ஆசிரியர் தொழில் ஒரு மாசுபடாத தூய கண்ணாடிக்குச் சமம்
பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் தரும் ஒளி தேவை. ஆனால் அந்த ஒளியைப் பரப்ப, அதற்கு ஒரு உற்பத்தி ஸ்தானம் தேவை. ஆசிரியர் தான் அந்த உற்பத்தி ஸ்தானமாகும்.
அவரால் தான் ஒளியாகிற அறிவு விசாலமாகி, நம்மை தெளிவடைய வைத்து, நமது சிந்தனைகளை அதிகம் பகுத்து அராயச் செய்து, அதன் மூலம் நமது வாழ்க்கையைச் சம நிலையுடன் உண்மையை நோக்கித் திருப்பச் செய்ய முடிகிறது.
நான் எப்பொழுதும் ஆசிரியராக வேண்டும் என்று விரும்பியதால் இன்று நான் ஒரு ஆசிரியர். எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த – ஞானம், அறிவு, மனிதத்தன்மை போன்றவைகளை மீண்டும் இவ்வுலகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதும் விரும்பினேன்.
இவைகளை நான் ஏதோ ஒரு நிலையில் துவங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ஒரு குறிக்கோளுக்காகவோ அல்லது ஒரு உண்மைகாகவோ ஆதரவாக எழுந்து நின்று ஆதரவாகக் குரல் கொடுக்கும் போது “நான் அவர்களின் ஆசிரியர் என்ற பெருமையைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பெரிதில்லை’ என்ற அந்த என் நிலைக்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுவேன்.
ஆசிரியர் தொழில் ஒரு மாசுபடாத தூய கண்ணாடிக்குச் சமம். “நீங்கள் என்ன விதைத்தீர்களோ, அதன் பலனையே காண்பீர்கள்” என்ற தத்துவக் கண்ணாடி அது.
நீங்கள் விதைத்த பயிரின் தரம் என்ன என்பதை உங்கள் மாணவர்களின் தரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். என்னுடைய மாணவர்கள் மற்றவர்களுக்காகப் போராடுவதையும் அல்லது பிறருக்குக் கற்றுக் கொடுப்பதைப் பார்க்கும் போதும், இந்தத் தொழில் மிகவும் பாராட்டப் படக்கூடிய உன்னதமான தொழிலாகவே ஆகிவிடுகிறது.
கற்றுக் கொடுப்பது என்பது இரு வகைச் செயல்பாடு. நாம் கற்றுக் கொடுக்கும் போது கற்றுக் கொள்ளவும் செய்கிறோம். இறுதியில் நமது மாணவர்கள் சாதித்து உயரங்கள் தொடும்போது உண்மையிலேயே மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. இதற்கும் மேலாக, நம் மாணவர்களே நம்முடன் பணியாற்றுபவர்களாகத் திரும்பி வரும் போது நமது தொப்பியில் மேலும் ஒரு இறகு சேர்கிறது.
இள மனதிலும் உள்ளத்திலும் நல்ல ஒழுக்கப் பண்புகளையும், மனிதத் தரத்தையும் தர அவனுடைய அல்லது அவளுடைய ஆசிரியரால் தான் முடியும். நம்முடைய கடமை அவர்களுக்கு எப்படி கணக்குப் போடுவது அல்லது நம்முடைய வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல. நமது உண்மையான கடமை என்னவெனில், அவர்கள் உள்ளத்தில் புரியவைத்து அதை உண்மையாக அவர்களைச் செயல்படுத்த வைப்பதாகும்.
சிறந்த வருங்கால குடிமக்களை மட்டும் தான் நாம் உருவாக்க முடியும். அதன் மூலம், உருவான அந்த சிறந்த மனித இனத்தில் – ஆமாம், மனித இனத்தில் நாங்களும் ஒரு அங்கம் என்று பெருமை கொள்ளலாம்
source:: http://www.unmaiyinpakkam.com/