எதிர்ப்பில் வளர்ந்த ஏகவத்துவம்
Raj raj mohamed
‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது’ என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருகின்றனர்.
நேர்ச்சை
தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்’ என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் பல வசனங்கள் மூலம் கற்றுத் தருகிறான்.
பிராத்தனை
வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை ஆகும். இந்த பிராத்தனையை தன்னைப் படைத்த அல்லாஹ்விடத்தில் தான் கேட்க வேண்டும். ஆனால் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் தெளிவாக அறிந்து வைத்துயிருந்தாலும் அவர்களிடத்தில் தான் கேட்கிறார்கள். இறைவனிடத்தில் தான் பிராத்தனை கேட்க வேண்டும் என்றும் அல்லாஹ்வும், அவனது தூதரும் கற்றுத் தந்துயிருக்கிறார்கள்.
‘பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்’ என்றே கூறுகிறோம். ‘ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்’ என்றே அவர்களின் நன்மையாகும்.
இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.
முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர். இவர்களைப் போன்று மக்காவிலுள்ள மக்களும் இருந்தார்கள். அதனால் தான் மக்கத்து காஃபிர் பெயர் வந்தன.
மக்கத்து காஃபிர்கள் ஏன் வழிகெட்டார்கள்
மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ் கடவுள் இல்லை என்று மறுக்கவில்லை. இந்த வானம் பூமி அனைத்தையும் படைத்ததும், மழையை இறக்குவதும், பேரழிவுகள் வரும் போது காப்பாற்றுவதும் அல்லாஹ் தான் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அல்லாஹ்விற்கு மேலாக அவர்கள் யாரையும் நினைக்கவில்லை.
இவர்கள் இவ்வாறு அல்லாஹ் விஷயத்தில் நம்பினாலும் அல்லாஹ்விற்கு இணைகற்பித்த ஒரே காரணத்தினால் இறைமறுப்பாளர்களாக ஆனார்கள். முஸ்லிம்களாக இருக்கவில்லை.
மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக எவற்றை நம்பினார்களோ அந்த அதிகாரங்கள் அப்துல்காதர் ஜீலானிக்கும், ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் உள்ளது என்று இன்றைக்கு நம்புபவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது.
பெரும் துன்பங்கள் வரும் போது முஹ்யீத்தீனே என்று அழைப்பவர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். ஆனால் மக்கத்து காஃபிர்கள் பெரும் துன்பங்கள் வரும் போது அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள். மற்ற கடவுள்களை மறந்துவிடுவார்கள். இந்த வகையில் மக்கத்து காஃபிர்களை விட மோசமான நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். (பார்க்க குர்ஆன் (29 : 61, 63, 31 : 25)
இஸ்லாம் கூறும் சரியான ஏகத்துவக்கொள்கையை பல முஸ்லிம்கள் புரியாத காரணத்தினால் ஓரிறைக்கொள்கைக்கு பங்கம் விளைவிக்கும் இணைவைப்புக்காரியங்களில் சர்வசாதாரணமாக ஈடுபட்டுவருகிறார்கள். இஸ்லாமும் எல்லா மதங்களைப் போன்றது தான் என்று மாற்றுமதத்தினர் நினைக்கின்ற வகையில் இவர்களின் செயல்பாடு அமைந்துள்ளது.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது,
அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் உதவிதேடுவது,
மற்றவர்களிடம் பாவமன்னிப்பு தேடுவது,
அல்லாஹ் அல்லாதோரை சார்ந்திருப்பது.,
சாதாரணப் பொருட்களுக்கு சக்தி இருப்பதாக எண்ணுவது,
தரீக்காவை பின்பற்றுவது,
சோதிடம் குறி பார்ப்பது,
சகுணம் பார்ப்பது,
நல்ல நேரம் கெட்ட பார்ப்பது,
சூனியத்தால் மற்றவர்களை முடக்கலாம் என்று நம்புவது,
அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது,
மற்றவர்களுக்கு அறுத்துப்பலியிடுவது,
மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்வது,
பிறரது காலில் விழுவது,
தர்ஹாக்கள் செல்வது,
சந்தனக்கூடு உரூஸ் எடுப்பது.
அல்லாஹ்வை அஞ்சுவது போல் மற்றவற்றை அஞ்சுவது,
அல்லாஹ்வை நேசிப்பது போல் மற்றவைகளை நேசிப்பது,
மவ்லூது ஓதுவது,
ஓதிப்பார்த்தல்,
தகடு தாயத்துகளை தொங்கவிடுவது,
பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக வணக்கங்களை புரிவது,
இதுப்போன்ற எண்ணற்ற இணைவைப்புகளில் தமிழக முஸ்லிம்களில் பலர் மூழ்கிகிடந்தனர். இவர்களை வெண்று எடுக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் பல ஊர்களில் ஏகத்துவ பிரச்சாரம் செய்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் செய்வார்கள்.
ஓரிறைக்கொள்கையில் தடம்புரண்டு விடாமல் ஏகத்துவவாதியாக மரணித்தால் தான் மறுஉலக வாழ்வில் வெற்றி உண்டு. ஆனால் இன்றைய தமிழக முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளில் வழிபாடு நடத்துகிறார்கள். அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்றும், கால் நடைகளையும், வானவர்களையும், சிலைகளையும், மகான்களையும், இறந்தவர்களையும் வணங்கக் கூடாது என்றும் இறந்தவர்கள் செவியுறமாட்டார்கள்.
பதில் தரமாட்டார்கள்.
உதவி செய்ய முடியாது.
உணவளிக்க முடியாது.
படைக்க இயலாது,
செல்வத்தை அளிக்க முடியாது.
மனிதர்கள் செய்வதை கூட செய்ய முடியாது.
நன்மையோ தீமையோ செய்ய இயலாது என்றும்,
இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரத்தை மக்களுக்கு மத்தியில் தெளிவாக எடுத்து வைக்கும் போது நாங்கள் சிலைகளை வணங்குவதில்லை. நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும். சிலைகளும் ஒன்றுதான் என்பதை சிலர் விளங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல் ஏகத்துவத்தை எடுத்து வைப்பவர்களுக்கு பல சிரமங்களையும், துன்பங்களையும் இன்னல்களையும் ஏற்படுத்துகிறார்கள். இதேப் போன்று இணைவைப்பிற்கு எதிராக நபிமார்களின் வீரியப் பிரச்சாரம் செய்தார்கள். இணைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக அதிகமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இணைவைப்பிற்கு எதிராக மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தார்கள்.
ஒவ்வொரு மனிதனும் முதலில் ஓரிறைக்கொள்கையைத் தான் கடைபிடிக்க வேண்டும். செல்வமும் சொத்துபத்துக்களும் தான் பாக்கியம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈடு இணையில்லாத ஒரு பாக்கியமாக ஏகத்துவம் இருந்துகொண்டிருக்கிறது.
எத்தனையோ கோடீஸ்வரர்களுக்கும், அரய்ர்களுக்கும், படித்து பட்டம்பெற்றவர்களுக்கும் வழங்காத ஏகத்துவ பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கி அவர்களை விட நம்மை மேம்படுத்தியுள்ளான்.
எனவே இதை பெரும்பாக்கியமாக உணர்ந்து மரணிக்கும் வரை ஏகத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள நாம் அரும்பாடுபட வேண்டும்.
ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எத்தி வைப்பவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீது கடமை. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் சரியே. அனைவரும் மீது கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்.
”அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?” (அல்குர்ஆன் 41:33)
”நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.” (அல்குர்ஆன் 9:71)
ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எத்தி வைக்கும் போது அசத்தியவாதிகள் பல துன்பங்களையும், இன்னல்களையும், கஷ்டங்களையும் தருவார்கள். ஆனால் அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. மேலும் ஏகத்துவக் கொள்கையை வளர்ப்பதற்கு இது ஒரு வெற்றியின் வழியாகும். சில வருடங்களாக தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரத்தை மூத்த அறிஞர்கள் எடுத்து வைத்துக் கொண்டுயிருக்கிறார்கள். அவர்கள் இந்த ஏகத்துவக் கொள்கைக்காக பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அடைந்துள்ளனர். அவர்களுக்கு துன்பங்கள் அதிகமாக, அதிகமாக அசதியவாதிகளால் ஏகத்துவக் கொள்கையை முடக்க முடியவில்லை. தற்போது தமிழகத்தில் ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் ஏகத்துவக் கொள்கை பரவி இருக்கின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தியவண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) அவர்களிடம் வரும். (அறிவிப்பவர் : முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3641)
ஏகத்துவக் கொள்கையை பிரச்சாரம் செய்யும்போது நமக்கு என்ன சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம்.
குடும்பத்தார்களின் எதிர்ப்பு
ஒருவொருவரும் தன் குடும்பத்தாருக்கு ஏகத்துவக் கொள்கையை எடுத்துவைக்கும் போகும் வீட்டிற்கு வர கூடாது என்றும், சாப்பிட கூடாது என்றும் பெற்றோர்கள் பேசவும் மாட்டார்கள் இதுப்போன்ற எண்ணற்ற துன்பங்கள் குடும்பத்தின் மூலமாக ஏற்படும். அதைக் கண்டு நாம் துவண்டு விடாமல் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அதனால் குடும்பத்திற்கு எடுத்து வைக்காமல் இருக்க கூடாது. நம்முடைய குடும்பத்தார்கள் கஷ்டத்தைப் ஏற்படுத்துவதைப் போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
”(முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!” (அல்குர்ஆன் 26:214)
ஏகத்துவக் கொள்கையை நெருங்கிய உறவினர்களுக்கு எடுத்து சொல்லுமாறு அல்லாஹ் கட்டளையிட்டவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கோத்திரத்தையும், மற்ற கோத்திரத்தையும் அழைத்து ஏகத்துவ கொள்கையை எடுத்து சொல்லும் போது நபியின் மீது அதிக பாசம் வைத்த, நபியவர்களுக்காக அடிமையை விடுதலை செய்த பெரிய தந்தை அபூலஹப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சபிக்கின்றான். குடும்பத்திலிருந்து முதல் எதிர்ப்பு கிழம்புகிறது.
“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு, “கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அப்துல் ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அப்துல் மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்துபோகவிடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறவைப் பேணி நடந்துகொள்வேன்)” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 348)
“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்-) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ற்ட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்கற்டம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலற்த்தனர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4770)
இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து, தீமைகளைக் கைவிட்டு வாழ்வதன் மூலமோ ஒருவர் மறுமையில் நல்வாழ்வு பெற முடியும். ஆனால் எவரும் இறைவனின் வேதனையிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. இது பொதுவான விதியாகும். இதில் யாருக்கும் அவர்கள் நபியின் நெருங்கிய உறவினர்களாகவே இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது எனும் சமதர்மக் கோட்பாட்டை இங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுத்தம், திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
பயானை கேட்பதை தடுப்பார்கள்
ஏகத்துவத்தின் அடித்தளம் குர்ஆனும், நபிவழியும் தான். இக்குர்ஆனில் தான் நேர்வழியும், தெளிவான சான்றுகளும் அடங்கியுள்ளன. இதில் தான் அனைத்து சட்டத்திட்டங்களும் உள்ளன. இக்குர்ஆனை ஒருவர் படித்தாலே அல்லது செவிதாழ்ந்து கேட்டாலே அம்மனிதர் நேர்வழி அடைந்து விடுவார். அதாவது இக்குர்ஆனைப் பற்றி சிந்தித்தால் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகஇருக்கின்றன. ஆனால் மக்கத்து காஃபிர்களின் தலைவர்கள் தங்களுடைய குடும்பத்தார்களையும், உறவினர்களையும், தோழர்களையும் அனைவரையும் இக்குர்ஆனை செவிதாழ்ந்து கேட்க கூடாது என்று கூறிவந்தார்கள். ஏனென்றால் அவர்கள் செவிதாழ்ந்து கேட்டால் இணைவைப்பு கொள்கையை விட்டும், ஏகத்துவ கொள்கைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் அவர்களின் மூலம் கிடைக்கின்ற ஆதாயம் கிடைக்காமல் போகி விடுமோ என்ற அச்சத்தால் குர்ஆனை செவிதாழ்ந்து கேட்பதற்கு தடை செய்தார்கள்.
அதேப் போன்று தான் தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் ஏதாவது இடத்தில் பொது மீட்டிங், ஜும்ஆ பயான், பெண்கள் பயான் இதுப் போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது அதை நடத்த விடாமல் சில கைவர்கள் மக்களை தடுப்பார்கள். ஏன் அவர்களை தடுக்கின்றார்கள் என்றால் ஏகத்துவ பிரச்சாரத்தில் குர்ஆன், ஹதீஸ் மட்டும் பேசப்படும். மத்ஹப்கள், ஸஹாபாக்களை பின்பற்றுவதை பற்றி பேச மாட்டார்கள். அதனால் இந்த பயானில் குர்ஆனை செவியேற்றார்கள் என்றால் அவர்கள் நேர்வழி அடைந்து விடுவார்கள். அவர்களின் மூலம் கிடைக்கின்ற ஆதாயம் கிடைக்காமல் போகிவிடும் என்ற அச்சத்தால் தான் ஏகத்துவ பிரச்சாரத்தின் பயானை சில ஊர்களில் சில கைவர்கள் தடை விதிக்கின்றார்கள். இதுவெல்லாமல் ஏகத்துவத்தில் ஏற்படும் இடையூறுகள் என்று விளங்கி அதை தகிர்த்து எறிவதற்கு வழிமுறைகளை கையாள வேண்டும்.
“இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 41:26)
இதேப்போன்று தான் பயானை கேட்பதற்கு தடை செய்கிறார்கள்.
தொழுகையை தடுப்பார்கள்
ஏகத்துவக் கொள்கையை ஒருவர் ஏற்ற பிறகு, கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும். சில பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த அடிப்படையில் அவர்களின் தொழுகை அமைந்துயிருக்காது. நபிகளார் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆனால் ஏகத்துவவாதிகள் சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்ல கூடிய பள்ளிவாசலில் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் தொழுதால், அதாவது நெஞ்சியில் தக்பீர் கட்டி, ஆமீன் கூறி, அமர்வில் விரலசைத்து தொழுபவர்களை தடுக்கிறார்கள். ஆனால் சில பள்ளிவாசலில் இதை விடவும் மோசமான காரியங்களை செய்கிறார்கள். நபி வழியின் படி தொழுபவர்களை தொழவிடாமல் தொழுதுக் கொண்டுயிருக்கும் போதே அவர்களை கழுத்தை பிடித்து விரட்டிவிடுகிறார்கள். ஆனால் சில பள்ளிவாசலில் இணைவைக்க கூடிய காரியங்கள் நடைபெறும். அதை யாரும் தடுக்க மாட்டார்கள். அல்லாஹ்வுக்கே மட்டும் வணக்கத்தை செலுத்த கூடியவர்களை பள்ளியை விட்டும் விரயடிப்பார்கள், அதேப் போன்று தான் அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பதற்காக கஅபாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சென்று சிலைகளை வணங்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்கத்து காஃபிர்கள் மிக கடுமையான வேதனை ஏற்படுத்தினார்கள். அக்கஅபாவில் நிர்வாணமாகவும், விசில் அடிப்பதும். கை தட்டுவதும் இது தான் காஃபிர்களின் வவ்க்கங்கள் இருந்தன. இவர்களை தடுக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்திய உம்மி நபியை வேதனை படுத்தினார்கள். இதுப் போன்று அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று சொல்ல கூடியவர்களை வேதனை செய்வார்கள் என்பதை பின்வரும் செய்தி மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
உர்வா பின் ஸுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
“இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்கற்லேயே மிகக் கடுமையானது எது?” என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கற்டம் கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்கற்ன் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டு உக்பாவை (தம் கையால்) தள்ற்னார்கள். அப்போது, “என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்கற்டம் தெற்வான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கின்றார்” என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 3678)
கொடுமைப் படுத்துவார்கள்
ஏகத்துவக் கொள்கையை ஏற்றக்காக சிலர் பல இன்னல்களையும், துன்பங்களையும் அடைவார்கள். அதோ போல் ஸஹாபாக்களும் இஸ்லாத்தில் நுழைந்தற்காக பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அடைந்தார்கள். அதனால் தான் அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான். இதேப் போன்று ஏகத்துவக் கொள்கை நாம் ஏற்றால் பல துன்பங்களும், கஷ்டங்கள் வரும். அதனை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஅபாவின் நிழ-ல் ஒரு சால்வையைத் தலையணையாக வைத்து சாய்ந்து கொண்டிருக்க, நான் அவர்கற்டம் சென்றேன். அப்போது நாங்கள் இணை வைப்பவர்களால் கடும் துன்பங்களைச் சந்தித்திருந்தோம். ஆகவே, நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டேன். உடனே அவர்கள் முகம் சிவந்து போய், (எழுந்து) உட்கார்ந்து கொண்டு சொன்னார்கள்: உங்களுக்கு முன் (இந்த ஏகத்துவ மார்க்கத்தைத் தழுவி) இருந்தவர் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் கோதப்பட்டு (கொடுமைப்படுத்தப்பட்டு) வந்தார். அது அவரது எலும்புகளையும் கடந்து சென்று அதன் கீழுள்ள இறைச்சியையும் நரம்பையும் அடைந்துவிடும். (ஆனால்,) அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்தி-ருந்து (திசை) திருப்பி விடவில்லை. மேலும், அவருடைய தலையின் வகிட்டில் ரம்பம் வைக்கப்பட்டு இரு கூறுகளாக அவர் பிளக்கப்படுவார். ஆனால், அதுவும் அவரை அவருடைய மார்க்கத்திருந்து திருப்பி விடவில்லை. நிச்சயம் அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். எந்த அளவிற்கென்றால், (தன் வாகனத்தில்) சவாரி செய்து வரும் ஒருவன், (யமன் நாட்டிலுள்ள) “ஸன்ஆ’வி-ருந்து “ஹளரமவ்த்’ வரை பயணம் செய்து செல்வான். (வழியில்) அவனுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைத் தவிர வேறெந்த அச்சமும் இருக்காது.
வேறோர் அறிவிப்பில், “தன் ஆடுகள் விஷயத்தில் ஓநாய் பற்றிய அச்சத்தையும் தவிர” என்னும் வாக்கியத்தை பயான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : கப்பாப் இப்னுல் அரத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3852)
அடியும், உதையும் தருவார்கள்
ஏகத்துவக் கொள்கையை மக்கள் மத்தியில் எத்தி வைக்கும் போது அதை ஏற்காமல் பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டத்தில் கல் வீச்சி, லைட் உடைத்தல், தீட்டுவது இதுப் போன்ற பல தீய காரியங்களில் சில கைவர்கள் ஈடுபடுவார்கள். இவை அனைத்தையும் தாண்டி வந்ததுதான் இந்த ஏகத்துவக் கொள்கை. இந்த ஏகத்துவக் கொள்கையை ஏற்றத்காக தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மூத்த அறிஞர்கள் உதையும், அடியும் வாங்கியுள்ளார்கள். இதேப் போன்று ஸஹாபாக்களுக்கும் இதை விட மேசமான விலைவுகள் அடைந்துள்ளன.
அபூ ஜம்ரா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள், “சரி (அறிவியுங்கள்)” என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது “ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே நான் என் சகோதரர் (அனீஸ்)இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா” என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம் என்ன செய்தி உண்டு?’ என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையி-ருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை’ என்று கூறினேன். பிறகு தோ-னால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.
அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாம-ருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)” என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். “மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். உடனே அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “என்னுடன் நடங்கள்” என்று சொல்-விட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்” என்று சொன்னார்கள். நான் அப்போது “இங்கே தம்மை இறைத் தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே, என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம், “எனக்கு இஸ்லாத்தை எடுத் துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், “அபூதர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உனக்கு எட்டும் போது எங்களை நோக்கி வா” என்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்-விட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், “குறைஷிக் குலத்தாரே! “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரு மில்லை’ என்று நான் உறுதி கூறுகின்றேன். “முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” என்று சொன்னேன். உடனே, அவர்கள் “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)” என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள். மறு நாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போலவே நடந்து கொண்டார்கள். அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடி படாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (அன்றும்) சொன்னார்கள்.
(இதை அறிவித்த பிறகு) இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “இது அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 3522)
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கிஃபார் குலத்தார் அன்றைய ஹிஜாஸ் மாகாணத்தில், மக்காவுக்கு வெளியே வசித்து வந்தார்கள். அவர்கள் குடியிருந்த பகுதியைக் கடந்து தான் மக்கா வாசிகள் வியாபாரத்திற்காகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அறியாமைக் காலத்திலேயே ஓரிறைக் கொள்கை கோட்பாட்டில் இருந்து வந்த அபூதர் (ரலி) அவர்கள், மக்கா வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்த பின்னர் இஸ்லாத்தை ஏற்றார். பின் தம் சமூகத்தாரிடம் சென்று இஸ்லாத்தை எَத்துரைத்தார். அதன் மூலம் பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அடைந்தார் என்று இந்த ஹதீஸின் மூலம் அறியலாம்.
திட்டுவார்கள்
ஓரிறைக் கொள்கை ஏற்றுக் கொண்டால் சிலர் திட்டுவார்கள். பனூ கைனூகா குலத்தில் யூதப் பாதிரியாராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய அப்துல்லாஹ் பின் சலாம் என்பவர் இஸ்லாத்தில் வருவதற்கு முன்னால் யூதமதத்தில் கண்ணியமிக்கவராக திகழ்ந்தார். ஆனால் அவர் இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவருடைய குலத்தார்கள் கடுமையாக திட்டுபவர்களாக இருந்தார்கள். அதேப் போன்று யாரெல்லாம் ஓரிறைக் கொள்கைக்கு வருகிறார்களோ அவர்களை கடுமையாகவும், மேசமாகவும் திட்டுவார்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்.
பிறகு, “
1. இறுதி நாளின் அடையாளங்கற்ல் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ அல்லது தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள்.
உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “ஜிப்ரீல் தான் வானவர்கற்லேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இறுதி நாளின் அடையாளங்கற்ல் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.
சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப் படியான சதையாகும்.
குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கின்றது” என்று பதிலற்த்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்றும் நான் உறுதி அற்க்கிறேன்” என்று கூறினார்கள்.
பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். ஆகவே நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்” என்று பதிலற்த்தார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று சொன்னார்கள்.
மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களிடம் முன்பு போலவே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போலவே பதிலளித்தார்கள்.
உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் வெற்யே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அற்க்கிறேன்.” என்று சொன்னார்கள்.
உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள்.
(அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 3938)
கஷ்டம் ஏற்படும் (செல்வம் செலவாகும்)
ஏகத்துவ கொள்கையை ஏற்பதற்கு முன்னால் பெரிய செல்வந்தராக திகழ்வார்கள். கொள்ள்யை ஏற்ற பிறகு இந்த கொள்கைக்காக தனது செல்வத்தை செலவு செய்வார்கள். பிறர்காலத்தில் அவர்களுக்கு உதவி செய்ய கூட ஆள் இல்லாத சூழ்நிலை ஏற்படும். இந்த கஷ்டத்தை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்
இறந்து போனவரின் (மய்யித்) சடலத்தை குளிப்பாட்டி கஃபன் எனும் பிரேத ஆடை அணிவிக்க வேண்டும். ஆனால் முஸ்அப் பின் உமைர் என்ற ஸஹாபிக்கு கஃபனிடவதற்கு துணிகள் இல்லாத தால் தலையை மறைத்து அவரை அடக்கம் செய்தனார். அவர் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் செல்வந்தராக திகழ்ந்தார். இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் அல்லாஹ்வின் திருப்தியை நாடி உறவினர்களையும், செல்வங்களையும் விட்டு ஹிஜ்ரத் செய்தார். இந்த ஏகத்துவக் கொள்கை ஏற்ற காரணத்தினால் செல்வத்தை இழந்து விடுகிறார். இதேப் போன்று சூழ்நிலை நமக்கும் அல்லாஹ் ஏற்படுத்துவான். அதைக் கண்டு நாம் கவலைப் படக் கூடாது.
நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தங்கள் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். எங்களில் மற்ற சிலருக்கு (ஹிஜ்ரத்தின்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறார்கள். முஸ்அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அன்னாரது உடலில் (கஃபனாகச்) சாத்த ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு அவரது தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரது கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர் : கப்பாப் (ரலிலி), நூல் : புகாரி 1276)
தாயிகள் பற்றாகுறை (70 குர்ராஃ)
ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ -ஹ்யான் குலத்தார்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு உதவி செய்வதற்காக உங்களை தோழர்களை அனுப்புங்கள் என்று உதவி தேடினர். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குர்ஆனை நன்கறிந்த, மக்களுக்கு கற்று தரக் கூடிய எழுபது ஸஹாபாக்களை அனுப்பினார்கள். அந்த குலத்தார்கள் அந்த ஸஹாபாக்களை கொன்று குவித்தார்கள். இவர்கள் இறந்த காரணத்தினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைப்பணி முடக்கி விடும் என்று பயப்பிடவில்லை. இவர்கள் மற்றவர்களுக்கு குர்ஆனை கற்று தருபவர்கள். இவர்கள் இல்லையென்றால் குர்ஆனை கற்று தருவதற்கு யாரும் இல்லை என்று பயந்தார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துயிருந்தார்கள். இந்த மார்க்கத்தை இவர்கள் இல்லாமல் மற்றவர்கள் மூலம் வலுபடுத்திவான் நம்பிக்கை இருந்தன. அதேப் போல் தான் தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கை பல ஊரிகளில் கொடிக்கட்டி பறக்கிறது. ஆனால் சிலர் பி.ஜே இறந்து விட்டால் தமிழகத்தில் ஏகத்துவ கொள்கை அழிந்துவிடும் என்று எண்ணுகிறார்கள். இவை முற்றில் தவறு. அந்த அறிஞர் இல்லையென்றால் மற்ற அறிஞர் மூலம் இந்த ஏகத்துவத்தை வலுபடுத்துவான் என்ற எண்ணத்தை நாம் பதிய வைக்க வேண்டும்.
ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ -ஹ்யான் குலத்தினர் (வந்து தங்களுடைய) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும் படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம் கோரினர். அப்போது அவர்களுக்கு அன்சாரிகற்ல் எழுபது பேர்களை அனுப்பித்தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் அவர்களை (அந்த எழுபது பேர்களை) நாங்கள் “குர்ராஃ- திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்’ என்று பெயரிட்டு அழைத்து வந்தோம். அவர்கள் பக-ல் (பிழைப்பிற்காக) விறகு சேகரிப்பவர்களாகவும் இரவில் தொழக்கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்கள் (பயணம் செய்து) “பிஃரு மஊனா’ எனுமிடத்தை அடைந்த போது (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) அவர்கள், இவர்களை வஞ்சித்துக் கொன்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எட்டிய போது ஒரு மாத காலம் சுப்ஹுத் தொழுகையில் அரபுக் குலங்களான ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ -ஹ்யான் குலத்தினருக்கெதிராக பிராத்தித்து “குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இவர்கள் குறித்து (அருளப் பட்டிருந்த) குர்ஆன் (வசனமொன்றை) ஓதி வந்தோம். பின்னாற்ல் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. “நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; எங்களை அவன் திருப்தியுறச் செய்தான்’ என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனமாகும். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4090)
இதுப் போன்ற எண்ணற்ற துன்பங்கள் நிகழுவதால் இஸ்லாத்தை எடுத்து சொல்ல கூடிய சில ஆலிம்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள். இன்னும் ஏகத்துவ கொள்கை சொல்வதால் தன்னுடைய இமாம் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்று அச்சத்தாலும் இன்னும் தவறான முறையில் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் தீமைகளில் முஸ்லிம்களில் சிலர் சமரசம் செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஏகத்துவக் கொள்கையை நாம் பிரச்சாரம் செய்யும் போது, அது சரியான கொள்கை என்று தெரிந்தால் கூட, வருமானம் பாதிக்கும் என்பதற்காகத் தங்கள் தீமைகளிலிருந்து இவர்கள் விலகுவதில்லை.
ஈமான் கொண்டால் சோதனை வரும்
ஏகத்துவக் கொள்கை ஏற்றால் இதுப்போன்ற எண்ணற்ற துன்பங்களும், கஷ்டங்களும் ஏற்படும். பல துன்பங்கள் அடைந்தால் தான் அவர் ஈமானில் முழுமை அடைந்து விட்டார் என்பதை நாம் அறியலாம்,
“நம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? (அல்குர்ஆன் 29:2)
சோதனை வந்தால்தான் சுவனம்
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)
எனவே எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒருபோதும் அல்லாஹ்விற்கு இணைவைத்து விடாமல் ஏகத்துவக்கொள்கையில் உறுதியாக இருந்து ஈருலகில் வெற்றியடையும் பாக்கியத்தை இறைவன் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக.
இப்படிக்கு
என் : ராஜ் முஹம்மது, குழுமூர்
source: http://rajmohamedmisc.blogspot.in/2012/02/blog-post_23.html