கொலம்பஸிற்கு முன்பே அமெரிக்காவை கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்களே!
[ கொலம்பஸிற்கு முன்பே அமெரிக்காவை கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்கள்! அந்த நாட்டை கட்டி எழுப்பியவர்களும் முஸ்லிம்களே!
கொலம்பஸ் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அங்கு வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள்.
கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகள் (சுமார் 600 ஆண்டுகளுக்கு) முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்க பகுதிகளை அடைந்திருக்கின்றனர்.
அல்லாஹ் அமெரிக்கர்களை கொண்டே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து விட்டான். ஆம் இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர்கள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்கர்கள்.]
இன்று அமெரிக்க பலராலும் கவனிக்கப்படுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக உருவெடுத்துள்ளது.
இன்று அதன் வரலாற்றை எழுதக்கூடியவர்கள் ஏதோ அமெரிக்கா கிருதுவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களாலேயே உருவாக்கப்பட்டு அவர்களாலேயே வளர்க்கப்பட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை முஸ்லிம்கள் ஏதோ அன்னியர்கள் போன்றும் அதை கண்டு பிடித்ததிலோ உருவாக்கியதிலோ வளர்த்த்திலோ முஸ்லிம்களுக்கு எந்த தொடர்ப்பும் இல்லாதது போல் சித்தரிக்கப்படுகிறது வழக்கமாக எல்லா இடங்களிலும் முஸ்லிம்களின் உண்மை வரலாறு மறைக்கப்படுவது போல் இங்கும் மறைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இஸ்லாமிய வரலாற்றின் தொடக்கம் பத்தொன்பதாம் நுற்றாண்டின் இறுதியிலோ அல்லது 20 ஆம் நுற்றாண்டின் துவக்கத்திலோ தான் தொடங்கியது போன்ற தோற்றம் பலாராலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவோடு முஸ்லிமகளின் தொடர்ப்பு பற்றிய வரலாறுகளை புரட்டும் போது பல் வேறு ஆச்சிரிய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.
பரவலாக அனைவரும் அறிந்து வைத்துள்ள ஒரு விசயம் அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடித்தான் என்பது.
கொலம்பஸ் கண்டு பிடிப்பில் உருவான ஒரு நிலப்பரப்பாக தான் அமெரிக்காவை பற்றி அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.
உம்மையில் கொலம்பஸிற்கு வழி காட்டி அழைத்து சென்றது மட்டும் இன்றி கொலம்பஸின் வருகைக்கு முன்பே அமெரிக்காவில் முஸ்லிம்கள் வாழ்ந்த தர்கான வரலாற்று குறிப்புகள் நமக்கு கிடைக்கிறது.
அமெரிக்க முஸ்லிம்களின் வரலாற்றை நாம் ஆய்வு செய்யும் போது ஸ்பெயினின் வரலாறும் கொலம்கஸின் வரலாறும் அதனுடன் பின்னி பிணைவதை தவிர்க்க முடியாது.
இஸ்லாத்தின் எழுட்சி ஸ்பெயினையும் சென்று அடைந்தது
அதனை தொடர்ந்து கிபி 711 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் தொடங்கிய முஸ்லிம்களின் ஆட்சி கிபி 1492 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான GRANADA – கிரனடாவும் அந்த ஆண்டில் வீழ்ந்த்தை தொடர்ந்து அரசி இஸ்பெல்லா விடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்து சேர்ந்தது.
இந்த கால கட்டம் ஸ்பெயினில் முஸ்லிம்களின் இருண்ட கால கட்டம் அரசி இஸ்பெல்லா தனது ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம்களை அழித்தொழப்பதிலேயே பயன் படுத்தினாள் அரசி இஸ்பெல்லாவின் அதிகாரத்தால் ஸ்பெயினில் முஸ்லிம்கள் தங்கள் மத்ததை விடுவதர்கும் கிருத்துவத்தை ஏர்பதர்கும் நிர்பந்திக்கபட்டனர் விட மறுத்தவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த சோதனை நிறைந்த கால கட்டத்தில் தான் வட ஆப்ரிக்காவில் இருந்த மார்க்க அறிஞர்களிடம் இருந்து ஒரு மார்க்க தீர்ப்பு ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு வந்து சேர்ந்தது உள்ளத்தில் இறை நம்பிக்கை உறுதியாக இருக்கும் நிலையில் உயிரை காப்பாற்றி கொள்வதர்காக இறை மறுப்பை வெளிப்படுத்துவது தவறில்லை என்ற இந்த மார்க்க தீர்ப்பை பெற்றுக்கொண்டு இதன் அடிப்படையில் செயல் பட தொடங்கினர் ஸ்பெயின் முஸ்லிம்கள்.
உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கிருத்துவத்தை ஒப்புக் கொள்வதாக அரசுக்கு தெரிவித்து விட்டு மனதளவில் முஸ்லிம்களாக தொடர்வது என்ற முடிவுக்கு ஸ்பெயின் முஸ்லிம்களில் பலர் வந்தனர் இப்படி அரசின் பார்வையில் கிருத்துவர்களாக தங்களை காட்டி கொண்டு மனதளவில் முஸ்லிம்களாக தொடர்வது என்ற முடிவுக்கு வந்தவர்களும் அவர்களின் வம்சா வழியினரும் மொரிஸ்கோஸ் என்று வரலாற்றில் அறியப்படுகின்றனர். சுருங்கக் கூறின் இவர்கள் பெயரளவில் கிருத்துவர்கள் மனதளவில் முஸ்லிம்கள்.
ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர்.
கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.
கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria) தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர்.
அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் “பின்சோன் சகோதரர்கள்” (The Pinson or Pinzone brothers), அவர்களில்
1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.
.
இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niண்o). கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.
ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில் மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.
.
அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் (1776-1789).
அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).
அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865)
ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.
கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகள் (சுமார் 600 ஆண்டுகளுக்கு) முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்க பகுதிகளை அடைந்திருக்கின்றனர்.
வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களின்படி நமக்கு கிடைக்கக்கூடிய முதல் தகவல்:
1. க்ஹஷ்க்ஹஷ் இப்ன் சையித் இப்ன் அஸ்வாத் அல் குர்துபி (khash khash ibn said ibn aswad al-qurtuby) என்பவர் தன் ஆட்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் (Muslim Andalusia, இன்றைய ஸ்பெயின்) உள்ள பலோஸ் (Port Palos) துறைமுகத்தில் இருந்து மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டு, இன்றைக்கு கரீபிய தீவுகள் இருக்கக்கூடிய நிலப்பகுதியை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர் “தெரியாத நிலம்” (The Unknown Land).
அதுமட்டுமல்லாமல், தான் சென்ற வழியை வைத்து ஒரு வரைப்படத்தையும் தயாரித்து கொண்டார். அங்கிருந்து வரும்போது ஸ்பெயினிற்கு பெரும் பொருள்களையும் கொண்டு வந்தார். இது அப்போதைய ஸ்பெயின் மக்கள் மிக நன்றாக அறிந்த செய்தி.
ஆக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிற தகவலின்படி அமெரிக்க பகுதிகளை முஸ்லிம்கள் முதன்முதலில் அடைந்தது 889 இல்!
2. அதன்பிறகு பிப்ரவரி 999 இல், முஸ்லிம் அண்டளுசியாவின் கிரனடா பகுதியை சேர்ந்த இப்ன் பாரூக் (ibn Farukh) என்பவர் தற்போதைய ஸ்பெயினில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து அட்லாண்டிக் கடலை கடந்து இரண்டு தீவுகளை அடைந்தார். அதற்கு அவர் வைத்த பெயர்கள், காப்ரரியா (Capraria) மற்றும் ப்ளுஈடினா (Pluitina) என்பதாகும். அதே ஆண்டு மே மாதம் அவர் ஸ்பெயின் திரும்பினார்
3. பனிரெண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வரலாற்றில் மிக பிரபலமான அல்-இத்ரீசி (Al-Idrisi) என்பவர், எட்டு நபர்களுடன் முஸ்லிம் அண்டளுசியாவில் இருந்து மேற்கில் பயணம் செய்து கரீபிய தீவுக்கூட்டங்களை அடைந்தார். அங்கு இந்தியன்ஸ்சிடம் (பூர்வீக குடிமக்கள்) மாட்டிக்கொண்டனர்.
இங்கு சிறிது நேரம் நிறுத்தி, அல்-இத்ரீசி என்பவர் யார் என்று பார்ப்பது மிக அவசியம். இவர் ஒரு மிகச்சிறந்த கடல்வழி ஆராச்சியாளர், பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டவர். சிசிலி (இந்த சிசிலி இத்தாலியில் உள்ளது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது, மத்திய தரைக்கடலில் மிகப்பெரிய தீவு இதுதான்) அரசருக்கு ஆலோசகராகவும் இருந்தவர். இவர் வரைந்த உலகவரைப்படத்தை தான் கொலம்பஸ் தன் பயணத்தில் பயன்படுத்தினார்.
பதிவிற்கு செல்வோம், மேற்கிந்திய தீவுக்கூட்டங்களில் இந்தியன்ஸ்சிடம் இவரும் இவரது ஆட்களும் மாட்டிக்கொண்டனர். அப்போது இவர்களுக்கும் இந்தியன்ஸ்களுக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தது ஒரு இந்தியன்.
என்ன? ஒரு இந்தியன் இவ்விருவருக்கும் மொழிப்பெயர்ப்பாளராக இருந்தாரா?, அதாவது ஒரு இந்தியனுக்கு அரபி தெரிந்திருந்ததா? அரபி கற்றுக்கொள்ளும் அளவிற்கிற்கு அவருக்கு முஸ்லிம்களுடன் தொடர்பிருந்ததா? ஆம் உண்மைதான். அவர்தான் அல்-இத்ரீசிகும் அவரது ஆட்களுக்கு விடுதலை வாங்கித்கொடுத்தார். இது மிக தெளிவாகவே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆக நாம் மேலே கண்ட மூன்று பயணங்களும் முஸ்லிம் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டவை.
இதன்பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய தகவல், 1291 இல் மொரோக்கோவில் இருந்து ஷேக் ஜைனடீன் அலி மேற்கில் அட்லாண்டிக் கடலை கடந்து “புது உலகை” அடைந்தார் என்பது. புது உலகா? இப்படிதான் வரலாறு அந்த நிலங்களை குறிப்பிடுகின்றது.
இதெல்லாம் விட சுவாரசியமான தகவல், மாலி (Mali, a muslim country situated in north africa) நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பாகும். மாலியின் மேன்டிங்கோ (Mandingo) அரசின் மன்னரான அபு-புகாரி (Abu-Bhukari), 1310 இல் இரண்டு படைகளை சுமார் 2200 கப்பல்களுடன் மேற்குலகில் புதிய நிலங்களை கண்டுபிடிக்க அனுப்பினார். இவர்களும் தற்போதைய அமெரிக்க நிலத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இன்றளவும் தென் அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகள் (southern american Indian tribe) இந்த மேன்டிங்கோ வடிவங்களை (Mandingo idiograms) கொண்டு எழுதுகின்றனர். அதுபோல வட அமெரிக்காவில் வசிக்கக்கூடிய பூர்வீக குடிமக்களின் சந்ததிகளும் மேன்டே மொழியின் (மேடிங்கோக்களின் மொழி) வார்த்தைகளை பயன்படுத்துக்கின்றனர். ஆக மாலியில் இருந்து வந்த முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்த மக்களுடன் தங்கிவிட்டனர். அந்த புது நிலங்களில தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர்.
ஆக கொலம்பஸ் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அங்கு வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் வரைப்படத்தை (Map) 1513-இல் வரைந்தவர் துருக்கியின் பிரி முஹீத் டின் ரீஸ் (Piri Muhyid Din Re’is), துருக்கி கடற்படையின் தளபதியாக இருந்தவர். கடல் வழி ஆராச்சியாளரும் கூட. அவர் வரைந்து துருக்கி சுல்தான் செலீமிடம் (Selim I) சமர்ப்பித்து விட்டார். கொலம்பஸ் அப்போது அமெரிக்காவிற்கு வந்து விட்ட போதும், அந்த வரைப்படத்தில் இருந்த அமெரிக்க பகுதிகள் கொலம்பஸ்சினால் கண்டுபிடிக்கப்படாதவை. மிக தெளிவாகவே அவை வரையப்பட்டிருந்தன. ஆக அந்த தளபதிக்கு அமெரிக்காவின் நிலப்பரப்பை பற்றிய தெளிவான பார்வை இருந்திருக்கிறது. இது வியப்பான தகவல்.
இன்னும் பல ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம், பதிவின் நீளம் கருதி அவை விடப்படுகின்றன.
ஆக கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்களுடனான அமெரிக்க தொடர்பு மறுக்கமுடியாதது. ஆனால் இந்த தகவல்களெல்லாம் சிறிது காலத்திற்கு முன் வரை வெளிவரவில்லை.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக கூறப்படும் ஒரு காரணம், இந்த தகவல்கள் பெரும்பாலும் அரபி மொழியில் இருந்ததுதான் (மேடிங்கோவை தவிர்த்து).
எவ்வளவு நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? கடந்த சிலபல வருடங்களாக இந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
அல்லாஹ் அமெரிக்கர்களை கொண்டே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து விட்டான். ஆம் இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர்கள் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்கர்கள்.
அதில் ஒருவர் அரேபிய குதிரைகளை பற்றி ஆராய அரபி கற்று, பின்னர் அந்த அரபி அறிவை வைத்து குர்ஆனை கற்க, வியந்து போய் முஸ்லிமாக மாறியவர். பின்னர் தன் அரபி அறிவை கொண்டு பழங்கால அரபி நூல்களை புரட்ட வியப்பின் மேல் வியப்பு. முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்துவிட்டார். Dr.ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald F.Dirks) தான் அவர். இவரைப்போன்றவர்கள் வெளிக்கொண்டுவந்த உண்மைகள் யாராலும் மறுக்கமுடியாதவை.
source: http://www.muthupettaimedia.com/2016/07/blog-post_47.html