நான் ஏன் (மனம்) மதம் மாறினேன்?
ஆந்திர எல்லைக்கும் தமிழக எல்லைக்கும் நடுவில் அந்த அழகான ஆறுபடை வீடுகளில் ஒன்றான மலைக்குன்று மீது இந்துக்கடவுள் முருகன் ஆலயம். கோயில் நிர்வாகத்தை பாரம்பரியமாக செய்து வரும் சிவலிங்க முதலியாரின் பேத்தி எட்டு வயது சிறுமி மாலினி.
17.5.1972 வருடம் பிறந்தவள்.
நான் ஏன் இஸ்லாம் ஏற்றேன்?
விடியாத அந்த அதி காலை நேரம்..எட்டு வயது சிறுமி தலையில் குளிர்ந்த கிணற்று நீரை வாரி இறைத்து தானும் குளித்து உடலெங்கும் பட்டை பட்டை திருநீறு பூசி எனக்கும் பட்டை போட்டு ஈரமான உடையுடன் தாத்தாவின் கையை பிடித்தபடி மலைக்கோவிலை நோக்கி பறப்பது போல நடப்பார் அவர் வேகத்துக்கு ஓடினாள் அந்த சிறுமி. முருகனை தூக்கத்தில் இருந்து திருப்புகழ் பாட்டு பாடி எழுப்பும்ப ணி எங்கள் இருவருக்கும்.
வழியில். அதிகாலையிலேயே பள்ளிவாசலை சுத்தம் செய்து பாங்கு சொல்ல ஓடுவார் தாத்தாவின் உயிர் நண்பர் ரசூல் பாய் தாத்தா.
இவர்கள் என்ன பேசினார்கள். கேட்போம்.
டேய் லிங்கம் மெதுவா போடா.. டேய்…ரசூலு… உடம்புக்கு முடில இல்ல..வேற யாரவது அனுப்புரது.. அவன் காத்திருப்பான் டா..
எட்டு வயது சிறுமி மாலினி இப்போது கேட்கும் அந்த கேள்வி அவள் சின்ன இதயத்தில் ஓர் விதை ஆனாது.. யார் காத்து இருப்பாங்க ரசூல் தாத்தா? ”அல்லா” டா கண்ணு.. ”அல்லா” ..வா…?! அவங்க எங்க இருப்பாங்க தாத்தா???
அதோ அந்த அடி வானத்தில.. நிமிர்ந்து அந்த மூன்றறை மணி பின்னிரவில்.. சிவந்த பனி படர்ந்த அடிவானம் நோக்கிய அந்த ஒரு கணம்.. துடித்து பளிரீட்ட மின்னல் ஒன்று கண்டாள்.
நான் பாத்தேன்.. இப்ப.. என்ன கண்ணு பாத்த உங்க ”அல்லா”வ பாத்தேன்.. வெளிச்சமா மின்னிச்சு.. இரண்டு தாத்தாக்களும் சிரித்து ஓய்ந்து.. ஆளுக்கொரு திசையில் சென்றனர்.
அந்த எட்டு வயது சிறுமிக்கோ…கண்கள் அடிவானிலேயே லயித்து போனது. நான் இங்கயே பிரகாரத்தில் இருக்கேன். நான் பாட வரல. நீ போ தாத்தா.. ”அல்லா… அல்லா..” என மனதுக்குள் பல முறை சொல்லி சொல்லி பார்த்தது நினைவில் உள்ளது.
அன்றிலிந்து பல நாள் அடிவானம் காண அதிகாலை மலை மீது ஓடோடி வந்தும் அந்த மின்னல் வரவே இல்லை. ”அல்லாஹ்” யார் அவன்? அவனைத்தேடிய என் பயணம் அங்கு துவங்கியதை நான் எப்படி சொல்வேன்…
எதற்காக மதம் மாறிவிட்டாய்? பைத்தியமா உனக்கு? துலுக்கனை காதலித்து விட்டாயா…? சரியா வருமா மாலினி…? உனக்கு முஸ்லிம் பெண்கள பத்தி தெரியாது ஏத்துக்க மாட்டாங்க.. தீவிரவாதிங்க இருப்பாங்க… என சமூகமும் யார் தாவா செய்தார்கள்.. டாக்டர் ஜாகிர் நாயக்???? என் பல முஸ்லிம்களும் கேட்க என்ன சொல்வேன்.. சொல்லுங்களேன்.
source: http://jaleela-duwa.blogspot.in/2016/05/blog-post_22.html