குஜராத்தி அதானிக்கு போட்டியாக உருவெடுத்ததால் மத்திய அரசால் மிரட்டப்படும் புகாரி ETA குழுமம்
மறத்தமிழன்
புகாரி குழுமத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்துள்ளது. சில நண்பர்கள் இதற்குக் காரணம் அக்குழுமத்தில் உயர் பதவிகளில் உள்ள மேல்ஜாதியினரே என்று குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சிலர் இதற்கு துணை போயிருப்பினும் அனைவரையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுவது நல்லதன்று. ஏனெனில் பாரம்பரியமான தமிழ்ச் செல்வந்தர் பிஎஸ்ஏ அப்துர் ரஹ்மான் அவர்கள் மத மாச்சரியங்களைத் தாண்டி திறமையானோர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர்கள்.
தீண்டாமைக் கொடுமையால் சக மதத்தைச் சார்ந்தோர்களால் விலக்கி வைக்கப்பட்டு இருந்த சமூகத்தார்கள் பலர் இவர்களின் கல்விக் குழுமங்களில் பயின்று இவர்களின் வியாபார குழுமங்களில் பணியமர்ந்து இன்று சமூகத்தில் தனக்கோர் தனி அடையாளத்தை ஏற்படுத்தி வாழ்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. கருவேல மரங்களால் கந்தலாகிப் போயிருந்த ஓரினத்தின் மக்கள் மேல்தட்டு வாழ்க்கை வாழ வழியமைத்து கொடுத்த குடும்பம்.
சரி விசயத்துக்கு வருவோம்! ஆளும் முதலாளித்துவ மத்திய அரசுக்கு ஒரு விசயத்தில் மூக்கு வியர்க்கிறது என்றால் ஒன்று குசராத்தி அல்லாத ஒருவர் குசராத்திகளோடு தொழில் போட்டியில் அவர்களை தோற்கடித்து முன்னேறியிருக்க வேண்டும் அல்லது இஸ்லாமியராக இருக்க வேண்டும். புஹாரி குழுமம் விசயத்தில் இரண்டுமே நடந்திருக்கிறது.
பல ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தைச் சார்ந்த தமிழ்க் குடும்பமான ETA தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் அமைத்து வருகிற POWER PLANT PROJECT தான் இதற்கான முக்கியக் காரணம். அதானியின் தயாரிப்பு செலவை விட குறைவான செலவில் இந்நிறுவனம் மின்சாரம் தயாரித்து தமிழக அரசுக்கும் பிற நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளும் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகவே அதானி குழுமம் POWER PLANT PROJECT-ஐ விலைக்கு வாங்க பேரம் பேசி வந்திருக்கிறது. பாரம்பரியமான வியாபார குடும்பமான புஹாரி குழுமம் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளையும் தொடங்கியதுதான் பிரச்சினையின் பின்னணி காரணம்.
படிப்பறிவற்ற சமூகத்தில் பல ஆயிரம் கல்வியாளர்களையும், அவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையும் வழங்கிய ஓர் குடும்பத்தின் கடினமான பாசிச நெருக்கடியை அவர்களால் உருவானவர்களே பார்த்து அகமகிழ்வது பச்சைத் துரோகம்.
வருமான வரித்துறை ரெய்டில் வரி ஏய்ப்புக்கான எவ்வித ஆதாரமும் இல்லாத போதும் பாசிச மீடியாக்களின் செய்தியை ஆதாரமாக வைத்துக்கொண்டு முகநூல் இயக்க வியாதிகள் அநாகரீகமாக எழுதி வருவது துரோகத்திலும் துரோகம்.
BSA என்ற குழுமம் ஓர் தனி அரசாங்கத்தை நிர்வகிக்கும் அளவுக்கு தன்னிறைவுப் பொருளாதாரத்தோடு உலகம் முழுமையும் தங்களின் வியாபாரங்களை செய்து வருகிற போதிலும் எவருடைய சொத்தையும் அபகரித்ததில்லை, எவருடைய நிலத்தையும் அபகரித்ததில்லை, விலை நிலங்களை மிரட்டிப் பறித்ததில்லை.
நேர்மையாக வியாபாரம் செய்து வருபவர்களுக்கு மோடி அரசு கொடுக்கும் பரிசு வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் அந்நேர்மைக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதே!
குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் குசராத்திய கோர முதலாளித்துவம் அழிந்து போகட்டும்! தமிழன் தலை தூக்க விடமாட்டான் குசராத்தி போன்ற வடநாட்டுக்காரன்என்பதை இந்த தமிழ் நாடு பல கட்டங்களில் சந்தித்து இருக்கிறது என்பதே நிதர்சனம்