Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொடரும் குழப்பம்! படரும் அச்சம்!! தடுப்பூசி 10 உண்மைகள்!!!

Posted on February 2, 2017 by admin

தொடரும் குழப்பம்! படரும் அச்சம்!! தடுப்பூசி 10 உண்மைகள்!!!

தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நோய் வருமுன் மக்களைக் காப்பதற்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதனை பற்றிய சர்ச்சைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தடுப்பூசி பற்றி சில உண்மைகளை பார்ப்போமா…

1. இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவாரக இருந்த டாக்டர்.ஜேக்கப் புலியேல் உ.பி. போலியோ சொட்டு மருந்து பாதிப்பு பற்றி கட்டுரை எழுதியுள்ளார். 2006-ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் கூறுகிறது அக்கட்டுரை.

2. ஒவ்வொரு ரசாயன மருந்திற்கும் பக்கவிளைவுகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் பற்றி ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்? ஒரு தடுப்பூசியின் பக்க விளைவாக சொல்லப்படுவது என்ன தெரியுமா? SIDS. அதாவது, சடர்ன் இன்பேன்ட் டெத் சிண்ட்ரொம் (SUDDEN INFANT DEATH SYNDROME). குழந்தை திடீரென்று இறந்து விட வாய்ப்பு உண்டு என்று அர்த்தம். எந்த மருந்துக் கம்பெனியாவது இது குறித்து பெற்றோர்களிடம் பேசியிருக்கிறதா?

3. தடுப்பு மருந்தில் இருக்கும் பிரச்னைகள் ஒருபுறம் இருக்கட்டும். தடுப்பூசி போடப்பட்ட பிறகு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும்,முறையாக நடத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டிலே பல முறை இந்த பாதிப்பில் பல குழந்தைகள் இறந்திருக்கின்றன. 2008, மே மாதத்தில் ஏழு மாவட்டங்களில் பத்துக் குழந்தைகள் இறந்து போனபோதும் சரி, அதற்கு முன்பு அஸ்ஸாமில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டபோதும் சரி, 2002 ஆம் ஆண்டின் உ.பி.யில் நடந்த போலியோ முகாமில் 26 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டபோதும் சரி – ஏன் இப்படி நடந்தது என்பதற்கான எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. தீர்வும் எட்டப்படவில்லை.

4. உலகப் புகழ்பெற்ற திம்மர்சால் எனும் பாதரசம்தான் தடுப்பு மருந்துகளின் முதல் ப்ரிசர்வேடிவ். ஆனால், இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நியூரோ டாக்சின் என்பது எல்லா விஞ்ஞானிகளுக்குமே தெரியும். சில தடுப்பு மருந்துகளில் திம்மர்சாலுக்கு பதிலாக அலுமியம் (Alumiyam), பார்மால்டிஹைட், எச்.சி.ஜி (HCG) எனும் ஹார்மோன் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஹார்மோன் பெண்கள் கருவுற்றிருக்கும்போது சிசுவை பாதுகாப்பதற்காகப் பயன்படும் ஹார்மோன் ஆகும். இதனை தடுப்பு மருந்தில் பயன்படுத்தும் போது விஷயம் இன்னும் சிக்கலாகிறது. ஹார்மோன் கலந்த தடுப்பூசியைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கரு தங்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.

5. தடுப்பூசிக்கும் – கருவுக்கும் என்ன சம்பந்தம்? HCG ஹார்மோன் கிருமிகளுடன் தடுப்பு மருந்தாக செலுத்தப்படும்போது கிருமிகளை எதிர்க்கும் ஃபார்முலாவை நம் எதிர்ப்பு சக்தி கண்டுபிடிப்பதைப் போலவே, இந்த HCG யையும் எதிர்த்து அழித்து விடும். ஏனெனில், உடலுக்கு வெளியில் இருந்து செலுத்தப்படும் அந்நியப் பொருட்களை நம் உடல் ஃபாரின்பாடியாகவே (foreign bodies) பார்க்கிறது. இப்படி ஒருமுறை HCG யை அழித்து நம் உடல் பழகி விட்டால் – பெண்ணின் உடலில் இயற்கையாக சிசு வளர்ப்பிற்காக HCG உருவாகும்போதும் இந்த அழிப்பு நடவடிக்கை நடைபெற வாய்ப்புண்டு.

6. தடுப்பூசி பாதிப்புகள் என்று பெற்றோர் கூறும் புகார்களை கண்டுகொள்ள வேண்டாம் என்றும், இந்த விளைவுகளுக்கும் தடுப்பூசிகளுக்கும் தொடர்பே இல்லை என்று கூறும்படியும் அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையை அமெரிக்க ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

7. போலியோ, பெரியம்மை போன்ற நோய்களை தடுப்பூசிகள் அழித்து விட்டிருக்கிறதே என்று அமெரிக்க டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங்கிடம் கேட்டார்கள். அவரின் பதில் – “இது அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப் பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது. ஆனால், 1957-இல் தான் போலியோ தடுப்பு மருந்து பிரசாரம் செய்யப்பட்டது. தடுப்பூசிகள் வந்த பிறகு, மூளை , தண்டு வட பாதிப்புகள் மிக அதிக அளவில் பெருகியுள்ளன. போலியோ மருந்தைக் கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க் தன் மருந்தால் 3 இல் 2 பங்கு போலியோ அதிகரிப்பு ஏற்பட்டுவிட்டதாக அறிவித்தார்.”

8. அமெரிக்காவில் கக்குவான் இருமலால் இறப்பவர்களின் எண்ணிக்கை, பத்துப்பேர்தான். இதற்கான தடுப்பூசிக்குப் பிறகு, ஆண்டிற்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.

9. 2017, ஜனவரி 30 அன்று டெக்கான் கிரானிகிள் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில் விசாகப்பட்டினம் அருகே நடந்த போலியோ முகாமில் இறந்த குழந்தைகள் பற்றி இடம்பெற்றுள்ளது, இறப்பிற்கு இன்னும் காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

10. அமெரிக்காவில் 32 தடுப்பூசிகள் ,குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. தன் குழந்தைக்கு இவற்றைகொடுக்க விரும்பவில்லை என்றால் எந்தக் கட்டாயமும் இல்லை. பெற்றோரிடம் இருந்து ஒரு கடிதம் பெற்றுக்கொண்டு விட்டால் தடுப்பூசி போடாமல் விட்டு விடுவார்கள். அமெரிக்காவில் டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங் தலைமையில் தடுப்பூசி போட விரும்பாத பெற்றோர்கள் தனி அமைப்பாகவே இயங்குகிறார்கள்.

அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் பின்னிணைப்புகள்:
தடுப்பூசி பற்றிய உண்மைகளை தன் கட்டுரை மூலம் வெளிப்படுத்துகிறார் மருத்துவப் பேராசிரியரும், டாக்டருமான ஹெக்டே. இவர் மணிப்பால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.

http://www.moneylife.in/article/vaccination-the-inside-story/24108.html

தடுப்பு மருந்துகள் பற்றிய அடிப்படை ஃபார்முலாவில் இருந்து, சட்ட பாதுகாப்பற்ற நிலை வரை தடுப்பூசிகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. ஒரு அரசின் நிலையில் எல்லா ஆய்வுகளும் சாத்தியமில்லை. ஆனால், தடுப்பு மருந்துகளை தன் குழந்தைகளுக்கு செலுத்த விரும்பாத பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதை மட்டும் கைவிட முடியும்.

source:  http://www.vikatan.com/news/health/79418-false-perceptions-and-ten-facts-about-vaccines.art

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 60 = 64

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb