ஆண்களுக்கு விஞ்ஞானிகளின் எச்சரிக்கை!
மனிதகுலம் அழிய ஆரம்பிக்கப்போகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் பிரான்சில் நடத்தப்பட்ட ஆராட்சிகள் பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
உடலுறவின்போது ஆண்களில் இருந்து வெளியாகும் விந்தணுக்கள், பெண்ணின் சூல் பையை அடைந்து கர்ப்பம் தரிக்கிறது. அப்படி அது நீந்திச் சென்று, கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், விந்தணுக்களை எடுத்து, வயிற்றில் உள்ள பெண்களின் கருப்பையில் போட்டு கருக்கட்ட முடியும்.
இதேபோல பிற விதத்திலும் கருக்கட்ட முடியும். ஆனால் விந்தணுக்கள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? அது தான் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்!
அதாவது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் தற்போதைய இளைஞர்களுக்கு கூட விந்தணுக்கள் குறைவாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
விந்தணு குறைவதற்கும் செக்ஸ் மற்றும் உடலுறவுக்கும் எந்தக் காரணங்களும் இல்லை என்பதனை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு இளைஞர் செக்ஸில் படு கில்லாடியாக இருக்கலாம். ஆனால் அவர் விந்துவில் வெளியாகும் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்தால், அவரால் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்ய முடியாது. இப்படியான நிலை நீடித்தால், இன்னும் சில நூறு ஆண்டுகளில் மனித குலம் இல்லாமே போய்விடும்.
விண் கல் மோதத் தேவையில்லை! ஆண் ஒருவர் உடலுறவில் ஈடுபடும்போது அவரது ஆணுறுப்பில் இருந்து வெளியாகும் விந்துவில், பல மில்லியம் உயிரணுக்கள் காணப்படும். குறிப்பாக, 1 மில்லி லீட்டர் விந்துவில், சுமார் 71.4 மில்லியன் உயிரணுக்கள் காணப்படும்.
இது 1989ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. ஆனால் 1992ம் ஆண்டு இது 67 மில்லியனாகவும், பின்னர் 1996ம் ஆண்டு 60 மில்லியனாகவும், பின்னர் 2001 ல் 40 மில்லியனாகவும் குறைவடைந்துள்ளது. தற்போது இது மேலும் குறைவடைந்துள்ளதாம்(ஆண்களில்).
அதாவது உலகில் உள்ள அனைத்து ஆண்களிலும் இது நடைபெற்று வருகிறது
என்கிறார்கள் மருத்துவர்கள். விளையாட்டுத் துறையில், நீச்சலில், மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் முன் நிலை வகிக்கும் இளைஞர்களில் கூட இக் குறைபாடு மெல்ல மெல்ல தலைதூக்குவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் வேடிக்கையாக இருக்கும். அதாவது தற்போதைய இளைஞர்கள் பாவிக்கும் இறுக்கமான ஜட்டிகள் தானாம் முதல் காரணம் என்கிறார்கள்.
இதேபோல நவீன காலத்தில் நாம் பாவிக்கும் சில மருந்துவகைகள் மற்றும் இறுக்கமான ஜீன்ஸ் போன்றவை, விந்து உற்பத்தையை மட்டுமல்ல, உயிரணுக்களின் உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கிறது. ஆண்களும் சரி, பெற்றோர்களும் சரி ஒரு விடையத்தை நன்கு அறிந்து வைத்திருக்கவேண்டும். பெண்களில் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் ஆண்களில் உள்ளது. என்ன தான் பெண் கர்ப்பமாகி, ஒரு பிள்ளையைப் பெற்று தாய் ஆகலாம். ஆனால் ஆண்களில் உள்ள அசையக் கூடிய விந்தணுக்களே , பெண்களின் கருப்பைக்குள் சென்று, கருமுட்டைக்கு உயிர் கொடுக்கிறது என்பதே உண்மையாகும்.
இதில் உயிருள்ள விந்தணுக்கள் உற்பத்தியாவது ஆண்களில் இருந்து தான். இதனை உற்பத்திசெய்யும் ஆண்களின் விதைப் பை, உடலுக்கு வெளியே அமைந்துள்ளது என்பதனை பலர் மறந்து விடுகின்றனர். ஆண்களின் விதைப் பையின் தோல் தானே சுருங்கி விரியும் தன்மை கொண்டது. இது மிகவும் அதிசயமானதும் கூட.
உடலில் வெப்பம் அதிகரித்தால், அதன் தசைகள் நீண்டு, விதைப் பையை உடலில் இருந்து சற்று கீளே இறக்கிவிடும். அதேபோல குளிர் என்றால், விதைப் பையின் தசை சுருங்கி உடலோடு ஒட்டிவிடும். இதன் காரணமாக இந்த விதைப் பை தானே ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை எப்போதும் பாதுகாத்துக் கொள்ளும் திறன்கொண்டது.
இதன் காரணமாகவே ஆரோக்கியமான விந்தணுக்களை அது தயாரிக்க முடியும். ஆனால் நவீன காலத்தில், ஆண்கள் அணியும் ஜட்டி மற்றும் இறுக்கமான ஜீன்ஸ் போன்றவை, விதைப் பை வெப்பம் கூடினால் கீழே இறங்கவிடாது தடுத்து விடுகிறது. மற்றும் விதைப் பைக்கு அழுத்தத்தையும் கொடுக்கிறது. இதன் காரணமாக விதைப் பை கடும் பாதிப்புக்கு உள்ளாவாதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இந் நிலை நீடித்தால், இன்னும் சில நூறு வருடங்களில், ஆண்களால் பெண்களை கருத்தரிக்க வைக்க முடியாத நிலை தோன்றும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித குலத்தின் அழிவுக்கு ஆண்களே காரணமாகி விடுவார்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்காக சில வேளைகளில் மில்லியல் அல்ல ரில்லியன் கணக்கில் பலரது விந்தணுக்களைச் சேமித்து வைப்பது தொடர்பாகவும் ஆரயப்படுகிறது.
சிலவேளைகளில் இனிவருங்காலங்களில், ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடலாம் ஆனால் பிள்ளைகள் பிறக்காது. பிள்ளை வேண்டும் என்றால், விந்தணு என்னும் வங்கியில் இருந்து கடன் வாங்கி அதனை கருப்பைக்குள் செலுத்தி கருக்கட்டவேண்டிய சூழ் நிலை கூடத் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆனால் நம்ம ஊரு காரர் எல்லாம் படுகில்லாடிகள் போல இருக்கே! அதுதான் அந்த காலத்தில் அவர்கள் கோவணத்தைக் கட்டினார்களோ?