Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிலைவணக்கமும் சிந்திக்கவேண்டிய உண்மைகளும்

Posted on August 21, 2016 by admin

சிலைவணக்கமும் சிந்திக்கவேண்டிய உண்மைகளும்

உலகில் சிலை வழிபாட்டை கடைப்பிடிப்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்த கட்டுரையில் சிலை வணக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், சிலைவணக்கத்திற்கு ஆதரவாக சொல்லப்படும் காரணிகளையும் ஆய்வு செய்யவிருக்கிறோம்.

சிலை வணக்கமுறைக்கு சொல்லப்படும் காரணங்கள் ::

1. சிலை இறைவன் அல்ல!! சிலை இறைவனின் சின்னம் / அடையாளம் மட்டும் தான். (symbol of god)

2. சிலை, மனதை ஓர்மைப்படுத்துவதற்கு தான், அச்சிலையையே இறைவனாக நாங்கள் நம்பவில்லை.

3. நாங்கள் சிலையை வணங்கவில்லை, சிலை மூலமாக இறைவனை வணங்குகிறோம்.

4. எங்கள் தலைவர்களையும், முன்னோர்களையும் மதிப்பதற்காக அவர்களின் புகைப்படங்களையும், சிலையையும் வைத்து மதிப்பது போல, இறைவனை மதித்து வணங்குகிறோம்.

5. இறைவன் எங்கும் இருக்கிறார். அந்த சிலையிலும் இருக்கிறார். எனவே, சிலையை வணங்குவது தவறல்ல!

6. சிறு உதாரணங்களை வைத்து தான் குழந்தைகளுக்கு விளக்க முடியும். ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான். அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்.

நினைவில் கொள்க: 

இறைவனுடைய உருவம், ஒரு அனுமானம் தான். யாரும் இறைவனை பார்த்ததில்லை. ஆக வணங்கப்படும் இறைவனுடைய உருவம் அவனுடையதல்ல!! அவையெல்லாம் மனிதனின் அனுமானங்கள் தான். மனிதன் அவனுடைய அனுபவங்களை வைத்து, அதாவது அவனுடைய அன்றாட வாழ்வில் பார்த்தவற்றை, கேள்விப்பட்டவற்றை வைத்து இறைவனுக்கு உருவத்தை கொடுத்துள்ளான்.

சிலைவணக்கம் ஒரு பெரும் பாவம். ஏன்?

“சிலை வணக்கம் தவறல்ல, சிலை வணங்கப்படுவதே இறைவனை வணங்க வேண்டும் என்று நோக்கத்திற்காக தானே!! நம்முடைய நோக்கத்தையும் எண்ணத்தையும் இறைவன் அறிவார் அல்லவா..? ஆக இதில் எந்த தவறுமில்லை” என்று மக்கள் நினைக்கிறார்கள்.

என்னதான் நல்ல எண்ணத்துடன் சிலை வணக்கம் செய்தாலும், கீழ்காணும் காரணங்களால், சிலை வணக்கம் ஒரு பெரும் பாவமாகிறது.

1. இறைவன், சிலைவழிப்பாட்டை அனுமதிக்கவில்லை:

மனிதர்கள் சிலை வணக்கம் மூலம் இறைவனை வணங்க இறைவன் அனுமதிக்கவில்லை. உதாரணத்திற்கு #உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் , உங்களை நினைவு ஏற்படுத்துவதற்காக ஒரு நாயை அல்லது ஒரு குரங்கை போன்ற உருவம் வடித்து, இது தான் நீங்கள் என்று கூறுவார்களேயானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்னைவிட தரத்தில் தாழ்ந்த இனத்தோடு அவனை ஒப்பிடும் போது, அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அந்த ஒப்பீடு தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனுக்கு, இவ்வுலகத்தில் உள்ள எல்லா வஸ்துகளும் அவனுடைய தரத்திற்கு கீழ் தான். படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம் தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க, தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா❓

உங்களுக்கென்று வரும் போது, ஏற்று கொள்ள முடியாத ஒரு ஒப்பீட்டை இறைவனுக்கு செய்வது எப்படி சரியாகும்? இந்த ஒப்பீடு, எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்❓

2. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள் இறைவனை இழிவுபடுத்துகின்றன:

இறைவனை வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால், இறைவனுக்கு இழிவு தான் ஏற்படுகிறது. உதாரணமாக , இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள், காலண்டரிலும், பைகளிலும், வெடிகளிலும், லாட்டரி டிக்கட்டிலும், திருமண அழைப்பிதழ்களிலும், ஏன் பீடியிலும் கூட பார்க்க முடிகிறது. 2015, 2014 ஆம் ஆண்டு காலண்டர்களின் நிலை என்ன? “இறைவனுடைய உருவம்” கொண்ட காலண்டர் குப்பையில் வீசப்படுகிறது. கிழித்து எறியப்படுகிறது. லாட்டரி டிக்கட்டுகளுக்கும், புத்தகங்களுக்கும், பைகளுக்கும், திருமண அழைப்பிதழ்களுக்கும் இதே நிலை தான். இறைவனுடைய உருவத்தை கொண்ட பீடிகளோ, மண்ணில் பலரிடம் மிதிபபடுவதும், கழிப்பறையில் போடப்படுவதும் வழக்கமானதாகிவிட்டது. அறிந்தோ, அறியாமலோ இறைவனுக்கு உருவம் கொடுப்பதன் மூலம், அவனை நாம் இழிவு தான் செய்கிறோம்.

இது போன்ற செயல்கள், நமது புகைப்படத்திற்கு ஏற்பட்டாலோ அல்லது நமது பெற்றோரின் புகைப்படத்திற்கு ஏற்பட்டாலோ, அதை நாம் ஏற்போமா..?? ஏற்க மாட்டோம் தானே. ஆனால் இறைவன் விசயத்தில் எப்படி ஏற்றுக்கொண்டுள்ளோம்? அந்த உருவம் உண்மையில் இறைவனின் உருவம் தான் என்று நாம் நம்பியிருந்தால், நாம் இவ்வாறு செய்வோமா? இதை நாம் சிந்திக்க வேண்டும்.

3. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்களின் நிலை என்ன?

இறைவனுக்கு கொடுக்கப்படும் சில உருவங்களை நம்மால் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

உதாரணத்திற்கு: பானையை போன்ற தொப்பை,கோரமான முகம், முன்பக்கம் நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள்.. இது போன்ற தோற்றமுடையவரை, நீங்கள் திருமணம் செய்ய விரும்புவீர்களா ? அல்லது உங்களின் பிள்ளைக்கு திருமண முடிக்க விரும்புவீர்களா?

உலகில் உள்ள அழகை கண்டு நாம் வியக்கிறோம். அந்த அழகை படைத்த கடவுள், எவ்வளவு அழகாக இருப்பார்? நமக்கே ஏற்றுக்கொள்ளாத ஒரு உருவத்தை இறைவனுக்கு கொடுப்பது, அநீதி இல்லையா ..??

4. இறைவனுக்கு கொடுக்கப்படும் உருவங்கள், இறைவனின் இலக்கணத்தை சிதைக்கிறது:

மனிதன் தனது அனுபவத்தை வைத்து உருவம் கொடுக்க முற்பட்டால், கடவுளும் மனிதரை போன்றவர் தான் என்ற எண்ணத்தில், கடவுளுக்கும் , மனிதனுடைய பல பலகீனங்களை (குடும்பம், மனைவி, வைப்பாட்டி, தூக்கம், மறதி போன்றவற்றை) சாட்டுவான். இது இறைவனின் இலக்கணத்தை சிதைக்கிறது; அதனால் கடவுளை மனிதன் குறைத்து மதிப்பிட, அவனது செயல்களில் கவனக்குறைவு ஏற்படுகிறது.

இறைவனுக்கு உருவம் கொடுத்து, தலையில் இருந்து பிறந்தவன் உயர் சாதிக்காரன், காலில் இருந்து இருந்து பிறந்தவன் தாழ்ந்த சாதிக்காரன் என்றெல்லாம் சொல்ல்பவர்களை நாம் பார்க்கிறோம். இப்படி மனிதை பிறப்பால் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்று பிரிக்கும் தவறான கொள்கையை சொல்வதற்கு கூட இறைவனுக்கு உருவம் கொடுக்கப்பட்டது தான் காரணமாக உள்ளது என்பதை சிந்திப்பவர்கள் உணரலாம்.

மனதை ஓர்மைபடுத்துவதற்கு சிலைகள் தேவையா?

இல்லை!! தேவையில்லை. ஏனென்று கீழ்கண்ட காரணங்கள் விளக்கும்.

1. சிலை முன்பாக நின்றுகொண்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்பவர்களை நாம் பார்த்திருப்போம்..!! மனதை ஓர்மைபடுத்துவதற்கு சிலைகள் தேவையெனில் பின்பு ஏன் கண்களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும்?

2. ஒரு அவசர தேவைக்காக இறைவனிடம் பிரார்திக்கும் போதுதான் மனதை ஓர்மைபடுத்துவது மிக மிக அவசியம். உதாரணத்திற்கு: பைக்கில் பயணம் செய்கிறீர்கள் , பிரேக் (brake) பிடிக்கவில்லை, பதற்றத்தோடு இறைவனிடம், “கடவுளே என்னைய காப்பாத்து” என பிரார்த்திப்பீர்கள். அச்சமயத்தில் மனதை ஓர்மைபடுத்த சிலையையோ அல்லது புகைப்படத்தை தேடுவீர்களா…?? நேரடியாக பிரார்த்திப்பீர்களா…?? இது போன்ற ஒரு சிலையில்லாமல் அவசர தேவைக்காக இறைவனிடம் நேரடியாக முடியுமென்றால் ஏன் மற்ற நேரங்களில் முடியாது?

3. மனதை ஓர்மைபடுத்துவதற்கு தான் சிலைகள் என்றால், மனதை ஓர்மைபடுத்த எந்த பொருளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாமே..?? உதாரணமாக ஒரு பல்பை பற்றி சிந்தித்துக் கூட மனதை ஓர்மைபடுத்தலாம். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. ஆக மனதை ஓர்மைபடுத்துவதற்கு தான் சிலைகள் என்று சொல்லப்படும் காரணமும் உண்மையல்ல!!!

4. மனதை ஓர்மைபடுத்துவதற்கு மட்டும் தான் சிலைகள் என்றால், அந்த சிலைகள் மற்ற பொருள்கள் போல் நடத்தப்பட வேண்டும். அந்த சிலைகளுக்கு பூஜைகள் செய்வதும், அதற்க்கு அபிஷேகம் செய்வதும் அந்த சிலைகள் கடவுள்களாகவே பார்க்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. உருவ வழிபாட்டினர் மனதில் இறைவனை நினைத்தால், குறிப்பிட்ட உருவம் தான் நினைவில் வரும் ;அது தான் இறைவன் என மனதிலும் பதிவாகிவிட்டது. எனவே சிலையை தான் இறைவன் என நினைக்கிறார்கள்..

சிலை வணக்கமுறைக்கு சொல்லப்பட்ட காரணங்களான,

1. அந்த சிலை இறைவன் அல்ல!! இறைவனின் சின்னம் / அடையாளம் தான். (symbol of god)

2. சிலை, மனதை ஓர்மைப்படுத்துவதற்கு தான், அச்சிலையையே இறைவனாக நாங்கள் நம்பவில்லை.

3. நாங்கள் சிலையை வணங்கவில்லை, சிலை மூலமாக வணங்குகிறோம்.

இவையனைத்தும் உண்மையல்ல என்பதே தெளிவு..

4. இறந்து போன மனிதருக்காக, ஆண்டு நிறைவு சடங்குகள் நடத்துவது, மக்களிடையே வாடிக்கையாக நடக்கும் ஓர் விசயம். ஒருவேளை இறந்தவரின் புகைப்படம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், வேறு யாருடைய புகைப்படத்தையாவது வைத்துக்கொள்வீர்களா..?? மாட்டீர்கள் என்றால், , இறைவனுக்கு மட்டும் ஏதோ ஓரு உருவம் கொடுக்கலாமா…??

இறைவன் எங்கும் இருக்கின்றனா..?

இறைவன் எங்கும் இருக்கிறார், சிலையிலும் இருக்கிறார். எனவே சிலையை வணங்குவது தவறல்ல!! என மக்கள் நினைக்கின்றனர்; ஆனால் இந்த நம்பிக்கையும் தவறானதே!!

1. இறைவன் எங்கும் இருக்கிறார் என்றால், எந்த பொருளை வேண்டுமானாலும் வணங்கலாமே!! எதற்காக சிலையை, புகைப்படத்தையும் வணங்க வேண்டும்..?? உதாரணத்திற்கு: பேனா, நாற்காலி, மேஜை என எல்லாவற்றையும் வணங்கலாமே…?? இதை சிலை வழிபாடு செய்பவர்கள் ஒத்துக்கொள்வார்களா?

2. இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது ஒரு தவறான வாதம்; படைப்புகளுக்கு ஆரம்பமும் முடிவும் உள்ளது; படைப்பாளன், படைப்புகளில் உள்ளான் என்றால், படைப்புகளின் முடிவில், படைப்பாளனின் நிலை என்னவாகும்.??

3. நம் பிரபஞ்சத்தில், பொருளும் அதற்கான எதிர்ப்பொருளும் உண்டு. இரண்டும் சேர்கையில், ஏதும் இல்லாமல் ஒரு சூனியமாகி விடும். ஆக இறைவன் எங்கும் இருக்கிறார் எனில், பொருளிலும் எதிர்ப்பொருளிலும் இருக்கிறார் , அப்படிதானே!!! பொருளும் அதற்கான எதிர்ப்பொருளும், இரண்டும் சேர்கையில், கடவுள் சூனியமாகி இல்லாமல் போய்விடுவாரா?? ஆக ,இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது பொருத்தமற்றது;

எனவே “இறைவன் எங்கும் இருக்கிறார், சிலையை வணங்குவது தவறல்ல!! “” என சொல்லப்படும் காரணமும் சரியானதல்ல!!

வணக்கவழிப்பாட்டில் மனதை ஓர்மைப்படுத்துவது எப்படி?

இறைவனின் பண்புகளான அன்பு, கருணை, மன்னித்தல், ஞானம், ஆற்றல் போன்றவற்றை சரிவர அறிந்து வணங்கினால், வணக்கத்தில் மனதை ஓர்மைபடுத்தலாம்; மற்றும் அந்த வழிபாடு அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்..

அனைவரும் சிந்திக்கவேண்டிய முக்கியமான விசயம், என்றைக்காவது எந்த சிலையும் புகைப்படமும் இல்லாமல், இறைவனை வணங்கியதுண்டா..?? முயற்சித்து பார்க்காமல், வெறுமனே மறுப்பது சரி தானா…??

சாதாரண மக்களுக்கு, கடவுளை வணங்க, சிலை தேவை…?

சாதாரண மக்களுக்கு, கடவுளை வணங்க, சிலை தேவை என்ற வாதமும் தவறானதே!! ஏனென்றால்,

1) இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என, உலகில் பல லட்சகணக்கான மக்கள், சிலை வழிப்பாடு இல்லாமல் வணக்க வழிபாடுகள் செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். பெரும்பாலான மக்களால் முடியும்போது, எப்படி சிலரால் மட்டும் செய்ய முடியாது என சொல்லமுடியும்….??

2. “சிறு உதாரணங்களை வைத்து தான் குழந்தைகளுக்கு விளக்க முடியும். ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான், அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்.” என்றெல்லாம் சொல்வது, “குழந்தையால் சூரிய கதிர்களை பார்க்கமுடியாது,அதனால் சின்னதாய் சூரியனை வரைந்து காட்ட வேண்டும் ” என்று சொல்வது போலுள்ளது.

3. எந்த ஒரு விசயத்திலும் / தலைப்பிலும் சரி, அதன் அடிப்படை விசயங்கள் மிக உறுதியாக , சரியாக இருத்தல் வேண்டும் ; அப்போது தான் வருங்காலம் நன்றாக அமையும்; உதாரணத்திற்கு: – ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு கணக்கு வாத்தியார் 2+2 = 4; என சொல்லிக்கொடுக்கிறார்.. அந்த மாணவன் , என்னதான் +2, காலேஜில் படிக்கசென்றாலும் சரி, கணிதத்திலேயே PH.D முடித்தாலும் சரி, 2+2=4 தான், அது மாறாது.

ஒன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது 2+2 =4 அல்ல, 2+2= 6 என சொல்லிதந்துவிட்டு பரிட்சை முடிந்ததும் நான் சொன்னது தவறு, 2+2=4 தான், என சொல்வீர்களா..?? இல்லை பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு சொல்லலாம் என நினைத்து காத்துக்கொண்டிருப்பீர்களா..?? ஆரம்பித்திலேயே உண்மையை/நிதர்சனத்தை சொல்லாவிட்டால், அவன் வருங்காலம் தான் பாதிக்கப்படும்..

இதே போல, ஆன்மீக வழிப்பாட்டின் அடிப்படையும் மாறாதது தான். எனவே, ஆன்மீகத்தில் சாதாரண மக்களும், குழந்தைகள் போல தான், அதனாலேயே வணக்கத்திற்கு சிலையை வைத்திருக்கிறோம்.” என்றெல்லாம் சொல்வது தவறு.

இந்து வேதங்கள், சிலை வழிப்பாட்டை கடுமையாக விமர்சிக்கிறது.. வேதங்களையும், உபநிதங்களையும் படித்தோமேயானால், இந்து மதம், சிலை வணக்கத்திற்கு எதிரானது என்பதை அறியலாம்; வேதங்களையும், உபநிதங்களையும் பின்பற்றக்கூடிய ஆரியா சமாஜ், பிரம்மோ சமாஜ், காயத்ரி சமாஜ் போன்றய அமைப்புகள், சிலை வணக்கத்திற்கு எதிராக பேசுகிறார்கள். சிலை வணக்கத்தை பாவமாக கருதுகிறார்கள்.

“நல்லதையே செய்வோம் ,கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் கவலைபட வேண்டாம்” எனக் சிலர் கூறுவர்.

வெறுமனே நல்ல மனிதனாக இருந்தால் மட்டும் போதுமென்றால், பின்பு ஏன் இறைவனை வணங்குகிறீர்கள்…??

நல்ல மனிதனாக வாழ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இறைவனை சரிவர வணங்குவதும் முக்கியம்; இறைவன் சொன்ன வழியில் வணங்கவேண்டும் ; இறைவன் தடுத்த வழியில் அவனை வணங்குவது எப்படி சரியானதாகும்..??

ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை புரிந்துக்கொள்ள முயற்ச்சிப்போம். “A” என்றொரு நபர், ஏழைகளுக்கு, முடியாதவர்களுக்கு உதவுவது,உணவளிப்பது போன்ற பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர். மிகச் சிறந்த மனிதர் என சமூகத்தில் பெயர் எடுத்தவர்; ஆனால் ஒரு நாள், இவர் நம் நாட்டின் ரகசியங்களை எதிரி நாட்டிற்கு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது..

“B” என்றொரு இன்னொரு நபர், சமூக சேவைகளில் ஈடுபடவில்லை; சமூகத்தில் பெயர் வாங்கவில்லை; பெரிதாக எந்த நற்செயல்கள் செய்ததில்லை, ஆனால் தன் நாட்டிற்கு விசுவாசமானவராய் இருந்தவர்.

இந்த இரண்டு நபர்களில், யார் சிறந்தவர் ? நபர் “A” சில நல்ல விசயங்கள் செய்ததால், மன்னித்துவிடலாமா? முடியாது ஏனெனில் நாட்டின் இரகசியங்களை காசாக்கி சொந்த நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளார்; துரோகம் செய்துள்ளார்; இச்செயலுக்கு பல நாடுகளில் மரணதண்டனை கொடுக்கப்படும்,அவ்வளவு பெரிய பாவமாக தான் பார்க்கபடுகிறது.

அதே போல, நற்செயல்கள் செய்பவர்களை இறைவன் விரும்புகிறான் ; ஆனால் இறைவனை விட்டுவிட்டு மற்ற பொருள்களையும், சிலைகளையும் கடவுள்களாக எடுத்துக்கொண்டால், இந்த துரோகத்தை இறைவன் மன்னிப்பானா..?? இறைவனுக்கு கீழ்படாதவர் முழுமையான நல்ல மனிதராக எப்படி ஆகமுடியும்..?? ஒருவன் நல்ல மனிதன் ஆவதற்கு, இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா விசயத்திலும் கீழ்பட்டவராக இருக்க வேண்டும்.

எனவே, “நல்லதையே செய்வோம் ,கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் கவலைபட வேண்டாம்” என்ற வாதமும் சரியானதல்ல!!

வணக்கம் என்பது, வணக்கத்துக்குரியவருக்கே உரித்தானது ஆகும். இறைவன் மட்டும் தான் உயர்விலும், மேன்மையிலும், ஞானத்திலும் ஆற்றலிலும் உயர்ந்தவர் ஆவார். ஆக அவரே வணக்கத்துக்குரியவர் ஆவார். இறைவனுக்கு நிகர் எவருமில்லை. வணகத்தை வேறு பொருட்களுக்கோ, சிலைக்கோ,மரத்துக்கோ,மட்டைக்கோ சமர்பித்தால், அது இறைவனை இழிவுபடுத்துவதாகும்.

கருத்துச் சுருக்கம் ::

1. சிலை வணக்கம் ஒரு பெரும்பாவம்.
2. இறைவன் சிலை வணக்கத்தை அனுமதிக்கவில்லை.
3. இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள், இறைவனை இழிவுபடுத்துகிறது.
4. கடவுளின் உருவங்கள், கடவுளின் இலக்கணத்தை சிதைக்கிறது.
5. இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்களை, நம் மனமே ஏற்பதில்லை.
6. மனதை ஓர்மைப்படுத்த சிலை தேவையில்லை, இறைவனின் தன்மைகளை சரிவர சிந்தித்து மனதில் வைத்துக்கொண்டு வணங்கினால் மனதை ஓர்மைப்படுத்த முடியும்.

7. இறைவன் எங்கும் இருக்கிறார், அதனால் சிலைவழிபாடு தவறில்லை என வைக்கப்பட்ட வாதமும் தவறானதே!

நன்றி: invitetogod.com

source: http://quranmalar.blogspot.in/2013/02/blog-post_13.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

76 + = 79

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb