Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மோடியின் ஏமாற்று நாடகங்கள்!

Posted on December 22, 2016 by admin

மோடியின் ஏமாற்று நாடகங்கள்!

[ ஒவ்வொரு மணி நேரமும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் 46 குழந்தைகள் இறக்கும் ஒரு வறுமை பிடித்த நாட்டில் 650 கோடிக்கு ஒருவன் திருமணம் செய்கின்றான் என்றால் இது மனித குலமே வெட்கப்பட வேண்டிய வக்கிரமான செயலாகும்.

ஒரு குண்டுமணி அளவு கூட நகை வாங்கத் திராணியற்று இன்னும் திருமணம் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களை கேவலப்படுத்தும் செயலாகும்.

நாட்டு மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளார்கள். பணக்காரர்களின் கருப்புப் பணத்தை ஒழிக்கின்றேன் என்ற மோசடி காரணத்தைப் பயன்படுத்தி இந்த அயோக்கியர்களால் சாமானிய மக்கள் துன்பப்படுத்தப்படுகின்றார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.

மோடி ஒரு கேடு கெட்ட ஏமாற்றுப் பேர்வழி என்று பாஜக கட்சிக்காரனே சொல்லும் அளவுக்கு மோடியின் நிலைமை கேவலமாகத்தான் உள்ளது.]

மோடியின் ஏமாற்று நாடகங்கள்!

     செ.கார்கி     

நாடே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் வேலைக்குப் போகாமல் ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் மணிக்கணக்கில் ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றார்கள். அவர்களிடம் சென்று மோடியின் இந்தத் திட்டத்தைப் பற்றி கேட்டால் கழுவி, கழுவி ஊற்றுகின்றார்கள்.

மோடியை காதுகொடுத்துக் கேட்க முடியாத கெட்ட கெட்ட வார்த்தைகளால் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்க்கின்றார்கள். ஆனால் சூடு சுரணையே இல்லாத பாஜகவினர் ஊடகங்களில் மக்கள் இந்தத் திட்டத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு தருவதாக புளுகுகின்றார்கள்.

சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று அரைலூசுகளால் சொல்லப்பட்ட இந்த அறிவிப்பு ஒரு உலகமகா மோசடி என்று தற்போது தெரிய வந்துள்ளது. மோடி இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பே அம்பானி, அதானி போன்றவர்களுக்கு இதைப் பற்றித் தெரியும் என ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவானிசிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மோடி ஒரு கேடு கெட்ட ஏமாற்றுப் பேர்வழி என்று பாஜக கட்சிக்காரனே சொல்லும் அளவுக்கு மோடியின் நிலைமை கேவலமாகத்தான் உள்ளது.

‘கருப்புப் பணத்தை ஒழிப்பேன், கருப்புப் பணத்தை ஒழிப்பேன்’ என்று மோடி காதை கிழித்துக் கொண்டிருக்கையிலேயே கர்நாடகாவில் கனிமவளத் திருடனும், முன்னாள் பாஜக அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி தன்னுடைய புத்திரிக்கு 650 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடத்தி மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை அம்மணமாக்கி காட்டியிருக்கின்றான்.

36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகரப் பேரரசின் அரண்மனை, ஹம்பி விட்டாலா கோயில், பெல்லாரியில் உள்ள காளி கிராமம்,

தாமரைக்குளத்துடன் கூடிய கிராமிய விளையாட்டு மைதானம்,

மணமக்களின் குடும்பத்தினர் சவாரி செய்ய 40 குதிரை வண்டிகள், 40 மாட்டு வண்டிகள்,

திருமணத்திற்கு வருபவர்களை அழைத்துவர 1800 டாக்சிகள், ஆடி கார்கள், 15 ஹெலிபேடுகள்,

விருந்தினர்கள் தங்குவதற்காக நட்சத்திர விடுதிகளில் 1500 சொகுசு அறைகள்,

இந்தப் பொறுக்கி பெற்றெடுத்த புத்திரிக்கு 17 கோடியில் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை, வைர நகைகள் திருமணத்தின் போது மணமக்கள் மீது காஷ்மீர் ரோஜா மற்றும் ஆம்பூர் மல்லி பூக்களை தூவ தலா 500 ஆண் மற்றும் பெண் மாடல்கள் என திருமணத்தை கருப்புப் பணத்தைக் கொண்டு படு ஜோராக நடத்தி இருக்கின்றான் இந்தத் திருடன்.

ஒவ்வொரு மணி நேரமும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் 46 குழந்தைகள் இறக்கும் ஒரு வறுமை பிடித்த நாட்டில் 650 கோடிக்கு ஒருவன் திருமணம் செய்கின்றான் என்றால் இது மனித குலமே வெட்கப்பட வேண்டிய வக்கிரமான செயலாகும்.

ஒரு குண்டுமணி அளவு கூட நகை வாங்கத் திராணியற்று இன்னும் திருமணம் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களை கேவலப்படுத்தும் செயலாகும். மானமுள்ள எந்த மனிதனும் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டான். ஆனால் மானமற்ற, கேடுகெட்ட, ஊரை அடித்து உலையில் போடும் இழிபிறவிகள் தான் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.

அப்படி கலந்து கொண்ட அந்த மானங்கெட்டவர்கள் யார் யார் என்றால், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் அசோக், ஈஸ்வரப்பா போன்ற பிஜேபி காரர்கள் தான். இவர்கள் மட்டும் அல்லாமல் காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி போன்றோரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து மாறுபாடு இருந்தாலும், ஜனார்த்தன ரெட்டி விட்டு கல்யாணத்தில் அவன் போட்டதைத் தின்றுவிட்டு வருவதில் இரண்டு கட்சிகளுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் எஸ்பிஐ வங்கி விஜய் மல்லையாவிற்குக் கொடுத்த ரூ 1201 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. விஜய் மல்லையாவிற்கு மட்டுமல்ல மொத்தம் 63 பேருக்கு ரூ 7016 கோடியை தள்ளுபடி செய்திருக்கின்றது.

மேலும் 31 நபர்களுக்கு அவர்களின் கடன்களில் பகுதியளவு கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கின்றது. இவர்கள் எல்லாம் பணத்தை திருப்பி செலுத்த வசதி இருந்தும் செலுத்தாமல் உள்ளவர்கள் ஆவர்கள். மோடி ஒரு கேடு கேட்டவர் என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவைப்படாது.

சாமானிய மக்களை நாய்களை விட மோசமான நிலையில் வாழ தள்ளிவிட்டுவிட்டு, அந்தச் சாமானிய மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பணக்கார பொறுக்கிகளின் கடன்களை தள்ளுபடி செய்கின்றார்கள் என்றால் இந்திய மக்களைப்பற்றி எவ்வளவு கேவலமான மதிப்பீடுகளை மோடி அரசு வைத்துக் கொண்டிருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் என்ன செய்தாலும் இந்த முட்டாள் ஜனங்கள் நம்மை ஏன் என்று கேள்வி கேட்க மாட்டார்கள் அப்படி கேள்வி கேட்கும் சூழ்நிலை வந்தால் மாட்டுக்கறி பிரச்சினையோ, இல்லை பாகிஸ்தான் பிரச்சினையோ கிளப்பிவிட்டு அவர்களின் சிந்தனையை மடை மாற்றிவிடலாம் என்பதுதான் அவர்களின் திட்டம்.

நாட்டு மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளார்கள். பணக்காரர்களின் கருப்புப் பணத்தை ஒழிக்கின்றேன் என்ற மோசடி காரணத்தைப் பயன்படுத்தி இந்த அயோக்கியர்களால் சாமானிய மக்கள் துன்பப்படுத்தப்படுகின்றார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்கின்றேன் என்று சொல்பவர்கள் ஜனார்த்தன ரெட்டி வீட்டு திருமணத்திற்கு எதற்காகப் போனார்கள் என்று கேள்வி கேட்கின்றார்கள்.

மோடி பெருமுதலாளிகளை நக்கிப் பிழைக்கும் ஒரு அடிமை என்பதை இந்தியப் பெருமுதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்ததில் இருந்து தெரிந்து கொள்வதாக அவர்கள் சொல்லுகின்றார்கள். ஆனால் மோடியோ கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லாமல் அழுது புலம்புகின்றார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூப்பாடு போடுகின்றார்.

இந்தியாவில் சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு சர்வாதிகாரியை யார் கொல்வார்கள்? அம்பானியா, அதானியா, டாடாவா, இல்லை இந்தியாவை விட்டு ஓடிப்போன மல்லையாவா யாரால் மோடியைக் கொல்ல முடியும்? ஒருவேளை அது குஜராத்தில் மோடியால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஆவியால் முடியலாம், இல்லை, வங்கி வாசலில் பணம் எடுக்கக் காத்திருந்து செத்துப்போன பஞ்சப் பராரிகளின் ஆவியால் முடியலாம். இல்லை, மாட்டுக்கறி வைத்திருந்தார் என பொய்யாகக் குற்றம் சாட்டி கொல்லப்பட்ட முகமது அக்லக்கின் ஆவியால் முடியலாம். அது நடக்காதா என்றுதான் பெரும்பான்மையான இந்திய மக்கள் இன்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

– செ.கார்கி

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31840-2016-11-19-04-19-32

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

39 + = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb