“மெய்” ஒன்றுபட்டது! “பொய்” இரண்டு பட்டது!
Rahmath Rajakumaran
“மெய்” என்றால் ஒன்றுபட்டது என்றும், “பொய்” இரண்டு பட்டது என்றும் பொருள்படும்.
பொய் என்றால் இல்லாதது என்று பலரால் கருதப்படுகிறது இல்லாதது எப்படி இருக்க முடியும்? அதை எப்படி சொல்ல முடியும்? இருப்பதைத்தான் பேசுகின்றோம். இருப்பதாக கருதுகின்றோம்.
ஒருவன் ஒரு பொருளை வைத்து இருக்கிறான். .ஆனால் கேட்பவர்களுக்கு அப்பொருளை இல்லை என்று சொல்கிறான். இந்த இடத்தில் “இல்லை” என்று சொல்வதை “பொய்” என்று சொல்கின்றோம். அந்தப் பொருளை அவன் வைத்திருப்பது அவன் உள்ளத்தில் மறைந்து விடவில்லை, வேறு ஏதோதொரு காரணத்தால் இல்லை என்று சொல்கிறான்.
அவனுடைய உள்ளத்தில் அப்பொருள் இருப்பது இல்லை என்று சொல்ல வேண்டும் என்பது ஆகிய இரண்டும் இருக்கின்றன. ‘இருக்கிறது’ என்ற ஞாபகத்தோடு இல்லை என்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டுபட்டு விட்டது. அதே பிளவுபட்ட கருத்து சொல்லிலும் வந்தால் அதை ‘பொய்’ என்று சொல்கிறோம்.
“பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? என்று விஞ்ஞானம் கேள்வி எழுப்புகிறது அதற்குப் பதில் மெஞ்ஞானத்தின் மூலமாக “இறைவன்” “கடவுள்” என்று சொன்னதும், உடனே ”அந்தக் கடவுளைப் படைத்தது யார்?” என்று அடுத்த கேள்வியை அறிவு பூர்வமாக கேட்டு விட்டதாக விஞ்ஞானம் தன்னைத்தானே மெச்சிக் கொள்கிறது.
இதேபோன்று ஏக நிலையாக – அரூப நிலையாக இருக்கிற தெய்வ நிலையை விஞ்ஞானம் அணுவாகவும் பரிணாமடைந்து விட்டபின், அது இருநிலைப்படுத்திக் கொண்டனர். இவற்றில் பின்னர் தோன்றிய அணு முதல் அண்ட கோடிகளையும , அவற்றின் இயக்க நிகழ்ச்சிகளையும் விஞ்ஞானிகள் பொய் என்று சொல்கின்றனர் அதாவது இரண்டு பட்ட நிலை என்று சொல்கிறார்கள் அதனால்தான் அந்த கடவுளைப் படைத்த இன்னொரு கடவுளை தேடுகிறார்கள்.
இப்படி ஏக நிலையாக உள்ள அரூப நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை “ஞானம்” (Wisdom) என்றும், அதை மறந்து இரண்டுபட்ட நிலையை மாத்திரம் கண்டு அறிவு (knowledge) மிரட்சி கொண்டு இயங்கி நிற்கும் நிலையை “மாயை” என்றும் மெஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
(மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்;
(ஒன்றுக்குப் பதிலாக) இரண்டு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக உங்களுடைய வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான் ஆகவே (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (திருக்குர்ஆன் 16 : 51)
Rahmath Rajakumaran