சுவனத்தின் வாலிபத் தலைவர்கள்
ரஸூலுல்லாஹி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று படிப்படியாக எல்லா விஷயங்களிலும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.
குறிப்பாக குடும்ப விஷயங்களிலும் குழந்தைகளை பராமரிப்பதிலும் நமக்கு முன்மாதிரிகளை காண்பித்துள்ளார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது.
قال صلى الله عليه وآله وسلم: “أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم وحب أهل بيته وعلى قراءة القرآن”.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : உங்களுடைய குழந்தைகளை 3 விஷயங்களில் நெறிப்படுத்துங்கள்,
1. உங்களது நபியின் மீது பிரியம் கொள்வது
2. அவர்களின் குடும்பத்தினரை பிரியம் கொள்வது
3. இறை வேதத்தை ஓதுவது என்று சொன்னார்கள்.
நம்முடைய குழந்தைகளுக்கு நாம் முக்கியமாக நெறிப்படுத்தும் விஷயங்களில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரியமும் அவர்களது குடும்பத்தாரின் பிரியமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் தான் அல்லாஹ்வும் நம்மை ஸலவாத்து சொல்ல கட்டளையிடும்போது, ரசூலுல்லாஹ்வின் குடும்பத்தார் மீதும் சொல்ல சொல்கிறான்.
( إِنَّ اللَّـهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ) (8)
33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
: أخرج النسائي وغيره عن أبي هريرة ، أنّهم سألوا رسول الله صلّى الله عليه وآله : كيف نصلّي عليك ؟ قال : அ قولوا اللهمّ صلّ على محمّد وعلى آل محمّد وبارك على محمّد وآل محمّد كما صلّيت وباركت على إبراهيم وآل إبراهيم في العالمين إنّك حميد مجيد ، والسلام كما قد علمتم
இந்த வசனம் இறங்கியதும் நாயகம் ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் : நாயகமே உங்களின் மீது நாங்கள் எப்படி ஸலவாத் சொல்வது என்று வினவ, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் :
اللهمّ صلّ على محمّد وعلى آل محمّد وبارك على محمّد وآل محمّد كما صلّيت وباركت على إبراهيم وآل إبراهيم في العالمين إنّك حميد مجيد
”யாஅல்லாஹ் ! நீ இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் எப்படி ஸலவாத்தையும் பரக்கத்தையும் பொழிந்தாயோ அதே போன்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ ஸலாத்தையும் பரக்கத்தையும் பொழிவாயாக! ” என்று சொல்லுங்கள், இன்னும் அதே போன்று ஸலாமும் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அதுமட்டுமில்லாமல், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹ் அருமறையில் சான்று கூறுகின்றான்.
( إِنَّمَا يُرِيدُ اللَّـهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا ) 33:33.
(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். 33:33.
இன்னும் அவர்களை நாம் நேசிக்க வேண்டும் என்று அருமறையில் கூறுகின்றான்.
42:23 ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰىؕ وَمَنْ يَّقْتَرِفْ
حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
: أخرج ابن المنذر وابن أبي حاتم والطبراني وابن مردويه من طريق ابن جبير عن ابن عباس ، قال : அ لمّا نزلت هذه الآية …
قالوا : يا رسول الله من قرابتك الذين وجبت مودّتهم ؟ قال : علي وفاطمة وولدها
இந்த வசனம் இறங்கிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லலாம் அவர்களிடம் ஸஹாபாக்கள் : யா ரசூலுல்லாஹ், உங்களுடைய எந்த உறவினர்களை நாங்கள் பிரியம் கொள்வது எங்கள் மீது கடமை என்று வினவ, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லலாம் அவர்கள் : அலி, பாத்திமா மற்றும் அவர்களின் இரு பிள்ளைகள் (ரலியல்லாஹு அன்ஹும்) என்று சொன்னார்கள்.
அருள்மறையில் அல்லாஹ், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் மீதும் ஸலாம் உரைக்கின்றான்.
آل ياسين : ( سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
37:130. “ஸலாமுன் அலா இல்யாஸீன்”
ورد في الكثير من التفاسير : إنّ المراد من அ ياسين ஞ النبي محمّد صلّى الله عليه وآله
இந்த வசனத்திற்கு குர்ஆனின் விரிவுரையாளர்கள், இந்த வார்த்தையை கொண்டு அல்லாஹ் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை தான் நாடுகிறான் என்று கூறுகின்றார்கள்.
. وورد عنه صلّى الله عليه وآله أنّه قال : அ إنّ الله سمّاني في القرآن بسبعة أسماء : محمّد وأحمد وطه ويس والمزمّل والمدثّر وعبد الله
இன்னும் ஹதீஸ்களில் : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : நிச்சயமாக அல்லாஹ் எனக்கு குர்ஆனால் 7 பெயர்கள் வைத்துள்ளான் : 1. முஹம்மது 2 . அஹ்மத் 3. தாஹா 4. யாசீன் 5. முஸ்ஸம்ம்மில் 6. முத்தஸ்ஸிர் 7. அப்துல்லாஹ்.
என்று சொன்னார்கள்.
எனவே இதில் “இல் யாசீன்” என்ற வார்த்தையில் ”இல்” என்பது குடும்பம் என்ற அர்த்தத்தையும், யாசீன் என்பது றஸூலுல்லாஹ்வையும் குறிக்கும். எனவே இதன் அர்த்தம் ”யாஸீனின் குடும்பம்” .
அவர்கள் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காக தான் இருக்கிறது என்று அருள் மறையில் கூறிக்காட்டுகின்றான்.
( وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا * إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّـهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا )
76:8. மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
76:9. “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
அவர்களிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹசன் மற்றும் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களின் மீது தனி பிரியம் கொண்டிருந்தார்கள்.
قال رسول الله صلى الله عليه وآله : الحسن والحسين سيّدا شباب أهل الجنّة
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் : ”ஹசன் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் சொர்கத்து வாலிபர்களின் இரு தலைவர்கள் ” என்று சுப சோபனம் சொன்னார்கள்.
عن عبد الله قال: ((كان رسول الله صلى الله عليه وسلم إذا سجد وثب الحسن والحسين على ظهره فإذا أرادوا أن يمنعوهما أشار
إليهما أن دعوهما فإذا قضى الصلاة وضعهما في حجره وقال: من أحبني فليحب هذين))
அவர்களை மிகவும் பிரியத்துடன் கவனித்து கொண்டார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது, ஹசன் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்களின் முதுகின் மீது ஏறி இருக்கும்போது யாரேனும் அவர்களை தடுக்க வந்தால் அவர்களை விட்டுவிடுமாறு சமிக்கை செய்வார்கள். பின் தொழுகை முடித்த பின்பு அவ்விருவரையும் தனது மடியில் வைத்துக்கொண்டு : யார் என்னை விரும்புகிறாரோ அவர்கள் இந்த இருவரையும் விரும்பட்டும் என்று சொன்னார்கள்.
இவர்கள் இருவரை நேசிப்பது அல்லாஹ் மற்றும் ரசூல் இருவரின் நேசத்தையும் நமக்கு பெற்று தரும் :
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي عَوْفٍ أَبِي الْجَحَّافِ وَكَانَ مَرْضِيًّا عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَبْغَضَهُمَا فَقَدْ أَبْغَضَنِي
سنن ابن ماجه المقدمة باب فضل الحسن والحسين
நாயகம் ஸல்லலலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன்னர்கள் : யார் ஹஸன் மற்றும் ஹுசைன் இருவரையும் நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிப்பவராவார். யார் அவர்கள் இருவரையும் பகைத்துக்கொள்கின்றாரோ அவர்கள் என்னை பகைத்தவராவார்.
(حَدَّثَنَا حَجَّاجٌ حَدَّثَنِي إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ هَانِئٍ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ الْحَسَنُ أَشْبَهُ النَّاسِ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مَا بَيْنَ الصَّدْرِ إِلَى الرَّأْسِ وَالْحُسَيْنُ أَشْبَهُ النَّاسِ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كَانَ أَسْفَلَ مِنْ ذَلِكَ)
مسند احمد كتاب مسند العشرة المبشرين بالجنة باب ومن مسند علي بن أبي طالب
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: மக்களே! ஹசன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலை முதல் நெஞ்சிற்கு ஒப்பாக இருப்பார்கள், இன்னும் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களின் மீத பாதிக்கு ஒப்பாக இருப்பார்கள்.
இப்படிப்பட்ட ஹசன் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பிரியம் கொண்டு றஸூலுல்லாஹ்வின் ப்ரியத்தையும் ஏக இறைவனின் ப்ரியத்தையும் பெற அல்லாஹ் நமக்கு தோளபீக் செய்வானாக . ஆமீன்.
source: http://velliarangam.blogspot.in/