ஹஸீனா அம்மா பக்கங்கள் (6)
பதவி உயர்வு தருபவை :
பத்து விஷயங்கள் ஓர் அடியானை சிறப்பிற்குறியவர்களின் ஸ்தானத்திற்கு உயர்த்திவிடும்.
1. அதிகமாக தர்மம் செய்வது.
2. அதிகமாக குர்ஆன் ஓதுவது.
3. உலகை விட்டு மறுமையை நினைவுகூர்பவருடன் அமர்வது.
4. உறவினரைச் சேர்ந்து வாழ்வது.
5. நோயாளியை விசாரிப்பது.
6. மறுமையை மறக்கச்செய்யும் பணக்காரர்களுடன் கலந்துறவாடாமல் இருப்பது.
7. மரணத்திற்குப் பின் செல்ல வேண்டிய இடம் பற்றி அதிகம் சிந்தனை செய்வது.
8. உலகாசையைக் குறைத்து மறுமையை அதிகம் நினைப்பது.
9. மவுனத்தை மேற்கொண்டு குறைவாகப் பேசுவது.
10. பணிவுடன் வாழ்வது.
ஈமானின் பகுதிகள் :
1. ஈமான் என்பது உண்மைப்படுத்துதல் ஆகும்.
2. உலகப்பற்றின்மையும், தக்வாவும் அதன் தலையாகும்.
3. வழிபாடும், உறுதியும் அதன் உடலாகும்.
4. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் அதன் மரம்.
5. தவ்ஹீத் அதன் கிளை.
6. ஜகாத் அதன் பழம்.
7. தொழுகையும், இக்லாசும் அதன் வேர்.
8. அல்லாஹ் அளித்த பாக்கியங்களுக்கு நன்றி செலுத்துதல்.
9. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்தல்.
10. அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்தல்.
நூல்: ஜாமிஉல் உஸூல்
தொழுகையின் சிறப்பு :
“தொழுகை தீனின் தூண். அதை நிலை நிறுத்தியவர் தீனை நிலைநிறுத்தியவர் ஆவார். மேலும் அதில் பத்து நன்மைகள் இருக்கின்றன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
1. முகத்தின் அழகு.
2. அகத்தின் ஒளி.
3. உடல் சுகம்.
4. கப்ரில் அமைதி.
5. அருளிறக்கும் சாதனம்.
6. வானத்தின் திறவுகோல்.
7. மீஜானை கனமாக்குவது.
8. ரப்பின் பொருத்தம்.
9. சொர்க்கத்தின் கிரயம்.
10. நரகத்தின் திரை.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
சிறந்த அமல் :
ஹளரத் உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப்பார்த்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்; “உக்பாவே! இம்மை, மறுமை இரண்டிலும் மிகச்சிறந்த ஒரு மல் எதூ? உமக்குத் தெரியுமா?”
ஹளரத் உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்; “சொல்லுங்க, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; “உம்மை விட்டு விலகி ஓடுபவரோடு வலியப் போய் சேர்ந்து கொள்ளும். உம்மிடம் கேட்கத்தயங்கிக் கொண்டிருப்பவருக்கு கொடும். உமக்கு அநீதம் இழைத்தவரை மன்னித்துவிடும்.
எல்லோருக்கும் பொதுவான பத்து விஷயங்கள் :
பத்து விஷயங்கள் படைப்பினங்கள் அனைவருக்கும் பொதுவானவை.
1. மரணம்.
2. உயிர்க்கொடுத்து எழுப்புதல்.
3. மஹஷரில் நிற்குதல்.
4. செயல் ஏட்டை வாசித்தல்.
5. கணக்குக் கொடுத்தல்.
6. நன்மை, தீமைகள் நிறுக்குதல்.
7. ஸிராத்துல் முஸ்தகீமில் நடத்தல்.
8. கேள்விக்கணக்கு கேட்கப்படுதல்.
9. கூலி வழங்கப்படுதல்.
10. திடுக்கிட்டு விழுதல்.
நூல்: நவாதிருல் கல்யூபி
www.nidur.info