காந்தி தேசமே கருணை இல்லையா? பெரும்பாண்மை இந்தியர்கள் சிந்திப்பார்களா?
Abdulnaser Misc
[ இந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது ஏற்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமை 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரித்தானிய ஆட்சியில் இல்லாமல் போனது ஏன்?
இந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது இருந்த இந்து முஸ்லிம் ஒற்றும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் சிதைந்து போனது ஏன்? ]
முஸ்லிம்கள் எங்கெல்லாம் பெரும்பாண்மையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சிறுபான்மையினர் நிம்மதியாக இருந்தார்கள். இருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அவர்களின் தோழர்களின் ஆட்சிக் காலத்தில் யூதர்கள், கிறித்தவர்கள் நிம்மதியாக, உயிருக்கு பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.
800 ஆண்டுகால முகலாயர் ஆட்சியில் அகண்ட இந்தியாவில் இந்துக்கள் மற்றும் பிறமதத்தவர்கள் நிம்மதியாக இருந்தனர்.
மலேசியாவில் முஸ்லிம்கள் ஆட்சி அங்கே சிறுபான்மை இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
பங்களாதேசில் முஸ்லிம்கள் ஆட்சி. அங்கே சிறுபான்மை இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
பாகிஸ்தானில் முஸ்லிம்கள் ஆட்சி. அங்கே சிறுபான்மை இந்துக்கள் பாதுாகாப்பாக உள்ளனர். (இந்திய மீடியாக்கள் தவறாகச் சித்தரிப்பது உண்மைக்கு புறம்பானது)
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா இஸ்லாமிய நாடுகள் இந்தியாவைச் சார்ந்தத கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தங்கள் நாடுகளில் வேலை வாய்ப்பளித்து அடித்தட்டு மக்கள் முன்னேறுவதற்கு பக்கபலமாக உள்ளன. அங்கே வேலை பார்க்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் கவர்மெண்ட் ரீதியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை.
அமெரிக்கா போன்ற கிறித்தவர்கள் பெரும்பாண்மையாக உள்ள நாடுகள் இந்தியாவில் உள்ள கல்விமான்களைத்தான் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக வேலைக்கு எடுக்கின்றன் ஆனால் வளைகுடா நாடுகள் இந்தியாவைச் சார்ந்த எல்லா தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குகின்றது.
அதே நேரத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் நாடுகள் அனைத்திலும் அரசாங்கத்தால் முஸ்லிம்கள் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இஸ்ரேலில் யூதர்களின் அரசாங்கத்தால் சிறுபான்மை முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்.
அமெரிக்காவில் கிறித்தவ மத ஆதரவு அரசாங்கத்தால் அங்கே முஸ்லிம்கள் தீவிர வாதியாக சித்தரிக்கப்படுவதுடன் உலகம் முழுவதும் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக கொன்றழிப்பது அமெரிக்காதான்.
இலங்கையில் புத்தர்கள் கையில் ஆட்சி இருப்பதால் ஆட்சியாளர்களால் முஸ்லிம்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பர்மாவில் புத்தர்கள் கையில் ஆட்சி இருப்பதினால் அங்கே சிறுபான்மை முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர்.
சைனாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் பிஜேபி மற்றும் காவிச்சிந்தனை அரசுகளால் முஸ்லிம்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். காஷ்மீரிலே கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றர்.
இந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது ஏற்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமை 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரித்தானிய ஆட்சியில் இல்லாமல் போனது ஏன்?
இந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது இருந்த இந்து முஸ்லிம் ஒற்றும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் சிதைந்து போனது ஏன்?
பெரும்பான்மைக்கு ஒரு நீதி, சிறுபான்மைக்கு ஒரு நீதி என்ற ஒரே மானோபாவம்தான் இந்த ஆட்சியாளர்களிடம் உள்ளது.
பெரும்பான்மை என்ன செய்தாலும், பேசினாலும் அதனை அஹிம்சை வாதம் என்பதும்,
சிறுபான்மையினர் தாடிவைத்தாலும் அதை தீவிர வாதம் என்பதும் நீடிக்கும் வரை இங்கே நிம்மதி ஏற்படப் போவதில்லை.
பெரும்பாண்மை இந்தியர்கள் சிந்திப்பார்களா?