பத்திரிகைகள் துருக்கி அரசுக்கு எதிராக அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளுக்கு மக்கள் கொடுத்த மரண அடி!
ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு
[ அமெரிக்காவின் கைங்காரியம் இல்லாமல் இந்த ராணுவ புரட்சி நடந்திருக்கவே முடியாது.
துருக்கி அதிபர் எர்டோகனின் அழைப்பை ஏற்றே மக்கள் வீதிகளில் சாரை சாரையாக இறங்கி ராணுவத்திற்கு எதிராக போராட ஆரம்பித்த பிறகே சில உயிர் இழப்புகளுக்கு பின் ராணுவ புரட்சியை தோல்வியுற செய்த வகையில் நாம் அறிவது, அங்கு வாழும் மக்களுக்கு உரிய நல்லாட்சியை அதிபர் எர்டோகன் வழங்குவதாலேயே மக்கள் வெகுண்டு எழுந்து ராணுவ புரட்சியை தோல்வியுறச் செய்துள்ளார்கள்.
அமெரிக்காவின் நய வஞ்சக போக்கை அரபிய நாடுகள் உணரும் காலங்கள் மிக அருகிலேயே இருக்கலாம் என்பதே உலக நடப்பையும், அரபிய நாடுகளின் நடப்பையும் அறிந்தவர்கள் அறிந்தே உள்ளார்கள்.
வல்லரசு நாடுகளுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் இன்று செல்வ செழிப்பில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்ற அரபிய நாடுகளிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் மக்கள் மற்றும் அதன் ஆட்சியாளர்கள் நிம்மதியுடன் இருக்கக்கூடாது என்பதே முதன்மையாகும்.
அவர்களுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டாலே தனது ஆயுதங்களை விற்பதற்கு வசதியாக இருக்கும் என்பதேயாகும். உலக நாடுகள் வல்லரசுகளின் உண்மை சுயரூபத்தை அறிந்தால் இவர்களின் முகமுடி கழன்று விடும். -Chails Ahamad
பொது மக்கள் செய்த நடவடிக்கை சூப்பர், தலை நிமிர்ந்து நிற்கட்டும் துருக்கி, போறமை கொண்ட உலகத்துக்கு (பத்திரிக்கை) இதை விட ஒரு மரண அடி தேவை இல்லை எந்த பத்திரிக்கையை திறந்தாலும் எல்லாம் புழுகு மூட்டை -முகம்மது அலி]
( மேலுள்ள புகைப்படம்: மக்களுக்கு மத்தியில் துருக்கி அதிபர் எர்டோகன் )
துருக்கியில் அதிபர் ஆட்சிக்கு எதிராக நடந்த ராணுவ புரட்சி முறியடிப்பு: 265 பேர் பலி
1,500 பேர் காயம், 2,800 பேர் கைது: 2,745 நீதிபதிகள் நீக்கம்
துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய ராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றி கரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 265 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ புரட்சி யில் ஈடுபட்ட 2,800 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிபர் எர்டோகன் நேற்று முன்தினத்திற்கும் முதல் நாள் இரவு சுற்றுலாத் தலமான ஏஜியன் பகுதியில் தங்கியிருந்தார். அப்போது ராணுவத்தின் ஒரு பிரிவினர் நள்ளிரவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களை ‘பீஸ் கவுன்சில்’ வீரர்கள் என்று அறிவித்துக் கொண்டனர்.
முதல்கட்டமாக துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்ற புரட்சி படை வீரர்கள் தலை மைத் தளபதி ஜெனரல் ஹுலுசி ஆகாரை சிறைபிடித்தனர். அதைத் தொடர்ந்து துருக்கியின் அரசு ஊடகமான டி.ஆர்.டி. செய்தி நிறுவனத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதேநேரத்தில் அதிபர் எர்டோகன் தங்கியிருந்த ஏஜியன் பகுதி ஹோட்டலில் போர் விமானம், ஹெலிகாப்டர் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அதிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல அங்காராவில் உள்ள நாடாளுமன்ற வளாகம், அதிபர் மாளிகை மீதும் குண்டுகள் வீசப்பட்டன. அந்த வளாகங்களை கைப்பற்ற புரட்சிப் படை வீரர்கள் முயற்சி செய்தனர்.
இதனிடையே துருக்கியின் வர்த்தக நகரான இஸ்தான்புல்லையும் புரட்சிப்படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் போஸ் போரஸ் பாலத்தில் தடைகளை ஏற்படுத்தினர்.
அங்காரா, இஸ்தான்புல் உள் ளிட்ட நகரங்களில் ராணுவ கவச வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன. வானில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன. தலைநகர் அங்காரா உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று புரட்சிப் படை வீரர்கள் அறிவித்தனர்.
அதிபர் எர்டோகன் அழைப்பு
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அறிந்த அதிபர் எர்டோகன் நள்ளிரவில் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பேசினார். பொது மக்கள் யாரும் வீட்டில் முடங்க வேண்டாம். சாலை, தெருக்களில் இறங்கி, புரட்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷ மாக போரிடுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஆளும் ஏ.கே. கட்சி மட்டுமன்றி எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலையில் இறங்கி ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புரட்சி முறியடிப்பு
அங்காராவின் சாலைகளில் ரோந்து சுற்றிய பீரங்கி வாகனங்களை பொதுமக்கள் நிராயுதபாணியாக மறித்து சிறைபிடித்தனர். அப்போது புரட்சிப்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொது மக்களில் பலர் உயிரிழந்தனர்.
ஆனால் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் ராணுவ வீரர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. பல இடங்களில் பீரங்கிகளின் மீது ஏறிய பொதுமக்கள், ராணுவ வீரர்களை அடித்து நொறுக்கினர்.
புரட்சிப் படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடைபெற்றது. இதில் புரட்சிப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் உயிரிழந்தனர். அதிபர் எர்டோ கனின் ஆதரவாளர்கள் 165 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 போலீஸாரும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அடங்குவர். ஒட்டு மொத்தமாக 265 பேர் பலியாயினர்.
இருதரப்பிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக 2,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
2,745 நீதிபதிகள் நீக்கம்
துருக்கி நீதித்துறையைச் சேர்ந்த பல்வேறு நீதிபதிகளும் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித் ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டு நீதித் துறையின் உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 2,745 நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ராணுவத்தில் இருந்து 29 கர்னல்கள், 5 தளபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
பத்திரிகைகள் துருக்கி அரசுக்கு எதிராக அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளுக்கு மக்கள் கொடுத்த மரண அடி!
ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டவுடன் அதிபர் எர்டோகன், விமானம் மூலம் இஸ்தான்புல் நகருக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசியபோது, ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட முயன்றவர்கள் கடும் விளைவுகளைச் சந்திப் பார்கள் என்று எச்சரித்தார். பாது காப்பு கருதி அவர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
துருக்கி ராணுவ புரட்சியை முன்னின்று நடத்தியது யார்?
அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலன்தான் துருக்கி ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த பெதுல்லா அமெரிக்காவின் பெனிஸ்வேனியா மாகாணம் போகோனோ நகரில் வசிக்கி றார். பெதுல்லாவும் அதிபர் எர்டோகனும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர். எர்டோ கனின் சர்வாதிகார போக்கால் 1999-ல் துருக்கியில் இருந்து பெதுல்லா வெளியேறினார்.
துருக்கி மட்டுமன்றி உலகம் முழுவதும் பெதுல்லாவுக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர் கள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் பெதுல்லாவுக்கு நெருக்கமான 2 தொலைக்காட்சி நிறுவனங்கள், 22 தொழில் நிறுவ னங்களை துருக்கி அரசு கையகப்படுத்தியது. மேலும் துருக்கி ராணுவத்தில் பெதுல்லா வின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட வீரர்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் மீதும் துருக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் ராணுவ கர்னல் முகரம் கோஸ் என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது தலைமையில்தான் துருக்கி ராணுவ புரட்சி நடைபெற்றுள்ளது. இருதரப்பு மோதலின்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன், இஸ்தான்புல் நகரில் நிருபர்களிடம் பேசியபோது, ராணுவ புரட்சிக்கு பெதுல்லாவே காரணம், அமெரிக்காவில் இருந்து துருக்கியை யாரும் ஆட்டிப் படைக்க முடியாது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
துருக்கி ராணுவ மூத்த அதிகாரிகள் நிருபர்களிடம் பேசியபோது, அமெரிக்காவில் வசிக்கும் பெதுல்லா குலனை துருக்கிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியபோது, பெதுல்லா குலன் விவகாரத்தில் துருக்கி அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல் பரிமாற்றமும் இல்லை என்று தெரிவித்தன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் துருக்கியும் உறுப்பினராக உள்ளது. பெதுல்லா குலன் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
8 பேர் கிரிஸில் தஞ்சம்
புரட்சிப் படையைச் சேர்ந்த 8 மூத்த தளபதிகள் ஹெலிகாப்டர் மூலம் கிரீஸ் நாட்டின் அலெக்சாண்டோபோலிஸ் நகரில் நேற்று தரையிறங்கினர். கிரீஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் 8 பேரும் கிரீஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். 8 பேரையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி அரசு வலியுறுத்தியுள்ளது.
பொது மக்கள் செய்த நடவடிக்கை சூப்பர் தலை நிமிர்ந்து நிற்கட்டும் துருக்கி, போறமை கொண்ட உலகத்துக்கு (பத்திரிக்கை) இதை விட ஒரு மரண அடி தேவை இல்லை எந்த பத்திரிக்கையை திறந்தாலும் எல்லாம் புழுகு மூட்டை -முகம்மது அலி
ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் திடீரென முயற்சி மேற்கொண்டது.
13 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் அதிபர் தாயிப் எர்டோகனுக்கு எதிராக ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டனர். மக்களின் ஆதரவின்மையால் ராணுவத்தின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், துருக்கி அதிபர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு ஃபெதுல்லா குலனின் தூண்டுதலில் துருக்கி ராணுவத்தில் உள்ள ஒரு பகுதியினர் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் மக்கள் முன் பேசிய அவர்,
“அன்புக்குரிய அதிபர் ஒபாமா அவர்களே, ஃபெதுல்லா குலனை கைது செய்து துருக்கி அனுப்பும்படி நான் முன்பே சொன்னேன். ஆனால் நீங்கள் கேட்கவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், பென்சில்வேனியாவிலிருந்து துருக்கியிடம் இந்த மனிதரை ஒப்படையுங்கள். நம்முடைய நட்புறவு தொடர வேண்டுமானால், விரைந்து ஒப்படையுங்கள்” என பேசினார்.
இந்நிலையில் குலன், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலள் ஜான், குலனுக்கு எதிரான சட்டப்பூர்வமான ஆதாரங்களைக் கொடுங்கள் என பதிலளித்துள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட சிலர், கிரீஸிலும் சைப்ரஸிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த வன்முறையில் 265 பேர் உயிரிழந்தனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவத்தினர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
source:: நாளிதழ் செய்திகள்