முஸல்லா! தொழும் இடமா? தொழுகை விரிப்பா?
இப்னு ஹத்தாது
[ யூத, கிறித்தவர்கள் திட்டமிட்டுத் தயாரித்து, முஸ்லிம்களின் மனதை மயக்கி தொழுகை விரிப்பாகக் கொடுக்கும் விரிப்புகள் விரித்த சில நாட்களிலேயே அதன் மேல் பரப்பில் தூசு படிய ஆரம்பிக்கும். அந்த வகையில் தான் தொழுகை விரிப்புத் திட்டமிட்டு அவர்களால் தயாரிக்கப்படுகிறது.
இவை போதாதென்று புகை, பொடி இன்னும் சில தீய பழக்கமுடையவர்கள் சஜ்தா செய்யும்போது அவர்களின் மூக்கிலிருந்து வெளிப்பட்டுப் படியும் நோய்க் கிருமிகளும் ஆரோக்கியமானவர்களின் மூக்கு வழியாக உடலினுள் சென்று அவர்களையும் நோயாளிகள் ஆக்கும்.
அந்தத் தொழுகை விரிப்பைத் தினசரி சுத்தம் செய்யவும் முடியாது. வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எனச் சுத்தம் செய்தாலும் அதில் படிந்திருக்கும் தூசு, உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கிருமிகள் அதில் படிந்தே இருக்கும். தொழுகையாளி சஜ்தா செய்யும் போது அத்தூசும், கிருமிகளும் மூக்கு வழியே உடலுனுள்ளே சென்று பல கேடுகளை உண்டாக்கத் தான் செய்யும்.
முஸ்லிம்களை மயக்கித் தொழுகை விரிப்புகளை கோடிக்கணக்கில் விற்பதின் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் ஆதாயம். அவ்விரிப்புகள் மூலம் முஸ்லிம்களுக்கு ஏற்படும் நோய்களைப் போக்க பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகள் மூலம் கோடிக்கணக்கில் பெருத்த ஆதாயம். யாருக்கு? யூத இல்லுமினாட்டிகளுக்கு! முஸ்லிம்கள் எந்தளவு ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள், என்பது புரிகிறதா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்விதத் தொழுகை விரிப்பும் இல்லாமல் மண் தரையில் தான் தொழுதார்கள் என்பதற்கு பல ஹதீஃத் ஆதாரங்கள் இருக்கின்றன.]
முஸல்லா தொழும் இடமா? தொழுகை விரிப்பா?
(இதையும் எண்ணிப் பாருங்கள்; கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள் (என்றும் நாம் சொன்னோம்) இன்னும், என் ஆலயத்தைச் சுற்றி வருபவர்கள், தங்கி இருப்பவர்கள் ருகூஉ செய்பவர்கள். ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய் மையாக வைத்திருக்கவேண்டும் என்று இப்ராஹீமி டமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். (அல்பகரா : 2:125)
இந்த குர்ஆன் வசனத்தை மீண்டும் மீண்டும் படித்து அதன் சாரத்தையும், சத்தையும் உள்ளத்தில் பதிய வையுங்கள். முசல்லா என்பது தொழும் இடமே அல்லாமல் தொழுகை விரிப்பு அல்லவே அல்ல என உறுதியாகக் கூறுகிறது.
இந்த வசனம் யாருக்கு வஹியாக இறங்கியது? அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இறங்கியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதராகச் செயல்பட்ட அந்த 23 வருட வாழ்க்கையில் தொழுகை விரிப்பு விரித்துத் தொழுததாக ஒரேயயாரு ஆதாரமாவது இருக்கிறதா?
இல்லவே இல்லை.
அதற்கு மாறாக,
மஸ்ஜிதுன் நபவி இறைத்தூதரின் பள்ளிவாசல் மண் தரையாகவே இருந்தது. ஒரு ரமழான் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகை தொழுதார்கள். அன்று மழை பெய்தது. அவர்களின் நெற்றியில் ஈரம் காரணமாக மண் ஒட்டி இருந்ததை நாங்கள் பார்த்தோம் என்று நபிதோழர்கள் கூறியது செய்தியில் பதிவாகியுள்ளது.
இது மட்டுமா? முன்னைய சமுதாயங்களுக்குக் கொடுக்கப்படாத ஒரு தனிச் சலுகை இறுதிச் சமுதாயமான நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மண்ணில் தயம்மும் செய்வதும், உலகின் எப்பகுதியிலும் மண்ணில் தொழுவதுமாகும்.
தொழுகைக்குத் தனி விரிப்புத் தேவை என்றால், அதுதான் மார்க்கம் என்றால் அதை யார் காட்டித் தந்திருக்க வேண்டும்? இறுதித் தூதரல்லவா? காட்டித் தந்தார்களா? இல்லையே!
தொழுகை விரிப்பு, அவசியம் என்றால் என்ன செய்திருப்பார்கள்? ஈச்சம் கீற்றைக் கொண்டு பள்ளிக்குக் கூறை போட்டது போல், அந்தக் கீற்றைப் பாயாகவும் பள்ளியில் தொழுகை விரிப்பாகவும் செய்திருப்பார்களா? இல்லையா? செய்து காட்டினார்களா? இல்லையே! குறைந்தபட்சம் தொழ வைக்கும் தனக்கு மட்டிலுமாவது ஒரு சிறு பாயைப் பின்னி அதை விரித்து அதில் நின்று தொழ வைத்து நமக்கு வழி காட்டினார்களா? இல்லையே!
அப்படியானால் 2:125 குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டுள்ள முசல்லா-தொழும் இடம் என்று கூறப்படுவதை தொழுகை விரிப்பாகவும், இமாமுக்கு மஃமூம்களை விடத் தனித்து உயர்வாகக் காட்டும் ஒரு தனி விரிப்பாகவும் கற்பனை செய்தது யார்? உண்மையில் இருந்திருந்தால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதையும் அடையாளம் காட்டியே சென்றிருப்பார்களே!
”ஒரு காலம் வரும் நீங்கள் முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்; அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால், நீங்களும் அந்தப் பொந்தில் நுழைவீர்கள்.” (பார்க்க : புகாரீ : 3456, 7319, 7320, முஸ்லிம் : 5184)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் டிசைனான ஆடையில் தொழுகையில் அது தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அதைத் திருப்பிக் கொடுத்ததாக ஹதீஃத் உள்ள நிலையில் (பார்க்க புகாரீ : 373)
இன்று டிசைன் நிறைந்த தொழுகை விரிப்பை விரும்புகிறார்கள் என்றால் இவர்கள் யூதர்களைத்தானே பின்பற்றுகிறார்கள்?!
குர்ஆன் 2:125 வசனம் கூறும் முசல்லாவை தொழும் இடம் என்றிருப்பதை 2:159 குர்ஆன் வசனம் கூறுவது போல் தொழுகை விரிப்பாகத் திரித்துக் கூறி இமாம்களுக்கென்று ஒரு விசேஷ தனி விரிப்பாக்கி, அதையும் தொழும்போது மனதை அலைபாயச் செய்யும் பல வண்ணம் நிறைந்ததாக்கித் தொழுகையைப் பாழாக்குவது, யூத, கிறித்தவர்களின் நடைமுறையிலிருக்கும் ஜெபமாலையை தஸ்பீஹ் மணி என்ற பெயரால் பயன்படுத்துவது, அவர்களையே பின்பற்றி 7:55, 205 குர்ஆன் வசனங்களை நிராகரித்து (குஃப்ரிலாகி) கூட்டுப் பிரார்த்தனையை (கூட்டு துஆ) நடைமுறைப்படுத்துவது சரிதானா?
இந்த முசல்லா விஷயத்தைப் பாருங்கள்! தொழும் இடத்தை தொழுகை விரிப்பாக ஆக்கி, அதுவும் இமாம்களுக்கு என்று தனி விசேஷ விரிப்பாக ஆக்கிப் பெருமை தேடுகிறார்கள். அதுவும் யூத இல்லுமினாட்டிகள் வலையில் சிக்கி ஆன்மீக அடிப்படையில் தொழுகையைப் பாழாக்குவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து வருகிறார்கள்.
யூத, கிறித்தவர்கள் திட்டமிட்டுத் தயாரித்து, முஸ்லிம்களின் மனதை மயக்கி தொழுகை விரிப்பாகக் கொடுக்கும் அந்த விரிப்புகள் விரித்த சில நாட்களிலேயே அதன் மேல் பரப்பில் தூசு படிய ஆரம்பிக்கும். அந்த வகையில் தான் தொழுகை விரிப்புத் திட்டமிட்டு அவர்களால் தயாரிக்கப் படுகிறது. இவை போதாதென்று புகை, பொடி இன்னும் சில தீய பழக்கமுடையவர்கள் சஜ்தா செய்யும்போது அவர்களின் மூக்கிலிருந்து வெளிப்பட்டுப் படியும் நோய்க் கிருமிகளும் ஆரோக்கியமானவர்களின் மூக்கு வழியாக உடலினுள் சென்று அவர்களையும் நோயாளிகள் ஆக்கும்.
அந்தத் தொழுகை விரிப்பைத் தினசரி சுத்தம் செய்யவும் முடியாது. வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எனச் சுத்தம் செய்தாலும் அதில் படிந்திருக்கும் தூசு, உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கிருமிகள் அதில் படிந்தே இருக்கும். தொழுகையாளி சஜ்தா செய்யும் போது அத்தூசும், கிருமிகளும் மூக்கு வழியே உடலுனுள்ளே சென்று பல கேடுகளை உண்டாக்கத் தான் செய்யும்.
முஸ்லிம்களை மயக்கித் தொழுகை விரிப்புகளை கோடிக்கணக்கில் விற்பதின் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் ஆதாயம். அவ்விரிப்புகள் மூலம் முஸ்லிம் களுக்கு ஏற்படும் நோய்களைப் போக்க பக்கவிளைவு களை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகள் மூலம் கோடிக்கணக்கில் பெருத்த ஆதாயம். யாருக்கு? யூத இல்லுமினாட்டிகளுக்கு! முஸ்லிம்கள் எந்தளவு ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள், மூடர்களாக இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?
தொழவைக்கும் இமாம்களின் அறியாமை அல்லது அறிவீனத்தைப் பயன்படுத்தி இந்த இல்லுமினாட்டி யூதர்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன தெரியுமா? தொழும் இடத்தை (முசல்லா) தொழுகை விரிப்பாக்கிய முஸ்லிம்களின் அறிவீனத்தைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் டிசைன், டிசைன் தொழுகை விரிப்புகளை உற்பத்தி செய்து பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டும் யூதர்கள் அதற்கும் ஒரு படி மேலே போய் இமாம்களுக்கு மட்டுமல்ல பின்பற்றித் தொழும் தொழுகையாளிகளுக்கும் தொழுகை விரிப்பாக பெரும் விரிப்புகளை கார்ப்பெட்டில் டிசைன் டிசைன் என உற்பத்தி செய்து பள்ளி நிர்வாகிகள் தலையில் கட்டித் தங்கள் வருமானத்தை மேலும் பல மடங்குப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி நிர்வாகிகளும் அவற்றை பெருந்தொகை கொடுத்து வாங்கி பள்ளிகளில் விரித்துப் பெருமை கொள்கிறார்கள். வீண் பெருமை! (பார்க்க : 7:146)
இப்படி வீண் பெருமை கொள்கிறார்களே அல்லாமல் அவற்றால் ஏற்படும் பெருந்தீங்கை உணர்வதாக இல்லை. மனிதனின் ஆரோக்கியத்திற்குப் பெருங் கேட்டை விளைவிக்கும் தூசு படலங்களையும், நோய் நுண் கிருமிகளையும் சுஜூது செய்யும் போது நேரடி யாக மூக்கு வழியாக உடலுனுள்ளே செல்ல எளிதாக வழி அமைத்துக் கொடுக்கிறார்கள் பள்ளி நிர்வாகிககள்.
அதனால் தொழுகையாளிகள் பெரும் பெரும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதனால் தொழப் போய் தானே இந்த நோய்களுக்கு ஆளாகிறோம் என சில மூட முஸ்லிம்கள் தொழுகையை விட அதாவது பள்ளிப் பக்கமே வராத சூழ் நிலை ஏற்படுகிறது.
பெருங்கொண்ட முஸ்லிம்களை தொழுகையிலேயே சுஜூதில் அசுத்தக் காற்று மூலம் நோயாளிகளாகவும், அதனால் தொழுகையற்றவர்களாகவும் ஆக்குவதன் மூலம் பெருத்த லாபத்தை அடைகிறார்கள்.
அதேபோல் யூத இல்லுமினாட்டிகள் தனித் தொழுகை விரிப்புகள், கார்ப்பெட் தொழுகை விரிப்புகள் என டிசைன், டிசைன் என விதவிதமாகத் தயாரித்து முஸ்லிம்களிடையே விற்பனை செய்து பல்லாயிரம், லட்சம் கோடி என கோடி கோடியாகப் பணத்தைப் பறிப்பதன் மூலம் பெரும் வருமானம்.
முஸ்லிம்கள் சுஜூது செய்யும் விரிப்புகளாக்கி, அதனால் பல நோய்களுக்கு அவர்களை உட்படுத்தி அதனால் மருந்து மாத்திரை என மேலும் கோடி கோடியாக முஸ்லிம்களின் பணத்தை அபகரிக்கும் நச்சுத் திட்டத்தை மிக மும்முரமாக அரங்கேற்றி வருகிறார்கள். ஏமாளிகள் முஸ்லிம்களே!
முஸ்லிம்(ர.அ.) ஹதீஃத் 502, 503 இரண்டிலும் பாய் (MAT) என்றிருப்பதைத் தொழுகை விரிப்பு (மவலவிகள் பாஷையில் முசல்லா) என்று தவறாக சுயநலத்துடன் மொழி பெயர்த்துள்ளனர்.
இப்போது சிந்தியுங்கள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்விதத் தொழுகை விரிப்பும் இல்லாமல் மண் தரையில் தான் தொழுதார்கள் என்பதற்கு பல ஹதீஃத் ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உலகம் முழுவதும் தொழுமிடமாக ஆக்கித் தந்துள்ளான். இந்தச் சலுகை இறுதி உம்மத்தாகிய நமக்கு மட்டுமே கிடைத்த சலுகை.
அறிவியல் முன்னேற்றம் காரணமாக மண் தரை, சிமெண்ட் தரையாக முன்னேறியது. இப்போதோ அந்த சிமெண்ட் தரையும் முன்னேறி பளிங்கு போல் காட்சி தரும் மார்பிள், மொசைக் தரை யில் பள்ளிகள் காட்சி அளிக்கின்றன. அவற்றின் மேல் உணவிட்டுச் சாப்பிட முடியும். அந்தளவு சுத்தமாக இருக்கின்றன. மிக எளிதாகச் சுத்தப்படுத்தவும் முடி யும். இவர்கள் விரிக்கும் பாயிலோ, கார்ப்பெட்டிலோ, தொழுகை விரிப்பிலோ – முசல்லாவிலோ அப்படிப்பட்டச் சுத்தத்தைப் பார்க்க முடியுமா? ஒருபோதும் முடியாது.
பாயிலிருக்கும் சுத்தத்தைக் கூட கார்ப்பெட்டிலோ, இமாம்களுக்காகப் பிரத்தியேகமாக விரிக்கப்படும் விரிப்பிலோ – முசல்லா(?) பார்க்க முடியாது. இந்த நிலையில், பாய் விரிக்கப் பட்டிருந்தாலும், அதற்கு மேல் இவர்களின் கண்ணைக் கவரும் பல டிசைன்களில் இவர்களை வழி கெடுப்பதற்கென்றே யூதர்கள் திட்டமிட்டுத் தயாரித்துத் தந்த தொழுகை விரிப்பு – முசல்லா (?), அனைவருக்கும் தொழுவதற்கென்று கார்ப்பெட் டிசைன், டிசைன்களாக விரிக்கப்பட்டிருந்தாலும், அதன் மேல் இன்னொரு டிசைன் நிறைந்த தொழுகை விரிப்பு – முசல்லா(?)) இதிலென்ன பெருமை?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே விரும்பாத இந்த வீண் பெருமை இவர்களுக்குத் தேவையா? 7:146 குர்ஆன் வசனம் இவர்கள் கண்ணில் படவில்லையா?