கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு….
இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது பிரச்னைகளின் உலகமாக (world of problems) மாறி விட்டிருக்கின்றது.
எந்த ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்படவே முடியாத சிக்கலாக (crisis) மாறி மனித சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால் புதிய தலைமுறை ஒன்று முளைத்து வந்து இதோ பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.
Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking, – என்று புதுப்புது வழிமுறைகளை எல்லாம் கையிலெடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றது இந்தப் புதிய தலைமுறை!
இறை வழிகாட்டுதல் என்றால் என்னவென்றே தெரியாத இந்தத் தலைமுறை, ஏதோ அவர்களுக்குத் தெரிந்த அறிவை வைத்துக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு – எடுத்துக் கொண்ட பிரச்னைகளுக்குத் தீர்வும் சொல்கிறார்கள்; தீர்த்தும் வைக்கின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவர்கள் முன் வைக்கும் எல்லாத் தீர்வுகளுமே சரியானவை என்று நம்மால் சொல்ல முடியாது தான்! அதே நேரத்தில் அவர்களின் எல்லாத் தீர்வுகளுமே தவறானவை என்றும் சொல்லி விட முடியாது!
அவர்கள் தரும் தீர்வுகளுள் சிலவற்றை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ட தீர்வுகளை ஒத்திருப்பது தெரிய வருகிறது!
ஆனால் – எங்களிடம் குர்ஆன் இருக்கின்றது, நபிவழி இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாதவர்களாக நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
இது உண்மையா? இல்லையா?
– Nidur S.A. Mansoor Ali