Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மரணம் – வெறுக்க வேண்டிய ஒன்றா?

Posted on May 5, 2017 by admin

மரணம் – வெறுக்க வேண்டிய ஒன்றா?

[ உண்மையில் எவர் மரணத்தை படிக்கின்றாரோ, புரிந்து கொள்கின்றாரோ அவர் வாழ்வை புரிந்து கொள்கின்றார். ]

மனிதன் விரும்பாத ஒரு விஷயம். பிறர்க்கு வரும்போது ஆதங்கம் படும் மனிதன். தனக்கும் வரப்போகிறதே என்று எண்ண மனம்வருவதில்லை.

நெஞ்சுவலியை லேசாக உணரும்போதோ, பயணம் செய்யும் வாகனம் தடுமாறும்போதோ மரண பயம் தொற்றிக்கொள்கின்றது. பிரபலமான மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரிடம்,

“மரணத்தை பற்றியும் அதன் பிறகுள்ள வாழ்வை பற்றியும் என்ன நினைக்கிறீங்க?”

“ஒன்றுமில்லை”

சில நேரங்களில் மனிதன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறான். கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவிஷயத்தை தவிர. இந்த எழுத்தாளரை பாருங்க இவருடைய அறிவு ஃபேமஸை, காசு பணத்தை வாங்கி தந்ததே தவிரவெறொன்றும் உபயோகமில்லை. உண்மையில் இது அறிவே இல்லை. இவர்கள்தான், “எங்களுக்கு அறிவு இருந்திருந்தால்இப்படி கைசேதப் பட மாட்டோம்” என்று மறுமையில் புலம்புவார்கள். நாம் பல நேரங்களில் இப்படி இருக்கின்றோமா?

வாழ்வை நம் மனம் விரும்பும் அளவுக்கு, நம் மனம் லயிக்கும் அளவுக்கு மரணத்தை ஏன் விரும்பவில்லை?. மரணத்தைநோக்கிய விஷயத்தில் ஏன் நம் மனம் லயிக்கவில்லை? வாழ்வை, மரணத்தை பற்றி எத்தனையோ, கருத்துக்கள் தத்துவங்கள்முன் வைக்கப்பட்டு மனித உள்ளத்தை மரணிக்க செய்திருக்கின்றதே தவிர. மன அமைதியை வழங்கவில்லை. ஆனால்,இஸ்லாம் தனக்கே உரிய எளிமையான பாணியில் மரணத்தை பற்றிய உயர்ந்த கருத்தை முன்வைக்கிறது.

உண்மையில் எவர் மரணத்தை படிக்கின்றாரோ, புரிந்து கொள்கின்றாரோ அவர் வாழ்வை புரிந்து கொள்கின்றார். “மரணத்தைபடைத்தோம். வாழ்வையும் படைத்தோம்” என்று குர்ஆன் பேசுகின்றது. மனிதனே கொஞ்சம் நின்று குர்ஆன் பேசுவதை கேள்.

வாழ்வு தரப்பட்டுவிட்டதே என்று ஆர்ப்பரித்து அழிச்சாட்டியம் செய்யாதே. மரணம் நிர்ணயிக்கப்பட்டதால் வாழ்வுதரப்பட்டிருக்கின்றது என்ற யதார்தத்தை புரிந்து கொள். எல்லோரும் வாழ்விலிருந்து மரணத்தை பார்க்கின்றார்கள். இஸ்லாம்மரணத்திலிருந்து வாழ்வை படிக்க சொல்கின்றது. படிப்புதானே செயல்படுவதற்கான ஆரம்பம். எல்லோரும் மரணத்தை ஆககடைசியில், “வரும்போது பார்த்துக் கொள்வோம்” என்று விட்டுவிடுகின்றார்கள். ஆனால் இஸ்லாம் மரணத்தை புத்தியில்நிறுத்தி வாழ்வை தொடங்கு என்று உலக ஓட்டத்தின் சிந்தனையை சரிசெய்கின்றது.

“அதிகமாக மரணத்தை நினைவு கூறுங்கள்” – என்ற நபிமொழி வாழ்வின் யதார்த்தத்தை நமக்கு சொல்லி தருகின்றது. எப்படி?,நாம் ஒவ்வொரு நாளும் மரணத்தை நினைவு கூர்ந்தால் ஒரு நாள் அது வரும்போது இயல்பாய் எடுத்து கொள்வோம்.அடித்துக்கொண்டு ஆர்பாட்டம் செய்யமாட்டோம்.

“மனிதனின் உள்ளம் துருபிடிக்கின்றது, குர்ஆன் படிப்பதின்/ஓதுவதின் மூலமும், மரணத்தை நினைவு கூறுவதின் மூலமும்உள்ளத்தின் துரு நீங்குகிறது” – பாருங்க, எல்லோரும் உடல் அழகை, ஆரோக்கியத்தை பற்றி மட்டுமே சிந்தித்துகொண்டிருக்கும்போது பெருமானார் (ஸல்) உள்ளத்தின் நோய்களையும் சிந்தியுங்கள், அதற்கும் மருந்திடுங்கள் என்கின்றார்கள்.உண்மையில் எத்தனை துருக்கள் உலக ஆசை, பெண்கள் மீது மோகம், பதவி ஆசை, மன இச்சை, பெருமை, அலட்சியம்,தான்தோன்றித்தனம், சுயநலம் இப்படி எத்தனையோ. இந்த துருக்களை நீக்க எந்த ஸ்பெசலிஸ்ட் மருத்துவரிடத்திலும், எந்தபிரபலமான மெடிக்கலிலும் மருத்துவமும் மருந்தும் கிடைக்காது.

இஸ்லாமிய படைத்தளபதிகள் எதிரிகளிடத்தில் இப்படி கூறுவார்களாம்: “நீங்கள் மதுவையும் பெண்களையும் நேசிப்பதுபோல்மரணத்தை நேசிக்கும் ஒரு கூட்டம் என் பின்னால் இருக்கின்றது. அதனை எதிர்கொள்ள தயாராய் இருங்கள்”

மரணத்தை நேசிக்கும் கூட்டமாக முஸ்லிம்கள் அன்று இருந்ததால் இஸ்லாத்தின் குடையின் கீழ் உலகத்தை கொண்டுவந்தார்கள். இன்று உலகத்தின் குடையின் கீழ் இஸ்லாத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றோமோ என்று எண்ண தோன்றுகின்றது.வாழ்வதற்காக ஒவ்வொன்றையும் தயார் செய்து கட்டமைக்கின்றோம். மரணத்திற்கு பிறகும் வாழப்போகின்றோமே அந்தவாழ்வுக்காக தயாரிப்பு செய்து கட்டமைக்கின்றோமா? ஆக, மரணம் முடிவல்ல. அடுத்த வாழ்வுக்கான பிறப்பை போன்றது.இவ்வுலக பிறப்பை வரவாக இலாபமாக பார்கின்றோம். ஆனால், மரணம் எனும் அடுத்த வாழ்வுக்கான ஆரம்ப நிகழ்வைநேசிக்காமல் வெறுக்கின்றோமே?

“மரணத்தை வெறுப்பது நோய்; அது இருந்தால் நீங்கள் தோற்று விடுவீர்கள்” – என்ற அண்ணலாரின் வார்த்தையிலிருந்துமரணத்தை நேசிப்பது வெற்றிக்கான அடையாளமாக நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகின்றது. எல்லோரும் வெற்றி அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆகவே மரணத்தை வெறுத்து தோல்வியின் பக்கம் நம்மை தள்ளாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.

சிறந்த படைத்தளபதி, பல்வேறு போர்களில் வெற்றிபெற நிறைய பங்களிப்பு செய்திருக்கின்றார். பாலஸ்தீன், சிரியா வெற்றிக்குஇவர்களுடைய பங்களிப்பு அபரிதமானது. அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு: “மகனே, ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒருநாள் மரணித்தேதீருவாய். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது முக்கியமல்ல, மரணத்திற்கு முன் மறுமைக்காக தயாரித்துகொள்”.இறுதி நஸியத்தில்சொன்ன வார்த்தைகளில் சில. ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணிக்கத்தானே போகின்றாய். ஆகவே மரணத்திற்கு தயாராகிகொள் அதுதான் முக்கியமே தவிர, எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதல்ல என்கின்ற அறிவுரை போன்று உள்ளது.

“நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களிடத்தில் வந்தே தீரும், உறுதியான கோட்டைகளில் இருந்தாலும் கூட” – பணம், பதவி, செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்று வாழ்க்கையில் மிகைப்புடன் இருப்பதுபோல் நினைக்கின்றோம். ஆனால் மரணம் நம்மை மிகைக்க போகின்றது என்பதை மறக்க கூடாது. மரணத்திற்கு முன்னால் நம் பலம் என்று எதனை நினைத்து கர்வமாக, ஆணவமாக நடக்கின்றோமோ அவையெல்லாம் தோற்று ஓடப் போகின்றது.

இறைவனின் பாதையில் வாழ்கின்ற உள்ளம் அந்த பாதையில் மரணிப்பதை ஒருபோதும் வெறுக்காது.

இறைவனின் பாதையில்வாழ பழகுவதற்கு இறைவன் உதவி புரிவானாக!

source: http://labbaikudikadunews.blogspot.in/2016/03/blog-post_16.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb