“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (2) 1942 ஆம் வருடம் ஒரு நாள் மதியம் கடையில் நான் கைக்குட்டையில் எம்பிராய்டரி செய்து கொண்டிருந்தேன். நான் எம்பிராய்டரி செய்த கைக்குட்டைகள், பின்னிய உல்லன் தொப்பி போன்றவற்றை விற்றால் கிடைக்கும் பணம் எனக்குறியது. கடைக்கு வரும் ஏழை மாணவியர்களுக்கு அந்தப் பணத்தில் புத்தகம் அல்லது நோட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன். அப்போது ஒரு இந்திய வாலிபர் கடைக்கு வந்து ஒரு நோட்டும்,…