ஆலிம்கள் என்பவர்கள் யார்?
ABU SHEIKH HAMMADH
[ ஊரிலிருக்கும் யாராவது நடு நிலையாக நடக்கக் கூடிய மற்றும் தூரநோக்கில் சிந்தித்து செயல்படக்கூடிய ஒரு ஆலிமை நிர்வாகத்தில் இணைப்பதற்கு முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும். அதேபோன்று அவருக்கு எல்லா வழிகளிலும் உதவவதோடு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக மற்றவர்கள் இருக்க வேண்டும்.]
எப்போதும் எந்தவொரு இலாபத்தையும்,வெகுமதிகளையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக, பிரயோஜனம் ஈட்டித் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். எனினும் சில நேரங்களில் அதற்கு மாற்றமாக நடக்கும் நிகழ்வுகளும் நேரங்களும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
மேலும் பாமரர்கள் நிர்வாகிகளாக இருந்தால் உலமாக்களுக்கு எல்லா விதத்திலும் நோவினை செய்யக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ஆழமாக மனதில் பதிய வைத்திருப்பது ஒரு கசப்பான உண்மை. அதேபோன்றுதான் நிர்வாகிகளும் நடந்து கொள்கிறார்கள் என்பது மறுக்கவோ, மறைக்கவே முடியாத உண்மை. ஆனால் எல்லா நேரத்திலும் இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது.
உலமாக்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமை (உயர்நிலையிலுள்ள, முன்னேற்றமடைந்த, அடையக்கூடிய உலமாக்களை பார்த்து), வேற்றுமை (ஜமாஅத் பார்த்து பழகுவது), பெருமை (மற்ற உலமாக்களை மட்டம் தட்டி கீழ் தாழ்த்தி நடந்து கொள்வது) போன்ற பண்புகளை கிள்ளி எரிந்து, விட்டு ஒதுங்கி தங்களுக்கு மத்தியில் பொறுமை/ஒற்றுமை/பணிவு/விட்டு கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
ஊரிலிருக்கும் யாராவது நடு நிலையாக நடக்கக் கூடிய மற்றும் தூரநோக்கில் சிந்தித்து செயல்படக்கூடிய ஒரு ஆலிமை நிர்வாகத்தில் இணைப்பதற்கு முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும். அதேபோன்று அவருக்கு எல்லா வழிகளிலும் உதவவதோடு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாக மற்றவர்கள் இருக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தில் மட்டுமின்றி ஏனைய பொறுப்புகளையும் கையில் எடுத்து வழிகாட்டியாக மாறுவதோடு நிர்வாகியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நிர்வாகம் இவ்வாறு தான் செய்ய வேண்டுமென்பதை உணர்த்தக் கூடியவர்களாக எந்த விடயங்களையும் வெளிப்படையாக மஷூரா அடிப்படையில் அள்ளாஹ்வை மாத்திரம் பயந்தவர்களாக தீர்மானம் எடுக்கக் கூடியவர்களாக மாற வேண்டும் என்பதே எனது ஆவாவும்கனவும்.
-ABU SHEIKH HAMMADH
source: http://www.lankascholars.com/2016/04/blog-post_28.html