமைந்திருக்கிறது:
நிச்சயமாக, அவனும் (ஷைத்தானும்), அவனது கூட்டத்தாரும், நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)
இவ்வாறு, ஒரே உலகத்துக்குள்ளேயே, சக்தியின் அடிப்படையில் பரிமாணங்களால் வேறுபட்ட இரண்டு தனித்தனி உலகங்களை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் விதமாகவே அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான்.
இந்த இரண்டு உலகங்களிலும் தான் மனிதர்களாகிய நாமும், ஜின்களும் இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறுபட்ட இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் பரவலாக வியாபித்திருப்பது, ஒளியின் வேகத்தையும் மிகைத்த, ஸ்கேலார் அலைகளைப் போன்ற இருண்ட சக்திகள் தாம்.
நமது முப்பரிமான உலகிலிருந்து, ஜின்கள் சஞ்சரிக்கும் பரிமாணத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால், ஒளியின் வேகத்தையும் மிஞ்சிய ஆற்றலோ, அல்லது தொழினுட்பமோ அத்தியாவசியம். இந்த இரண்டுமே மனிதர்களிடம் இதுவரை இல்லை. எனவே தான் ஜின்களின் பரிமாணத்துக்குள் மனிதர்களால் ஊடுறுவ முடியவில்லை.
அதே நேரம், இந்த ஆற்றல், மற்றும் தொழினுட்பம் ஆகிய இரண்டும் ஜின்களிடம் இருக்கின்றன. இதனால் தான் ஜின்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் நமது முப்பரிமாண உலகுக்குள் அவர்களால் இலகுவாக ஊடுறுவ முடிகிறது. இது பற்றிய மேலதிக விளக்கங்கள் தகுந்த ஆதாரங்களோடு பிந்திய தொடர்களில் அலசப்படவிருக்கின்றன. இப்போதைக்கு இது பற்றிய அறிமுகம் போதுமென்று கருதுகிறேன். மீண்டும் ஸ்கேலார் அலைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
உலகின் தொழினுட்ப வரலாற்றில் ஒரு புரட்சியையே தோற்றுவித்த தலைசிறந்த விஞ்ஞானியாக இன்று பலராலும் போற்றப்படும் “நிக்கோலா டெஸ்லா” (Nikola Tesla) என்பவர், 1900 – 1943 காலப்பகுதிகளில், சக்தி அலைகளை அடிப்படையாகக் கொண்ட பல விசித்திரமான ஆய்வுகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
டெஸ்லாவின் ஆய்வுகளில் அனேகமானவை ஸ்கேலார் அலைவரிசைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருந்தன. ஆனால், தான் ஆய்வு செய்து கொண்டிருந்ததும், பரிசோதனைகள் செய்து கொண்டிருந்ததும் ஸ்கேலார் அலைகளைத் தான் என்ற உண்மை அப்போது அவருக்கே தெரிந்திருக்கவில்லை.
அதாவது, தனது புரிதலையும் மீறிய ஏதோ ஒருவிதமான அபாரமான சக்தி அலைகளையே தான் ஆய்வு செய்து கொண்டிருந்ததை டெஸ்லாவினால் உணர முடிந்தது; ஆனால், அந்த சக்தியின் உண்மையான வடிவம் என்னவென்பதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு அவரது தொழினுபத்துக்கு அன்று ஆற்றல் இருக்கவில்லை. எனவே, தனது சிந்தனையைக் கொண்டு, இது என்ன சக்தியென்பதை அவரால் அனுமானிக்க மட்டுமே முடிந்தது. இதன் அடிப்படையில், டெஸ்லா இந்த அலைவரிசைகளை “ஈத்தர்” (Aether) என்று தான் குறிப்பிட்டார்.
“ஈத்தர்” என்பது பண்டைய கிரேக்கர் காலத்திலிருந்து புழக்கத்திலிருந்த ஒரு பெயர். கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரபஞ்ச சக்தி என்ற அடிப்படையில் தான் பண்டைய காலம் முதல் அனைவரும் ஈத்தர் என்பதை விளங்கி வைத்திருந்தார்கள்.
மத்தியகால “அல்கெமி” ஆய்வாளர்கள் கூட இந்த “ஈத்தர்” விடயத்தில் அதிக ஆர்வத்தோடு பல ஆய்வுகளை மேற்கொண்டார்கள்; ஆனால், அவர்களது ஆய்வுகள் எதுவும் வெற்றியடையாத நிலையில் இடையில் கைவிடப் பட்டன.
பண்டைக்கால புரானங்களில் கூட இதே பிரபஞ்ச சக்தி இன்னொரு பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது தான் “ஆகாஷா” (ஆகாயம்) என்பது. இந்து மத புராணங்களின் படி, இந்தப் பிரபஞ்சம் என்பது ஐந்து வகையான பூதங்களாலேயே (சக்திகளால்) உருவாக்கப் பட்டிருக்கிறது என்பது தான் அவர்களது கோட்பாடு. நீர், நிலம், நெருப்பு, காற்று என்ற கண்ணுக்குத் தெரியும் நான்கு பூதங்கள் போக, வளி மண்டலம் தாண்டிய வின்வெளியின் சக்தி மொத்தத்தையும் ஆகாயம் என்ற ஐந்தாவது பூதமாகவே புராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஆக மொத்தத்தில் “ஆகாயம்” என்று ஆதிகாலத்தில் குறிப்பிடப்பட்டதும், “ஈத்தர்” என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டதும், ஸ்கேலார் அலைகள் என்று இன்றைய விஞ்ஞானிகள் குறிப்பிடுவதும் எல்லாமே ஒளியின் வேகத்தைத் தாண்டிய, பிரபஞ்சத்தின் இருண்ட சக்தி அலைகளைத் தான்.
இவ்வாறான சக்தி அலைகளுள் ஒருசில அலைவரிசைகள் நம்மைச் சூழவுள்ள இந்த முப்பரிமான உலகிலும் பரவலாக வியாபித்திருக்கின்றன. மனித கண்களுக்கோ, சாதாரண மனித கருவிகளுக்கோ இவை புலப்படாவிட்டாலும், தொழினுட்பத் தேவைகளுக்கு மனிதர்களால் அறுவடை செய்துகொள்ள ஏதுவான வடிவத்தில் இவற்றில் ஒருசில அலைவரிசைகள் இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒருசில சக்தி அலைவரிசைகளை அடிப்படையாகக் கொண்டு தான் நிக்கோலா டெஸ்லாவின் பல ஆய்வுகளும், பரிசோதனைகளும் அமைந்திருந்தன. தான் ஆய்வு செய்து கொண்டிருந்த சக்தி அலைகள் எந்த வகையைச் சார்ந்தவையென்று, டெஸ்லாவினால் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறோர் உலகத்திலிருந்து வந்து சேரக் கூடிய ரேடியோ அலைவரிசைகளைப் போன்ற ஏதோ ஒருவிதமான அலைவரிசைகள் தாம் இவை என்று மட்டுமே டெஸ்லா இதைப் புரிந்து வைத்திருந்தார்.
இருந்தாலும், இந்த அலைவரிசைகள் மூலம் மனித சமூகத்துக்குப் பல பயனுள்ள தொழினுட்பங்களை உருவாக்கலாம் என்ற உண்மையை மட்டும் அவரது பரிசோதனைகளில் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் டெஸ்லா சில பாரிய மக்கள் நலன்புரித் திட்டங்களை முன்வைத்தார்.
உதாரணத்துக்கு, எந்தவிதமான கம்பிகளும் இல்லாமல் நிரந்தரமாக முழு உலகுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், மற்றும் பட்டரியே இல்லாமல் ஓடக்கூடிய வாகனங்களைத் தயாரிக்கும் திட்டம் போன்ற ஒருசில ஆக்கபூர்வமான திட்டங்களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான பல புரட்சிகரமான தொழினுட்பத் திட்டங்களை வெறும் திட்டங்களாக மட்டும் டெஸ்லா முன்வைக்கவில்லை. மாறாக, தனது திட்டங்கள் நூற்றுக்கு நூறு வீதம் நடைமுறை சாத்தியமானவை என்பதைப் பல பரிசோதனைகள் மூலம் செயல் வடிவிலும் செய்து காட்டினார். எந்தவிதமான கம்பிகளின் தொடர்பும் இல்லாமல் பல மின்விளக்குகளை ஏககாலத்தில் எரியவைத்து நிரூபித்துக் காட்டினார். அதே போல் பட்டரியே இல்லாமல் ஒரு காரை வடிவமைத்து, அதை நெடுந்தூரத்துக்கு ஓட்டியும் காட்டினார்.
ஆனால், இந்தத் திட்டங்கள் எதற்கும், அன்றைய அமெரிக்க அரசாங்கத்தைத் தம் சட்டைப் பைக்குள் வைத்திருந்த ஷைத்தானிய இலுமினாட்டிகள் ஒத்துவரவில்லை. இவ்வாறான தொழினுட்பங்கள் மூலம் மனித சமூகம் பயனடைவதற்குப் பதிலாக, மனித இனத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே என்றென்றும் வைத்துக் கொள்ளும் தமது திட்டங்களுக்கு இந்தத் தொழினுட்பத்தையும் ஓர் இரகசிய ஆயுதமாகப் பயன்படுத்துவதையே ஷைத்தானியர்கள் விரும்பினார்கள்.
எனவே, டெஸ்லாவின் இந்தத் திட்டங்கள் எதற்கும் அரச அங்கீகாரம் கிடைக்கவில்லை. மாறாக, டெஸ்லா மரணித்த பின், அவரது தொழினுட்ப ஆய்வுகள் அனைத்தும் இரகசியமாகப் பதுக்கப் பட்டன. பதுக்கப்பட்ட இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பிற்காலத்தில் மனித சிந்தனையைத் தமது தேவைக்கேற்பக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலுமினாட்டிகளது வட்டாரத்தில் ஒரு புதிய விஞ்ஞானம் தோற்றமெடுத்தது.
இந்தப் புதிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நாசகார செயல்திட்டங்களை ஷைத்தானியர்கள் வடிமைக்கலானார்கள். “மனித ஜீனோம் செயல்திட்டம்” (Human Genome Project), மற்றும் HAARP (High Frequency Active Auroral Research Program) ஆகிய இரண்டு செயல்திட்டங்களும் தாம் இவை. இது பற்றி அடுத்து பார்க்கலாம்.
Chapter 12
“மனித ஜீனோம் செயல்திட்டம்” (Human Genome Project), மற்றும் HAARP (High Frequency Active Auroral Research Program) என்ற பெயர்களில் இரண்டு வகையான செயல்திட்டங்கள் ஏக காலத்தில் (1990ம் ஆண்டு) இலுமினாட்டிகளால் ஆரம்பிக்கப்பட்டன.
மனித ஜீனோம் செயல்திட்டத்தின் மூலம் மனித மூளை சிந்திக்கும் பொறிமுறை பற்றிய ஆய்வுகள் மனித DNA மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஆய்வுகளுக்குத் தேவையான DNA தரவுகளையும், மற்றும் ஒவ்வொரு மனிதனது சிந்தனைக்கும், அவனது DNA இற்கும் இடையிலுள்ள தொடர்புகள் பற்றிய தரவுகள் போன்ற தகவல்களையும் இவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் பணியில் சில நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தப் பணியில் கூகுல் (Google) நிறுவனம் ஷைத்தானியர்களது பிரதான அடியாளாக இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதே நேரம் இன்னொரு பக்கம் HAARP செயல்திட்டங்கள் மூலம் மேலும் சில நாசகார ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன.
வளி மண்டலத்தின் சீரான தன்மையைக் குழப்பியடிப்பதன் மூலம் வானிலை மாற்றங்களை (Weather Modification) ஏற்படுத்துதல்;
ELF / VLF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள் மூலம் செயற்கைப் பூகம்பங்கள் / சுனாமி போன்றவற்றைத் தோற்றுவித்தல்;
ELF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள், மற்றும் ஸ்கேலார் அலைகள் போன்றவற்றின் மூலம் மனித மூளையின் சிந்தனை அலைவரிசைகளின் ஒழுங்குகளைக் குலைத்தல் போன்ற ஒருசில செயல்திட்டங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மனித ஜீனோம் செயல்திட்டம், மற்றும் HAARP ஆகிய இந்த இரண்டு செயல்திட்டங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், மனித சிந்தனையைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தான் இலுமினாட்டிகளது இறுதி நோக்கம். இந்த நோக்கத்தோடு தான் இன்று பல ஆய்வுகளும், செயல்திட்டங்களும் உலகளாவிய ரீதியில் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
உண்மையில் இவ்வாறான செயல்திட்டங்கள் மூலம் மனித சிந்தனையைக் கட்டுப்படுத்துவது இலுமினாட்டிகளால் சாத்தியமா? அவ்வாறு சாத்தியப் பட்டாலும், அது எந்த அளவுக்கு சாத்தியப்படும்? என்பன போன்ற ஒருசில கேள்விகள் இந்த இடத்தில் சிலருக்கு எழலாம். இந்தக் கேள்விகளுக்கான முழுமையான, நிச்சயமான பதிலைச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை.
ஆனால், மனித சிந்தனையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தான் ஷைத்தானியர்கள் இன்று பல செயல்திட்டங்களில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியும். இவர்களின் முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது பற்றி அல்லாஹ்வே அறிவான்.
அதேநேரம் இவர்களது செயல்திட்டங்கள் வெற்றிகரமாக அரங்கேறுவதற்கு விஞ்ஞானபூர்வமான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று கேட்டால், நிச்சயமான இதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன என்பது தான் எனது பதில். இது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமானது என்பதைப் பின்வரும் தகவல்கள் மூலம் நீங்களே புரிந்து கொள்ளலாம்:
நமது உடற்கலங்களின் அடிப்படைக் கட்டமைப்புக்களாக இருக்கும் DNA என்பது ஒரு தகவல் களஞ்சியம் என்று தான் இதுவரை நம்மில் அனேகமானோர் விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால், நமது DNA என்பது ஒரு தகவல் களஞ்சியம் மட்டுமல்ல; அதையும் தாண்டிய பல இரகசியங்கள் உள்ளே இருக்கின்றன.
நமது உடலிலும், மூளையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் உடற்கலங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையிலும், தம்மைச் சுற்றி இருக்கும் சுற்றுச் சூழலுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்குக் கூட DNA ஐத் தான் பிரதானமாக உபயோகிக்கின்றன.
அதாவது, உடற்கலங்கள் ஒன்றோடொன்றும், சுற்றுச் சூழலில் இருக்கும் சக்திச் சொட்டுக்களோடும் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு உபயோகிக்கப்படும் ஒரு “சக்திச்சொட்டு அண்ட்டனா” (Quantum Antenna) ஆகவும் நமது DNA தான் தொழிற்படுகிறது.
இந்தத் தொடர்பாடல்கள் (communication) “ஸ்கேலார்” அலைவரிசைகளில் தான் பிரதானமாக நடைபெறுகின்றன.
மேலும், ஒவ்வொரு மனிதனது DNA யும் அவனது கைரேகையைப் போல் தனித்துவமானவை. அவரவருக்கென்று தனித்துவமான ஓர் அதிர்வெண்ணில் தான் அவரவர் DNA யின் சக்திச்சொட்டுக்கள் அதிர்கின்றன.
ஒரு மனிதனது DNA இந்த அதிர்வெண்ணைச் சரியாகக் கண்டுபிடித்து, அதே அலைவரிசைக்குப் பொருந்தும் விதத்தில் அவன் மீது “ஸ்கேலார்” அலைகளைச் செலுத்துவதன் மூலம், அவனது சிந்தனையை சில கருவிகள் மூலம் தொலைவிலிருந்து கூட மாற்றியமைப்பதற்கான முகாந்திரங்கள் நிறையவே இருக்கின்றன.
இந்த அடிப்படையில் மனித சிந்தனையைத் தமது விருப்பத்துக்கேற்பக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தான் இன்று பல இரகசிய ஆய்வுகள் இலுமினாட்டிகளால் மேற்கொள்ளப் படுகின்றன.
இவர்களது இந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை; ஓரளவு இதுவரை வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தக் கருவிகளின் வீரியத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக இன்றைய மனிதர்களது உடல்களிலும் திட்டமிட்டு பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கென்று தனியாக வேறு பல செயல்திட்டங்கள் ஏற்கனவே அமுலில் இருக்கின்றன. அவற்றுள் ஒருசிலதைச் சுட்டிக் காட்டுகிறேன்:
செயல்திட்டம் 1:
நமது இரத்தத்தில் எவ்வளவு அதிகம் பாரமான உலோகங்கள் (Mercury, Aluminium, போன்றவை) கலந்திருக்கிறதோ, அவ்வளவுக்கு இவர்களது கருவிகளின் வீரியம் அதிகரிக்கும். கையடக்கத் தொலைபேசியின் சிக்னல் வீரியம் அதிகரிப்பது போல் இதைப் புரிந்து கொள்ளலாம். இதனால் தான் நமது உணவு, மருந்து மாத்திரைகள் போன்ற அத்தனையிலும் இன்று பாரமான உலோகங்கள் திட்டமிட்டுக் கலக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்றும் தடுப்பூசிகளில் கூட அலுமினியம், மேர்குரி போன்ற சில பாரமான உலோகங்கள் திட்டமிட்டுக் கலக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
செயல்திட்டம் 2:
அதிகரித்த செல்ஃபோன் உபயோகங்களின் மூலமும் இந்த சிக்னல் தொடர்பு இன்னும் வீரியப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சமகால செல்ஃபோன்களில் இன்று மேலதிகமாக சேர்க்கப்பட்டுக் கொண்டு வரும் சக்தி அலைகளை அடிப்படையாகக் கொண்ட பல தொழினுட்பங்களைக் குறிப்பிடலாம்.
செயல்திட்டம் 3:
அதிகமதிகம் மக்களை இசைக்கு அடிமையாக்குவதன் மூலமும் இந்தச் செயல்திட்டங்களின் வீரியம் இன்னும் அதிகரிக்கிறது. இசை என்பது சாதாரண சத்தம் எனும் சக்தியின் ஒரு வெளிப்பாடாக இருந்தாலும், குறிப்பிட்ட சுருதியில் அது இருப்பதால், காதுகளை வந்து எட்டும் போது அதன் அதிர்வெண்கள் மூளையின் சிந்தனைத் திறனோடு சம்பந்தப்பட்ட சில அதிர்வு அலைகளை செயலிழக்க வைக்க வல்லது.
இசை மூலம் பிரதானமாக இது எப்படி சாதிக்கப்படுகிறதென்றால்… மனித மூளையின் சிந்திக்கும் பொறிமுறையை சிதைக்கும் சக்திகள் அதன் சிந்தனை வட்டத்துக்குள் ஊடுருவ விடாமல் பாதுகாக்கும் விதமாக, சில சக்தி அலைவரிசைகள் காவல் அரண்கள் போல் நமது சிந்தனை அலைவரிசைகளைச் சுற்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இசை மூலம் பிறப்பிக்கப்படும் பிரத்தியேக ஒலி அலைகள், காவல் அரண்களாக செயல்படும் இந்த அலைவரிசைகளைக் குழப்பியடித்து, செயலிழக்கச் செய்ய வல்லவை. இதன் மூலம் நம் சிந்தனைத் திறனின் பாதுகாப்பு தகர்க்கப்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின், மூளையின் சிந்தனை எல்லைக்குள் தீய சக்திகளுக்கு சுலபமாக ஊடுருவலாம்.
இந்த உண்மைகளை ஏற்கனவே அறிந்ததால் தான் அன்றே இஸ்லாம் இசையை “ஷைத்தானின் கருவிகள்” என்று கூறித் தடை செய்திருக்கிறது என்பது புரிகிறது. இதைப் பின்வரும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலம் விளங்கலாம்:
ஆதாரம் 1:
“அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.” – (அஹ்மத் 2494)
இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இசையை, மதுவைப் போன்ற போதையூட்டக்கூடிய ஒரு விசயம் என்று குறிப்பிடுகிறார்கள். இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், ஒரு மனிதனது சிந்தனையை மழுங்கடித்து, மாற்றியமைக்கும் சக்தி மதுவுக்கு இருப்பது போல், இசைக்கும் இருக்கிறது என்று தான் பொருள்.
ஆதாரம் 2:
“ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.
அவர்கள் ‘(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?’ என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, ‘எனக்குக் கேட்கவில்லை’ என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்’ என்று கூறினார்கள்.” – (அஹ்மத் 4307)
இந்த இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து நோக்கும் போது இசை என்பது எவ்வளவு பாரதூரமான ஒரு ஷைத்தானிய சக்தி என்பது விளங்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காதில் விரலை வைத்து அடைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டே ஓடினார்கள் என்றால், இசையின் பாரதூரம் எத்தகையது என்பதை நம்மால் உணரலாம்.
இன்றைய உலக நடப்புகளைப் பார்க்கும் போதும் இந்த உண்மையை உணரலாம். ஷைத்தானின் ஊழியர்களாக இருக்கும் இலுமினாட்டிகளின் அனேகமான முகவர்கள், ஏனைய துறைகளையும் விட இசைத் துறையில் தான் அதிகம் கவனம் செலுத்திக் காலூன்றியிருக்கிறார்கள்.
இவ்வாறு நாளுக்கு நாள் ஷைத்தானியர்களது நோக்கம் படிப்படியாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இறுதியில் தஜ்ஜால் வெளிப்படும் போது இந்த செயல்திட்டம் பூரண கட்டத்தை அடைந்திருக்கும். இவ்வாறான பல தொழினுட்பங்களின் மூலம் தான் பெரும் திரளான மக்களின் சிந்தனையை தஜ்ஜால் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வழிகெடுக்கப் போகிறான். ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொம்மைகளை இயக்குவதைப் போல் பெரும்திரளான மக்களை அவனது கைப்பாவைகளாக இயக்கப் போகிறான். இது தான் நம்மில் அனேகமானோர் இதுவரை கவனிக்கத் தவறிய உண்மை.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்:
தஜ்ஜால் வந்து நிகழ்த்தப் போகும் அதிசங்களில் அனேகமானவை உண்மையில் அதிசயங்கள் அல்ல; அவற்றில் அனேகமானவை தொழினுட்பங்கள் மட்டுமே. அதாவது, ஷைத்தானின் உதவியோடும், விஞ்ஞான அறிவைக் கொண்டும் இலுமினாட்டிகளால் வடிவமைக்கப் படும் சில தொழினுட்பங்கள் மட்டுமே.
ஆனால், இந்த உண்மையைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு “படித்த முட்டாள்களாக” தான் அனேகமான மக்கள் அப்போது இருப்பார்கள்.
பெரும்பாலான மக்களை இவ்வாறான “படித்த முட்டாள்”களாக மாற்றியமைக்கும் இலக்கை நோக்கித் தான் ஷைத்தானியர்களது சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Programs) அனைத்தும் இன்று வடிவமைக்கப் படுகின்றன. இந்த இலக்கை அடைந்து கொள்வதிலேயே ஷைத்தானிய இலுமினாட்டிகள் மும்முரமாக செயல்படுகின்றனர். இதுவரை இந்தத் திட்டங்களில் ஓரளவு வெற்றி கண்டும் விட்டார்கள். நாளுக்கு நாள் மனிதர்களில் அனேகமானோர் படித்த முட்டாள்களாகத் தான் இன்று பரிணமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படித்த முட்டாள்களை உருவாக்கும் பாரிய செயல்திட்டத்தின் இன்றைய வடிவங்கள் தாம்: மடமையைப் போதிக்கும் நவீன கல்வித்திட்டம், போலியான ஒழுக்கவியல் நெறிகள், பொய்யையே பிழைப்பாகக் கொண்ட மீடியாக்களின் ஆதிக்கம், பொய்யை அடிப்படையாகக் கொண்ட இன்றைய மருத்துவ சித்தாந்தம்… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தப் பாரிய சதி வலைப் பின்னலிலிருந்து தப்புவதற்கு நாமே நினைத்தாலும், நம்மால் மட்டும் அது முடியாது. அல்லாஹ்வின் நேரடி உதவி இல்லாமல் இதிலிருந்து விடுதலை கிடைக்காது. மறுமை நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த ஃபித்னா யுகத்தில் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை அடைத்து வைப்பதற்காக ஷைத்தானியர்கள் வடிவமைக்கும் இருள் சிறை தான் இது.
அல்லாஹ்வின் உதவி கிடைக்கப்பெறும் ஒருசிலரைத் தவிர மற்ற எவருக்கும் இந்தச் சிறையிலிருந்து இப்போதைக்கு விடுதலை கிடைக்கப் போவதில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து தஜ்ஜாலைக் கொன்ற பிறகு தான் இந்தச் சிறைச்சாலை முற்றாகத் தகர்க்கபட்டு, மொத்த மனித சமூகத்துக்கும் பூரண விடுதலை கிடைக்கும். அது வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இத்தோடு இந்த முதலாவது தொடர் நிறைவடைகிறது. இந்த நீண்ட பீடிகையை சொன்னதன் நோக்கம், இதைத் தொடர்ந்து அலசப்பட இருக்கும் இரண்டாம், மூன்றாம், நான்காம் தொடர்கள் முழுமையாகப் புரிய வேண்டும் என்பது தான்.
இங்கு சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பிரபஞ்சத்திலிருக்கும் பல அமானுஷ்ய சக்திகள் பற்றிய ஆய்வுகளாகத் தான் இன் ஷா அல்லாஹ் இனி வரும் தொடர்கள் இருக்கும். அவை இலகுவாகப் புரிய வேண்டும் என்றால், இந்த அறிமுகம் கட்டாயமாக இருக்கிறது.
இன் ஷா அல்லாஹ் அடுத்த பாகம், இலுமினாட்டிகள் மனித குலத்துக்கு எதிராக உபயோகிக்கும் இந்த இரகசிய விஞ்ஞான அறிவுகளை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? என்ற கேள்விக்கான விடையைக் அலசுவதாகவே இருக்கும்.
இதன் நிறைவுகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னைச் சாரும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
– அபூ மலிக்
இன் ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்
source: http://jinnseries01.blogspot.in/