முதலிரவில் மனைவியை மறந்தவர்!
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை நிகழ்வு பற்றி நான் இங்கு நினைவு கூறுகிறேன் .
மிக இளமையான பருவம், ஒரு ஹதீஸ் அறிவிப்பில்
“அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அவர்களுடைய தந்தை அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் சொற்ப வயதே தான் இடைவெளி! ஆதலால் தந்தையும் மகனாரும் மிக நெருக்கமாக பழகினர்.
மேலும் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வணக்க வழிபாடுகளில் மிக பேணுதலுடையவர். இப்போது உள்ள இளைஞர்கள் போல் ஊர் சுற்றும் பழக்கமோ, கேலிகிண்டல் போன்ற குணங்களை விட்டு நீங்கியே இருந்தார்கள்.
தினமும் நோன்பிருபார்கள், தினமும் இரவில் தவறாமல் தஹஜ்ஜத் தொழுவார்கள். திக்ர், இபாதத், அழைப்பு பணி, கல்வி தேடல் அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் அல்லாஹ்விடம் தன்னை அர்பணித்து கொண்டார்கள்.
அப்போது அவருடைய தந்தை “திருமணம் செய்துகொள் “ என வற்புறுத்தி கொண்டே இருந்தார்கள். எல்லா தந்தைகளை போல் தான் அவரும் எப்போது பார்த்தாலும் “திருமணம் செய்துகொள், திருமணம் செய்துகொள்” என்று கூறுவார்கள் .
தன் மகன் எந்த ஹராமின் பக்கமும் போய்விட கூடாது என்ற அச்சமே இந்த வற்புறுத்தலுக்கு காரணமாக இருந்தது. இது ஒவ்வொரு தந்தைக்கும் இருக்கவேண்டிய அச்சமே!
ஆம் தந்தை தன் மகனுக்கு வயது வந்ததும் திருமணம் செய்து கொடுக்காமல் அந்த இளைஞர் ஹராமின் பாதையில் சென்று விட்டால் அதற்கு தந்தையே முழு காரணமாக இறைவனிடம் பிடிக்கபடுவார் என்பது ஹதீஸ் ஆகும்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையின் வற்புறுத்தலின் காரணமாக திருமணம் செய்துகொண்டார்கள் .
திருமணம் முடித்து முதல் நாள் முதல் இரவு. யோசித்து பாருங்கள்! அன்றைக்கு ஒரு மணாளனின் உணர்வுகள் எப்படி இருக்கும்?
தன் மனைவியை முதல் முறை பார்க்கபோகிறான் என்றால் எப்படி உணர்வார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு தன் புது மனைவியுடன் உள்ளார்.
அப்போது அவர்கள் தன் புது மனைவியிடம் “தயவுசெய்து எனக்கு இரண்டு ரகாஅத் தொழ அனுமதியுங்கள்“ என்று அனுமதி கேட்டார்கள். மனைவியை சந்தித்த முதல் முறையே அல்லாஹ்வின் நினைவுதான்.
பொதுவாக நம்மில் பலர் அந்த இரவில் இஷா தொழுகையில் மூன்று ரகாஅத் தொழுதோமா அல்லது ஐந்து ரகாஅத் தொழுதோமா என்று நினைவே இல்லாமல் தொழுவார்கள் .ஆனால் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முதல் நினைவே அல்லாஹ் தான். உணர்ச்சி ததும்ப அனுமதி கேட்டார்கள்.
மனைவியின் அனுமதி பெற்று தொழ ஆரம்பித்தவர் தனக்காக புது மனைவி காத்துகொண்டிருப்பதையே மறந்து தொழுதார்கள் தொழுதார்கள் பஜ்ருடைய நேரமே வந்துவிட்டது அந்த அளவிற்கு மெய்மறந்து தொழுதார்கள். அவர் தன் திருமணமான முதல் இரவில் பஜ்ரு வரும் வரை தன் மனைவி நினைவிலேயே இல்லை!
பிறகு தன் மனைவியிடம் “ இன்ஷா அல்லாஹ் நாளை” என்று கூறினார்கள். ஆனால் அடுத்த நாளும் அப்படியே தொழுகையிலேயே தொடர மீண்டும் “இன்ஷா அல்லாஹ் நாளை” என்றே கூற அடுத்த நாளும் அப்படியே கழிந்தது. இப்படி மூன்று நாட்களும் இதேநிலைதான்
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழ மனைவி காத்திருக்க இப்படியே மூன்று இரவுகள் கழிந்துவிட்டது .
அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹுஅதாவது அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை தன் மருமகளிடம் “என் மகன் எப்படி இருக்கிறான்? என நலம் விசாரித்தார்கள் .
அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவியோ வியப்பாக “நீங்கள் என்ன ஒரு மனிதரை பெற்றெடுத்துள்ளீர்கள்!!! அல்லாஹ் அக்பர்!! அவர் இரவு முழுதும் தொழுகையிலேயே கழிக்கிறார்!!
இதைகேட்ட அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மகனிடம் சென்று அவர்களின் பின்புறமாக அவர்களின் கழுத்தை பிடித்து “ஒ மகனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “ நான் ஒரு நாள் விட்டு ஒருநாள் நோன்பிருப்பேன் .உங்கள் குடுப்பத்திற்கு உரிமை உள்ளது உங்கள் மனைவிக்கு உங்களிடம் உரிமை உள்ளது . அனைத்திலும் நீங்கள் ஒரு நிலையாக இருங்கள் “ எனவே உன் மனைவிக்கு நீதமாக இரு “ என்று கூறினார்கள்
இப்படி இந்த சம்பவம் செல்கிறது. சற்று சிந்திக்கவேண்டும். அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையின் காரணமாக தன் மனைவியை மறந்தார்கள். நாம் நம் தொழுகையின் காரணமாக எதையாவது மறந்ததுண்டா? நம் வாழ்க்கை முழுதும் ஒருமுறையாவது எதையாவது மறந்ததுண்டா? இல்லை !!!!!
தொழுகையில் வேண்டுமென்றால் நாம் மறந்திருப்போம் எத்தனை ரகாஅத் தொழுதோம். ருகூவு, சுஜூத் செய்தோமா? இது போன்று மறந்திருப்போம்.
நிச்சயமாக தொழுகை என்பது அல்லாஹ்வுடன் பேசும் நேரம் நாம் அப்போது அல்லாஹ்வுடன் பேசுகிறோம் நம்மை படைத்த ரப்புடன் பேசுகிறோம் !! அப்படிப்பட்ட தொழுகையில் பொடுபோக்காக இருப்பது எவ்வளவு பெரிய பாவம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “ஒரு காலம் வரும் மக்கள் தொழுவார்கள். ஆனால் அவர்களின் தொழுகையில் உயிரோட்டம் இருக்காது (தொழுகிறோம் என்ற உணர்வே இருக்காது).
அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
(SPEECH OF OMER EL BANNA IN ENGLISH )
நட்புடன்
முஹம்மத் ஜுபைர் அல்புகாரி
source: https://suvanapparavai.wordpress.com/2015/01/03/%E0%AE%AE%E0%AF%81%