ஹஸீனா அம்மா பக்கங்கள் (3)
(23 08 2016 அன்று இரவு 9 மணியளவில், தனது 91 ஆவது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி இவ்வுலகில் தனது இறுதி மூச்சாக “லாஇலாஹ இல்லல்லாஹ்” வை மொழிந்து அவனளவில் மீள, மறுமைப்பயணத்தை மேற்கொண்டுள்ள எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info]
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நாளும் விடிந்திடும் முன்
ஒழுங்காய் எழுந்து தொழுதிடுவாய்!
ஒவ்வொரு நாளும் முறையாக
ஒழுங்காய் குர்ஆன் ஓதிடுவாய்!
ஒவ்வொரு நாளும் ஸலவாத்தை
உள்ளங் குளிர ஓதிடுவாய்!
ஒவ்வொரு நாளும் உன் உடலும்
உடையும் தூய்மை செய்திடுவாய்!
ஒவ்வொரு நாளும் பிறருக்காய்
உதவி புரிந்து வாழ்ந்திடுவாய்!
ஒவ்வொரு நாளும் சிறிதேனும்
ஒழுங்காய் நூல்கள் கற்றிடுவாய்!
ஒவ்வொரு நாளும் பெற்றோரின்
உள்ளங் குளிர நடந்திடுவாய்!
ஒவ்வொரு நாளும் உறங்கிடு முன்
ஒவ்வொன்றாக எண்ணிடுவாய்!
ஒவ்வொரு நாளும் இறைவனுக்கே
உவந்து நன்றி சொல்லிடுவாய்!
– புலவர் பஷீர்.
இறை வாழ்த்து
கூட்டுக்குள் மையாய்க்
கொட்டிக் கிடந்த என்னை
பேனாவுக்குள்
குடிப்புக வைத்துப்
பேச வைத்தவனே!
என் பேனாவுக்கு இறக்கைகளில்லை
ஆனால் என்ன அற்புதம்!
உன்னைச் சிந்தித்ததும்
சிறகுகளிரண்டு
சிம்மாசனம் கொள்கின்றன
என் பேனாவுக்கு!
‘அலிஃப்’ எழுத்தைப் போல்
என்னை
தலை நிமிர வைத்த
அல்லாஹ்!
‘லாம்’ எழுத்தைப் போல்
என்னை நடு நாயகமாக
வைத்தவனே!
இதோ ‘மீம்’ எழுத்தைப் போல்
எனது ஸஜ்தாக்கள்!
மெர்க்குரி பல்பாம்
அவையோர்க்கு
இந்த மின்மினியின் சலாம்
காஞ்சிப்பட்டாம் கவிஞர்களுக்கு
இந்தக் கைத்தறியின் சலாம்!
ஓலக்கடலாம் கூட்டத்திற்கு
இந்த ஓடையின் சலாம்!
“தலைமை”
ஒற்றைக்காலில் நிற்கும்
கொக்கோ உன் பேனா?
உன் பேனா கொக்கு
கவித்துவ மீனுக்காக
மட்டுமே குனிகிறது!
முஃமினுக்காக மட்டுமே நிமிர்கிறது!
யார் பொய்யன்?
o எவன், தான் சுவர்க்கத்தின் பிரியன் எனக் கூறிக்கொண்டு தன்னிடத்தில் உள்ள பொருள்களை அல்லாஹ்வின் வழியில் செலவழிக்கவில்லையோ அவன் பொய்யன்.
o எவன் இறைவனால் விலக்கப்பட்ட வஸ்துக்களை விட்டும் தன்னை விலக்கிக்கொள்ளாமல் இறைநேசன் தான் என தர்க்கின்றானோ அவன் பொய்யன்.
o யார் ஏழைகளை நேசிக்காமல் தான் அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்பு வைப்போன் எனக் கூறுகின்றானோ அவனும் பொய்யன்.
ஐந்து இடங்களில் நகைக்காதீர்கள்!
o மைய்யித் இருக்கும்போது!
o துன்பத்தில் இருப்பவனிடம்!
o கபுர்களின் அருகில்!
o குர்ஆன் ஓதும்போது!
o அல்லாஹ்வை திக்ர் செய்யும் சபைகளிலே!
(புரிந்தோ பூங்கா)
மரணம்
o மரணம் எல்லோருக்கும் வந்தே தீரும்!
o மரணம் எப்போது வருமோ அப்போதுதான் வரும்!
o மரணம் எங்கு வைத்து வர வேண்டுமோ
அங்கு வைத்துத்தான் வரும்!
o மரணம் எப்போதும் வந்தே தீரும்!
– குர் ஆனின் சாரம்
இன்ஷா அல்லாஹ் பக்கங்கள் தொடரும்.
www.nidur.info