Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கிவிடாது

Posted on November 18, 2016 by admin

வெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கிவிடாது!

மோடி ஏன் ஒரு ”தோற்றுப்போன நிர்வாகி”!

முதல் குளறுபடி:

நாட்டின் மொத்த பணத்தில் சுமார் 86% உள்ள இரண்டு நோட்டுகளை வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் 99.8% பயன்பாட்டிலிருந்து செல்லாதது என்று அறிவிக்கும்போதே அதை ஈடு செய்யும் மற்ற நோட்டுகளை அதிகமாக புழக்கத்தில் விடாமல் ஏதுமறியா அப்பாவி மக்களை அலைக்கழித்தது அவரின் திட்டமிடலில் உள்ள அறியாமையை காட்டுகிறது.

இரண்டாவது குளறுபடி:

இரண்டு நாட்களில் நிலமை சீரடைந்துவிடும் என்று பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து இன்னும் 50 நாட்களில் நிலமை சீராகிவிடும் என்று இன்னொரு குருட்டு பொய்யை சொல்லியிருப்பது அவரின் திட்டம் குறித்து அவருக்கே தெளிவான பார்வை இல்லாததை காட்டுகிறது.

மூன்றாவது குளறுபடி:

சுமார் ஒரு வாரம் withdrawal limit ஐ வாரத்திற்கு வெறும் ₹20000 என்று அறிவித்து பின்னர் அதை ₹24000 என்று அதிகரித்தது. மற்றும் இரண்டு நாட்கள் கழித்து மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பின்பு மூன்று நாட்கள் சுங்கசாவடிகளில் கட்டணம் கட்ட தேவையில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் அதை ஒருவாரம் என்று மாற்றியது. இவை, மக்களின் அவசியங்கள் / தேவைகள் குறித்த சரியான புரிதல் இல்லாமல் களத்தில் இறங்கியதை காட்டுகிறது.

நான்காவது குளறுபடி:

இன்னமும் பல கோடி மக்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்குகள் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் 90% மையமாக கொண்டு ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தியதும், அதற்கு சரியான மாற்று வழிகளை கொடுக்காததும் அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பிரதமருக்கு இருக்கவேண்டிய சாதாரண அக்கறையை கூட கேள்விக்குறி ஆக்குகிறது.

ஐந்தாவது குளறுபடி:

1978 ல் செய்யபட்ட demonetisation க்கும் தற்போதைய demonetisation க்கும் அரசு சொன்ன பெரிய வித்தியாசம் “Technology gap”. இதுவரையிலும் hi-tech ஆதார் கார்டை மையபடுத்தி செயல்படுத்தபட்ட ஒரு திட்டத்தை ஒரு வாரம் கழித்து கற்கால “மை” வைக்கும் நிலைக்கு கொண்டு வந்தது. ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் deposit செய்வதை தடுக்க விரலில் மை என்றால், கடந்த 7 நாட்களாக அவ்வாறான ஒரு ஓட்டையை விட்டு வைத்ததன் நோக்கம் என்ன?! அல்லது ஆதார் கார்டின் security level ல் ஓட்டை இருக்கிறதா?! இந்த தெளிவுகள் இல்லாமல் இத்திட்டத்திற்கு இன்னமும் முட்டு கொடுப்பது.

ஆறாவது குளறுபடி:

இத்தனை குளறுபடிகளையும் செய்துவிட்டு, மிகப்பெரும் ஜனநாயக வல்லரசின் முதன்மை நிர்வாகியாக இருக்கும் மோடி பொது கூட்டங்களில் மூன்றாம்தர அரசியல்வாதியை போல கண்ணீர்விடுவதும், தன்னுடைய பாதுகாப்பையே உலக அரங்கில் கேள்விக்குறியாக்கி ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு திறனையே வலிமையற்றதாக கருத வைப்பதும். மீண்டும் மீண்டும் தன் கட்சிகாரர்களை வைத்து நாட்டில் எல்லாரும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று பொய் சொல்லி அருவெறுக்க வைப்பதும் கூடவே 130 கோடி மக்களில் 16 பேர் செத்தால் என்ன குறைந்துவிட போகிறது என்று வக்கிரமாக வாந்தி எடுப்பதும்.

வெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கிவிடாது. அதை குப்பனும், சுப்பனும் செய்வான். ஆனால் அத்திட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்துவதில்தான் திறமை இருக்கிறது. அதில் மோடி பட்டவர்த்தனமாக தோற்றுபோய்விட்டார் என்பதுதான் நிஜம்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

86 + = 93

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb