ஐந்து கலிமாக்கள்
1. கலிமா தய்யிப்
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி
பொருள்: முதல் கலிமா பரிசுத்தமானது
வணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.
2. கலிமா ஷஹாதத்
அஷ்ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.
பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூரல்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.
3. கலிமா தம்ஜீது
சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹௌல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
பொருள்: மூன்றாம் கலிமா தூய்மைப்படுத்துதல்
அல்லாஹ் பரிசுத்தமானவன். மேலும் எல்லாப் புகழும் அல்லாஹுத்தஆலாவிற்கே உரியன. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹுத்தஆலா மிகப் பெரியவன், பாவத்தை விட்டும் தவிழ்த்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோணும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்.
4. கலிமா தவ்ஹீது
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயெமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.
பொருள்: நான்காம் கலிமா ஒருமைப்படுத்துதல்
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. எல்லா அரசாட்சிகளும் அவனுக்கே உரியன, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. அவனே படைப்பினங்களை உயிர்ப்பிக்கவும், மர்ணிக்கவும் செய்கிறான். அவன் என்றும் நிலைத்திருப்பவன். நலமனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தி வாய்ந்தவன்.
5. கலிமா ரத்துல் குஃப்ர்
அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅவ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரத்து மினல்லகுஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.
பொருள்: ஐந்தாம் கலிமா இறைமறுப்பை நீக்குதல்
யா அல்லாஹ் நான் அறிந்தவனாக இருக்கும் நிலையில் உன்னைக் கொண்டு எந்த வஸ்துவையும் (இணை வைப்பதை) விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோறுகிறேன். நான் அறியாமல் எக்குற்றம் என்னில் நிகழ்ந்ததோ, அதற்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.
அக்குற்றத்தை விட்டும் நான் தவ்பா செய்து (இனி ஒரு போதும் அதை செய்வதில்லை என்ற உறுதியுடன்) மீன்டேன்.
மேலும் இறை மறுப்பு இணை வைத்தல் இன்னும் எத்தனை வகை (மாறுபாடான) பாவ செயல்கள் இருக்கின்றனவோ அவைகளை விட்டும் நீங்கி விட்டேன். நான் இஸ்லாமானேன், ஈமான் கொண்டேன்,
வணக்கத்திற்குரியவன் இறைவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கிறேன்.
மேலும் இறை மறுப்பு இணை வைத்தல் இன்னும் எத்தனை வகை (மாறுபாடான) பாவ செயல்கள் இருக்கின்றனவோ அவைகளை விட்டும் நீங்கி விட்டேன். நான் இஸ்லாமானேன், ஈமான் கொண்டேன்.
=======================================================================================
1. கலிமா தய்யிப்
=====================================================================
2. கலிமா ஷஹாதத்
=====================================================================
3. கலிமா தம்ஜீது
=====================================================================
4. கலிமா தவ்ஹீது
=====================================================================
5. கலிமா ரத்துல் குஃப்ர்
============================================================
============================================================
===================================================================