Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைவன் காட்டிய வழிமுறையா..? மனிதன் காட்டிய வழிமுறையா..?

Posted on December 28, 2016 by admin

இறைவன் காட்டிய வழிமுறையா..? மனிதன் காட்டிய வழிமுறையா..?

இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா..?

மனிதனை படைத்த இறைவன் ஒருவனுக்குத்தான் தெரியும்! மனிதனுக்கு என்ன தேவை என்பது. மனிதனே மனிதனுக்கு சட்டம் வகுக்க முடியுமா? இது சத்தியம் இல்லை.

ஒரு அருமையான கதை…

ஒரு முஸ்லீம் சகோதரரும் ஒரு ஹிந்து சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இருவரும் விவாதம் செய்கிறார்கள் ”இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி முஸ்லீம் சகோதரர் கூறுகிறார்; ”ஒருவர் திருடிவிட்டால் அவர் கரத்தை துண்டிக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது என்று சொல்கிறார்.

அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் ”இது மிகப் பெரிய தண்டனை, திருடியவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பது என்பது எனக்கு சரியாகப்படவில்லை”. அவர் மேலும் கூறுகிறார்… திருடியவனை தண்டிக்கவேண்டும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் அவனுக்கு சிறை தான் சரியான தண்டனையாக இருக்கும் என்று கூறி முடிக்கிறார் . அதற்கு அந்த முஸ்லீம் சகோதரர் எதுவும் பதில் கூறவில்லை. இருவரும் சென்றுவிடுகிறார்கள்.

சில நாள்களுக்கு பிறகு, ஹிந்து சகோதரரின் மனைவிக்கு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.. அவரின் மனைவிக்கு வயிற்றில் எதோ ஒரு கட்டி இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். இதை கேட்டு அந்த ஹிந்து சகோதரர் அதிர்ச்சியடைகிறார்!

உடனே மருத்துவர் கூறுகிறார் ”உங்கள் மனைவிக்கு உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும், உடனே நீங்கள் பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிடுகிறார். அந்த ஹிந்து சகோதரருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது ‘முஸ்லீம் நண்பர் இருக்கிறார் அவரிடம் பணம் கேட்டால் நிச்சயமாக கொடுப்பார் கேட்டு பார்க்கலாம்” என்று மனதில் எண்ணியவாறு அவர் வீட்டுக்கு போகிறார் .

வீட்டில் அவரின் நண்பரை பார்க்கிறார். நடந்த எல்லா விபரத்தையும் அந்த நண்பரிடம் கூறுகிறார்.. அதை கேட்ட அந்த முஸ்லீம் சகோதரர் ”ரொம்ப மன வேதனை அடைகிறார். அவருக்கு ஆறுதல் கூறுகிறார் . பிறகு, அந்த முஸ்லீம் சகோதரர் ஒரு பையில் வைத்து பணத்தை கொடுக்கிறார். அதை அவர் வாங்கி கொண்டு நன்றி கூறி அங்கேயிருந்து புறப்படுகிறார் .

அந்த ஹிந்து சகோதரர் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக உடனே அவசரமாக கூட்ட்டம் அதிகம் இருக்கும் வாகனத்தில் ஏறி மருத்துவமனைக்கு செல்கிறார் . அவர் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறார் . அவரின் சிந்தனை எல்லாம் அவரின் மனைவி மீது இருந்தது. மருத்துவமனைக்கு போகும் இடம் வந்த உடன் , அவர் இறங்கிவிடுகிறார்.

அவர் கையில் வைத்திருந்த பையை பார்க்கிறார் ”பையை காணவில்லை” அவருக்கு அதிர்ச்சியாகிவிட்டது! என்ன செய்வது என்று புரியாமல் புலம்ப ஆரம்பித்துவிட்டார் . அவர் பணத்தை யாரோ ஒருவர் திருடிவிட்டார்கள்.

அவர் பணத்தை இழந்து பரிதாகமாக காணப்பட்டார். பிறகு அந்த இந்து சகோதரர் அவரின் நண்பருக்கு போன் செய்கிறார். அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறுகிறார். பிறகு அந்த முஸ்லீம் சகோதரர் ஆறுதல் கூறிவிட்டு ”நான் உடனே பணத்துடன் வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டுவிட்டார் .

இருவரும் மருத்துவமனையில் சந்திக்கிறார்கள். பணத்தை கட்டிவிட்டு பிறகு ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது! சில நாட்களுக்கு பிறகு அந்த முஸ்லீம் சகோதரர் அந்த ஹிந்து சகோதரரின் வீட்டுக்கு சென்று ”நலம் விசாரிக்கிறார் . இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்த ஹிந்து சகோதரர் நடந்த சம்பவத்தை கூறி ரொம்ப வேதனை பட்டுக் கொண்டார்.

அந்த முஸ்லீம் சகோதரர் அந்த ஹிந்து சகோதரரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார் ”உங்கள் பணத்தை திருடியவன் உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள்..?

அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் ”நிச்சயமாக அவனை கொலை செய்துவிடுவேன் என்று பதில் கூறினார்.

அதற்கு அந்த சகோதரர் கூறினார்” நாம் ஏற்கனவே செய்த விவாதத்தை திரும்ப உங்களுக்கு ஞாபகம் செய்கிறேன், ”நீங்கள் சொன்னீர்கள் திருடினால் அவனின் கரத்தை துண்டிப்பது என்பது ஒரு பெரிய தண்டனை என்று, அவனை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும் என்று கூறினீர்கள்! இப்பொழுது நீங்களே கூறுகிறீர்கள் அவனை கொல்ல வேண்டும் என்று. இஸ்லாம் கூறுகிறது ”ஒருவன் திருடினால் அவனின் கரத்தை துண்டிக்கவேண்டும் என்று. அதனால் நிச்சயமாக குற்றம் குறைந்து விடும் .திருடினால் நிச்சயமாக கரம் துண்டிக்கப்படும் என்று பயம் இருக்கும், உள்ளத்தில் அந்த எண்ணம் கூட வராது என்று கூறி முடித்துவிட்டு.

மேலும் அவர் கூறினார்; பாதிக்கப்படாதவரை நமக்கு எதுவும் தெரியாது. இஸ்லாமிய சட்டம் கடுமையாக தான் தெரியும். நாம் பாதிப்புக்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அப்பொழுதுதான் நாம் உணர்வோம் இந்த இஸ்லாமிய சட்டம் வந்தால் நிச்சயமாக குற்றம் இல்லாமல், மக்கள்கள் நிம்மதியாக பயம் இல்லாமல் வாழ்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்களிடம் கேளுங்கள்! எது உகந்தது என்று? இந்தியாவில் குற்றம் செய்தவர்களைவிட குற்றம் செய்யாதவர்கள் தான் தண்டிக்கப்படுகிறார்கள். பணமும், பதவியும், செல்வாக்கும் இருந்தால் தப்பித்து கொள்ளலாம்.. இதுதான் மனிதன் வகுத்த பிழையான சட்டம். பணக்காரர்களுக்கு ஒரு சட்டம். ஏழைகளுக்கு ஒரு சட்டம். இஸ்லாத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்! புரிந்து கொண்டால் இந்தியா வசந்தமாக மாறும்.

– சத்திய பாதை இஸ்லாம்

source: http://islam-bdmhaja.blogspot.com/2016/10/islamic-law-peace.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 66 = 74

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb