இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண்
சிறுவயது முதலே எனது தந்தை; முஸ்லிம்கள் எல்லோருமே மோசமானவர்கள் எனும் நச்சுக்கருத்தை என் மனதில் புகுத்தியிருந்தார்.
”முஸ்லிம்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களல்ல. பல முஸ்லிம் வாலிபர்கள், சீக்கிய பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்து, பாகிஸ்தானுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்களை மற்றவர்களுக்கு விற்றுவிடுகின்றனர்” என்பார்.
ஆனால் நான் எப்போதும் வித்தியாசமாக நினைத்தேன். அவரவர், தத்தமது மதம்தான் உண்மையானது உயர்வானது என்று விவாதம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் நான் மதத்தின் அடிப்படையில் என் நண்பர்களை ஒருபோதும் தேர்ந்தெடுக்கவில்லை. இறுதியாக நான் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது என்னுடைய மிகச்சிறந்த நண்பர் கிடைத்தார். அவர் ஒரு முஸ்லிம் மாணவி. இதற்குமுன் அவரை நான் பார்த்ததில்லை. நல்ல முஸ்லிமாக இருந்தார். ஹிஜாப் அணிந்தவாரகவே இருந்தார்.
என்னுள் யோசிக்க ஆரம்பித்தேன், எல்லா முஸ்லிம்களும் மோசமானவர்களாக இருக்கும்போது இவர் மட்டும் எப்படி நல்லவராக இருக்கிறார்?. நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தவராக இருந்தாலும் மிகச்சிறந்த சினேகிதிகளாகவே இருந்தோம்.
விதவிதமாக நாகரீக ஆடைகளை உடுத்தக்கூடியள்தான் நான்! சிலநேரம் குடிகாரியாகக் கூட இருந்திருக்கிறேன்! ஆனால் என் சினேகிதியான அவள் என்னை சந்திக்க வரும்போதெல்லாம் நான் இப்படியெல்லாம் இருக்க மாட்.டேன்.
நான் ஒரு முஸ்லீம் வாலிபருக்கு நெருங்கிய நண்பியாக ஆனேன். இறுதியாக நாங்கள் ”டேட்டிங்” கூட தொடங்கினோம். இது தீவிரமாக இருந்தது. ஆனால் எப்படியும் அவரை விட்டுவிட்டு ஒரு சீக்கிய வாலிபனைத்தான் நான் மணம் முடிக்க முடியும் என்று எனக்குத்தெரிந்தே இருந்தது.
அவர் இஸ்லாத்தின் மூல மந்திரமான கலிமாவை எனக்கு கற்றுக்கொடுத்தார். இஸ்லாத்தைத் தீவிரமாக பின்பற்றக்கூடிய முஸ்லிமாக அவர் இருக்கவில்லை. எனவே அதைத்தவிர வேறு எதையும் அவர் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.
நான் வசிக்கும்பகுதில் ஒரு மஸ்ஜித் இருந்தது. அதை நான் கடந்து செல்லும்போதெல்லாம் ஒரு வித்தியாசத்தை என்னுள் உணர முடிதது. கலிமா என்னுள் புகுந்துகொண்டது என்றுதான் சொல்வேன்.
நாட்கள் நகர்ந்தன. எனது முஸ்லிம் சினேகிதி திருமணம் முடிதுக்கொண்டாள். பல பிரச்சனைகளை சந்தித்தாள். அதற்குப்பிறகு அவளது தொடர்பு கிடைக்கவில்லை.
ஒருநாள் இரவு அந்த விசித்திர அனுபவம் என் வாழ்வில் நிகழ்ந்தது. அப்போது நான் படிக்கும் பலகலைக்கழக குடியிருப்பில் தனியாக இருந்தேன். தற்செயலாக என் கைகளை கவனித்தேன். அல்லாஹ் என்பதைப்போன்ற எழுத்து என் நாளங்களில் (நரம்புகளில்) தெரிவதை கண்டேன்.
என்னுடைய முஸ்லிம் பாய்ஃப்ரண்டிடம் அதை தெரிவித்தபோது ஆச்சரியத்துடன் அலறினார். ஆனால், அதற்குப்பிறகு இருவருமே அதை மறந்துவிட்டோம்.
இறுதியாக கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பினேன். சந்தோஷம் இருந்த இடம் தெரியாமல் போனது. அதற்குக் காரணம் எனது முஸ்லிம் சினேகிதியையும் முஸ்லிம் பாய்ஃப்ரண்டையும் காண இயலாதுதான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மறுபடியும் என் சினேகிதியை 2006 ஆம் ஆண்டு சந்தித்தேன். அவளிடம் எனது கைகளை காண்பித்தபோது அவளும் மிகவும் ஆச்சரியப்பட்டாள். ஆனால் அதைப்பற்றி நாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
எனது பெற்றோர்கள் என்னை திருமணம் முடித்துக்கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். எனக்கோ திருமணம் செய்துகொள்வதில் விருப்பமே இல்லை. காரணம் என் எண்ணமெல்லாம் என் முஸ்லிம் நண்பரைச் சுற்றியே வந்தது.
சந்தோஷமாக இருப்பதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். முடியவில்லை. எனது பெற்றோர்கள் என்னைப் புரிந்து கொள்ளவே இல்லை.
மன உளைச்சலில் இருந்த நான் ஒருநாள் என் சினேகிதியைச் சந்தித்து பேசும்போது அவள், ”நீ சாதாரணமாக இறைவனை நினைக்கும்போது ”இறைவா எனக்கு நேரான பாதையை காட்டு” என்று ஏன் கேட்கக்கூடாது?” என்றாள்.
அன்று இரவு நான் ”கஅபா”வை கனவில் கண்டேன். அதன்பிறகு, நான் முஸ்லிமாக விரும்புகிறேன் என்பது எனக்கு விளங்கிவிட்டது.
நான் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன். உற்சாகமாக இருந்த அதே சமயம் துன்பமாகவும் இருந்தது. ஏனெனில் என் குடும்பத்தார்களை விட்டுப் பிரிய வேண்டும் என்பதை நினைக்கும்போது வருத்தப்படாமல் இருக்க முடியுமா?
அதேசமயம் மற்றொருபுறம் சந்தோஷம் கொப்பளித்தது. காரணம் இஸ்லாத்தைத்தழுவிய பிறகு என் முஸ்லிம் நண்பரை மணம் முடித்துக்கொண்டு அவரோடு சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி கற்கலாமே என்பதுதான்.
நாட்கள் நகர்ந்தன. எனக்கும் என் பிரியமான நண்பருக்கும் நட்பு துண்டானது. இருந்தபோதிலும் நான் இஸ்லாத்தைத் தழுவுவதில் மிகுந்த ஆவலோடு இருந்தேன். நாளாக நளாக, இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று என்னையே நான் நொந்து கொண்டேன். அதேசமயம் எப்படித் தொழுக வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதில் மிகவும் ஆவலாக இருந்தேன்.
இறுதியாக என் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன். சில நாட்களுக்குப்பிறகு நான் வீடு திரும்பியதும் அவர்கள் என்னை மன்னித்து ஏற்றுக்கொன்டனர். இருந்தபோதிலும் என்னை சந்தேகக்கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தனர். காரணம் என் பழக்கவழக்கங்கள் மற்றும் உடைகள் அவர்களை சந்தேகப்பட வைத்தன.
நான் இன்னும் ஹிஜாபை உடுத்த ஆரம்பிக்கவில்லை. காரணம் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கும்படி நான் அறிவுறுத்தப்பட்டேன். ஹிஜாபை அவசரப்பட்டு அணிந்துவிட்டு பெற்றோர்களுக்கு தெரிந்துபோய் அதை உடனே கழட்டிப்போடுவதைவிட நிதானத்தைக் கையாண்டு நிரந்தரமாக ஹிஜாபை அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
எவ்வளவு நாட்களுக்குத்தான் உண்மையை மூடிமறைக்க முடியும்! நான் முஸ்லிமாகிவிட்டதைத் தெரிந்து கொண்டதும் பெற்றோர்கள் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். எனது ஈமான் உறுதியாக இருந்தது. இன்ஷா அல்லாஹ், என்றேனும் ஒருநாள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தற்போது ”ஹிஜாப்” மற்றும் ”அபயா” அணிந்தவளாகவே நான் இருக்கிறேன். எனது மன மாற்றத்தைப்பற்றி இஸ்லாத்தைத்தழுவிய ஆழத்தைப்பற்றிய நூல் ஒன்றை எழுத நாடியுள்ளேன். எனது கரங்களில் தெளிவான படம் (விஷயங்கள்) உள்ளது இன்ஷா அல்லாஹ் ஒருநாள் அதை உங்களுக்குக் காண்பிப்பேன். -சகோதரி, ஜைனப் (Zainab)
தமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ