தடுத்துவிட முடியுமா?
இறைவன் சிந்திக்க சொன்ன சமுதாயமே!
சிந்திக்காமல் தடுமாறும் சமுதாயமே!
தடுமாறும் காரணம் எது?
வீரமா? அழகா? அறிவா?
செல்வமா? குடும்பமா? இளமையா?
அரசியலா? சினிமா-வா?
பெருமையா? கர்வமா?
ஆடம்பரமா? பதவியா?
சிந்திக்காமல் தடுமாற வைப்பது எது?
தெரிந்துக்கொள்ளுங்கள்.
மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 3 :145)
மரணம் வரும்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
எனக்கு வயது 28 தானே ஆகுது இன்னும் காலம் இருக்கு பார்த்துக்கலாம் என்று சொல்லும் வாலிபர்களுக்கும்…
உனக்கு வயசு இருக்கு அதுக்குள்ள இதெல்லாம் எதுக்கு என்று சொல்லும் பெரியவர்களுக்கும்….
மரணத்திற்கு வயது தெரியாது.
மரணம் வரும்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை எது?
எனக்கு 28 தான் ஆகுது என்றா?
எனக்கு முன்னாள் பல வயதானவர்கள் இருக்கின்றார்கள் என்றா?
நான் வீட்டிற்கு செல்லப்பிள்ளை என்றா?
நான் உடற்கட்டான(gym body) நபர் என்றா?
நான் ஆரோக்கியமாகவும் அழகாகவும் அறிவாகவும் இருக்கின்றேன் என்றா?
என்னை சுற்றி நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்றா?
என்னுடன் என் குடும்பம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றார்கள் என்றா?
என் தந்தை அல்லது நான் பெரிய பதவியில் இருக்கின்றார்(றேன்) என்றா?
நான் அப்பாவி நல்லவன் என்றா?
நான் வீரமிக்கவன் என்றா?
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றா?
எனக்கு இன்னும் குழந்தைகள் இல்லை என்றா?
நான் என் பெற்றோர்க்கு எந்த கடமையும் செய்யவில்லை என்றா?
இன்னும் சில காலம் வாழ்ந்துக்கொள்கிறேன் என்றா?
இறைவன் சிந்திக்க சொன்ன சமுதாயமே!
சிந்திக்காமல் தடுமாறும் சமுதாயமே!
தடுமாறும் காரணம் எது?
வீரமா?
அழகா?
அறிவா?
செல்வமா?
குடும்பமா?
இளமையா?
அரசியலா?
சினிமா-வா?
பெருமையா?
கர்வமா?
ஆடம்பரமா?
பதவியா?
சிந்திக்காமல் தடுமாற வைப்பது எது?
தெரிந்துக்கொள்ளுங்கள்.
மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 3 :145)
“நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்”. (அல்குர்ஆன் 3:154)
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!. (அல்குர்ஆன் : 4:78)
ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:185)
தடுத்துவிட முடியுமா?
“நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!” (அல்குர்ஆன் : 3:168)
வாழ்வும், மரணமும் அவன் கைவசமே உள்ளன. மேலும், அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாப்பவரும் உதவிபுரிபவரும் யாருமில்லை. (அல்குர்ஆன் : 9:116)
யா அல்லாஹ்
“எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!” (அல்குர்ஆன் : 3:193)