Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் மீன் எண்ணெய்!

Posted on October 17, 2016 by admin

 மீன் எண்ணெய்

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும்.

அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது.

நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும்.

ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மன நோய்களுக்கு மருந்தாகும் மீன் எண்ணெய் மாத்திரைகள்

மீன் எண்ணெய்யில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மன நோய்களுக்கு மருந்தாவதாக சமீபத்திய ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

மீனெண்ணெய் மாத்திரைகளை 12 வார காலத்திற்கு கொடுத்ததில் பெரும்பாலானவர்களுக்கு மனப் பாதிப்புகள் மற்றும் மன நோய்கள் தடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக மக்களிடையே பரவலாக மீனெண்ணெய் மாத்திரைகள் உண்ணப்பட்டு வருகின்றன.

இவற்றில் உள்ள ஆல்பா லீனோலிக் போன்ற அமிலங்கள் மனித உடம்பின் செல் சவ்வுகளில் காணப்படுகின்றன. இவை ஹோர்மோன்கள் சுரக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயற்கை வைத்தியத்திற்காக மீனெண்ணெய் மாத்திரைகளை தேர்வு செய்வது தெளிவாகியுள்ளது.

ஆண்டு தோறும் அமெரிக்கர்கள் 120 கோடி டொலர்களை செலவழிப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் மேலும் தெளிவாகிறது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் பால் ஆம்னிகர் இது சம்பந்தமாக ஓர் ஆய்வினை மேற்கொண்டார்.

இதில் 13 முதல் 25 வயதிற்குட்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

மொத்தம் 81 பேரில் 41 பேருக்கு மீனெண்ணெய்யும், மீதி 40 பேருக்கு சாதரண மன நல சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.

மீனெண்ணெய் கொடுக்கப்பட்ட 41 பேரில் 39 பேருக்கு மன ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

சாதாரண சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 29 பேருக்கு மட்டுமே மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.

மூளையை இளமையாக வைத்திருக்க உதவும்  மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் ஒமேகா௩ கொழுப்பு அமிலம் என்ற ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளது. இந்த ஒமேகா௩, மூளையை இளமையாக வைத்திருக்க உதவுவதாக அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

67 வயதுள்ள சுமார் 1500 பேரிடம் ஆய்வு நடத்தி அவர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

ஒமேகா அமிலத்தை குறைவாக சாப்பிட்டவர்களின் மூளை சுருங்கியும் ஞாபக மறதி, மனநிலை பிறழ்வு போன்ற பாதிப்புக்கும் ஆளாகி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே ஒமேகா அமிலம் நிறைந்த மீன்களையும் மீன் எண்ணெயையும் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb