குழுச்சிந்தனை, இஸ்லாமியச் சிந்தனையல்ல!
முஸ்லிம் சமூகம் இங்கு மட்டும் பிந்தங்கி இருக்கவில்லை. ஐரோப்பா உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளில் பிந்தங்கி இருக்கின்றனர். இந்தியாவில் அடைந்த பின்னடைவு கல்வி, விழுப்புணர்ச்சி இல்லாமையால் ஏற்பட்ட பின்னடைவு.
மற்ற நாடுகளில், தங்களுக்குள்ள கலாச்சார அடையாளத்தை நிறுவுவதற்கான போட்டியில் ஏற்பட்ட பின்னடைவு, அவர்களுக்கிடைய்லான பிரிவினைவாதச் சிந்தனை இப்படியாக்கியிருக்கின்றது.
கலாச்சார அடையாளமென்ற ஒன்று இஸ்லாத்தில் இல்லை, சொல்லப்படவுமில்லை. தனிப்பட்ட கேரக்டர், குணம், இஸ்லாமியச் சித்தாந்தம் தான் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் இதற்குத்தான் பிரதான இடம்.
இஸ்லாம் கூறிய சித்தாந்தங்களை புறக்கணித்து விட்டு கலாச்சார அடையாளத்தை காட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு முஸ்லிம் நாடுகளில் குழுக்கள் சண்டையிட்டுக் கொள்வதால் பின் தங்கிக்கொண்டுள்ளனர்.
மிகப்பெரிய பதவியில் இருப்போர், மிகப்பெரிய வணிகத்தில் ஈடுபடுவோர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கின்றனர். அரபு நாடுகள் தனிப்பட்ட கலாச்சாரத்தை பின்பற்றிக்கொண்டு அது இஸ்லாமியக் கலாச்சாரம், இஸ்லாமியச் சிந்தனை என்கின்றன! அது அவர்கள் சார்ந்த குழுச்சிந்தனையே தவிர இஸ்லாமியச் சிந்தனையல்ல.
நாம் வாழும் காலம் முற்றிலுமாக மாறுபட்ட காலம். முஸ்லிம்களால் எழுதப்பட்ட அரபி, ஃபார்ஸி, உருதூ, ஆங்கிலம் என்ன பிற மொழி நூல்கள் பலவற்றை வாசித்து ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள் அவை பழமைவாதச் சிந்தனை என்கின்றனர். இந்த நூல்களை எழுதியவர்கள் வழியாக் வந்த வாரிசுகள் படித்துப் பட்டம் பெற்றுப் பணிக்குச் சென்றபோதும், தலைமுறை கடந்த போதும் அவர்களது சிந்தனை தந்தை வழி ஜெராக்ஸ் பிரதியாகவே இருக்கின்றது என்கின்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்கின்றனர்.
முஸ்லிம் தலைவர்கள் எவருக்கும் சமூகத்தை சரியாக வழி நடத்தத் தெரியவில்லை. அடக்குமுறைக்கும், பாகுபாட்டுக்கும் ஆளாக்கப்படுவதாக சமூகத்தின் மனோபாவத்தை மாற்றி நம்பச் செய்யும் போக்கெடுக்கின்றனர். இந்திய முஸ்லிம்களுடைய பின்னடைவு பாகுபாட்டாலோ, அடக்குமுறையாலோ உருவானதல்ல.
கல்வியை அளவீடாகக் கொண்டு முஸ்லிம்களுடைய பின்னடைவு வரையறை செய்யப்படுகிறது. எதிர்மறைச் சிந்தனைகளே பின்னடைவுகளுக்குக் காரணம். எவரும் கயிறு போட்டுக் கால்களை கட்டி வைத்திருக்கவில்லை. எதிர்மறைச் சிந்தனை என்ற நுகத்தடியை முஸ்லிம்கள் தங்கள் தோளில் தாங்களே தூக்கி வைத்துக் கொண்டு சுமை இருப்பதாக, இழுப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பின்னடைவைச் சந்திக்கின்றனர்.
“மனிதனுக்கு அவன் முயற்ச்சித்ததைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று அல்குர்ஆன் “அந்நஜ்மு” வசனம் கூறியிருக்கிறது.
குடும்பப் பிரச்சனை, பணிப்பிரச்சனை, தேவைகள் மீதான குறை, அரசியல் தலைமைகள் மீதான ஆதங்கம், உணவுப்பற்றாக்குறையென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் முன்மொழியப் படுகின்றன. இவைகளனைத்தும் எதிர்மறைச் சிந்தனை மூலம் வெளிப்படுத்துதலாலோ, போராட்டங்களாலோ தீர்வு காணவும், வென்றெடுக்கவும் முடியாது. ஆழமான சிந்தனை, தொடர் முயற்சி, ஆக்கப்பூர்வப் பணிகளால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.
மனிதனுக்கு இறைவன், துன்பம், துயரம், வறுமையைத் தருவதன் நோக்கம் அவற்றின் மூலம் பாடம் கற்று மேலெழும்புதலுக்கான உக்குவிப்பாகவே கருத வேண்டும். இறைவனுடைய இந்த ஊக்குவிப்பு தனிமனிதனுக்கு மட்டுமானதல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரியது.
ஜப்பான், ஜெர்மனி நாடுகள் இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரும் நஷ்டத்திற்குள்ளாகின. அடைந்த இழப்புகளே அவர்களுக்கு பாடங்களாகி ஊக்குவித்தன! சரியான திட்டங்களைத் தயாரிக்க வைத்து வளர்ந்த நாடுகளாக வார்த்தெடுத்தன.
தனிப்பட்ட மனிதன் உருவாகுதலுக்கும் போராட்ட குணம் தேவைப்படுகிறது. அப்போராட்டத்தின் மூலமே முழு மனிதனாக அவன் பரிமாணமடைகிறான். படைப்பாற்றல் கொண்டவனாக அவன் மூளை பயனளித்து பயணிக்க வைக்கிறது.
– அமீர் கான்
முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2016