Turkey has threatened war with America over its support for Fethullah Gulen, (centre)
துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம்
அங்காரா: துருக்கியில் இராணுவப்புரட்சியை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு 2 பில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்திருக்கிறது அமெரிக்கா. இதனை அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
துருக்கி பத்திரிகை ‘யேனி சாபேக்’ வெளியிட்டுள்ள செய்தியில், முன்னால் நேட்டோ படைதளபதி ஜான் கேம்பல் மூலமாக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ துருக்கியில் அதிபர் எர்டகோனுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்ட 2 பில்லியன் அமெரிக்க டாலரை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.
இந்த பண பரிவர்த்தனையை சி.ஐ.ஏவின் துணையோடு நைஜீரியாவின் யு.பி.ஏ வங்கியின் மூலமாக நடைபெற்றிருப்பதாக அந்த பத்திரிகை தெரிவிக்கிறது. கேம்பல் புரட்சி ஏற்படுவதற்கு முன்பாக கடந்த மே மாதத்திலிருந்து இருமுறை ரகசியமாக துருக்கி நாட்டிற்குச்சென்றது தெரியவந்துள்ளது.
துருக்கி இராணுவப்புரட்சிக்கு மூளையாக செயல்பட்ட பெதுல்லா கூலனை ஒப்படைக்காதவரை வாஷிங்டன் இடையே நல்லுறவு தடைபடும் என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மேவ்லட் கவுசொக்லு தெரிவித்துள்ளார். அவரை நாடுகடத்துவதற்கு முன் கூலனுக்கு எதிரான வலுவான ஆதரங்களை தரவேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
துருக்கியின் இராணுவ தளவாடங்களான எர்ஜுரூப் மற்றும் இன்சிர்லிக் ஆகிய இடங்களில் கேம்பல் ரகசிய கூட்டத்தை நடத்தியதாகவும், இந்த கூட்டத்தில் இராணுவப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியா வங்கியிலிருந்து லட்சக்கணக்கில் டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டு, துருக்கியில் இயங்கி வரும் சி.ஐ.ஏவின் உளவாழிகள் 80 பேர் மத்தியில் அது விநியோகிக்கப்பட்டு அவர்கள் மூலம் தீவிரவாதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு துருக்கி அரசாங்கம் அமெரிக்காவில் இருந்து வரும் கூலனை நாடு கடத்த அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது.
இதுவரை புரட்சியில் ஈடுபட்டதாக கருதப்பட்ட 13 ஆயிரத்திற்குமேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக எர்டகோன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 8ஆயிரத்திற்குமேற்பட்டோர் இராணுவ வீரர்கள் என்றும், இரண்டாயிரத்திற்குமேற்பட்டோர் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எனவும், 1400 பேர் காவல்துறையினர், 52 அரசு அதிகாரிகள் மற்றும் 600க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் என கூறப்பட்டுள்ளது. பெதுல்லா தீவிரவாத குழுக்களால நடத்தி வரப்பட்ட 934 பள்ளிக்கூடங்கள், 109 தங்குமிடங்கள், 15 பல்கலைகழகங்கள், 104 அறக்கட்டளைகள், 35 மருத்துவமனைகள், 1125 சங்கங்கள் மற்றும் 19 தொழிற்சங்கள் ஆகியவை முடக்கப்பட்டுவிட்டதாக எர்டகோன் தெரிவித்துள்ளார்.
கூலன் உட்பட 73 நபர்களை குற்றவாளிகள் என அங்காரா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் எர்டகோன் பெதுல்லாவை நேர்மையற்ற ஒரு துரோகி என தெரிவித்துள்ளார். பெதுல்லாவின் ஃபேட்டோ தீவிரவாத படைக்கு எதிராக பேசிய எர்டகோன் மக்களிடமிருந்து பணத்தை பிடிங்கி ஆயுதங்கள், டாங்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை வாங்கி நாட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் அனவைருமே துரோகிகள். ஃபேட்டோ அமைப்பு ஒரு நச்சுத்தன்மை கொண்ட அமைப்பாகும், அவற்றை அழிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 40 பத்திரிகையாளர்கள் மீதும் கைது நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேலும் பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் சித்திரவதை, கற்பழிப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: http://www.newindia.tv/news/world/item/918-u-s-paid-2-billion-for-turkey-coup