விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்
பரிணாமவாதிகளிடம் அவர்களது பிழையான கோட்பாட்டை உண்மைபடுத்தக்கூடிய எந்த சான்றும் இல்லை. இது விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்.
ஓன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்த கொலகான்ந்த் (Coelacanth) மற்றும் ஆர்ஷியப்டெரிக்ஸ் (Archaeopteryx) போன்ற படிமங்கள், முன்பு பரிணாமத்திற்காக வாதாடிய இக்வியுன் வரிசை (Archaeopteryx) போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால் விடுபட்ட தொடர்பு பொதுமக்கள் மத்தியில் உயிருடன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இவை காலத்திற்கு காலம் உயிரூட்டப்படுள்ளதை காணலாம்.
இந்த முயற்சிகள் அனைத்தும் ஹிட்டலரின் மொழியில் சொல்வதானால் ”மீண்டும் மீண்டும் பேசப்படும் பொய் உண்மையாகிவிடும்” என்ற பிரச்சார வழிகளாகும்.
ஆய்வுகள் அவர்களது கோட்பாட்டை மறுக்கிறது என்பதை பரிணாமவாதிகள் ஏற்று கொள்ளவேண்டும். விடுபட்ட தொடர்பு என்ற கட்டுக்கதையை ஒரு போதும் உண்மையாக போவதில்லை.
1- Daeschler et al., “A Devonian tetrapod-like fish and the evolution of the tetrapod body plan,” Nature 440, 757-763 (6 April 2006)
2- Shubin et al., “The pectoral fin of Tiktaalik roseae and the origin of the tetrapod limb,” Nature 440, 764-771 (6 April 2006)
3- Per Erik Ahlberg and Jennifer A. Clack, “Palaeontology: A firm step from water to land,” Nature 440, 747-749 (6 April 2006)
டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மாதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது.
ஷமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.
வானியல், உயிரியல், பௌதீகவியல், புவியியல், கருவியல் போன்ற அனைத்தும் விஞ்ஞானம். ஆனால் டார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல, அது பண்டைய ஷமன மதமாகும். டார்வினிஸ்டுகளின் தற்போதய நம்பிக்கை முற்காலத்தில் முதலைகளை வணங்கியவர்களின் நம்பிக்கையை போன்றது. டார்வினிஸ்டுகள் தற்செயலாக, அசைவற்ற, உணர்வற்ற அணுக்களை உருவாக்கும் சக்தியாக கருதுவதால், மதத்தை நம்புவதை போன்று அதை நம்புகின்றனர்
பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், விஞ்ஞான கிளைகளில் (உயிரியல், பௌதீகவியல்) ஏற்பட்ட முன்னேற்றம் ஒன்றன் பின் ஒன்றாக அக்கோட்பாட்டின் கருத்துகளை வேரறுத்து விட்டது. இருப்பினும் இன்றும் டார்வினிசம் சீடர்களை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு விஞ்ஞான கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டவுடன், அது ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நிறத்தப்பட்டுவிடும். ஆனால் டார்வினிசத்தில் அவ்வாறு நிகழவில்லை. டார்வினிஸ்டுகள் தங்களது கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகள் மறுக்க முடியாது வலுப்பெற்றிருந்த போதிலும் டார்வினிஸ்டுகள் அதை புறந்தள்ளி விட்டு தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கையை நிலைநாட்ட கடுமையாக முயற்சிக்கின்றனர்.
நெருப்பு, நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றை வணங்குவது, பிரமிட்டுகள் வேற்று கிரகவாசிகளால் கட்டப்பட்டது என்று நம்புவது, சில குறிப்பிட்ட மிருகங்களை புனிதமாக கருதுவது விஞ்ஞானமல்ல. அதே போன்று டார்வினிசமும் – மற்ற மூடநம்பிக்கை காரணமாக, டார்வினிசமும் சிலைகள் மற்றும் பொய்யான கடவுள்களை கொண்ட மதமாகும். டார்வினிஸ்டுகளின் மிக முக்கிய சிலை தற்செயல் என்ற சிலையாகும். டார்வினிஸ்டுகளின் எந்த ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்தாலும், அதில் டார்வினிஸத்தின் உயிர்நாடியான – இயற்கை தெரிவின் எல்லையற்ற சக்திகளை அறிந்து கொள்வீர்கள்.
தற்செயல் என்ற சிலை செய்யும் அனைத்து செயல்களும் மிகச்சரியாக கணக்கிடப்பட்டுள்ளது என்று பரிணாமவாதிகள் கூறுகின்றனர். அவர்களுடைய பார்வையில் அந்த சிலை நிகழ்த்தப் போகும் அனைத்து செயல்களையும் ஏற்கனவே நன்கு திட்டமிட்டு கணக்கிட்டுள்ளது.
பரிணாமவாதிகள் ஒரு வசித்திரமான சக்தியில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் பொருளுக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுக்கின்றனர். முற்காலத்தில் பொருள் தன்னை இணைத்து ஒரு உயிருள்ள செல்லாக உருவானது. பிறகு அது முற்றிலும் வித்தியாசமான இன்னொன்றை உருவாக்கியது என்று நம்புகின்றனர். விஞ்ஞானம் இத்தகைய சிந்தனைகளை மறுக்கிறது. ஆனால் டார்வினிஸ்டுகளை பொருத்தவரையில் அவை மறுக்க முடியாத உண்மைகள் என்றும் அதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
டார்வினிஸம் என்பது மடமையான, பகுத்தறிவிற்கு முரணான, பிழையான பண்டைய ஷமன மதமாகும். இந்த சிலை வணக்கம் இஸ்லாத்தை எதிர்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
டார்வினிச ஷமன மதத்தை பொருத்தவரையில் நிலம், நீர், பாறை மற்றும் கல் அனைத்தும் உணரும், கேட்கும், நிறங்களை பார்க்கும் சக்தி படைத்தவை.
டார்வினிச மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான தற்செயல் எனும் மடமையான நம்பிக்கையானது விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் எதிரானது. உண்மையில் எந்த ஒரு பகுத்தறிவுள்ள சிந்தனையும் மிக சிக்கலான ஒரு அமைப்பு தற்செயலாக உருவாக முடியாது என்பதை ஏற்று கொள்ளும். அதற்கு மாறாக அவ்வாறு சிக்கலான அமைப்பு உருவாவதென்றால் நிச்சயமாக அதில் அறிவார்ந்த ஒரு பெரும் சக்தியின் திட்டம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. இருப்பினும் தங்களது கைகளால் சிலைகளை வடிவமைத்து அதற்கு பெயர் சூடி அதற்கு உண்ண உணவு கொடுத்து பின்பு அதை வணங்குபவர்களை போன்று டார்வினிஸ்டுகளும் பொய்யான கடவுள்களில் நம்பிக்கை வைத்தள்ளனர்.
டார்வினிஸ்டுக்ள ஏற்று கொண்ட மடமையான நம்பிக்கை பண்டைய பல தெய்வ வணங்கிகளின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையோடு தொடர்புபட்டுள்ளது. பண்டைய பல தெய்வ வணங்கிகள் அசைவற்ற சிலைகள் தான் அனைத்தையும் படைத்தன என்று நம்பினார்கள். அதை போன்று தான் பரிணாமவாதிகள் அசைவற்ற பொருள் அனைத்து உயிரினங்களையும் படைத்துள்ளன என்று நம்புகின்றனர். (நிச்சயமாக இறைவன் இதை விட்டும் தூயவன்). அவர்களது உடலும் பல தற்செயலான செயல்களால் உருவானது என்று வாதிடுகின்றனர்.
டார்வினிச ஷாமன மதத்தை விஞ்ஞானம் என்ற போர்வையில் மாணவர்களுக்கு கற்பிப்பது ஏற்று கொள்ளமுடியாதது. இந்த ஷாமன மதத்திலிருந்து விடுப்பட்ட உயிரியலே அவர்களுக்கு தேவை.
துருக்கி பொது மக்கள் அவர்களது நாட்டிலுள்ள பரிணாமவாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளை எள்ளி நகையாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களால் பரிணாம வளர்ச்சி திட்டத்தை ஆக்ரோஷமாகவும் பிழையாகவும் நிறுவ முடியாமையாகும். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அவர்கள் சமர்பிக்க வேண்டும், அதன் மூலம் அனைவரும் அவற்றை ஆராயந்து சரியானவைகளையும் பிழையையும் பிரித்தரிய முடியும். நாடு முழுவதும் காண்பிக்கப்பட்ட படிமங்கள் மூலம் உயிரினங்கள் பரிணாமம் அடையவில்லை என்பதை துருக்கி மக்களை உணர்ந்து கொண்டனர்.
பரிணாமவாதிகளிடம் படிமங்கள் ஏதாவது இருப்பின் அவற்றை பொது காட்சிக்கு வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றையாவது மத்திய நிலையங்கள் அல்லது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். அவர்களால் முடியாவிட்டால் அவர்களது முட்டாள்தனமாக பரிணாமத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். மக்களிடம் காண்பிக்க அவர்களிடம் இடை நிலை படிமங்கள் இல்லை. ஏனெனில் அத்தகையவைகள் ஒருபோதும் தோன்றவில்லை.
பரிணாமத்தை நிரூபிப்பதற்காக பரிணாமவாதிகள் முன்வைத்த ஒவ்வொரு படிமமும் பொய்யானவை அல்லது பிழையாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பில்டவுன் மனிதன் என்பது கட்டுக்கதையானது. நேப்ரஸ்கா மனிதனின் பல் கரடியின் படிமத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அழிந்து போன உயிரினம் என்று கூறப்பட்ட கொல்கான்ந்த் என்ற மீன் உயிருடன் பிடிப்படடு 1938 முதல் மாற்றமடையாமல் இருக்கிறது. மனித பரிணாமம் என்ற கட்டுக்கதைக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இன்றைய மனிதனுடையது அல்லது அழிந்து போன குரங்கு இனத்துடையது என்பது நிரூபணமாயுள்ளது.
பரிணாமவாதிகள் ஒரு போதும் தோன்றியிராத உயிரினங்களை கற்பனை செய்து ஓவியர்களை வாடகைக்கு அமர்த்தி புதிய அமைப்புகளை வரைந்து அவற்றை கொண்டு பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞான உண்மை என்பதாக மக்களை நம்ப வைக்க முற்படுகின்றனர். இந்த பொய்யான தகவல்கள் பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் மற்றும அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதை அதனை உருவாக்கியவர்களின் கற்பனை தவிர வேறில்லை. இவற்றை படிமங்களில் காண முடியவில்லை. பரிணாமவாதிகள் அவர்களின் கைகளால் படைக்கபட்ட பொய்யான தகவல்களில் இறுதியாக விழுந்து இந்த பொய்யான டார்வினிச மதத்தை நம்புகின்றனர்.
டார்வினிஸ்டுகளின் ஷாமன மத கருத்துகளை விஞ்ஞானம் மறுக்கிறது.
டார்வினிச ஷாமன மதம் கூறுகிறது நவீன விஞ்ஞானம் கூறுகிறது.முதல் உயிரினம் தற்செயலாக உருவானதுஉயிரினங்கள் தற்செயலாக உருவாக முடியாது. ஒரு தனி புரதமோ அல்லது ஒரு சாதாரண செல் அல்லது முழு உயிரினமும் தற்செயலாக உருவாகவே முடியாது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு புரதம் தற்செயலாக உருவாவது என்பது 10950 இல் 1 என்ற சாத்திய வீதத்திலாகும். நடைமுறையில் இது பூஜ்ஜிய சாத்திய வீதமாகும். அதாவது ஒருபோதும் நிகழாது.
உயிரினங்கள் முன்னைய அபிவிருத்தி அடையாத மூதாதையரிலிருந்து தோன்றியதுஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் தோன்ற முடியாது. ஓவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குறிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் படிப்படியாக மாற்றமடைந்து ஒரு புது உயிரினமாக தோன்ற முடியாதுபடிமங்கள் பரிணாம வளர்ச்சி திட்டத்தை உறுதிப்படுத்துகிறதுபடிமங்கள் பரிணாம வளர்ச்சியை மறுத்து அனைத்தும் படைக்கப்பட்டன என்பதை காட்டுகிறது. சுமார் 1000 லட்சம் படிமங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் முழுமையடைந்த நன்கு அபிவிருத்தியடைந்தை காட்டுகின்றன.
ஒரு படிமத்தில் கூட அது பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை மாற்றங்கள் மூலம் பல உயிரினங்கள் தோன்றினமாற்றங்கள் உயிரினங்களை அழிக்குமே தவிர அதை வேறொரு உயிரினமாக மாற்றாது. அவ்வாறு மாற்றமடைந்தால் அந்த உயிரினம் அழிந்துவிடும் அல்லது முடமாகிவிடும் மனிதன் குரங்கு போன்ற உயிரினங்களிலிருந்து பரிணாமம் அடைந்தான் மனிதனும் குரங்கும் மிகவும் வித்தியாசமான உயிரினங்கள். அவற்றுக்கிடையே எந்தவித குடும்ப ஒற்றுமையும் கிடையாது. உருவ ஒற்றுமை இருந்த போதிலும் அவற்றுக்கிடையே மலையளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை பரிணாமத்தை கொண்டு விளக்க முடியாதுஇயற்கையில் காணப்படும் இயற்கை தெரிவு பரிணாமத்திற்கான சான்றுஇயற்கை தெரிவு மூலம் பரிணாமமோ அல்லது வேறொரு புது உயிரினமோ தோன்ற முடியாது.
பரிணாமவாதிகளின் இரண்டு பொய்கள்:
டிக்டாலிக் ரோசியா மற்றும் குகுனாசஸ்
சில மாதங்களுக்கு முன் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டு டிக்டாலிக் ரோசியா என்று பெயரிடப்பட்ட இந்த படிமம் பரிணாம வளர்ச்சிக்கு பெரும் சான்றாக பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையில் இந்த உயிரினம் பல உயிரினங்களின் பண்புகளை கொண்ட மொசாயிக் உயிரினமாகும். இருப்பினும் பரிணாமவாதிகள் பிழையான படங்களை காட்டி இது நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்தது என்பதை நிரூபிப்பதற்காக இந்த உயிரினத்தை இடை நிலை உயிரினம் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இன்று அவுஸ்திரேலியாவில் காணப்படும் பிளாடிபஸ் என்ற உயிரினம் இதை போன்ற மொசாயிக் இன உயிரினமாகும்.
மோசாயிக் உயிரினம் என்பது மிருகங்கள், ஊர்வன மற்றும் பறவைகளின் பண்புகள் ஒரே நேரத்தில் ஒரு உயிரினத்தில் இணைந்து காணப்படுவதாகும். இதை பரிணாமத்திற்கான சான்றாக கொள்ள முடியாது.சில நாட்களுக்கு முன்னர் பல வருடங்களாக விடுபட்ட இடை நிலை என்ற அவர்களின் கற்பனை கதைக்கு உயிரூட்ட பரிணாமவாதிகள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு படிமத்துடன் வந்துள்ளனர்.
குகுனாசஸ் என்ற இந்த புதிய படிமம் உண்மையில் அழிந்து போன ஒரு வகை மீன் இனமே தவிர பரிணாமத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதன் வால் பக்கத்தில் முள் இருப்பதால் அதை பரிணாமவாதிகளின் நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்த கட்டுக்கதைக்கான சான்றாக உபயோகிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் படிமத்திலுள்ள உயிரினம் நில உயிரினங்களுடன் முற்று முழுதாக தொடர்பில்லாமல் இருக்கிறது. இன்றும் உயிருடன் இருக்கும் கொலகொன்ந்த் இன மீன்களுக்கு வால் பக்கத்தில் முள் இருக்கிறது. இருப்பினும் இது மீனின் உடலிலுள்ள சாதாரண அமைப்பு என்றும் நீந்துவதற்கு மட்டுமே இதை உபயோகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரிணாமவாதிகள் அவர்களின் கற்பனைகளை நிரூபிப்பதற்கு பாதி விருத்தியடைந்த ஆனால் முற்று முழுதாக இயங்க முடியாத இடைநிலை அமைப்புகளை (iவெநசஅநனயைவந கழசஅள) கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும் இந்த படிமங்களிலுள்ள உயிரினங்களின் உறுப்புகள் ஒவ்வொன்றும் குறைபாடுகளற்ற முற்று முழுதாக விருத்தியடைந்து காணப்படுகிறது. அங்கு பாதி விருத்தியடைந்த உறுப்புகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. படிம வரிசையில் ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் பரிணாமம் அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை.பரிணாமவாதிகள் தங்களது பிழைகளை ஏற்று கொண்டு பொது மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட வேண்டும்.
சுயநல பரிணாமவாதிகள் பின்னும் புதிய சதி வலைகள் :
சமீப காலமாக துருக்கி மற்றும் உலக மீடீயாக்களில் உலகலாவிய ரீதியில் டார்வினிசத்தின் தோல்வியை பற்றி அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளன. பரிணாமம் தோற்கடிக்கபட்டமை ஜரோப்பிய ப்ரீ மேசன் மற்றும் இதர இரகசிய சக்திகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைகள் நாத்திகம் தோற்கடிக்கபட்டு விடும் என்ற பயத்தில் பெரும் சதிவலை பின்னுகின்றன.
பிரித்தானிய மற்றும் பிரஞ்சு செயலில் இறங்கியுள்ளன. பழிதீர்பதற்காக சபாதிய குடும்பங்கயுளும் இதில் ஈடுபடுகின்றன.பல எழுத்தாளர்கள் வாடகைக்கு அமர்தப்பட்டு பெரும் சதி செய்யப்படுகிறது.இதில் முக்கிய குறியாக கருதப்படுவது விஞ்ஞான ஆய்வு கழகமாகும். எதிர்காலத்தில், இறந்த காலத்தை போன்று இவை பலன் தரப்போவதில்லை.
மில்லியன் கணக்கான மக்கள் தற்போது நடந்து கொண்டிருப்பவற்றை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒரு புதிய சூரியன் உதயமாகிவிட்டது. அதன் ஒளி உலகம் முழுவதும் ஒளியூட்டுகிறது. உண்மையை ஏற்று கொள்வது தான் பரிணாமவாதிகளுக்கு எஞ்சியுள்ள ஒரு விருப்பாகும்.
இஸ்லாம் பல தெய்வ வணக்கங்களை தான் எதிர்கிறது : விஞ்ஞானத்தை அல்ல.விஞ்ஞானத்தின் அனைத்து கிளைகளையும் பரிசோதித்து ஆய்வு செய்யுமாறு மக்களை வற்புறுத்துகிறது :
………வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து ……. (சூரத் ஆல-இம்ரான் : 191)
மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (சூரத் காப்ஃ : 6) ……………(மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்
பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்!……. (சூரத் முல்க் : 3)
ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று – வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும – மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? – பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (சூரத் காஷியா 17-20)
நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (சூரத் ஜாஸியா 3-4) ஆகவே விஞ்ஞானத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்பு இல்லை என்று கூற முடியாது.
இஸ்லாம் பொய்யான மதங்களை எதிர்கிறது. அது நெருப்பு, மிருகங்கள், சிலைகள் – போன்றவற்றை வணங்குவதை எதிர்கிறது. சுருங்க சொன்னால், அனைத்துவித பலதெய்வ கொள்கைகளையும் எதிர்கிறது. ஷாமன மதம் இயற்கையையும் (மிருகங்கள், தாவரங்கள், கற்கள், பூமி, அணு) மற்றும் தற்செயலையும் (உhயபெந) வணங்குகிறது. டார்வினிசம் ஷாமன கோட்பாடுகளை கொண்டிருப்பதால் அது இஸ்லாத்துடன் மோதுகிறது.
நேச்சர் (Nature) பத்திரிக்கையில் விஞ்ஞான ஆய்வு மையத்தின் தொழிற்பாடுகள்
உலகின் சிறந்த விஞ்ஞான சஞ்சிகையான நேச்சர் (Nature), அதன் 23 நவம்பர் 2006 பதிப்பில் பரிணாமத்தை எதிர்பவர்கள் ஜரோப்பாவில் காலூன்றுகிறார்கள் என்ற தலைப்பில் ஒரு விசேட செய்தியை வெளியிட்டுள்னது. அந்த செய்தியில், போலந்து நாட்டை சேர்ந்த மெசியிஜ் கிர்டிச் ((Maciej Giertych))என்ற உயிரியலாளரின் ஏற்பாட்டில் ஜரோப்பாவில் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கற்பிப்பது என்ற தலைப்பில் ஜரோப்பிய பாராளுமன்ற பிரதிகளுக்கு பயிற்சி பட்டறை(work shop)நடத்தப்பட்டதை பற்றி அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் இத்தாலி, ஜெர்மனி, போலந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள பாடசாலை பாடதிட்டத்தில் இடம்பிடித்துள்ள பரிணாமம் கொள்கை மற்றும் அனைத்தும் படைக்கபட்டவை என்ற கொள்கை(creationism)பற்றி ஆய்வு செய்துள்ளது. அது துருக்கியிலுள்ள விஞ்ஞான ஆய்வு மையத்தின் செயல்திட்டங்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அமைப்பு துருக்கியில் மிக பலமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் அந்நாடு ஜரோப்பிய யூனியனில் இணைய பேச்சுவார்தைகளிள் ஈடுபட்டு கொண்டிருக்கிது.
முஸ்லிம்களின் மிக முக்கிய அனைத்தும் படைக்கபட்டது என்ற சிந்தனையுடைய அமைப்பாக துருக்கிய Bilim ve Arastirma Vakfi திகழ்கிறது. அnரிக்கவிலிருந்து மிக முக்கிய அனைத்தும் படைக்கபட்டவை என்ற சிந்தனையுடைய பேச்சாளர்கள் அடிக்கடி சொற்பொழிவுகளுக்காக அழைக்கப்படுகின்றனர்.ஜோன்ஸ் இஸ்தான்புல் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு தற்போது நாடு திரும்பியுள்ளார். அங்கு அனைத்தும் படைக்கபட்டது என்ற சிந்தனையுடைய புத்தகங்கள் விற்பனையில் உள்ளது அதன் பிரபல்யத்தை காட்டுகிறது. அனைத்தும் படைக்கபட்டவை என்ற சிந்தனை துருக்கி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது. அமெரிக்காhவை விட இங்கு விவாதம் சூடுபிடித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
பாடசாலைகளில் கற்பிக்கப்படும் உயிரியல் பாட புத்தகங்கள் அனைத்தும் படைக்கபட்டவை என்ற சிந்தனைக்கு ஏற்றவாறு உள்ளது.
இந்த அறிக்கையில், ஜெர்மனியில் பாடசாலைகளில் அனைத்தும் படைக்கபட்டவை என்ற சிந்தனையை கற்றுக் கொடுப்பதை பற்றிய விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தொடராக இத்தாலியின் கல்வி அமைச்சர் பணிப்பின் பேரில் இடைநிலை பாடசாலைகளில் பாட திட்டத்திலிருந்து பரிணாம வளர்ச்சி கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தில் காணப்படும் அசாதரண நிலை
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான். (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர். பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்¢ உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். (குர்ஆன் 67:3-4)
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை. அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான். (குர்ஆன் 25:2)
நாத்திக தத்துவங்களும் கோட்பாடுகளும் பிரபஞ்சம் எவ்வித உதவியுமின்றி தன்னால் இயங்கும் இயந்திரங்கள் போன்றவை என்றும் அதில் செயற்படும் அதிசயமான ஒழுங்கும் அசாதாரண சமநிலையும் தற்செயலாக உருவானது என்று வாதிடுகின்றன. இருப்பினும் விஞ்ஞானம் என்று அழைக்கப்பட்டு வந்த நாத்திகத்தினதும் டார்வினதும் பிழையான தத்துவங்களுக்கு விஞ்ஞான ரீதியிலேயே பதிலளிக்கப்பட்டு விட்டன.20ம் நூற்றாண்டில் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக வளர்ச்சியடைந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் வானவியல் மற்றும் உயிரியல் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் வாழ்கையும் பிரபஞ்சமும் படைக்கப்பட்டவை என்பதை நிரூபித்துள்ளன.
பெரு வெடிப்பு கொள்கையின் மூலம் பிரபஞ்சம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து படைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்ட போது டார்வினது ஆய்வுகள் குப்பையில் வீசி எறியப்பட்டன. நவீன கண்டுபிடிப்புகள் விஞ்ஞான ஆய்வுகள் இந்த உலகத்தில் பெரும் அதிசயத்தக்க சமநிலைகள் காணப்படுவதை வெளிப்படுத்திய போது நாத்திகத்தின் அடிப்படை ஆதாரமற்ற தத்துவங்கள் மறைய தொடங்கின.உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியவசிய காரணிகளை ஆராயும் போது உலகம் மட்டுமே இந்த குறிப்பிட்ட காரணிகளை கொண்டுள்ளதை காணலாம்.
வாழ்வதற்கு தேவையான சூழலை ஆராயும் போது அங்கு எம்மை சுற்றி எண்ணிலடங்காத காரணிகள் ஒரே நேரத்தில் எவ்வித முடிவுமின்றி நடைபெற்று கொண்டிருப்பதை காணலாம். பிரபஞ்சத்தில் பல நூறு பில்லியன் பால்வெளிமண்டலங்கள் (கெலக்ஸிகள்) அவை ஒவ்வொன்றும் குறைந்தது நூறு பில்லியன் நட்சத்திரங்களை கொண்டுள்ளது.
‘இந்த எல்லாகெலக்ஸிகளிலும் சிலவேளை நட்சத்திரங்களை விட கோல்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவ்வாறு மிதமிஞ்சிய எண்ணிக்கையில் கோல்கள் காணப்பட்ட போதும் உலகில் மட்டுமே உயிர்வாழ தேவையான அனைத்து சூழல்களும் காணப்படுவது அது உருவாக்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.
பெரு வெடிப்பு ஏற்படுத்திய தாக்கம் முதல் அணுவிற்கு மதிப்பு ஏற்பட்டது வரை – நட்சத்திரங்களில் இரசாயன மாற்றம் ஏற்பட காரணமான நான்கு காரணிகள் முதல் – தண்ணீரின் அடர்தியின் அளவிற்கு சூரியன் ஒளியை செலுத்தியது முதல் – வளிமண்டலத்தில் காணப்படும் வாயுவின் அளவிற்கு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்ட போது – சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதன் பாதையில் சுழல்வதற்கு ஏற்றவகையில் நிறுத்தப்படடபோது – மலைகளும் கடல்களும் சரியான முறையில் செயல்படும் பொருட்டு பூமி அதன் பாதையில் சுழலும் வேகம் முதல் : ஒவ்வொரு தரவுகளும் நமது வாழ்கைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதை காணலாம்.
இன்றைய விஞ்ஞான உலகம் இந்த தரவுகளை அன்துரோபிக் பிரின்ஸிபள் என்றும் பைன் டியுனிங் என்றும் அழைக்கிறது. இந்த கோட்பாடுகள் பிரபஞ்சம் குறிக்கோள் அற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தற்செயலாக பிணைக்கபட்ட பொருட்களால் ஆனது போன்ற வாதங்களை நிராகரித்து அவை மனித வாழ்வோடு தொடர்புடையது என்பதோடு அவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
நாம் மேலே குறிப்பிட்ட வசனத்தில் அல்லாஹ்வின் படைப்பில் அளவும் ஒற்றுமையும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள அரபு சொல்லான தக்தீரன் என்பதன் பொருள் வடிவமைத்தல் – அளவு – அளந்து படைத்தல் என்பதாகும். இந்த சொல்லானது அத்தியாயம் அல்-புர்கான்: 2 பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
‘திப்கன்’ என்ற அரபு மொழிச்சொல்லின் கருத்து ஒற்றுமையாக – இந்த சொல்லானது அத்தியாயம் அல்-முல்க் : 3 மற்றும் அத்தியாயம் நூஹ் : 15 ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். மேலும் அல்லாஹ் அத்தியாயம் அல்-முல்கில் தபவுதின் என்ற சொல்லை பயன்படுத்துகிறான். இதன் கருத்து ஒத்துழைப்பு வழங்காமை – கட்டுப்படாமை – எதிர்ப்பு என்பதாகும். அதாவது அதில் குறை அல்லது சமநிலையற்ற தன்மையை தேடுபவர்களால் அவற்றை காணமுடியாது என்பதாகும். பைன் டியுனிங் அல்லது அசாதாரண சமநிலை என்ற சொல் 20ம் நூற்றாண்டின் இறுதியில் பயன்படுத்தப்பட்டது.
இந்த உண்மையை குர்ஆன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே பயன்படுத்திவிட்டது. கடந்த கால் நூற்றாண்டில் பல விஞ்ஞானிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் இந்த பிரபஞ்சம் தற்செயலாக இணைந்த பொருட்களின் தொகுப்பு என்பதை மறுத்துள்ளனர். அதற்கு மாற்றமாக மனித வாழ்கைக்கு ஏற்ற வகையில் அவை அதிசயமான வகையில் வடிவமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
பிரபஞ்சத்தில் காணப்படும் பல தன்மைகள் வாழ்கைக்கு உதவும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. பௌதீகவியளாளர் டாக்டர் கார்ள் கிப்பர்சன் இந்த உண்மையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.1960களில் சில பௌதீகவியளாளர்கள் எமது பிரபஞ்சம் மனித வாழ்கைக்கு ஏற்றவகையில் பைன் டியுனிங் அல்லது சமநிலை படுத்தப்பட்டுள்ளதை அறிந்தார்கள்.
பிரித்தானிய வானியல் நிபுணர் பேராசிரியர் ஜோர்ஜ். எப். ஏல்லிஸ் இந்த சமநிலையை பற்றி இவ்வாறு கூறுகிறார்விஞ்ஞான கோட்பாட்டில் அதிசயமான சமநிலை நிகழ்வதால் இது (குழப்பத்தை) இலகுவாக்குகிறது. குழப்பமானதை நாம் உணரும் போதும் இந்த உலகின் நிலையை அவதானிக்கும் பொழுதும் அதிசயமானது என்ற சொல்லை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. 3 ஈர்ப்பு :தற்போதய அளவை விட ஈர்ப்பு சக்தி பலமாக இருந்தால் அளவுக்கதிகமான அமோனியா மற்றும் மீதேன் பூமியின் வளிமண்டலத்தில் சேமிக்கப்பட்டு -அவை வாழ்கையை பெரும் அளவில் பாதிக்கும். தற்போதய அளவை விட ஈர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் பூமியின் வளிமண்டலம் அளவுக்கதிமான நீரை இழந்து வாழ்வதற்கான சூழ்நிலையை இழந்துவிடும்.
சூரியனிலிருந்து பூமியின் தூரம்
தற்போதைய அளவைவிட அதிகமாக இருந்தால் பூமி மிகவும் குளிரடைந்துவிடும். வளிமண்டலத்தின் நீர் சுழற்சி முறை பாதிப்படையும். இந்த பூமி குளிர் பிரதேசமாக மாறிவிடும். பூமி சற்று சூரியனுக்கு அருகில் இருந்தால் பூமி எரிந்து சாம்பலாகிவிடும். வளிமண்டலத்தின் நீர் சுழற்சிமுறை மிகவும் பாதிப்படையும். வாழ முடியாத நிலை ஏற்படும்.
பூமி அடுக்கின் பருமன்
அடுக்கு தற்போதைய அளவைவிட பருமனாக இருந்தால் வளிமண்டலத்திலுள்ள அளவுக்கதிகமான ஒட்சிசன் இங்கு மாற்றப்பட்டுவிடும். அடுக்கு தற்போதைய அளவை விட குறைவாக இருந்தால் எரிமலை நிகழ்வுகள் அதிகமாகி வாழ்வை கடினமாக்கிவிடும்.
பூமி சுற்றும் வேகம்
தற்போதய வேகத்தை விட குறைவாக இருந்தால் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் அளவுக்கதிகமாக அதிகரித்துவிடும். இதை விட அதிகமாக இருந்தால் வளிமண்டல காற்று கடும் வேகத்துடன் வந்து சேரும். புயலும் சூறாவளியும் வாழ்வை கடினமாக்கிவிடும்.
பூமியின் காந்த வலையம்
தற்போதய நிலையை விட சக்திமிக்கதாக இருந்தால் மிக கடுமையான மின்காந்த சூறாவளி ஏற்படும். அது பலவீனமானதாக இருந்தால் சூரியனிலிருந்து வெளிப்படும் பயங்கரமான துகள்களிலிருந்து பூமி பாதுகாப்பை இழந்துவிடும். அல்பேடோ பாதிப்பு (பூமி பெற்று உள்வாங்கும் மற்றும் பிரதிபளிக்கும் ஒளியின் வீதம்) தற்போதய அளவை விட இது அதிகமானால் பூமி குளிர்ந்த பூமியாக மாறிவிடும். தற்போதய அளவை விட இது குறைவாக இருந்தால் பச்சைவீட்டு பாதிப்பு மிதமிஞ்சிய வெப்பத்தை ஏற்படுத்திவிடும். முதலில் பூமியிலுள்ள பனிப்பாறைகள் உறுகி வெள்ளம் ஏற்படும.; பின்பு எரிந்துவிடும்.
வளிமண்டலத்தில் காணப்படும் ஒட்சிசன் மற்றும் நைட்ரஜனின் அளவு தற்போது காணப்படும் அளவை விட அதிகமாக இருந்தால் முக்கிய தொழிற்பாடுகளின் எதிர்மறை விளைவு அதிகரிக்கும். தற்போதய நிலையை விட குறைவாக இருந்தால் முக்கியமான தொழிற்பாடுகள் மிக அதிகமாக குறைந்துவிடும். வளிமண்டலத்தில் கார்பன் டை ஒட்சைட் மற்றும் நீரின் அளவு தற்போதய அளவை விட அதிகமாக இருந்தால் வளிமண்டலம் அதிகமாக வெப்பமடைந்துவிடும். தற்போதய அளவை விட குறைவாக இருந்தால் வெப்பநிலையும் வளிமண்டலமும் விழுந்துவிடும்.
ஓசோன் மண்டலத்தின் பருமன்
தற்போதய அளவை விட அதிகமாக இருந்தால் பூமியின் வெப்பநிலை அதிகளவு குறைந்துவிடும். தற்போதய அளவை விட குறைவாக இருந்தால் பூமி கடுமையாக வெப்பமாவதுடன் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.
பூகம்பம்
தற்போதய அளவை விட அதிகமாக இருந்தால் உயிரினங்களுக்கு அடிக்கடி தொல்லை ஏற்படும். தற்போதய அளவை விட குறைவாக இருந்தால் கடலுக்கு அடியிலுள்ள சத்துகள் தண்ணீரில் கலக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இது கடலிலும் சமுத்திரங்களிலும் உள்ள உயிர்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிப்படைய செய்யும் விளைவுகள் ஏற்படும்.
பூமியின் சாய்வு
பூமி அதன் பாதையில் 23 பாகையளவு சாய்ந்து காணப்படுகிறது. இந்த சாய்வே பருவங்களில் மாற்றங்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது. தற்போதைய அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்குமானால் பருவங்களுக்கு இடையிலான வெப்பநிலை அதன் உச்சநிலையை அடைந்துவிடும். கோடைகாலத்தில் தாங்க முடியாத வெப்பமும் மாரி காலத்தில் மிக கடுங்குளிரும் காணப்படும்.
சூரியனின் அளவு
சூரியனை தற்போதய அளவைவிட சின்ன நட்சத்திரமாக இருந்தால் பூமி உறைந்து போகும் அல்லது தற்போதைய அளவைவிட பெரிதாக இருந்தால் பூமி என்றோ எரிந்து போயிருக்கும்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு
இதை விட அதிகமாக இருந்தால் சந்திரனின் சக்திவாய்ந்த ஈர்ப்பானது வளிமண்டலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கும். பூமி தன்னை தானே சுற்றும் அந்த பாதையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதை விட குறைவாக இருந்தால் அது மோசமான காலநிலை மாற்றத்திற்கு கொண்டு செல்லும். நாம் இங்கு குறிப்பிட்டவைகள் பூமியில் உயிர் தோன்றி வாழ தேவையான மிக சில முக்கிய சமநிலைகளாகும். பூமியும் பிரபஞ்சமும் பல்வேறு தற்செயலான நிகழ்வுகளின் காரணத்தால் தோன்றியிருக்க முடியாது என்பதை நிராகரிக்க இந்த சில உதாரணங்களே போதுமானதாகும். 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான பைன் டியுனிங் மற்றும் அன்துரோபிக் பிரின்சிபள்ஸ் கோட்பாடுகள் அல்லாஹ்வின் படைப்பின் சான்றுகளாகும். இந்த அசாதாரணமான ஒற்றுமையும் நுண்ணிய ஒழுங்கும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னறே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு உதவிய நூல்கள்:
1- Carl Sagan, Cosmos (Avenel, NJ: Wings Books: April 1983), 5-7.
2- Karl Giberson, “The Anthropic Principle,” Journal of Interdisciplinary Studies 9 (1997).
3- George F. Ellis, “The Anthropic Principle: Laws and Environments,” The Anthropic Principle, F. Bertola and U. Curi (New York: Cambridge University Press: 1993), 30.
source: http://ta.harunyahya.com/