Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்…

Posted on June 3, 2016 by admin

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்…

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள் எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ் எல்லாம் செல்லா காசாக, அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.

இறைவனின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு போதுமான பணம் சம்பாரித்த பின், பணத்திற்கு சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது.

அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ, நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல.

இறைவன் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது.

நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள்.

நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும் வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்.

நாம் நடித்து கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு அன்பை வாரி வழங்குங்கள். உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.

– மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

இம்மை இன்பம் அற்பமானது

மனிதனுக்கு எதுவாகினாலும் அது அவனுக்கு ஒரு சொர்ப்பக் காலம்தான். இன்பம் வந்தாலும் சரியே, துன்பம் வந்தாலும் சரியே! எதுவந்தாலும் கொஞ்சம் காலம் தான் அந்த மனிதன் அனுபவிக்க முடியும்.

ஒரு நேரம் வரும் அந்த நேரம் தான் அந்த மனிதனுக்கு மரணம் வரும் நேரம். அந்த நொடியில் அவனிடத்தில் இருக்கும் அனைத்தையும் விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தாம்!

ஆனால், இந்த மனிதன் மறதியிலும், உலக இன்பத்திலும் முழ்கி இருக்கும்போது, அவனுக்கு இந்த சிந்தனைகள் வராது. உலகத்தை விட்டு ஒரேடியாக ஒதுங்கியும் இருக்கக்கூடாது, உலகத்தில் ஒரேடியாக முழ்கியும் இருக்க கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும். அதாவது ஒரு வழிப்போக்கனைப் போன்று நாம் வாழ வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கானது. அதில் நின்று நிதானித்து நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் சரியான பாதையில் செல்கிறோமா? என்பதை அடிக்கடி பரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்!

நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும். இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். “தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக”.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மையும் தீமையும் அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாக்கி நாம் உங்களைச் சோதிப்போம். நீங்கள் நம்மிடமே மீள்வீர்கள். (அல்குர்ஆன் 21:35)

இவ்வுலக இன்பம் அற்பமானது என்பதைக் கவனத்தில் கொண்டு உலகத்தில் வாழ்கின்றவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இவ்வுலகம் தோன்றியது முதல இறுதிவரை உள்ள இவ்வுலகின் இன்பங்கள் அனைத்தும் சிறிது நேரம் உறங்கி, தான் ஆசைப்பட்டதில் சிலவற்றைக் கனவில் கண்டு எழுந்தவனின் இன்பத்தைப் போன்றவைதான்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

74 − = 70

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb