இடது – வலது
ரஹ்மத் ராஜகுமாரன்
இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளைப் பற்றி பெற்றோர்கள் ரொம்பக் கவலைப்படுகிறார்கள் அதைத் திருத்த ரொம்பவும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள வேண்டியதில்லை.
மொத்த ஜனத்தொகையில் சுமார் நான்கு சதவிகிதம் இடது கைக்காரர்கள் சில பெரிய ஆள்களெல்லாம் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்.
லியனார்டோ டாவின்சி, மைக்கல் ஆஞ்செலோ, கார்லைல் ரெக்ஸ் ஹாரிஸன், சாப்ளின், ட்ரூமென், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மிகானர்ஸ் ஜூடி கார்லண்ட். . . .
ம்ம்… கொலைகாரன் ஜாக் தி ரிப்பர்…! இன்னும் பட்டியல் நீளம்..
இருந்தும் நாம் வாழ்வது வலதுகை உலகத்தில்தான் கதவுக்குமிழ் திருப்புளிகள் பூட்டுகள் மோட்டார் கார்கள் பைக் சங்கீத வாத்தியங்கள்.. எல்லாமே வலதுகைக்காரர்களுக்கென்று டிசைன் செய்யப்பட்டது. இடது கைக்காரர்கள் சற்று சிரமப்பட்டாலும் பழகிக் கொள்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்று விஞ்ஞானத்திற்கு சொல்லத் தெரியவில்லை.
ஒரு விஞ்ஞான தியரி சொல்றேன். நம் உடல் இடம் வலம் என்று பார்த்தால் சற்று வித்தியாசப்படுகிறது.. கண்ணாடியில் உங்களைப் பாருங்கள் முகம் இடது வலது ஒற்றைப் போல் இருப்பதில்லை.
காலின் சக்தி, பாதத்தின் சைஸ், இவற்றில் எல்லாம் கொஞ்சம் இடது வலது வித்தியாசம் இருக்கிறது.
மூளையில் இடது வலது வித்தியாசம் இருக்கிறது இடது பாகம்தான் அதிகப் பவர் என்கிறார்கள்.
மூளையில் இருந்து வரும் செய்திகள் கழுத்தருகில் தடம் மாறி மூளையின் இடது பக்கச் செய்திகள் உடலின் வலது பக்கத்திற்கு போகிறது. நீங்கள் படிப்பது நான் எழுதுவது பேசுவது வேலை செய்வது எல்லாம் மூளையின் இடது பக்கத்தில் மடிப்புகளாக பதிவு செய்யப்படிருக்கிறது. இதனால்தான் நாம் வலது கைப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்.
இடது கைப்பழக்ககாரர்களுக்கு மூளையில் வலது பாகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இடது கை!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலதுகையால் செய்ய வேண்டியதை வலதுகையால் செய்ய வேண்டும். வலதை முற்படுத்துங்கள். தலை வாருவது, செருப்பு போடும் போது வலது காலில் முதலில் போடுவது, சட்டைப் போடும் போது வலது கையை முதலில் போடுவது, குடிக்கும் போது சாப்பிடும் போது வலது கையை முற்படுத்துவது…
இல்லை நான் இடது கையால்தான் ஸ்டைலா குடிப்பேன், அடம் பிடித்தால் மூளையின் பதிவில் சற்று அழிய ஆரம்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மறதி அதிகமாகி வயதான காலத்தில் தன் பெயர் மறந்து வெளியே போனால் தன் வீட்டு வழி மறந்து போய்… இறக்கிற நேரத்தில் கலீமா மறந்து… தேவையா ?
“முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட வேதத்தில் அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (திருக்குர்ஆன் 47 : 02)
-ரஹ்மத் ராஜகுமாரன்