அநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்
o காகிதத்தில் சுகம் கண்டு ஏமாறுதல்
o வங்கியாளர்களின் நம்பிக்கை துரோகம்
o பெடரல் ரிசர்வ் வங்கியும் நமது ரிசர்வ் வங்கியும்
o உலகை ஆளும் வஞ்சக வலை
o பலியாடாக இந்திய மக்கள்
o நம்பிக்கையூட்டும் இஸ்லாம்!
o உண்மையில் இஸ்லாம் என்றால் என்ன?
o இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
o இஸ்லாம் வலியுறுத்தும் பொருளாதாரப் புரட்சி
o இஸ்லாத்தின் அபார வளர்ச்சி!
அநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்
எந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாமரர்களை விட்டுவிடுங்கள், இன்று நாட்டுமக்களில் படித்தவர்களிடம் இந்தக் கேள்விகளை கேட்டுப்பாருங்கள்… விடை கூறுபவர்கள் மிகவும் அரிதாகவே கிடைப்பார்கள்..
அ) இந்தக் காகிதப்பணம் என்பது ஒரு குறிப்பிட்ட மதிப்பு கொண்ட வாக்குறுதிப் பத்திரம். இதன் மதிப்புக்கான தங்கம் அல்லது வெள்ளி எங்கே பாதுகாக்கப் படுகிறது?
ஆ) மக்களின் உழைப்பும் உற்பத்தியும் சேமிப்பும் செல்வமும் இந்த காகிதங்களின் மதிப்புக்கு விலைபேசப்படுகிறது எனும்போது அவ்வளவு மதிப்பு கொண்ட பொருள் இக்காகிதத்தை விநியோகித்த வங்கியிடம் இருக்கவேண்டும் அல்லவா? இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்?
உண்மையில் இந்தக் கேள்விகளை எழுப்புவதற்கோ அல்லது விடைகளை அறிவதற்கோ யாரும் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. இந்த விடயத்தில் மக்களின் அலட்சியமும் அறியாமையும் தொடரும்வரை அடிமைத்தளையும் தொடரவே செய்யும்!
காகிதத்தில் சுகம் கண்டு ஏமாறுதல்
ஆரம்பத்தில் பண்ட மாற்று முறையில் நடந்து கொண்டிருந்த வியாபாரம் மெல்ல மெல்ல தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் நடந்தது. அப்போது நாணயங்கள் திருட்டு அல்லது கொள்ளை போவதைத் தடுக்கும் முகமாக சில செல்வந்தர்கள் நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவினார்கள். அவையே பிற்காலத்தில் வங்கிகளாக உருவெடுத்தன. வங்கியாளர்கள் தங்களிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்கு பகரமாக வாக்குறுதிப் பத்திரங்களை கையொப்பமிட்டு – அதாவது ரசீதுகளை நாணயங்களின் உரிமையாளர்களுக்குக் கொடுத்தார்கள். தங்கள் சேவைக்கு கட்டணமும் வசூலித்தார்கள். நாள் செல்லச்செல்ல மக்கள் அந்த ரசீதுகளையே நாணயங்களுக்கு பதிலாக தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு வியாபாரம் செய்தார்கள். ரசீதுகளைக் கொண்டே காரியங்கள் நடைபெறுவதால் மக்களில் எவருக்கும் வங்கியில் இருந்து நாணயங்களைத் திரும்பப் பெறும் அவசியமே ஏற்படவில்லை.
வங்கியாளர்களின் நம்பிக்கை துரோகம்
இவ்வாறு நீண்ட காலமாக தங்களிடம் தங்க நாணயங்கள் உறங்கிக் கிடப்பதைக் கண்ட வங்கி உடைமைகள் தாங்கள் மக்களோடு செய்துகோண்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாக அவற்றை மறைமுகமாக மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்து வட்டியும் ஈட்ட ஆரம்பித்தார்கள். அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட வங்கியாளர்களின் ரசீதுகளையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். தொடர்ந்து தாங்கள் கையெழுத்திட்டு வழங்கும் ரசீதுகள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட வங்கியாளர்களுக்கு அது அலாதியான தைரியத்தை கொடுத்தது. தங்கள் இச்சை போல விரும்பிய மதிப்புக்கு விரும்பிய எண்ணிக்கையில் அச்சடித்து அதை விநியோகித்தார்கள். அந்த ரசீதுகளின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் காகிதப் பணத்தாள்கள்!
வங்கி உடைமைகள் இவ்வாறு அச்சிட்டு நாட்டில் புழக்கத்தில் விட்ட பணத்திற்கு வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அவற்றைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள். சமூகத்தில் மற்றவர் அனைவரையும் அடிமையாக்கும் அந்தஸ்திற்கு உய்ரந்தார்கள். நாட்டை ஆள்வோரையும் அடிமைகளாக்கினார்கள். அல்லது தங்களின் கைக்கூலிகளைக் கொண்டு நாட்டை ஆண்டார்கள். ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.
இப்போது யோசித்துப்பாருங்கள்… ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும்? அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது? உலகின் மாபெரும் வல்லரசையும் மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாது? ஆம், அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
பெடரல் ரிசர்வ் வங்கியும் நமது ரிசர்வ் வங்கியும்
1910ம் ஆண்டு ரோத்ச்சைல்டு, ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு சேர்ந்து சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அவ்வாறு அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் ஒத்தாசையோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. இந்தத் தனியார் வங்கி அச்சடித்து வெளியிடும் வெற்றுத்தாள்தான் டாலர் என்ற உலகக் கரன்சி!
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம். முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World… https://shar.es/1IU7u4 ) அந்த வகையில் நமது இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India, Bank Indonesia, Central Bank of Nigeria, Central Bank of Norway, Central Bank of Oman, State Bank of Pakistan இவற்றை ஒரு சில உதாரணங்களாக கூறலாம்.
அவ்வாறு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோலிய வளங்கள், நிலத்தடி வளங்கள், விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், உலகை அச்சுறுத்தும் ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், ஊடகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். ஆக இன்று உலகம் மேற்கூறப்பட்ட வங்கி உடைமைகள் உள்ளிட்ட ஒரு பதிமூன்று அல்லது பதினாறு யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது எனலாம். பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம், இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா?
உலகை ஆளும் வஞ்சக வலை
உலகத்தின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளங்களையும் நிறுவனங்களையும் பணம் கொழிக்கும் துறைகளையும் ஊடகங்களையும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ள இந்த இரகசிய சமுதாயம் தங்களின் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டே இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடியும்.
அமெரிக்கா உட்பட உலக நாடுகளை யார் ஆளவேண்டும் என்பதை இவர்களே தீர்மானிப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் ஆங்காங்கே உள்ள இவர்களின் கம்பெனிகளும் நிறுவனங்களும் அடியாட்களும் அந்தந்த நாட்டு வளங்களை சுரண்டும் அல்லது உறிஞ்சிஎடுக்கும் பணிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் ஆட்சியாளர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.
o அரசர்கள் அல்லது சுல்தான்களால் ஆளப்படும் நாடுகளை அவர்கள் நேரடியாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தல் மூலம் ஆள்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படும் இடங்களில் தங்களால் இயன்ற அளவு இருகட்சி அமைப்பை (Two party system) கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் கைப்பாவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக தங்கள் கைவசம் உள்ள செல்வங்களையும் ஊடகங்களையும் அடியாட்களையும் உள்ளூர் இயக்கங்களையும் சமூக வலைத்தளங்களையும் எல்லாம் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் கைவசம் உள்ள சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்யும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
அமெரிக்க உளவு நிறுவனமான CBI -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய “Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல், அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு உலகநாடுகளைக் கட்டுப்பட வைக்கிறார்கள். இதுபோல தங்களின் ஆதிக்கத்திற்கும் உலகைச் சுரண்டும் வஞ்சகப்பணிக்கும் தடையாக எப்பேர்பட்ட கொம்பர்கள் அல்லது மக்கள் இயக்கங்கள் நின்றாலும் அவற்றை எப்பாடுபட்டாவது நிர்மூலமாக்குகிறார்கள் அல்லது உரிய முறையில் அவர்களைக் கையாண்டு பணிய வைக்கிறார்கள். பணிய மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். உதாரணம் சத்தாம் ஹுசைன், கத்தாஃபி போன்றோர். இலட்சக்கணக்கான அப்பாவிகள் அல்லது குழந்தைகள் கொல்லப்படுவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. சக்திவாய்ந்த ஆயுதங்களும் கையாட்களும் இவர்களின் பணியை எளிதாக்குகின்றனர். இவர்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மக்களுக்கு முன் இவர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இவர்களை எதிர்போரை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து மூளைச்சலவை செய்கின்றன.
சமீபத்தில் லிபியாவின் கடாபி அவர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் பெட்ரோலியத்தை டாலருக்கு விற்க மறுத்தார் என்பதும் தங்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஆப்ரிக்க நாட்டுக் கரன்சியை உருவாக்க முயன்றார் என்பதும்தான். இவை சமீபத்தில் விக்கிலீக்ஸ மூலம் கசிந்த ஹில்லாரி கிளிண்டன் இமெயில்கள் மூலம் உலகுக்கு தெரியவந்த விடயங்கள் ஆகும். (பார்க்க https://www.youtube.com/watch?v=6O8vM0-6EEE )
பலியாடாக இந்திய மக்கள்
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பின் தொடர்ச்சியாக நம் நாடும் மற்ற நாடுகளைப் போல் தொடர்ச்சியாக இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்தான் இருந்து வருகிறது. நமது ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கி இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழேதான் உள்ளது எனும்போது நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் இவர்கள் கணிசமான பங்கை உறிஞ்சி எடுக்கிறார்கள் என்பதை நாம் ஊகிக்க முடியும்.
இன்று இந்திய மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பணத்தட்டுப்பாடும் இந்தக் கயவர்களின் சதித்திட்டத்தின் ஒரு பாகமே என்பதை சிந்திக்க முனைவோர் அறியமுடியும். பாமர மக்கள் முதற்கொண்டு அனைவரையும் வங்கிகளுக்கு அடிமையாக்கி அவர்களின் உழைப்பிலிருந்தும் சேமிப்பில் இருந்தும் தங்களுக்கு வேண்டியதை உறிஞ்சிஎடுப்பதே அவர்களின் நோக்கம். அதற்காக தங்கள் கைக்கூலிகளைக் கொண்டு நிறைவேற்றப்படும் நாடகங்களே மற்றவை எல்லாம்!
இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ்யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)
நம்பிக்கையூட்டும் இஸ்லாம்!
ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது! உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது!
அது இடம், நாடு, மொழி அல்லது இனம் சார்ந்ததல்ல, மாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம், அதுதான் இஸ்லாம் என்ற மக்கள் சக்தி! எந்த மக்களை அல்லது சமூகங்களை ஆட்கொள்கிறதோ அவர்களை சீர்திருத்தி அவர்களையே உலகில் நடக்கும் அநியாயங்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக முன்னிறுத்துகிறது இந்த சீர்திருத்த சித்தாந்தம்! இந்த இயக்கத்தில் இணைந்து இவர்களின் சதித் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரைத்தான் இவர்களது ஊடகங்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றன. இவர்கள் மீது அடக்குமுறைகளையும் அநியாயமான போர்களையும் திணித்து நெருக்கடிகள் கொடுத்து இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்ற தோற்றத்தை உண்டாக்கி வருகின்றன.
உண்மையில் இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும்போது உண்டாகும் அமைதியின் பெயரே இஸ்லாம்!
ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது.
o மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விரு வரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ….. நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
o இஸ்லாம் உலகளாவிய மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவது இனத்தின், நிறத்தின், குலத்தின் மேன்மைகளைக் கூறி மக்களைப் பிரித்து சுரண்டி வாழ்வோரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை!
o படைத்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி நேரடியாக வணங்க இஸ்லாம் சொல்லும்போது கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் ஆதிக்க சக்திகளையும் அது அமைதி இழக்கச் செய்கிறது!
o உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு வழிநடத்துகிறது.
o நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
இதன் காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள். இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
இஸ்லாம் வலியுறுத்தும் பொருளாதாரப் புரட்சி
இஸ்லாம் வெறும் பேச்சளவில் மனத்தளவில் சுருங்கிக் கொள்ளும் சித்தாந்தம் அல்ல. மனிதனின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் மிகவும் பக்குவமான வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் சட்டங்களையும் வழங்குகிறது. அவை இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவனிடம் இருந்து வந்தவை என்பதால் அவற்றில் மனித சட்டங்களில் காணப்படும் ஓட்டைகள் இருப்பதில்லை.
உதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்….
o சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.
o செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)
o வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
இஸ்லாத்தின் அபார வளர்ச்சி!
இன்று உலகில் இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலமாகவும் அது வலியுறுத்தும் தனிநபர் நல்லொழுக்கம், மனித சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமைகள்,குடும்ப கட்டமைப்பு, மனித உரிமைகள், சமூகத் தீமைகளுக்கு தீர்வுகள் போன்றவற்றின் மூலமாகவும் அமேரிக்கா, ஐரோப்பா உட்பட உலகெங்கும் பெருவாரியான மக்களை கவர்ந்து வருகிறது. இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் உலகம் தொடர்ந்து இணைந்து வருகிறது.
இந்த எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் கையாளப் படுகின்றன.
o தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுவோரை கிளர்ச்சி யாளர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறை களுக்குள் வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்துதல்.
o இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடுகளில் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுத பலமளித்து அவர்களைக் கொண்டே கலவரங்கள் மூட்டியும் பயங்கரவாத தாக்குதல்கள்,குண்டு வெடிப்புகள் போன்றவை நடத்தியும் இஸ்லாமி யர்களைக் கொல்வது, அதன்மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் பற்றி தப்பெண்ணம் உருவாக்குவது.
o தன் கையாட்களைக் கொண்டு இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிப்பதற்காக திரைப்படங்கள், கதைகள் புனைந்து அவற்றை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி இஸ்லாத்தின் மீது வெறுப்பை உருவாக்குதல்.
இன்னும் இவைபோன்ற பலதும் செய்யப்பட்டாலும் இந்த இறைவனின் மார்க்கம் தடைபடாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. (www.pewresearch.org)
ஆனால் உண்மையில் இஸ்லாம் எந்த ஒரு உயிரையும் அநியாயமாகக் கொல்வதோ துன்புறுத்துவதோ கூடாது என்று வன்மையாகத் தடுக்கிறது. அப்பாவிகளைக் கொல்வதும் துன்புறுத்துவதும் பெரும் பாவம் அதை ஒரு முஸ்லிம் செய்தாலும் முஸ்லிம் அல்லாதவர் செய்தாலும் மறுமையில் அதற்கு நரக தண்டனை உண்டென்று எச்சரிக்கிறது குர்ஆன்:
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)
மனிதனை மனிதனுக்கு எதிரியாக்கி ஏதேனும் ஒரு நாட்டையோ இனத்தையோ உயர்த்தவோ அழிக்கவோ வந்ததல்ல இஸ்லாம். மாறாக மனித மனங்களை பண்படுத்தி அதன்வழி உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் சுயசீர்திருத்த இயக்கமே இஸ்லாம் என்பதை விளங்கும்போது இன்றைய எதிரிகள் நாளை இதன் சேவகர்களாகவும் காவலர்களாகவும் மாறுவார்கள் என்கிறது வரலாறு!
source: http://quranmalar.blogspot.in/2016/11/blog-post_30.html