நோக்கங்களும் இலக்குகளும்
அல்லாஹுத் தஆலா பெண்ணை ஆணுக்காகப் படைக்கவில்லை. மனிதனை எந்த நோக்கத்திற்காகப் படைத்தானோ அதே நோக்கத்திற்காகத் தான் பெண்ணையும் படைத்தான்.
அல்லாஹுத் தஆலா மனிதனது அடிப்படையான பணியைப் பற்றி பேசும் போது இரு சாராரும் பரஸ்பர ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகவே அப்பணியை எடுத்து காட்டினான்.
விசுவாசம் கொண்ட ஆண்களும் விசுவாசம் கொண்ட பெண்களும் ஒருவருக்கொருவர் நேசமாக நடந்து கொள்வார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியையும் செய்வார்கள்.
எனவே பெண்ணும் அல்லாஹுத் தஆலா ஏவிய இப்பணியை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றாள். எனவே அவளை தடுக்கும் உரிமை கணவனுக்கோ, தந்தைக்கோ, சகோதரனுக்கோ கிடையாது. எனினும் பெண்ணின் வீடு என்ற அதிமுக்கியமான தஃவா களத்தை ஒழுங்குபடுத்திய பின்னரே சமூகம் என்ற களத்திற்குப் பிரவேசிக்க வேண்டும்…
அதற்காக வீட்டினுள் முடங்கி கிடப்பதை ஒரு போதும் வரவேற்கவில்லை…
~ மஸ்கர் ஸக்கரியா ~
source: http://islamakkam.blogspot.in/2014/10/blog-post_29.html