செல்லாத நோட்டுகள்! சொல்லும் பாடங்கள்!
எஸ்.முஹம்மது சலீம், ஈரோடு
கடந்த 08.11.2016 செவ்வாய் அன்று இரவு எட்டு மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று இந்திய பிரதமர் அறிவித்தவுடன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை காணமுடிந்தது.
மேலும் இந்த அறிவிப்புத் தொடர்பாக மக்கள் பற்பல விமர்சனங்களைச் செய்துகொண்டு தங்களது நேரங்களை கழித்து வருகிறார்கள். தொலைகாட்சிகளிலும் இது சம்பந்தமாக வரும் செய்திகளை ஆர்வத்தோடு பார்த்தும் வருகிறார்கள்.
ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் இவ்வாறு பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இந்த சம்பவத்திலிருந்து என்ன பாடம் படிக்க வேண்டுமோ அத்தகையப் பாடத்தைப் படித்து மறுமை வாழ்க்கைக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வான்.
குறிப்பாகச் செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு மிகப் பெரிய அளவில் கஞ்சத்தனம் செய்யும் செல்வந்தர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு ஏழை எளிய மக்களுக்குத் தாராளமாக உதவிகள் புரிந்து தன்னை ஒரு சிறந்த முஸ்லிமாக மாற்றிக் கொள்வதற்கு இந்தச் சம்பவத்தை குர்ஆன் ஹதீஃதோடு ஒப்பிட்டுப் படிப்பினை பெற்று மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக ஒருசில விஷயங்களைக் குறிப்பிடுகிறோம்.
முன்னறிவிப்புகள் வெளிப்படும் காலம் :
மறுமை நாள் நிகழ்வதற்கு முன்பாக நடக்க விருக்கும் பல விஇஷயங்களைக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த வகையில் செல்லாத பணம் குறித்து செய்த முன்னறிவிப்பை பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இராக் தனது(நாணயமான) திர்ஹமையும் (அளவையான) கஃபீஸையும் மறுக்கும் ஷாம் (சிரியா) தனது (அளவையான) “”முத்யு”வையும் தீனாரையும் மறுக்கும் மிஸ்ர் (எகிப்து) தனது அளவையான “”இர்தப்பை”யும் தீனாரையும் மறுக்கும். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். இதை அறிவித்த அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “”இதற்கு அபூ ஹுரைராவின் சதையும் இரத்தமும் சாட்சியளிக்கின்றன” என்றார்கள். (நூல்: முஸ்லிம் 5552)
அபூ நள்ரா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது :
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் “”இராக் வாசிகளிடம் (அவர்களின் அளவையான) கஃபீஸோ (அவர்களின் நாணயமான) திர்ஹமோ கொண்டு வரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது என்று கூறினார்கள். நாங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படாது? என்று கேட்டோம். அரபு அல்லாத பிற மொழி பேசுபவர்கள் அவற்றைத் தர மறுப்பார்கள் என்று கூறிவிட்டு பிறகு ஷாம்(சிரியா)வாசிகளிடம் தீனாரோ (அவர்களின் அளவையான) “முத்யோ’ கொண்டு வரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது என்று கூறினார்கள். நாங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படாது? என்று கேட்டோம். அதற்கு ரோமர்களிடமிருந்து கொண்டு வரப்படாது என்று கூறிவிட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் இறுதிச் சமுதாயத்தில் ஓர் ஆட்சியாளர் (கலீஃபா) இருப்பார்; அவர் எண்ணிப் பார்க்காமல் வாரி வாரி வழங்குவார் என்று கூறினார்கள் என்றார்கள். (நூல்: முஸ்லிம் 5586)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்தியப் பிரதமர் அவரது தனிப்பட்ட அதிகாரத்தின் மூலமாக ஒருபோதும் அறிவிக்க முடியாது; மாறாக இந்திய ரிசர்வ் வங்கி உட்பட உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியினை நிர்வகித்து வரும் அந்நிய மொழியினரான யூத முதலாளிகளின் ஒப்பு தலோடுதான் இந்த காரியம் நடைபெற முடி யும். இது உலக நடப்புகளைக் கவனித்து வரும் அனைவரும் அறிந்த சாதாரண விஇஷயம்.
மேற்கண்ட ஹதீஃதில் இராக், சிரியா, எகிப்து போன்ற நாடுகளைக் குறிப்பிட்டிருப்பதால் அந்நாட்டிற்கு மட்டுமே இந்நிலை ஏற்படும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. யூத, கிறித்தவர்களால் உலகில் உள்ள பல நாடுகளுக்கும் இந்நிலை ஏற்படும் என்றே புரியவேண்டும். மேலும் ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் என்ற அறிவுரையை நாம் நமது மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் தங்கம், வெள்ளி, ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை மற்றும் விளைநிலங்கள் ஆகியவைகள் மட்டுமே உலகியல் தேவைகளுக்கு பயன்படும் என்பதை உணர்ந்து வெற்று காகிதங்களின் மேல் உள்ள தீராத பற்றை விட்டொழிப்போமாக.
உபரியான பொருளாதாரம் எதற்கு?
”அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது தேவைக்குப் போக அதிகமான அளவில் பொரு ளாதாரத்தை வழங்குவது அவனது பெட்டியில் பணத்தை அடுக்கி வைத்து அழகு பார்ப்ப தற்காக அல்ல. மாறாக ஏழை எளிய மக்களின் ஹலாலான தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இதன் வாயிலாக ஏராளமான நன்மைகளை அடைந்து மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான்; இது குறித்து குர்ஆனில் ஏராளமான இடங்களில் செல்வந்தர்களுக்கு அல்லாஹ் கூறியுள்ள அறிவு ரையை பாருங்கள். உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக.” (குர்ஆன் : 17:26)
”நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்தும்படியும், நன்மை செய்யும்படியும், உறவினர்களுக்கு கொடுக்கும்படியும் கட்டளையிடுகிறான்.” (குர்ஆன்: 16:90)
”யாசிப்பவருக்கும், இல்லாதவர்களுக்கும், அவர்களது செல்வங்களில் பங்குண்டு.” (குர்ஆன்: 51:19)
தேவைக்குப்போக மீதியுள்ள பணத்தில் உரிமை பெற்றவர்களான உறவினர்கள், ஏழைகள், கடனாளிகள், தேவையுள்ளவர்கள் அவர்களது ஹலாலான தேவைகளுக்கு கேட்கும் போது செல்வந்தர்கள் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். அல்லாஹ் யாருக்குக் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளானோ அந்த கட்டளையை ஏற்க மறுத்து தன் மனம் போனபோக்கில் போக வைத்தால் இந்தப் பணம் மறுமையில் நம்மை காப்பாற்றாது என்பதை செல்வந்தர்கள் உணர வேண்டும்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அர சாங்கம் அறிவித்தவுடன் பதறிய செல்வந்தர்களே! ஏழை எளிய மக்களுக்கு சொந்தமான பணத்தை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்கி வைப்பதால் மறுமையில் ஏற்படப் போகும் இழப்பை எண்ணிப் பதற வேண்டாமா?
500, 1000 ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட தவணைக்குள் மாற்றியாக வேண்டும்; அப்போதுதான் நமது பணம் நமக்கு உதவும் என்பதற்காக வங்கிகளுக்கு அலைந்து திரிந்ததை போன்று, மரணம் என்ற தவணை வருவதற்கு முன் ஏழை, எளிய மக்களைத் தேடிச் சென்று அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருளா தாரத்தை கொடுத்து மறுமையில் நன்மையை அடைய வேண்டாமா?
அரசாங்கத்தின் கட்ட ளையை ஏற்க மறுத்து 500, 1000 ரூபாய் நோட்டு களைப் பத்திரமாக பதுக்கி வைத்து கொண் டால் அது வெற்று காகிதமாக மாறிவிடும் என்பதை உணர்ந்து அவசர அவசரமாக செயல்பட்ட செல்வந்தர்களே, அல்லாஹ்வின் கட்டளைகளை நீங்கள் ஏற்க மறுத்து அலட்சியப் படுத்தினால் மறுமையில் உங்களது சொத்து உங்களுக்கு எதிரானதாக மாறிவிடும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
”அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஜகாத்தை அவர் செலுத்த வில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் கொடிய விஇஷமுடைய பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை அதாவது அவரது தாடைக ளைப் பிடித்துக் கொண்டு நான் தான் உனது செல்வம். நான்தான் உனது கருவூலம் என்று சொல்லும். இவ்வாறு கூறிவிட்டு பின்வரும் இறைவசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். தமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீங்கு தான். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்(து சேமித்)தார்களோ அது மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் சுற்றப்படும்.” (குர் ஆன் : 3:180) (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு மற்றும் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 1403 முஸ்லிம் : 1807)
மறுமைக்குத் தயாராவோம் :
500, 1000 ரூபாய் காகிதங்கள் இனி செல்லாது என அரசாங்கம் அறிவித்த பிறகு ஆசை ஆசையாய் சேமித்து வைத்த பணம் தங்களது கையைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காக செல்வந்தர்களில் சிலர், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல மாதங்களுக்குரிய சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துத் தங்களது பணத்தைக் காப்பாற்றிய சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது.
அரசாங்கத்தின் ஆணைக்கு அடிபணிந்து 500, 1000 ரூபாய் காகிதங்களை காப்பாற்ற பல வழிகளிலும் முயற்சி செய்து, விழிப்புணர்வுடன் செயல் படும் செல்வந்தர்களே, எனது இந்த செல்வம் எனது அறிவால், திறமையால்தான் கிடைத்தது என்று கூறி அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து பொருளாசை பிடித்து வரம்பு மீறி நீங்கள் சொத்துக்களை சேமித்து வைத்தால் நாளை மறுமையில் உங்களது பொருளாதாரம் உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஒருபோதும் காப்பாற்றாது. இது குறித்து குர்ஆன் கூறுவதைக் கவனியுங்கள்.
”நிச்சயமாக எவர்கள் நிராகரித்து, நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து அதனைத்(தன் குற்றத்தை மன்னிப்ப தற்கு) தனக்கு ஈடாக அவன் கொடுத்தபோதிலும் (அது) அங்கீகரிக்கப்படாது இத்தகையவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒரு வரும் இருக்கமாட்டார்.” (குர்ஆன்: 3:91, 39:47)
”யார் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும், வீணாகவும் ஆக்கி, இவ்வுலக வாழ்க்கையும் அவர்களை மயக்கிவிட்டதோ அவர்களை விட்டுவிடுவீராக! தான் செய்தவற்றுக்கு ஒவ் வொருவரும் கூலி கொடுக்கப்படுவது பற்றி இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! அல்லாஹ் வையன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்ப வனோ அவருக்கு இல்லை. அவர் அனைத்து வகை ஈட்டுத் தொகையை வழங்கினாலும் அவரிடம் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் செய்தவற்றுக்கே கூலி கொடுக்கப்படுவார்கள். அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தால் சூடேற் றப்பட்ட பாளமும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.” (குர்ஆன் : 6:70)
”அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களி லும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேமித்தது. எனவே நீங்கள் சேமித்தவற்றை அனுபவியுங்கள் (என்று கூறப்படும்)” (குர்ஆன் 9:34,35) அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள்.
”அந்நாளில் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின் வாங்கி (சத்தியத்தை) புறக்கணித்தவனையும் (செல்வத்தை பிறருக்கு கொடுக்காமல்) சேர்த்து பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.” (குர்ஆன் : 70:11-18)
செல்வந்தர்களே! அல்லாஹ்வின் எச்சரிக்கைகளுக்குப் பயந்து, அல்லாஹ் எந்த வழியில் பொருளாதாரத்தைச் செலவு செய்யக் கட்டளையிட்டுள்ளானோ அந்த வழியில் மன விருப்பத்தோடு செலவு செய்யுங்கள். உங்களது மரணத்திற்குப் பிறகும் நன்மைகள் கிடைக்கக் கூடிய காரியங்களை அறிந்து அந்த வழியிலும் அதிகமான வகையில் பொருளாதாரத்தை வாரி வழங்கி நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.